PAGE LOAD TIME

நையாண்டியும்...நடிகைகள்..பேட்டியும்

எல்லோருக்கும் புத்தாண்டு அட்வான்ஸ் வணக்கமுங்கோ
நியூ இயர்க்காக நம்ப தல என்க்கு ஒரு படா பேஜாரான வேலை உட்டுட்டாருங்க.நம்ம் சினிமா ஸ்டாருங்களை பேட்டி எடுக்கச் சொல்லிட்டாரு.
அப்பாலிக்கா நானும் சர்தான்னுட்டு நாலு பேர செலெக்ட் பண்ணங்க.
முதல்ல நம்ப 'காதல் சந்தியா' ஊட்டுக்கு போனங்க.அது ஒரு புது மாருதி ஜென்னாண்ட நின்னுகினு இருந்திச்சி.
"இன்னா சந்தியா காரு புச்சா ன்னு " கேட்டன்.
அதுக்கு சந்தியா,"ஆமாநான் அப்பவே எங்க நைனாவாண்ட காரு கேட்டேன்.+2 முடிச்சாதான்னு சொல்லி ஸ்கூட்டி வாங்கித் தர அது அப்பப்ப ரிப்பேர் ஆக நானும் மெக்கானிக் ஷாப்பு போகவேதான் பரத் கூட லவ் ஆயி பெரிய பேஜாராயிடுச்சி.அதான் ஸ்கூட்டிய விட்டுட்டு கார்ல போறன் .ஏன்னா எங்கியாச்சும் அந்த பரத் பைத்தியம் கண்ணுல அம்புட்டுதுன்னா ரோதனைப்பா" என
ஒனக்கு ஃபீல்டுல பேர் வாங்கி தந்ததே அந்த ஸ்கூட்டிதான் என்று நினைத்ததை சொல்லாமல்,"ஓகே பை சந்தியா"என்று கிளம்பிட்டேன்
அடுத்து போனது நம்ப அசின் வீடு."எந்தா நை வரு வரு" என வரவேற்பு பலம்தான்.
"அது சரி அசின் நீங்க எம்.குமரன் சன்/மகாலஷ்மியில் நடிக்கலைன்னா என்ன செஞ்சிருப்பீங்க" நான் வினவ
அசின்"எந்தா பிராந்தன் தன்ன பறையிது அல்லே எம்.குமரன் சன்/மகாதேவனில் நட்சிருப்பேன்."
"சரி அது இன்னா பேரு அசின்"
"ஹேய் ஞான் என்ற அச்சன்ட 'பிசின்'னு தான் வைக்க சொன்னேன் அவராக்கும் ஓல்பபெட்டிக் ஆர்டர்ல முன்னால் வருமின்னு 'அசின்' னு விளிச்சது கேட்டோ இப்படியெல்லம் கெக்காத போய்க்கோ" என விரட்ட
அடுத்த வீடு நம்ப 'நமி'' வீடுதான்.வழிந்த ஜொல்லை துடைத்தபடியே,"ஆமாம் நம்ஸ் சரத் சாரோட ஸ்கூல் யூனிபார்ம்ல 'தருவீயா?தர மாட்டிய்யா?ன்னு ஒரு இலக்கியத்தரமான பாட்டுல ஆடினீங்க .யூனிபார்ம் ஐடியா யாரோடது?"
ஹேய் அது என்னோட ஒரிஜினல் காஸ்ட்யூம்.அன்னிக்கி லேட்டாயிடுச்சின்னு நான் ஸ்கூல்விட்டு யூனிபார்ம்ல அப்டியே ஷூட்டிங் வந்திட்டன்.டைரக்டர் அப்டீயே அசந்து போயி 'நமி இப்பத்தம்மா உன் ஒரிஜினல் வயசே தெரியுதுன்னு சொல்லி கண்கலங்கிச்சி.
நானும் இந்த காஸ்ட்யூம்ல் ஒரு சாங் வக்கலாம்னு சொல்ல ஓகே பண்ணிச்சி.ஆனா பாவம் சரத் சாருக்குத்தான் யூனிபார்ம் கிடைக்க பேஜாராச்சி"
இதுக்கு மேல காதுல பூ வைக்க எடம் இல்லாததால் பை சொல்லி ந்ழுவினேன்
கடைசியா போனது நம்ப 'லக்க..லக்க..லக்க' வீடு
ரிவர்சிபிள் சாரியை பெரட்டி போட்டபடியே ஜோ[திகா] "ராரா.....ராரா "என கூப்பிட
"யாரது"என்ற சூர்யாவின் அதட்டலில் பயந்து எடுத்தேன் ஓட்டம்
இரு தல இப்பாலிக்கி இவ்ளோதான் மூச்சு வாங்குது
பொறவு பாப்பம்...வர்ர்ர்ட்டா

13 மறுமொழிகள்::

கண்மணி said...

மாமி ஊர்ல இல்லை அனானி அதான்

premi.k said...

மணி,நடிகைகள் மட்டும் தானா?நடிகர்கள் இல்லையா?

கண்மணி said...

பிரேம்,அடுத்த பதிவுல மாட்டுவாங்க.வெய்ட் &சீ...

Anonymous said...

ஹிஹிஹிஹிஹி...Superb!!

ஜி said...

ஹி..ஹி...

நடத்துங்க நடத்துங்க....

ரொம்ப சார்ட்டா முடிஞ்சிடிச்சு.. இன்னும் எக்ஸ்ட்ராவா அடுத்தது சீன் போடுங்க...

கண்மணி said...

ஞான் 'தூயாவிண்ட' சமயல் ரசிகையாக்கும்.அப்பிடியே அம்மணி இந்த நரை முடிக்கும் [ஐயோ..நமக்கில்லீங்க அம்ணீ]ஒரு அழ்க்கு [அழகு]குறிப்பு தாங்கோ

கண்மணி said...

வார்ரே வ்வா!ஜி! என்னடா பதிவு போட்டு மூணு நாளாச்சுதே நம்ப ரசிகர் மன்ற தலிவரக் காணோமேன்னு பாத்தேன்.
அப்பாலிக்கு பாத்தா ஐய்யா சாபூ த்ரீ வெளையாடிண்டு இருக்கார்.
[இம்லி [புளியங்கா படம்]ஹிந்தி புக்கில சுட்டது தானே..ஹ.ஹா...]

Anonymous said...

this is too much.ippadikku 'asin'fanclub

கண்மணி said...

அசின் ரசிகர் வருத்தப் படவேண்டாம்.இந்த ஆண்டின் கனவுக்கன்னி நம்ம பிசின் சாரி அசின் தான்

.:: மை ஃபிரண்ட் ::. said...

akka,

ippothaan ungge intha postai padichchen. super.. kalakkal.. ithu oru seriesaa podalame! appo ella nadigaiyum enna solraangganu theriyumle.. :-)

eppadi en idea?

.:: மை ஃபிரண்ட் ::. said...

vanthu paarkkumpothellam puthu post illaathathunaale unggaloda archieved post padichchiddu irukken.. konjam konjamaa ellaaththaiyum padikkiren. puthu post podungga.. waiting. :-)

cheena (சீனா) said...

இண்டர்வியூ பண்ற வேலைக்கு அப்ளிகேசன் போட்டாச்சா

Anonymous said...

ARUMAIYAANA KARPANAI..... IDHE POL SILA SUYANALA ARASIYALVAADHIGALIN PETTIYAYI UNGAL KARPANAI VADIVIL PADHIVIDAVUM.....VAAZHLTHUKKAL......

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)