PAGE LOAD TIME

நையாண்டி தர்பார்-1

பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லாத பொதும்,கொஞ்சம் விவகாரமான ஆளுங்க.
என்னத்த சொல்ல என்னத்த எளுத வெவகாரம் புடிச்ச ஆளு பேசுனா கண்டுகிடாதிங்க
சபைக்கு வணக்கமுங்கோநாம இந்த பதிவுக்கு புதுசுங்க. எல்லாரும் எதாச்சும் சொல்லணும்னா தெறமையா எளுதுவாங்க நாம கொஞ்சம் வெவகாரம் புடிச்ச அகராதிங்க.குத்தம் குறை கண்டு புடிக்கறதுல நம்மள தட்டிக்க ஆளு இல்லீங்கோ.[அல்லாரும் அப்படித்தான்]நம்ம தோஸ்து ஒருத்தரு ப்ளாக்கு படிப்பாருங்கோ அப்பால நாமும் படிக்கச் சொல்ல ரொம்ப பேஜாரா பூட்சிங்கோ.இன்னாங்கோ சொந்த கத சோக கத அல்லாம் எளுதறாங்க அப்படியே காதல் கத கவிதன்னு ரவுஸ் காட்றாங்க.சரி நம்மளும் எளுதலாம்னு கெளம்பிட்டங்க.ஆனா பாருங்க அல்லாம் பெர்சா படிச்ச பசங்க போல .அது இன்னா சாப்டுவேரோ அண்டர்வேரோ நம்மல்க்கு தெரியாதுங்க.ஆனா நல்லாவே கொறை கண்டுபுடிப்பேங்க.அட அதவச்சே நம்ம சுப்புடு மாதிரி அதாங்க கர்னாடக முயுசிக்கில் குத்தம் கண்டு விமர்சனம் செய்வாரே அதுங்கட்டி நம்முளும் ஏதாச்சும் பண்ணுவோம்னு கெலம்பிட்டோம்ல.இன்னா வர்ர்ட்ட்டா.........அப்பாலக்கி பாக்கலாம்.
அட ஆமாங்க அது இன்னா பைவ் ஸ்டாருங்கோ.ஓட்டலுங்களா?சும்மா தமாஷுங்க.ஹி.ஹி. அதுக்கு மேல கிடையாதா?நம்ம பசங்க ஸ்கூல்ல ராங்க் தான் சொல்வாங்க இதஎப்பிடி போட்றீங்க அண்ணாச்சி.சிலசமயம் மூணு ஸ்டாரோட நிக்குது. அப்ப ரெண்டு எங்க?அட நம்ப மாடி[மாதவன்] நட்ச படம் இல்லீங்கோ ரெண்டு,நாலு ஸ்டார் இல்லியா?அப்பறம் அண்ணே அது எப்பிடி இடுகை போடச்சொல்லவே டப்னு ஸ்டார் வர்து யாரு அம்மாம் சுளுவா மார்க் போட்றாங்க.
இத்த எளுதங்கட்டி படு பேஜாரா போச்சிப்பா.அது சரி இன்னா அது குறி சொற்கள்? ஓ நாம்ப இன்னா எளுதனோம் அப்படிங்கறதை டக்குனு கண்டுக்கவா?அது ஓகே தலிவா ஆனாங்கட்டி அந்த குறிசொல்லுல நம்ப பேட்டை பாஷ எல்லாம் கீது?அதாம் 'பாப்பார தேவடியாமகன்' பாக்கப்பவே ஷாக்கயிடுச்சிப்பா.எல்லா இனம்,சாதிகாரங்க எளுதற எடத்துல இப்பிடி அலவ் பண்ணலாமா தல?இதுக்கு எல்லாம் சென்சார் இல்லியா?நம்ப 'நமிக்கு' [அதான் நம்ப நமீதா] மட்டும்தான் சென்சாரா?அல்லாரும் படிக்கிறதால் இந்த மாதிரி 'குறிச்சொற்கள்' தடை செய்யலாம் தல. அப்பிடியே சொந்த பேரு லவ்வர் பேரு வேண்டாத பேரு போட்றதயும் தடுங்க தலிவா வர்ர்ட்ட்டா.....பை சீ யூ

8 மறுமொழிகள்::

ஜி said...

நல்ல காமெடியா இருக்குது கண்மணி. ஆனா அந்த கெட்ட வார்த்தைய கொஞ்சம் தவிர்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம். கொஞ்சம் நெருடலா இருக்குது. அதுக்கு பதிலா ஒரு டேஸ் போட்டுருக்க்லாம்.

இப்படி பொதுவா நையாண்டி பண்ணுனா எப்படி, அப்டீக்கா தமிழ்மணம்ல ஒரு ரவுண்ட் வந்து ஒவ்வொரு பதிவரா குத்துங்க..

ஏத்திவுட்ட என்ன மட்டும் உட்டுறுங்க...

கண்மணி said...

\\ஆனா அந்த கெட்ட வார்த்தைய கொஞ்சம் தவிர்த்திருக்கலாமோன்னு ஒரு எண்ணம். கொஞ்சம் நெருடலா இருக்குது. அதுக்கு பதிலா ஒரு டேஸ் போட்டுருக்க்லாம்.//

ஜி அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்ததினால் தான் இந்த தர்பாரே.ஆனால் தற்போது நீக்கப்பட்டு விட்டது.
என்னுடையசந்தேகங்கள்,விமர்சனங்களின் வெளிப்பாடு தான் இந்த நையாண்டி போர்வை[தர்பார்]
டேக் இட் ஈசி நைனா

ஜி said...

:-)

Anonymous said...

superb kalakkunga

கண்மணி said...

thank you anany

cheena (சீனா) said...

இந்த ஆட்டைக்கு நான் வரலேம்மா

கண்மணி said...

சீனா சார் முதல் முதலா எழுதிப் பழகற குழந்தை மாதிரி ஏதேதோ கிறுக்கினதையெல்லாம் பின்னூட்டம் போட்டு இப்படி வதைக்கிறீங்களே

மார்ச் க்கு பிறகு படிங்க.கொஞ்சம் தேவலாம்னு இருக்கும்

அறிவன் /#11802717200764379909/ said...

என்னங்க ஓடிக்கிட்டிருக்கு?????????
கன்பூஜனாக்கீதே..

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)