PAGE LOAD TIME

சாட்டிங்.....சீட்டிங்

காலை மணி ஆறு.
அவசரமாய் படுக்கையை விட்டு எழுந்த ரவி குளித்து தயாரானான்
‘வசீகரா…..’செல்போன் சிணுங்கியது
எடுத்து காதில் வைத்து,”ஹலோ”என்றான்
“ஹாய் ரவி,,ஐ யாம் தீபா”
“ஹாங்.. சொல்லு தீபா. இதோ கிள்ம்பி விட்டேன்”
“ஒகே ரவி நானும் கிளம்பிட்டேன்….நான் சொன்ன ரெஸ்டாரெண்டுக்கு வந்துடுங்க பை”
“பை” என்றபடி போனை வைத்த ரவி சுறுசுறுப்பானான்.தீபாவை பார்க்ககப் போகும் ஆவல் மிகுந்தது.
தீபா அவனுடைய “சாட்டிங்” தோழி. தற்செயலாய் பேசத்தொடங்கி,நட்பாக வளர்ந்தது.வெறுமனே “சாட்” செய்து கொண்டிருந்தவன் ஒரு நாள் அவளைப் பார்க்கும் ஆசையை வெளியிட்டான்.
அவளும் சரியென்று சொல்ல இதோ கிளம்பிவிட்டான்.
சரியான நேரத்திற்கு அவள் சொன்ன ரெஸ்டாரெண்ட்க்கு வந்தவன் வாசலில் இருந்த ‘பெப்’பை பார்த்ததும் குஷியானான்.அவள் பிங்க் நிற பெப்பில் தான் வருவதாக சொல்லியிருந்தாள்.
இதற்குமுன் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை யென்றாலும் அவளின் இனிய குரலை வைத்தே தன்னால் கண்டு பிடிக்க முடியும் என்று நினைத்தவாறே உள்ளே சென்றான்.
ரெஸ்டாரெண்டில் கூட்டம் இல்லை.ஓரிருவரே இருந்தனர். வெகு நேரம் காத்திருந்தவன் பொறுமையிழந்து, பக்கத்து டேபிளீல் இருந்த ஒரு பெண்மணியிடம் சென்று”மேடம் ப்ளீஸ் ஒரு ஹெல்ப் தீபான்னு ஒரு கேர்ள் வந்தா ரவி இப்பத்தான் போனாருன்னு சொல்லிடுங்க. நான் ஒரு அவசர வேலையா போகனும்.”என
“ஹாய் ரவி நாந்தான் தீபா”என்று அந்த 55 வயது பெண்மணி சொன்னதை முழுதாக கேட்காமல் மூர்ச்சையானான் ரவி

5 மறுமொழிகள்::

rajadhi raj said...

நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால்....

நல்லா இல்ல....

But you could deliver better..Hope you would take this as constructive criticism.

Good luck!

-ராஜ்.

கண்மணி said...

நன்றி ராஜ்.சட்டென்று பார்க்கும் போது ந்ந்ல்லாத்தான் இருக்காது.ஆனால் இது உண்மை..ஏன் நீங்கள் இப்படி ஏமாந்தவர்கள் பற்றி கேள்விபட்டதில்லையா?உண்மைகள் சுடும்

வினையூக்கி said...

:):)

cheena (சீனா) said...

உண்மை - இது உணமை.

cheena (சீனா) said...

சீட்டிங் என்று ஏன் வந்தது - வயது குறைத்துச் சொல்லப்பட்டதா - அல்லது வயதை ஊகித்தாரா - சீட்டிங்க்கா அல்லது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)