PAGE LOAD TIME

நையாண்டி தர்பார்-3

ஹலோ தல வணக்கம்
இன்னாபா ஏதாச்சும் நாட்ல விசேஷம் கீதான்னு கேக்கிறியா
அட போப்பா நானே மன்சு செரியில்லம கீறேன்.இந்த கலாய்க்கிற வேலைல்லாம் நாம பாக்கலாம்னு பாத்தா அத்தியும் இவுங்களே செஞ்சிகிட்டா??
இன்னா விஷ்யம்னா நம்ம கவிதா அக்கா சினிமா விமர்சனம் பத்தி கைப்புள்ளய போட்டுத் தாக்குது.அப்பாலிக்கா அந்த மகாலஷ்மி மேட்டரு ஒரே பேஜாரா பூடுச்சி.
ஒரு பக்கம் பாத்தா நிலாக்கா சொல்றது கரீட்டு.ஆளாளுக்கு தற்கொலைன்னு போனாங்காட்டி நாம்ப துட்டு குடுக்க முடியுமா?
அதுக்கு ஆழியூரண்ணாச்சி சொல்றாக,படிப்ப பாதிலே நிறுத்தச் சொல்ல எப்பிடி வேலைக்கு போன்னு சொல்ல முடியும் படிப்ப முடிக்கட்டுமேன்னு சொல்றாங்க.இதும் கரீட்டுதான்.
இதுல இன்னா மேட்ருன்னா நம்பள யாராச்சும் பொய் சொல்லி டகாய்க்க போறங்கன்னு பயம் வரலாம்.ரவி நல்லா வெசாரிச்ட்டுதான் சொல்லுது.
எம்மாம் பேரு எதேதோ செலவு பண்றம்.கொஞ்சம் ஒதுக்கலாம்.அதிஷ்டம் உள்ளவங்களுக்கு இப்படி வாய்ப்பு கெடிக்கும்.இதேதான் நம்ம கொண்டை முனி [அட அதாம்பா நம்ம வள்ளுவரு] சொல்றாரு...

''காலத்தினாற்செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது''

யம்மடியோ இந்த ஒரு கொரலு சொல்றதுக்கு நமக்கு பேஜாராகீதே அவுரு எப்டிப்பா 1330 எளுதுனாரு
கட்சியா தர்பார்ல என்னோட மெசேஜ் இன்னான்னு கேட்டா உதவி செய்றது தப்பில்ல,விருப்பப்பட்டவங்க செய்லாம் இல்லாங்காட்டி பேஜார் பன்னாம உட்ருலாம்.இன்னா நைனா கரீட்டா?அப்பாலிக்கு மறுபடியும் என்னாச்சும் புது மேட்டரோட கண்டுக்கிறேன் .வர்ர்ர்ட்ட்டா

2 மறுமொழிகள்::

Anonymous said...

ஆப்பு இருக்குது அப்ப்ப்பூபூ

cheena (சீனா) said...

உதவி செய்யுறது தப்பில்ல - விருப்பப்பட்டவர்கள் செய்யலாம் - மற்றவர்கள் தடுக்காமல் இருந்தால் சரி -

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)