PAGE LOAD TIME

நையண்டி தர்பார்-4

வணக்கமுங்கோ
இன்னிக்கு செம குஷியாக்கீறேங்க.
இன்னாடா நம்ம தமிழ்நதி அக்கா மாதிரி கீறவங்க அல்லாம் அய்கான டமில்ல எழுதொச் சொல்ல நாம்ப இப்பிடி பேட்ட பாஷை பேசுரமேன்னு கொஞ்சம் மன்சுக்கு கஷ்டமாபூட்சுங்க.அப்பாலிக்கு ரோசனை பண்ணி பாக்கச்சொல்ல நம்ப பேச்சையும் கொஞ்சம் இஷ்டமா படிக்கிறாங்கன்னு தெரியுது.யாரோ சொன்னாங்களாம் "கருமமே கண்ணாயினார்" அப்டீன்னு அதாங்க நம்ப பாலிசியும்.
சரி இன்னிக்கு மேட்டருக்கு வருவோம்.
இந்த தமிழ்மண பதிவுல்லாம் பீராஞ்சி பாக்கச் சொல்ல நம்ப மன்சுக்கு பட்டத சொல்றங்க.
வரவர சினிமா சமாச்சாரம் நெறய வர்து.அதுங்கன்டி பாருங்க அஞ்சாரூ கண்ணை போட்டு இது யாரு கண்டு புடிங்கறாங்க.பல பேரு மேட்டர் இல்லாங்காட்டி சினிமா விமர்சனம் பண்ணி உதார் வுட்றாங்க. இஞ்சி இடுப்புன்னுட்டு நம்ப இலியானா படத்தை போட்டிருக்கங்க[சும்மா ஷோக்காகீது குட்டி]சினிமா பத்தி பேசலாம்.ஆனா இந்த டி.வி.க்கரங்க பண்ற வேலைய நாம் பண்ணனுமா.
ஒரு சுதந்திர தின,குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி அப்டீன்னுட்டு,தம்மாத்துண்டு துணியும்,அதிகமா மேக்கப்பும் போட்டுகினுநம்பநமியோஇல்லை 'சீனா தானா மல்லிகாவோ வந்து சிறப்புநிகழ்ச்சிகுடுப்பாங்கஏதோஅவங்கதான்சுதந்திரம்வாங்கி தந்த மாதிரி.
சரி இந்த புது வருஷம்,பொங்கல்,தீவாளிக்கு பாத்தா திரிஷாவுடன் ஒரு நாள்ன்னு வேல வெட்டிய வுட்டுட்டு அதும் பின்னாடி நிருபர் சுத்துவாரு.அதுவும் முன்னால் விழ்ற முடிய தள்ளிவிட்டுக்கினே பூமரோடு தமிழையும் மென்னு மென்னு டமில்ல பேட்டி குடுக்கும்.இல்லாங்கட்டி அசின் வீட்டுல பொங்கல் அப்டின்னு ஒரு புரோகிராம்.ஏன் நம்ம கண்ணம்மா பேட்டை மினிம்மா வூட்ல வைக்கிற பொங்கல காட்ட கூடாதா.
அது போகட்டும் இந்த பொஸ்தக காரங்க அட்டையில் நயந்தாரா வூட்டு நாய் படத்தப் போட்டு ''நயன் வீட்டு நாய்க்கு வய்த்தால போவுது''அப்டீன்னு தலைப்பு செய்தி போடுவாங்க.அப்பால உள்ள போய் படிச்சா இது யாரு இடுப்பு,இது யாரு தொப்புள் கண்டு புடிங்கம்பாங்க.24 மணி சேவையாக இந்த டி.வி காரங்க பண்ற சேவையில் நாம ஏன் மண்ண போடுனும்.
இன்னொரு பதிவுல தொலைபேசியப் பத்தி ஒரு அண்ணாத்த விலாவரியா எளுதியிருந்தாரு ஆனா அதுக்கு 'மன்மத லீலை'பாட்டு 'கிளிப்பிங்' ஒலியும்,ஒளியுமா போட்டுருந்தாரு.டி.வி லதான் தொட்டதுக்கு எல்லாம் 'சினிமா' கிளிப்பிங்னா நம்ம பதிவுக்குமா? தப்புன்னு ஒரேடியா சொல்ல மாட்டேன் .ஆனா இன்னும் கொஞ்ச நாள் போவச்சொல்ல முழுக்க சினி நியுஸ் மட்டும் தான் வருமோ?
சரி நைனா நீ இன்னா ஒழுங்கா கீற எங்களச் சொல்ல வந்துட்ட அப்டீன்னு நம்ள கட்டம் கட்றதுக்குள்ள வுடு ஜூட்...ஐய்யா எஸ்கேப்...வர்ர்ர்ர்ட்ட்ட்டா

3 மறுமொழிகள்::

Anonymous said...

இனியவ ஜொல்லுட்டுட்டு,நீரெல்லாம் சினிமாவ குத்தம் சொல்றிரா

Anonymous said...

நமக்கு நமீதா தாங்க....

cheena (சீனா) said...

இதெல்லாம் மாறுமா என்ன - நாம பாட்டுக்கு நம்ம வேலயே பாப்போம்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)