PAGE LOAD TIME

திருவிளையாடல் ஆரம்பம் ........[பகுதி-2]

சொக்கன் தந்த கவிதையுடன் தர்பாருக்குள் நுழைகிறார் தருமி.
"வாரும் புலவரே என் மனைவியின் பால் நான் கொண்ட காதலை நிரூபிக்கும் வண்ணம் தாங்கள் கவிதை கொண்டு வந்தீரா"''
"ஆம் மன்னா, நான் நானேதான் எழுதி வந்துள்ளேன்"
"எங்கே படிங்க பார்க்கலாம்"

"அன்பே!
வலைப்பதிவும் பின்னூட்டமும் போல
வைகோவும் ம.தி.மு.க வும் போல
சோவும் வழுக்கையும் போல
தாத்தாவும் பேரனும் போல
நாம் என்றும் இணைந்தே இருப்போம் நம்புவாயாக"
"இதுதான் மன்னா என்னுடைய கவிதை"
ஆஹா ..ஆஹா..தனியொரு புலவனாக வந்து எனக்கு உதவி செய்த உம்மைப் பாராட்டி ஆயிரம் பொற்காசு வழங்குகிறேன்"
நக்கீரர் குறுக்கிட்டு,:மன்னா இவர் கவிதையில் பிழை இருக்கிறது சற்றுப் பொறுங்கள் விஜாரிப்போம்"
தருமி,"அய்யா புண்ணியவானே யாரய்யா நீர்,ஏதோ நந்தி மாதிரி தடுக்கிறீர்"
"புலவரே உம் பாட்டில் தவறு காண்கிறேன்"
"ஏனய்யா எல்லோரும் தப்பில்லாமலா எழுதறாங்க.இலக்கண சுத்தமா எழுதனும்னா நாலு பேரு கூடா தேறமாட்டாங்க ஏதொ மனசுல பட்டத எழுதி பதிவு போடுறம்.அதுல ஒன்னை மன்னருக்கு சொன்னேன். தப்பிருந்தா அதுக்கு ஏத்தமாதிரி பின்னூட்டம் கொறச்சிப் போட்டு மீதி காசு கொடுங்களேன்"
"எழுத்துப் பிழை,சந்திப் பிழை என்றால் மன்னித்து விடலாம்"
ஆமா இவரு சந்து பொந்துன்னு கெளம்பிட்டாருய்யா என முணுமுணுத்தபடி,"வேறு என்ன பிழை"
"உமது பாட்டின்கருத்தேபிழையானது.
எந்நாளும்,இணைந்திருக்கும் உவமை சொல்வதாக நினைத்து தவறான மேற்கோள் காட்டியுள்ளீர். முதலில்
இதை எழுதியது யார்"
"நான்,நானேதான்.
பின்ன மண்டபத்துல யாராச்சும் எழுதி கொடுக்க
நான் வாங்கி வரவில்லை"
"அப்படியானால் பொருள் கூறும்"
ஏய், கிழட்டுப் புலவா என் மனதுக்குள் வைதபடி,"ராசாவுக்கே புரிஞ்சிடிச்சி ஒமக்கு புரியலையா,
ஆமா நீர் என்ன படிச்சி புலவரானீர்"
"கேட்டதுக்கு பதில் சொல்லும் புலவரே"
"அது தெரிஞ்சா நானே எழுதியிருப்பேன் சொக்கன் கிட்ட ஏன் கேக்கறேன். பொருள் புரிந்தா எல்லோரும் எழுதறோம்.
நானே பக்கத்து வீட்டுப் புலவரு பையன் அவன் அப்பாவோட
கவிதை பேப்பரை கடையில் எடைக்கு போட்டத தள்ளுபடியில் வாங்கி பொழப்பு நடத்துறேன் சொக்கன் குடுத்த கவிதையால் ஆயிரன் பொன்னு வாங்கலாம்னு பாத்தா கெழம் போட்டு கொடாய்து"என்று மனதுக்குள் மீண்டும் புலம்பியபடி,
இதோ பாரும்,இப்படி அடுத்தவங்க பதிவுல உங்க மூக்க நுழைக்காதீங்க.அவங்க அவங்க
மனசுக்கு சரின்னு பட்டத சொல்றம்.
வேணும்னா என் காரியதரிசி மண்டபத்துல இருக்காரு அவ்ரை அனுப்புகிறேன் கேட்டுக்கங்க" என்று
நடையக் கட்டுகிறார்.
[பகுதி-3 அடுத்த பதிவில்]
------[தொடரும்]

4 மறுமொழிகள்::

Anonymous said...

ஆத்தா இந்த பதிவுல ஏதோ உள்குத்து இருக்காப்ல தெரியுதுங்கோ.இப்ப தமிழ்மணத்துல நெறைய லடாயி இருக்குங்க அம்புட்டுதேன் சொல்லிப்புட்டேன்

கண்மணி said...

அட போய் உம்ம வேலையப்பாரும்.நான் ஏதோ சும்மா டமாஷூ பண்ண எழுதுனா உள் குத்து,வெளிக் குத்துன்னு குண்டப் போடுறீர். நாம என்னிக்கும் 'காமெடிதான்'

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு சீக்கிரம் 3 வது பகுதி போடும் அம்மணி..சாரி கண்மணி.

cheena (சீனா) said...

நல்லா இருக்கு - புலவரின் புலமை. சூப்பராப் போகுது

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)