PAGE LOAD TIME

திருவிளையாடல் ஆரம்பம்...[பகுதி-1]

என் உயிரினும் மேலான என் இனிய தமிழ்மக்களே
உங்களுடன் வார்த்தையாட தமிழ்மணக் கரையோரம்
இந்த பாரதிராஜா..சாரி கண்மணி வந்து விட்டேன்
[இத்தனை நாளாக காணோம் ஒழிஞ்சது சனியென்றால்
வந்துவிட்டதே..முணுமுணுப்பு கேட்கிறது அசரமட்டேன்]
புதியதாக ஒரு 'திருவிளையடலுடன்..
[திரு சார் இல்லைப்பா ]
சொக்கனும் தருமியும் நடிக்கும்/நடித்த திருவிளையாடல்
ஆரம்பம்.
பகுதி-1:
மண்டபத்தில் தருமி புலம்பிக் கொண்டிருக்கிறார்..
"அய்யோ ஆயிரமும் பொன்னாமே ஆயிரம் வராகனும் எனக்கே கிடைக்க அருள் புரியக் கூடாதா சொக்கா. "
அங்கு வரும் சொக்கன் கேட்கிறார்
"தருமியே ஏன் புலம்புகிறீர் என்ன வேண்டும் உமக்கு நான் தருகிறேன் கேள்
தருமி "என்ன நீர் தருகிறீரா? இப்பவே தமிழ்மணத்துல
என் பதிவை சொந்தமா? ,சுட்டதான்னு கேக்குறங்க. போமய்யா"
சொக்கன், "புலவரே என் திறமையில் சந்தேகமிருந்தால் எம்மை சோதித்துப் பாரும்" கேள்விகளை நீர் கேட்கிறீரா இல்லை நன் கேட்கட்டுமா?"
தருமி,"இதப் பாரும் என் பதிவுகள் வேணும்னா ஏப்ப சாப்பையா இருக்கலாம் ஆனா அவ்வளவும் நான், நானேதான் எழுதினேன்.
எனக்கு பதில் சொல்ல வராது நானே கேள்வி கேட்கிறேன் ஏன்னா அது ரொம்ப சுலபம்"
"சரி கேளு"
த: சேர்ந்தே இருப்பது?
சொ: தமிழ்மணமும்,வலைப்பதிவும்
த: பிரியாதிருப்பது?
சொ: பொன்ஸும்,யானையும்
த: பிரிந்தே இருப்பது?
சொ: ஈழமும்,தமிழர்களும்
த: போடக்கூடாதது?
சொ: அனானி பின்னூட்டம்
த: போடக்கூடியது?
சொ: ஜால்ரா பின்னூட்டம்
த: சொல்லக் கூடியது ?
சொ: ஆஹ..ஓஹோ சூப்பர் பதிவு
த: சொல்லக்கூடாதது?
சொ: ஹூம்.மொக்கை.ஜல்லிப் பதிவு
த: திரட்டிக்கு?
சொ: தமிழ்மணம்
த: யூனிகோடிற்கு?
சொ: ஈ கலப்பை
த: கிசு கிசுக்கு?
சொ: இரவுக்கழுகார்
த: கடிஜோக்கிற்கு?
சொ: ஹி...ஹி..ஹி.. கண்மணி
த: பெரியாருக்கு
சொ: விடாது கருப்பு
த: வைகோவுக்கு
சொ: வரவனையன்
த: ராமதாஸுக்கு
சொ: கடலூர் காட்டான்[குழலி]
த: குட்டிதோட்டத்திற்கு
சொ:அஞ்சலிபாப்பா
சோர்ந்து போன தருமி,"அய்யா போதும்
ஆளை விடும்
கவிதையைத்தாரும்
தமிழமணத்தில் பதிவிட்டு
எத்தனை பின்னூட்டம் வருகிறதோ
அத்தனையும்
சொல்கிறேன்.நீங்களாகப் பார்த்து
ஏதாவது எனக்கு செய்யும்" என
சொக்கன், "சரி பாண்டியனின் ஐயம் என்னவோ?"என வினவ
தருமி,"தன் காதல் மனையாளின் மீது தான் கொண்ட காதலை
நிரூபிக்க நல்ல கவிதை கேட்கி றார்"
சொக்கன் தந்த கவிதையோடு தருமி அரசவைக்குப் போகிறார்
[கவிதையும் ..பகுதி-2 ம் அடுத்தப் பதிவில்]
-தொடரும்

7 மறுமொழிகள்::

நாமக்கல் சிபி said...

ஆரம்பிங்க! ஆரம்பிங்க!

பார்ப்போம்!

:))

கண்மணி said...

ஆரம்பிச்சுட்டமில்ல.வருகைக்கு நன்றி சிபியாரே

premi.k said...

ஆஹா கொஞ்சநாள் நிம்மதியா இருந்தேன் ஆரம்பிச்சிட்டியா .தாங்கலைப்பா

இராம் said...

ஹி ஹி நல்லாதான் ஆரம்பிச்சிருக்கீங்க :)

கண்மணி said...

வருகைக்கு நன்றி ராம்

கண்மணி said...

நன்றி பிரேமி அவ்வளவு சீக்கிரம் உங்களையெல்லாம் விட்டுடுவோமா..ஹி..ஹி

cheena (சீனா) said...

நல்லாத்தானிருக்கு

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)