PAGE LOAD TIME

நையாண்டி தர்பார்-2

கும்பிடுறேங்க
நம்க்கு மன்சு நல்லாயில்லிங்கோ.நம்ம தோஸ்த் ஒருத்தர் நல்லாகலாய்க்கிறப்பாஅத்தாலதொடர்ந்து
ரவுஸ் வுடுன்னு சொல்லிக்கினாரு.ஆனா இந்த தமில்மண பதிவுங்கள பாத்தா ரொம்பத்தான் பயமாகீது.
இன்னாம்மா வெளுத்தது வாங் கறாங்க.
புளாக்கர் வித்தை பதிவுபட்டை,சர்வேங்கறாங்க.ஒரு அக்கா நல்ல சம்சாரம் கெடைக்க பத்து வழி சொல்லுது [கன்னத்துல ரெண்டு வுட்டாஅல்லாம் சரியாய்டும்.
யாருக்கு யார் வுடுறதுங்கறது ரொம்ப ரகசியம்பா]
இன்னொரு அக்கா சாப்டுவேரு சங்கதியெல்லாம் சொல்லித்தருது.நம்பள மாதிரி ஒரு டகால் பார்ட்டி சர்வே எடுத்து டபாய்க்கிது.பொறுப்பா ஒரு அண்ணன் இங்கிலீஸ் சொல்லித்தறாரு[நமக்கு டமிலே வராது].இப்பிடியாகச் சொல்ல நம்ம வுடுர ரவுச பாத்து கடுப்பாய்ட்டாங்கன்னா இன்னா செய்யிறதுன்னு கவெல பட்டுக்கினு இருக்கும் போது ஒரு தொஸ்து சொன்னாரு கெள்ம்புங்க தலிவா கெளம்புங்க என்று.கமல் தசாவதாரத்துல 10 வேசம் கட்டறமாதிரி நீயும் செய்.நக்கலும் வுடு,கத கவிதயும் எழுது அப்பாலிக்கா கொஞ்சம் அரசியல் சினிமாவும் டச் பண்ணிக்கன்னார்.அதுங்கூட கரீட்டுதான்னு சொல்லி 'பல்சுவை' அப்டீன்னு பதிவு போட்டா ஏற்கனவே தேவகோட்டையிலிருந்து ஒரு அண்ணாச்சி இதே பேர்ல எளுதிக்கிட்டு இருக்காக.அட மக்கா !இந்த தமிழ்மண நிர்வாகிங்க பதிவு பேரு 'ரிப்பீட்டு' ஆகாம பாத்திருந்தா நான் இப்படி 'அப்பீட்டு'ஆக வேண்டாம்.நம்பள்து அக்மார்க் சரக்குங்க[தரம் குறைந்தாலும் ஒரிஜினல்]யாராச்சும் குத்தம் சொல்லக்கூடாது பாருங்க.இனியாச்சும் பதிவுகள் பேர் ஒப்புதல் அளிக்கும்போது ஒரேமாதிரி இல்லாம பாத்துக்கணும் என்று உங்க சமூகத்துகிட்ட ஒரு விண்ணப்பம் பரிசீலிக்க வைக்கிறேன்.
கடேசியா ஒரு வார்த்தை ஒரு நண்பரு எளுதியிருந்தாரு மூஞ்சி காட்டாம பேரு சொல்லாம அது இன்னா 'பெயரிலி',முகமிலி' அப்பிடீன்னு.என்னைப் பொறுத்தவரை நம்ப சொல்ற சேதி தாங்க அண்ணே முக்கியம்.சுவையாகவும் கொஞ்சமேனும் பயனுள்ளதாகவும்,நயமாகவும் இருந்தாப் போதும்.என்னேரமும் மூஞ்ச உர்ருனு வச்சிக்க முடியுமா ?கொஞ்சம் இந்த மாதிரியும் படிக்க சகிக்க கத்துக்கணும்.இன்னா தலிவா நான் சொல்றது கரீட்டுதானே?வர்ர்ட்ட்டா.......

5 மறுமொழிகள்::

Anonymous said...

"""இன்னா செய்யிறதுன்னு கவெல பட்டுக்கினு இருக்கும் போது ஒரு தொஸ்து சொன்னாரு கெள்ம்புங்க தலிவா கெளம்புங்க என்று."""

அது சரி, நீங்க ""கண்மணியா..."" இல்லை ""கண்மணனா"".ஒங்க தோஸ்த் தலைவின்னு சொல்லாம தலைவான்னு சொல்லியிருக்காரே :)) இல்லை உள்குத்தை நாந்தான் தவற விட்டுட்டேனா :))

கண்மணி said...

தலிவா வா இல்லை தலிவி யா முக்கியம் இல்லை மொத்தத்தில் 'தல'
இப்ப நீங்க யாரு அனானி ..மாட்டினீங்களா.
நன்றி

Anonymous said...

ok proceed thala

Anonymous said...

இதெல்லாம் நல்லதுக்கு இல்லீங்க சொல்லிட்டேன் ஆமா

cheena (சீனா) said...

தமிழ் மணத்தில் இணைக்கும் போது சரிபார்க்கலாம். ஆனால் இணைக்காமல் இருக்கும் பதிவுகளும் உண்டு - ஆகவே பதிவின் தலைப்பு வைக்கும் போது பார்த்து வைப்பது நல்லது -- ஒரே பெயரில் இரு பதிவுகள் இருந்தாலும் தவறில்லையே

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)