PAGE LOAD TIME

வாலண்டைன்ஸ் டே வித் கவுண்டமணி/செந்தில் [பகுதி-1]

கவுண்டமணி ஏதோ வேலையாய் இருக்கிறார்
அங்கு வரும் செந்தில் ,'அண்ணே..அண்ணன்னே'
'என்னடா கூமுட்டி தலையா ரொம்பத்தான் சந்தோஷமா இருக்க'
எப்பவும் முட்டிக் காலோட அரை டவிஸர் போடுவே இன்னிக்கு என்னாடா ஃபுல் பேண்ட் போட்டிருக்கே
'இன்னைக்கு வாலண்டைன் டே ண்ணே'
'அப்படின்னா'
'காதலர் தினம்ணே'
அதுசரிடா பேரிக்கா மண்டையா அது மனுசங்களுக்கு ஒன்ன மாதிரி மிருகங்களுக்கு இல்லடா மாங்கா மண்டையா
'போங்கண்ணே உங்களுக்கு பொறாமை நான் காதலிச்சா உங்களுக்கு புடிக்காதே'
'ஆமா இவரு பெரிய்ய ஆண் அழகன் ,ஐஸ்வர்யா ராய் இவரக்கட்டிக்கசம்மதிச்ச மாதிரி டகுல் காட்டுறாரு'
'அண்ணே பேச நேரமில்ல என் ஆளு காத்துக்கிட்டு இருக்கும் காசு குடுங்கண்ணே'
'காசு எதுக்குடா கமர்கட் வாங்கவா?'
ரோசாப்பு வாங்கிட்டுப் போகனும்ணே அத்த அவ வாங்கிகிட்டா நம்ம மேல லவ்ஸ்னு கண்டு புடிச்சிடலாம்ணே'
'ஆமா இவுரு பெரிய்ய மன்மத ராசா உம்மேல லவ்ஸ் வந்துட்டாலும்,ஆமாண்டா தலையில என்னடா கலரு கலரா அடிச்சி முள்ளம் பன்னி மாதிரி முடியெல்லாம் முன்னால போட்டிருக்கே,ஒத்தக் காதுல லோலாக்கு வேற'
'அதுவான்ன கலரிங் பண்ணிருக்கேன்,பேஷன்
உங்களுக்கு எங்கே புரியப்போவுது'
அது சரி யாருடாஅந்த
வீணாப்போன பெருச்சாலி.உன் ஆளு'
'நம்ம நாயர் கடையில இட்லி சுடுதே
அந்த அருக்கணி தான்னே'
'அது வந்து,உன்ன நான் லவ்ஸ் உடறேன்னு
சொல்லுச் சாடா தீஞ்ச மண்டயா?'
'இல்லன்னே நான் எப்ப நாயர் கடைக்கி இட்லி சாப்பிட போனாலும் என்ன பாத்து கண்ணடிக்கும்னே'
'என்ன ஒன்னப் பாத்து கண்ணடிக்குதா அட தேங்கா மண்டையா அதுக்கு நரம்பு தளர்ச்சிடா ஒன்ன மட்டும்
இல்ல தெருவுல போற பன்னிய பாத்தாக்கூட அடிக்கும்டா'
'நான் அழகா இருக்கறது ஒங்களுக்கு என்னைக்குமே புடிக்காதுன்னே'
'டேய்.டேய் என்ன செருப்பால கூட ரெண்டு அடி அடி ஆனா நீ அழ்கு ஒன்ன ஒருத்தி லவ்ஸ் உடறான்னு சொல்லாதடா"
என்றபடியே கீழே குனிந்து கல்லை எடுக்க செந்தில் ஓடுகிறார்.
[நாளை வா.டே வித் வடிவேல்/பார்த்திபன்]

12 மறுமொழிகள்::

ஜி said...

ம்ம்ம்ம்....

காமெடி அளவே இல்லாம அள்ளித் தெளிக்கிறீங்க....

வெயிடிங் ஃபார் னெக்ஸ்ட்...

கண்மணி said...

தேங்ஸ் ஜீ எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்ககிட்டயிருந்து கத்துக் கிட்டதுதான் தலிவா

SP.VR.சுப்பையா said...

கவுண்டமணி: டேய் பேரிக்கா மண்டையா, ஒரு நிமிஷம் நில்லுடா!

செந்தில்: எண்ணண்னே, போகும்போது கூப்பிடுறீங்க - போற காரியம் எப்பிடின்னே உருப்படும்!

கவுண்டமணி: நீ போன் காரியம் என்னைக்கிடா உருப்பட்டிருக்கு? முதல்ல சொன்ன பேச்சைக் கேளுடா - இல்லைன்னா பேதி மாத்திரையைக் கலக்கி புனலை வச்சி வாய்க்குள்ள ஊத்திவிட்டிருவேன்.

செந்தில்: சரி, சொல்லுங்கண்ணே!

கவுண்டமணி: அப்பிடி வா மகனே வழிக்கு! அது யார்டா 'கண்மணி'
ங்கிர பேர்ல பதிவு போட்டு நம்மளையெல்லாம் நக்கலடிக்கிறது!

செந்தில்: நீங்காகேப்பீங்கன்னு தெரியும். அதனால விசாரிச்சிட்டேன்.
யாரோ பெங்களூர் சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்கிற பையன் - பொம்பிளை பேர்ல எழுதிக்கிட்டிருக்காரு!

கவுண்டமணி: அதெப்பிடி நாயே கரெக்டாச் சொல்றே?

செந்தில்: எல்லாம் ஒரு ஊகம்தான்.
பொம்பிளப் பிள்ளைங்களுக்கெல்லாம் என்னைக் கலாய்க்க மனசு வராதன்னே!

கவுண்டமணி (கடுப்பாகி - கோபத்துடன்): அடி, செருப்பாலே

(என்று எழவும், செந்தில் ஓட்டம் பிடிக்கிறார்)

கண்மணி said...

வாங்க வாங்க சுப்பையா அண்ணாச்சி பெரியவங்க நீங்கள்ளாம்[வயசால இல்லை அனுபவத்துல]நம்ம பதிவுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.
ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு என் பதிவு பேர் முதல்ல 'பல்சுவை'ன்னுதான் வச்சேன்.அப்பாலிக்கி பாத்தா நீங்க அதே போல வச்சிருக்கிங்க.காப்பியடிச்சேன்னு சொல்லிடுவாங்கன்னு பயந்து ,'பல்சுவை பக்கம்' ன்னு மாத்திப் போட்டேன்.என் நையாண்டி தர்பார் பதிவுல இதப்பத்தி சொல்லியிருக்கேன்.
அண்ணாச்சி நல்லாவே காமெடி பண்றீங்க.டிரை பண்ணுங்களேன்.
ஆனாங்காட்டி நம்பள பத்தி சொன்னிங்க பாருங்க அதான் 'செம காமெடி'.ஹூம் பொம்பளங்களுக்கும் புத்தி உண்டுன்னு நம்புனாத்தான் ஒலகம் உருப்படும்.

SP.VR.சுப்பையா said...

கவ்ண்டமணி: ஏண்டா நாயே அழுதுக்கிட்டே வர்றே?

செந்தில்: போங்கண்ணே! உங்கபேச்சைக் கேக்கப் போயி அந்த அம்மணி நல்லா டோஸ் விட்டு அனுப்பிச்சிட்டாங்க!

கவுண்டமணீ: டேய் மண்டையா, மொதல்ல அழுகைய நிறுத்திட்டுச் சொல்லுடா! எந்த அம்மணிடா?

செந்தில்: அதாண்ணே அந்தப் பதிவு போடுற அம்மணி! பொம்பளங்களு க்கும் புத்தி உண்டுன்னு
நம்பமாட்டேங்கிறியே- நாடு எப்பிடி உருப்படும்னு கேட்டுட்டாங்க!

கவுண்டமணி: அடேய் கிறுக்கா! பொம்பிள்ளைங்களுக்குப் புத்தியில்லைன்னு நெனச்சிருந்தா நா எப்பிடிம்மா ஜெயலலிதா மேடத்தோட கட்சில சேர்ந்திருப்பேன் - மணி யன்ணன் எப்பிடிம்மா இந்திராம்மா கட்சில இருந்திருப்பாருன்னு கேட்டு மடக்கியிருக்க வேண்டியதுதானேடா

செந்தில்:நீங்க அறிவுக் கொழுந்தண்ணே - இருங்க போய்க் கேட்டுட்டு வந்திடறேன்

(செந்தில் மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறார்)

தம்பி said...

கண்மணி,

கலக்கல் காமெடி :))

தெனாலி said...

தப்பா நினைக்காதீங்க! இன்னும் பெட்டரா யோசிங்க

கண்மணி said...

அண்ணாச்சிக்கி புரிஞ்சா சரிதேன்

கண்மணி said...

நன்றி தம்பி
[உடனே என்னை அக்கான்னு கூப்பிட்டு வயசானவன்னு சொல்லிடாதீங்க ஹி..ஹி]

கண்மணி said...

தெனாலி இருக்கற சரக்குதானே வரும். இருந்தாலும் யோசிக்கிறேன்

தம்பி said...

/உடனே என்னை அக்கான்னு கூப்பிட்டு வயசானவன்னு சொல்லிடாதீங்க ஹி..ஹி//

சரிங்க அக்கா! :))

Cinema Virumbi said...

நண்பரே,

Valentine's Day பற்றி Zine5.com Feb 08 ல் நான் எழுதியதை என் வலைப்பூவில் படிக்கவும்.

பின்னூட்டம் இடவும்.

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.tamilblogs.com

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)