PAGE LOAD TIME

வாட்ஸ் அப்...வாட்ஸ் அப்

தூங்கி எழுந்ததிலிருந்து தூங்கும் வரை மட்டுமல்ல பாதி தூக்கத்தில் எழுந்தால் கூட ஏதேனும் மெசேஜ் வந்திருக்கானு பார்க்கும் அளவிற்கு வாட்ஸ் அப்  வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது .

கம்யூனிகஷன் இந்த அளவிற்கு எளிமையாகவும் பெர்சனலாகவும் இருப்பதற்கு வாட்ஸ் அப் ஒரு முக்கிய காரணம்.

என்ன ஒரு  விஷயம்னா  நாம் அவசரத்திற்கு சேவ் செய்து வைத்திருக்கும் கேஸ்கடைக்காரர்,லாண்டரி கடை ,டெய்லர்,எலக்ட்ரீஷியன்,பிளம்பர்னு எல்லோர் வாட்ஸ் அப்பும் கான்டாக்ட்ல சேர்ந்திருக்கும்.அதை மியூட் அல்லது பிளாக் செய்யலைனா ஸ்டேட்டஸ் புரோபைல்னு எல்லாமும் வெட்ட வெளிச்சம்.

வாட்ஸப்ல வரும் மெசேஜ் ,விடியோ,பிக்சர் எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு கிடைத்திருந்தால் உலகம் உருண்டை என்பதை மிக எளிதாக நிரூபித்திருக்கலாம்.
இரண்டு வாரமோ இரண்டு வருஷமோ ஆனாலும் நமக்கே திரும்ப வராத மெசேஜ் அல்லது வீடியோ இருக்க முடியாது.

வாட்ஸ்ப்ல கிரியேட்டிவிட்டி என்பது கம்மி.பார்வார்டு செய்யனும் என்பதுதான் மெயின் .எது நமக்கு வந்தாலும் உடனே யாருக்காச்சும் பார்வேர்டு செஞ்சிடனும்.

அதுக்கும் ஒரு ஆப்பு.முன்னெல்லாம் ஒரே நேரத்தில் எவ்ளோ பேருக்கு வேணாலும் சிங்கிள் கிளிக்கில் பார்வேர்டு செய்யும் வசதி இருந்தது.இப்போ ஒன்லி டு ஃபைவ்

காலைல ஒரு கூடை (சன்லைட்)குட்மார்னிங் இரவு ஒரு கூடை (மூன்லைட்)குட்நைட் வந்து சேரும் . அள்ளிக் கொட்டனும்.இதுல பாசக்கார புள்ளங்க குரூப்ல யும்  அனுப்பிட்டு நமக்கு தனியா வேறயும் அனுப்புவாங்க.

ஒருவர் ஏற்கனவே பார்த்த பழைய செய்தி இன்னொருவருக்கு புதிதாக இருக்கலாம்.உடனே நம்ம ஆளுங்க ஒரு  நோஸ்கட் ரிப்ளை.இது வெரி ஓல்டு நான் போன வருஷமே பார்த்துட்டேன். இருக்கட்டுமே உங்களுக்கு வேற குரூப்ல இருந்து வந்துடுச்சினு எப்படி தெரியும் வேணாம்னா டெலிட் செய்ங்க இல்ல வேறு யாருக்காச்சும் பார்வேர்டு செய்ங்க.

அடுத்து காணமல் போன குழந்தை அல்லது சர்ட்டிபிகேட்னு ஒரு மெசேஜ் கொஞ்ச நாளைக்கு ரவுண்டு கட்டும்.காணாமல் போன குழந்தையே பெரிசாகி படிக்கும் வரை கூட சுத்தியடிக்கும்.
உதவிக்கரம் நீட்டுங்கள்னு ஹாஸ்பிடல் போட்டோலாம்போட்டு சிகிச்சைக்கு  உதவி கேட்கும் செய்தி
மேற்கூறிய எல்லாமும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் உதவி கிடைக்க பார்வேர்ட் செய்வது தப்பில்லை.ஆனால் எப்போது எங்கு கால அவகாசம் முடிந்து விட்டதானு தெரியாமல் சிம்ப்ளி பார்வேர்டிங்

முன்னெல்லாம் 10 காசு இன்லண்ட் லெட்டரில்( நிறைய பேர் இங்கிலேண்ட்னு வாங்க)ஸ்ரீராமஜெயம் அல்லது கடவுள் பற்றிய செய்தி எழுதி இன்று இரவுக்குள் 15 பேருக்கு ஷேர் செய்ங்க நல்லது நடக்கும்னு ....அல்லது அனுப்பாவிட்டால் ரத்தம் கக்கி சாவீங்கனு வரும்.
வாட்ஸ் அப்பும் இதில் விதி விலக்கல்ல. சாய்ராம் சாய்ராம்னு எழுதி உடனே பார்வேர்ட் செய்ங்க அல்லது சாயி போட்டோ பிள்ளையார் போட்டோ அனுப்பி ஷேர் செய்தால் நாளைக்குள் நல்ல செய்தி மெசேஜும் உண்டு.

இது எல்லாம் கூட பரவாயில்லை.போட்டோ புதிர் ...படங்களை சேர்த்து சினிமா பேரோ அல்லது ஊர் பேரோ கண்டு பிடிக்கும் கேம் மெசேஜ்களும் வரும் பாருங்க.மண்டைய பிச்சிகிட்டு விடை கண்டு பிடித்து சரியானு கேட்டா 'யாருக்கு தெரியும்.எங்க குரூப்ல இருந்து வந்தது அப்படியே பார்வேர்ட் செஞ்சிட்டேனு ' கூலா பதில் வரும்.
இதுல நாம  மண்டைய பிச்சிகிட்டு கண்டு பிடிச்சாலும் நோ யூஸ் ஏன்னா அனுப்புனவங்களுக்கே பதில் தெரியாது.

அடுத்து ஒரு மெசேஜ் வரும் பாருங்க.இந்த பிப்ரவரியில் 4 சண்டே 4 மண்டே....இப்படி வாரத்துல எல்லா நாளையும் சனி வரை சொல்லி 4 ,4 வரும் இது 823 வருடத்திற்கு ஒருமுறை வரும் இதுக்கு பேரு money bag...இது உங்க வாழ்நாள் ல ஒருமுறைதான் வரும்னு மெசேஜ்.
ஏனுங்க எந்த கிழமைல பிப்ரவரி ஸ்டார்ட் ஆனாலும் 7×4=28 தானுங்களே.அப்போ ஏழு கிழமையும் 4 முறை வரும் தானே.
இது போக இந்த மார்ச்ல(அது எந்த வருஷம்னு இருக்காது) 5 வெள்ளி 5 சனி 5 ஞாயிறு தொடர்ந்து வரும் 823 வருஷம்... மனிபேக் நு ....வேற மெசேஜ் ஒன்னு. 2013 to 2018 லயும் இது போல வந்திருக்கும்.சோ இடையில 823 வருஷமா? கொஞ்சம் டக்கு டக்குபார்வேர்ட் செய்யாம யோசிச்சு செய்யலாமில்ல.

செல்ஃபியும் பேமிலி போட்டோவும்  இடம் பிடித்த ஸ்டேட்டஸ்ல இப்பெல்லாம்  டிக் டாக் ஹலோ ஷேர்சாட் மியூசிக்லினு அடி தூள்னு ரகளை கட்டுது.
நட்புவட்டம்அதிகரித்தல்...புதுப்பித்தல்...ஷேரிங்...பிசினஸ் பொழுது போக்குனு பல விஷயங்கள் இருந்தாலும் ..இன்னும் கொஞ்சம்  செய்திகளின் நம்பகத் தன்மை  தேவைகளின் நேரம் காலம் போன்றவைகளும் சரியாக இருக்கனும்....மாற்றம் வரலாம்.

கஸ்டமர் கேரும்...என் சேனல் செலக்‌ஷனும்

ஜனவரி 1-ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என்று முடிவானது பிறகு பிப்ரவரி 1 வரை நீட்டிக்கப்பட்டது சேனல் செலக்‌ஷன் பற்றிய டிராயின் அறிவிப்பு

இந்த ஒரு மாத கால அவகாசத்திற்குள் எல்லா  வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொண்டு அவர்களுடைய தேர்வினை முன்னரே பெற்றிருந்தால் பிப்ரவரி 1 லிருந்து செயல்படுமாறு செய்திருக்க முடியும்

அவ்வாறு ஒரு வாரம் பத்து நாள் முன்னரே தேர்வு செய்தவர்களுக்கும் பிப்ரவரி 1 முதல் பேக்கேஜ் ஆக்டிவேட் ஆகவில்லை
என்னுடைய பதிவு மொபைலுக்கு ஜனவரி 27 குறுஞ்செய்தி வந்து 29 ல் நானும் சேனல் செலக்‌ஷனை பதிவு செய்து வைத்திருந்தேன்.

இருந்தும் பிப்ரவரி 2 லிருந்து
மூன்று நாட்களாக டிடிஹெச் வேலை செய்யவில்லை எந்த சேனல்களையும் பார்க்க முடியவில்லை வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டேன்.

எப்பொழுதும் போல ஒன்றை அழுத்தவும் 2 அழுத்தவும் மூன்றை அழுத்தவும் மீண்டும் கேட்க பூஜ்ஜியத்தை அழுத்தவும்  மெயின் menu விற்கு  செல்ல #அழுத்தவும் என பதிவு செய்யப்பட்ட குரலில் திரும்பத் திரும்ப கேட்டது.எனக்கு வேண்டியது 9 அழுத்தவும் தானே.அது தானே சேவை மைய அதிகாரிக்கு தொடர்பு படுத்தும்.

அலுத்துப் போய் நானும் கொஞ்சம் டகால்டி வேலை எல்லாம் செய்து பதிவு குரல் சொல்லாத போதும் 9 அழுத்தினால் மன்னிக்கவும்.நீங்கள் தவறாக தேர்வு செய்துள்ளீர்கள்.மீண்டும் மெயின் மெனுவிற்கு செல்லுங்கள்நு   துரத்தி அடிக்க
ஒரு வழியாக சேவை மைய அதிகாரியின் தொடர்பு கிடைத்து பேசத் தொடங்க..

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை சொல்லுங்கள் கனெக்சன் யாருடைய பெயரில் இருக்கிறது என்ற பார்மல் ஆன விசாரணைகளுக்குப் பிறகு உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றதும் மூன்று நாட்களாக டிடிஎச் வேலை செய்யவில்லை எந்த சேனலும் தெரியவில்லை என்றேன்.

நீங்கள் உங்கள் தேர்வை அனுப்பிய பிறகே ஆக்டிவேட் செய்யப்படும் என்றதும் நான் முன்னரே அனுப்பி விட்டேன்.
ஓ அப்படியா அப்படியென்றால் இன்னும் 4 மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகும் என்றபோது வேறுவழியின்றி நம்பிக்கையோடு காத்திருக்க அதற்கு பிறகும் எந்த மாற்றமும் இல்லை

மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையம்

திரும்பவும் மூன்று ஒன்று இரண்டு அழுத்தி  காத்திருந்து உங்கள் அழைப்பு முக்கியமானது சேவை மையம் மதிப்பீட்டிற்கு பயன்படுகிறது தயவு செய்து காத்திருக்கவும் வேற வழி காத்திருந்தேன்.

ஒருவழியாக  அதிகாரியை தொடர்பு கொண்டபோது நான்கு மணி நேரத்தில் ஆக்டிவேட் ஆகும் காத்திருக்க வேண்டும் அதிர்ந்து போய் மூன்று நாட்களாக இதையே சொல்கிறீர்கள்  ஏதாவது செய்யுங்கள் என்று  கெஞ்சிய பிறகு உங்களால் லைனில் காத்திருக்க முடியுமா என்று அதிகாரி கேட்க அதைவிட வேறு என்ன வேலை என்று ரிமோட்டும் கையுமாக டிவி முன்னால் பழியாக கிடக்க

ஒவ்வொன்றாக அதிகாரி சேனல் ஆக்டிவேட் செய்ய எதையோ சாதித்தது போல திருப்தியாக இருந்தது

இடை இடையே ஏதேனும் சந்தேகம்இருந்தால் கேளுங்கள் என்று  கேட்க ஒன்றும் இல்லை எனக்கு எல்லா சேனல்களையும் ஆக்டிவேட் மட்டும் செய்தால் போதும்
ஒரு வழியாக நான் செலக்ட் செய்த என்னுடைய பேக்கேஜ் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது சேவை மைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது

பிறகுதான் இன்னொரு பிரச்சினை
FTA எனப்படும் free-to-air சேனல்கள் ஆக்டிவேட் செய்யப்படவில்லை பிறகு என்ன திரும்பவும் வாடிக்கையாளர் சேவை மைய தொடர்பை ஆரம்பிக்க 3 1 2 பூஜ்ஜியம் என பதிவு செய்யப்பட்ட குரல் ஒப்புவிக்க
இதனிடையே உங்கள் இருப்பு தொகை மூன்று 100 என்பது ஆறு ரூபாய் ஆகும் 386 தான் இப்படி உடைத்து உடைத்து ஒப்புவித்தது பதிவு செய்யப்பட்ட குரல்

பலமுறை தொடர்பு துண்டிக்கப் பட்டு மிகுந்த பிரயத்தனத்திற்கு பிறகு மீண்டும் சேவை மைய அதிகாரியுடன் பேசிய பொழுது எனக்கு ஃப்ரீ சேனல் வரவில்லை என்றதும் நீங்கள் அதை தேர்வு  செய்தீர்களா என்று கேட்டார்
இல்லை free சேனல்கள் default ஆக செலக்ட் செய்யப்பட்டிருந்தது என்றேன் அது டிடியின் 25 சேனல்கள் மட்டுமே மற்ற  சேனல்களை நீங்கள் தான் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றார்

கட்டண சேனல்களை ஆக்டிவேட் செய்ய வே மூன்று நாட்கள் ஆனது அதில் எப்படிfree சேனல்களை மீண்டும் சேர்ப்பது என்று அவரிடமே கேட்டபோது நீங்கள் மறுபடியும் செலக்ட் செய்து submit செய்யவும் பிறகுதான் அதை ஆக்டிவேட் செய்ய முடியும் என்றார்
ப்ளீஸ் சார் நீங்களே அதை ஆக்டிவேட் செஞ்சிடுங்களேன்.பிரீ சேனல் தானே என்று கேட்க
சாரிங்க..இதுக்கு முன்னே நீங்க சொன்னாலே ஆக்டிவேட் செய்வோம்.இப்ப ரிக்வெஸ்ட் சப்மிட் செஞ்சாதான் செய்ய முடியும்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அதிகாரி (ஆண் பெண்  இருபாலரும்)யாக பேசி ஒவ்வொருத்தர் கிட்டவும் a-z என் தேவையைச் சொல்லி....

ஒரு படத்தில் விவேக் சொல்வார் தூங்கும் போது கூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கனும் இல்லைனா பொணம்நு நினைச்சிடுவாங்க நு அப்படி காத்திருக்கும் நேரத்தில் நாம லைனில் தான் இருக்கோம்னு காட்ட   கனைத்து வராத இருமலை வரவழைத்து...கடவுளே...

என் சேனல் ...என் உரிமை இல்லையா...கஷ்டப்பட்டுத்தான் பெறனும்.

ஒருவழியாக சேனல்களை தேர்வுசெய்து சப்மிட் செய்த பிறகுதான் தெரிந்தது இந்த முறை free சானல்கள் மட்டுமே தேர்வு செய்ததால் அது மட்டுமே ஆக்டிவேட் ஆகி ஏற்கனவே தேர்வு செய்த கட்டணச் சேனல்கள் வராமல்போய்விடுமோ என்ற பயம் வந்தது

ஐந்தாவது முறையாக மீண்டும் அந்த டிடிஹெச்சின் வலைதளத்தில் கட்டண சேனல்கள் மற்றும் இலவச சேனல்கள் இரண்டும் சேர்த்து தேர்வுசெய்து சப்மிட் செய்தேன்
மறுபடியும் ஆக்டிவேட் செய்ய சேவை மைய அழைப்புகள்

இந்த முறை புது மாதிரியான விளக்கம் சர்வர் டவுன் ஆகி விட்டது நான்கு மணி நேரத்திற்கு பிறகு தொடர்பு கொள்ளவும் இன்னமும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல சேவை மையத்தை தொடர்பு கொள்வதும் 4 மணிநேரம் காத்திருப்பதும் தொடர்கதையாகி கொண்டிருக்கிறது

பிறகுதான் தெரிந்து கொண்டேன் டிடிஹச் சேவைகள் இப்படி வாடிக்கையாளர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்று சமூகவலைதளங்களில் பலவிதமான புகார்கள் வந்து கொண்டிருப்பதும் அதிலும் சில  டிடிஹச் சேவை உடனடியாக வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறதாம் சிலது இப்படி அலைக் கழித்துக் கொண்டிருக்கிறதாம்.

ஒரு மாதம் வரை நீட்டிப்பு செய்த பிறகும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அளவிற்கு வாடிக்கையாளர்களை அலைகழிக்க வேண்டி இருக்காது டிடிஹெச் இல்லாமல் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இணைப்பு வைத்திருப்பவர்கள் எல்லாவற்றையும் படிவத்தில் பூர்த்தி செய்து அவர்களிடமே ஒப்படைத்து  விடுவதால் அதிக அலைக்கழிப்பு இல்லை

விருப்ப சேனல்களை தேர்வு செய்வோர்  இலவச சானல்களிலும் தங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து தேர்வு செய்ய வேண்டும் என்பது அனுபவப் பட்ட பின்னரே தெரிகிறது.இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற எந்த முறையான வழி காட்டுதலும் இல்லை.யூ டியூபில் இது குறித்து பதிவு ஏற்றுபவர்களும் கூட அறிந்திருக்கிறார்களா தெரியவில்லை.

என் சேனல் என் விருப்பம் என் உரிமை என்பதைத் தாண்டி 130 150 170 ரூபாய்க்குள்  தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது 153 (130+18%gst)அடிப்படை கட்டணமாகவும் விருப்ப சேனல்களுக்கு குறைந்தது 100(100+18) என்றாலும் 153+118=273 ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயம்
இதில் எல்லாவற்றையும் வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதை தவிர்க்கவே இந்த புதிய நெறிமுறையாம்.ம்ம்ம்ம்

பின்குறிப்பு:இந்த பதிவை வெளியிடும் முன்பும் சேவை மையத்தை தொடர்பு கொண்டேன்.வழக்கம் போல 1,2,3 அழுத்திய  பிறகும் எந்த பதிவு குரலும் இல்லை.சைலண்டா இருந்து கட் ஆயிடுச்சி..
ஆனாலும் ஒன்றை சொல்லியாகனும்.சேவை மைய அதிகாரிகள் மிகவும் பொறுப்பாக பொறுமையாகவே பதில் சொல்கிறார்கள்.

வாழ்க்கை

நம்

எதிர்பார்ப்பிற்கும்

நமக்கு கிடைத்தவற்றுக்கும்

உள்ள

இடைவெளியை

எப்படி நிரப்புகிறோம்

என்பதில்

உள்ளது

வாழ்க்கையின் அழகு

காணும்...பொங்கல்....

சுள்ளென்று
வெயில் சுட்டதும்
துள்ளி எழுந்து
குளித்து முடித்து
ரெடியாகி

அண்ணனுக்கு
அல்வாவும்
அண்ணிக்கு
அடை அவியலும்
அத்தைக்கு
கேசரியும்
அக்கா குடும்பத்திற்கு
ஸ்வீட்ஸும்
ஸ்விக்கி யில்
ஆர்டர் செய்து

தங்கை தம்பி
பிள்ளைகளுக்கு
அமேஸானில்
பரிசு பொருட்கள்
பர்சேஸ் செய்து

வீட்டு பிள்ளைகளுக்கு
ஆன் லைனில்
பேட்ட புக் செய்து

அம்மா அப்பாவிடம்
போனில்
ஆசி பெற்று

தோழமைகளுக்கு
வாட்ஸப்பில்
வாழ்த்து அனுப்பிவிட்டு

சோபாவில்
சாய்ந்து
தொலைக் காட்சியை
முடுக்கினேன்

*காணும் பொங்கல்*

பொங்கல்...வந்ததே

30 நாட்கள்
கோலம் போட்டு

மாடிமுதல்
தோட்டம் வரை
சுத்தம் செய்து

அஞ்சரைப்
பெட்டியிலிருந்து
அண்டா குண்டா
கழுவி
காய வைத்து

போர்வை
தலையணை
பாய் என
அலசிப் போட்டு

மார்கழி
தொடங்கி
தை முதல் வரை
பொங்கல் வேலை
செய்ய

கிடைத்தது
என்னமோ

கையளவு
சர்க்கரைப் பொங்கலும்
அதில் பாதி
வெண் பொங்கலும்
கூட்டுக் காய்கறி
போக

எஞ்சியிருப்பது

இடுப்பு வலியும்
கை கால்
வலியும்
மட்டுமே

பொங்கலோ பொங்கல்

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)