PAGE LOAD TIME

நையாண்டியுடன்..வேல்..வேக்..மணி..காளை

வணக்கங்க
இன்னாப்பா தலைப்பே ஒரு மாதிரி இருக்கே தப்புத் தப்பான்னு பாக்கறீங்களா?
ஒன்னுமில்லை நம்ம தல நடிகருங்களை பேட்டி எடுக்கச் சொன்னாருல்ல அதான் வடிவேல்,விவேக்,கவுண்டமணி,முத்துக்காளை இப்பிடி காமெடியா புடுச்சிப் போட்டேன்
முதல்ல வடிவேல் வீட்டுக்குப்போனேன்.அங்கேயில்லை.

'வைகை வென்றான் வாயைப்பிளந்தான்' என்ற ஷூட்டிங்கில் இருப்பதாக அறிந்து,அங்கு செல்ல,

"ஆஹா வந்துட்டாய்யா..வந்துட்டான்"என்றபடி வரவேற்றார்.

'வடிவேலு சார் என்ன ஒரே இராஜா காலத்துப் படமா வேஷம் கட்டுறீங்க" என
"நையாண்டி நம்ம பர்சனாலிட்டிக்கு ராசா வேஷம் தான் ஓகே
இது தெரியாம இவ்வளோ நாள் காமெடி பண்ணது தப்பு'"

"ஆமாம் சார் ஐஸ்வர்யா உங்க கூட நடிக்கணும்னு கேட்டாங்களாமே"
இன்னாப்பா நம்மள வச்சி காமெடி,கீமெடி பண்றியா அபிஷேக் அலவ் பண்ணுவாரா"என் முறைக்க

"நான் சொல்றது உலக அழகியில்ல சார்.நம்ம் பழய நடிகை லட்சுமி பொண்ணு"

வெறுத்துப்போன வடிவேலு"அட போப்பா ஒரு நிமிஷம் ஆடிப்பூட்டேன்.நம்பள டபாய்க்கிறதுக்கே இப்படியெல்லாம் ஒக்கந்து யோசிப்பாய்ங்களோ "என்றவர்,
"சரி சரி இப்ப நாங்கேக்குற கேள்விக்கு நீ பதில் சொல்லு

கொசுவுக்கு கொண்டை போட்டால்
குள்ளப் பையன் குதித்து ஓடுவான்"அது என்ன
?"

எனக் கேட்டதும் பிடித்தேன் ஓட்டம்

"ஹாய்..ஹாய்..ஹாய்" என் குரல் கேட்டு திரும்ப விவேக்

"சார் உங்களைப் பார்க்கத்தான் வந்து கொண்டிருக்கேன்"என்றேன்
"என்ன நைய் வடிவேல்ட்ட மாட்டினியா?உங்களயெல்லாம் 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது"என்றார்
"ஆமாம் சார் நீங்க ஏன் மத்தவங்கள நக்கல் பண்ணியே காலம் தள்ளுறீங்க"

'ஆமாண்டா நான் பண்றது நக்கலா?புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமான்னு கேட்டா தப்பா?மூட ந்ம்பிக்கை வேண்டாம்னு சொன்னா தப்பா?பராசக்தி வசனம் ஒரே ஷாட்ல பேசுனா தப்பா?உன்ங்ள எல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

இப்படி திராபை கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பார்"

என முறைக்க வுடு ஜூட். இப்ப ஃபில்டுல இல்லாதவங்கள பாப்பம் அப்படின்னுட்டு கவுண்டர்பெல் வீட்டுக்கு போனேன்

"வாடா பனங்காத் தலையா இப்பத்தான் என் ஞாபகம் வர்தா" என்று வரவேற்றார்
"சாரி சார் இப்ப பிசியா இருக்கவங்களை போட்டாத்தான் நாலு பேர் படிப்பாய்ங்கன்னு"என நாம் இழுக்க

"அட்ரா சக்கை அட்ரா சக்கை அந்த பேரிக்கா மண்டையனும்,புரோட்டாத் தலையனும் மட்டுந்தான் பிசியா"என்று உறுமினார்

"கோச்சுக்காதீங்க சார் நீங்க மறுபடியும் ஃபீல்டுல ஒரு ரவுண்டு வர நான் ஒரு ஐடியா சொல்றேன்'' என்றதும்
"அப்டிப்போடு அருவாளை சொல்லுடி ராஜா என் கண்ணு "என்று கொஞ்ச

"நீங்க செந்தில அடிச்சி,ஒதைச்சே பேர் வாங்கின மாதிரி ,நீங்க ஏன் இப்ப இருக்கவங்க கிட்ட ஒதை வாங்கக்கூடாது"

பெல் கீழே குனிந்து எதையோ தேட "என்ன சார்"
"ஒரு பெரிய கல்லா தேடுறேன்.உன் மண்டையில போட"என்றதும்,
பிடித்தேன் ஓட்டம்.
ஓடினேன்...ஒடினேன்...ஓடிக்கொண்டே திரும்பினால் பின்னால் முத்துக்காளை துரத்த பயந்து ப்ஓய் ரெண்டு காதையும் பிடித்துக் கொண்டே நின்றேன் .

"சார் சார் பயப்படாதீங்க உங்க காதை கடிக்க மாட்டேன்.எங்களயெல்லாம் பேட்டியெடுக்க மாட்டியளா?"என்றார்.
பயம் தெளிந்து காதிலிருந்து கையை எடுத்து விட்டு,சொன்னேன்
"ஒகே காளை அடுத்தமுறை நீங்கதான் ஃபர்ஸ்ட்"என்றேன்.
"ரொம்ப டாங்ஸ் நையாண்டி சார் ஒரே ஒரு சின்ன உதவி "என
"சொல்லுங்க முத்துக்காளை"

"நீங்க என்னை பேட்டி எடுக்கிறவரைக்கும் நாம திருப்பரங்குன்றம் மலையிலிருந்து விழுந்து செத்து செத்து வெளாடுவோமா" என்றதும்..

.பின்னங்கால் பிடரியில் இடிக்க எடுத்தேன் ஓட்டம்.
மீண்டும் சந்திக்கும் வரை........வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா.

7 மறுமொழிகள்::

sutharshini said...

nallarukke

கண்மணி said...

thanks sutharshini

நியாயஸ்தன் said...

அம்மே! எந்தா பறைஞ்ஞு........

கண்மணி said...

சேட்டனுக்கு ஒந்நும் மனசிலாயியில்லா?
ஜஸ்ட் ஃபார் ஜோக்காக்கும் கேட்டோ
ஞான் மலையாளி அல்லா.சத்யம் பறைஞ்சது

sawi said...

really enjoyed nice

cheena (சீனா) said...

முத்துக்காளை தான் சூப்பரு

நானானி said...

பேசாமல் முத்துக்காளை சொன்னபடி வெளாடிருக்கலாம்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)