PAGE LOAD TIME

இம்சை அரசன் 23 ம் புலிகேசி 30 ம் புலிகேசி ஆன கதை

இம்சை அரசன் 23-ம் புலிகேசி அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார்.
சேவகன் கட்டியம் கூறுகிறான்.
''ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்''
புலிகேசி ,''அடேய் நிறுத்து நிறுத்து என்ன சொன்னாய் மறுபடி சொல் பார்ப்போம்''
சேவகன் நடுங்கியபடியே,;;மன்னா சரியாகத்தானே சொன்னேன்.சென்ற முறை தப்பாகச் சொன்னதற்கு தண்டனையளித்தீர்கள். அதற்குப் பின் தினமும் 25 முறை வீட்டுப் பாடம் போல் எழுதி எழுதி படித்து விட்டுத்தான் வேலைக்கே வருகிறேன் மன்னா''
''அடேய் என்னையா எதிர்த்துப் பேசுகிறாய் இன்னொருமுறை சொல்''
சேவகன்,'
'ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராசகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்''என்றதும்
''நிறுத்து இனி 23 புலிகேசி என்பதை 30 என மாத்திச்சொல்லு தெரிகிறதா அப்படியே 30 முறை எழுதிபழகு.''
லகுடபாண்டி,''மன்னா''
''என்னா''
''தாங்கள் 23 தானே எப்போது எனக்குத் தெரியாமல் 30 ஆக மாறினீர்கள்''
''நீ கேட்ட உடனே சொல்ல வேண்டுமா நான் மன்னனா நீயா' என முறைக்க,
''சரி சரி கோபப் படாதீர்கள்''
இருவரும் அரசபைக்கு வருகிறார்கள்.
லகுட பாண்டி ''திடீரென்று ஏன் சபை கூட்டுகிறீர்கள் மன்னா.இது உங்கள் ஓய்வுக்காலம் அல்லவா? ராணிகளுடன் நீங்கள் [கண்ராவி] டூயட் பாட வேண்டிய நேரத்தில்? எதிரி நாட்டான் யாரும் படையெடுத்து வருகிறார்களா?''
புலிகேசி,''அமைச்சா நான் சில முக்கிய தீர்மானங்கள் போட இருக்கிறேன் அதற்குத்தான் இந்த அவசர கூட்டம்''
நம் சபையில் எத்தனை அமைச்சர்கள்''
''தலைமை அமைச்சனான என்னையும் சேர்த்து 36 பேர் மன்னா''
''உடனே 6 பேரை பதி நீக்கம் செய்து 30 ஆக மாற்றும்''
''மன்னா ஏன்...''
''ஹூம் கேள்வி கேட்காதே. அது சரி மாதத்திற்கு எத்தனை நாட்கள் ''
''சில 32 ,30,28 இப்படி''
''சரி எல்லாவற்றையும் 30 ஆக்கு.
இனி எல்லாம் 30 ஆக மட்டுமே இருக்க வேண்டும்.ஆமாம் இந்த இலக்கியங்கள் எப்படி''
''இன்னா நாற்பது,இனியவை நாற்பது .....''
''நிறுத்து இனி அவை இன்னா 30,இனியவை 30 ஆக வழங்கப்படும்.
ஆமா இந்த திருக்குறள்?''
''133 அதிகாரம் மன்னா''
''அதையும்...''
''மன்னா வேண்டாம் அது தெய்வப் பொதுமறை அதில் கை வைக்காதீர்கள்.
அதிகாரத்துக்கு 10 வீதம் 1330 உள்ளது'' என்று லகுட பண்டி 30 ஐ அழுத்திச் சொல்ல
''சரி சரி இருந்து விட்டு போகட்டும்''
சபையின் மத்தியிலிருந்து ஒரு குரல் வருகிறது'அரசே உம்ம அந்தப்புரத்தில் ராணிகள் எத்தனை பேர்'
''ஆஹா..ஆஹா நல்ல நேரத்தில் கேட்டாயடா எந்தங்கமே என் மூன்னால் வா மகனே''
லகுட பாண்டி இந்த பண்டிதனுக்கு தகுந்த சன்மானம் கொடு.அப்படியே ராணிகள் எண்ணிக்கையை சொல்லு;;
''26 மன்னா''
''உடனடியாக இன்னும் 4 வருக்கு ஏற்பாடு செய்யும்''
''மன்னா இப்போதாவது கேட்கலாமா''
''கேள்''
''திடீர்ரென்று உங்களுக்கு ஏன் 30 மேல் மோகம்''
''ஹூம் இப்போது 30 மட்டும்தான் மீண்டும் 50 ஆகக் கூட மாறும். எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்.ஹா...ஹா என்று சிரித்தபடீமீசையில் இருபக்கமும் மல்லிகையை சொருகுகிறார்.


[என்ன உங்களுக்குப் புரியாமலா?நான் வேறு விளக்கம் சொல்லனுமா.அப்பப்ப சீசனுக்குத் தகுந்த மாதிரி டாப்பிகல் மேட்டர வச்சி இது ஒரு ஜல்லிதேன்]

18 மறுமொழிகள்::

கண்மணி said...

சோதனை பின்னூட்டம்
எலே லகுட பாண்டி எங்கடா ஒரு பின்னூட்டமும் வல்லே
மன்னா நம் மக்கள் 'கப்சாவும்',அக்கமாலாவும்' அடிச்சிட்டு சுருண்டு கெடக்காங்க போல.

.:: மை ஃபிரண்ட் ::. said...

30+ thamizmanam Erkkavillainnu arumaiyaa solliddeengga.. puriyaama irukkuma?
;-)

1 minused from 30..

தம்பி said...

யெக்கா புது டெம்ப்ளேட்டு சூப்பரு.

முப்பத பத்தி ஒண்ணும் சொல்றதுக்கில்ல. தமிழ்மணமே ஒரு கவர்மெண்ட் ஆசுபத்திரி மாதிரி ஆச்சி.

ஜி - Z said...

என்னது இது.. எங்க பாத்தாலும் முப்பதாவே இருக்குதே....

என்னடா ஒரு மேட்டர் முக்காடு இல்லாம முழுசா காத்துக்கிட்டு இருக்கு.. இந்த கண்மணி அக்காவ இன்னும் காணோம்னு பாத்தேன்...

இதுக்காகவே காத்துக்கிட்டு இருப்பீங்க போல???

தம்பி said...

லகுடபாண்டி: மன்னா பக்கத்து நாட்டு அரசனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது.

புலிகேசி: பேமானி நெய்பர் கிங். புறா இல்லையாமா அவனிடம். ம்ம் மேல படி.

ல.பாண்டி: இதுவரை 34 புறாக்களை தூதனுப்பியும் போருக்கு சம்மதிக்கவில்ல. என் வசம் புறாக்கள் தீர்ந்து விட்டன. போர்கூட வேண்டாம் என் புறாக்களை திருப்பி தந்து விடு புலிகேசி.

கோபிநாத் said...

ஆஹா...நீங்ளும் 30தா

ஒன்னும் புரியவில்லை :(((

மத்தப்படி எல்லாம் கலக்கல் :)))

கண்மணி said...

ஏந்தம்பி சொல்ல மாட்டீரு நீங்கல்லாம் 50 தாண்டி அடிக்கிறவங்க.இப்படி ஆப்பு வச்சாதேன் எங்கள மாதிரி கத்து குட்டீஸ் உலா வரமுடியும்.
34 புறா அனுப்பினீரா 4 எக்ஸ்ட்ரான்னுட்டு புலிகேசி ஃப்ரை பண்ணச் சொல்லிட்டார்.

கண்மணி said...

ஜி உங்கள மாதிரி கத அல்லது பயணக்கட்டுரை எழுத நமக்கு குடுப்பினை இல்லை அதான் இப்படி சீசனுக்கு தக்க மாதிரி ஜல்லி கொட்டுறேன்..ஹி..ஹி

அபி அப்பா said...

முப்பது இட்லியில் முதல் இட்லிய முழுங்கிய கண்மணி!! ஆட்டத்த ஆரம்பிச்சுட்டீங்களே!! சும்மா கலக்கல் போங்க. நம்ம குருநாதின்னா சும்மாவா!! வந்ததுக்கு நானும் ஒரு இட்லி அடிச்சுக்கறேன்...

கண்மணி said...

வருகைக்கு நன்றி கோபிநாத் ஏதோ காமெடின்னு நெனச்சி ...ஹி..ஹி பண்ணிட்டிருக்கேன்

கண்மணி said...

அபி அப்பா வாங்க.நாம மொதல்ல போணி பண்ணாலும்,கல்லா கட்றதென்னவோ நீருதான்.உங்களுக்கு வச்சிட்டாங்கில்ல ஆப்பு ஹி..ஹி[இனி சதமடிக்க முடியாதே,,அப்பாடா ]

Anonymous said...

30 இப்ப 40 ஆயிடுச்சி எக்கோவ்

Anonymous said...

எனக்கு மட்டும் இந்த 30 எல்லாம் பிரச்சனையே இல்லை:)

ச.சங்கர் said...

இது கூட நல்லாதான் இருக்குது :)

அதுசரி...தமிழ்மணத்தோட புது ரூல்ஸ்ஸை வச்சு காமெடி கீமடி பண்ணலையே :)

மதி கந்தசாமி (Mathy) said...

//''ஹூம் இப்போது 30 மட்டும்தான் மீண்டும் 50 ஆகக் கூட மாறும். எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்.ஹா...ஹா என்று சிரித்தபடீமீசையில் இருபக்கமும் மல்லிகையை சொருகுகிறார்//

பக்கத்து பதினைஞ்சு (இப்ப இருவது) மல்லிகைகளா செருகினார்? சும்மா டவுட்டு..

-மதி

சென்ஷி said...

//''ஹூம் இப்போது 30 மட்டும்தான் மீண்டும் 50 ஆகக் கூட மாறும். எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்.ஹா...ஹா என்று சிரித்தபடீமீசையில் இருபக்கமும் மல்லிகையை சொருகுகிறார்.//

யக்கா...
இப்ப 40 ஆயிடுச்சே.
புதுசா ஏதாவது பதிவு உண்டா?

சென்ஷி

நாமக்கல் சிபி said...

புரிகிறது!

-L-L-D-a-s-u said...

தாங்க முடியலை ய்க்கோவ்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)