PAGE LOAD TIME

[சூர்யாவுடன்] அசத்தப் போவது யாரு 2-பகுதி

மிகுந்த எதிபார்ப்புடன் தொடங்கிய அசத்தப் போவது நிகழ்ச்சி 2வது வாரமும் நன்றாகவே இருந்தது.கலக்கல் மன்னர்கள் என் அழைக்கப் பட்டவர்கள் நிஜமாகவே கலக்கினர்.
இன்றைய நிகழ்ச்சியின் 'ஹை லைட்'நடிகர் கம் டைரக்டர் சூர்யாவின் சிறப்பு வருகையும், சிரிப்பும்தான்.நிஜமாகவே இரசித்து விழுந்து விழுந்து அழகாக சிரித்தார்.
வழக்கம் போல ஜோக்ஸ்,மிமிக்ரி,ஆடல் பாடல் என கனஜோராக களை கட்டியது நிகழ்ச்சி.

மும்தாஜ் இன்ஜின் டிரைவராக இருந்து டிரெய்ன் ஓட்டினால் எப்படி இருக்கும் என்று 'கட்டிப்புடி கட்டிப்புடிடா ஹம்மிங்கில் டிரெய்ன் ஓட்ட நடுவராக இருந்த சிட்டிபாபு தான் அதில் போகமுடியவில்லையே என்று வருந்தினார்.

அபூர்வ சகோதரர்கள் கமல் மாதிரி குட்டையாக 1 1/2 அடி உயரத்தில் ஒருவர் முதுகில் ஒரு மூட்டையுடன் மிக லாவகமாக ஷூ போட்ட கால்களை மடக்கி வளைந்து நெளிந்து டான்ஸ் ஆடினார்.இதிலென்ன என்று கேட்கிறீர்களா?அய்யா சாமிங்களா அவுரு முதுகுல இருந்த மூட்டையிலதான் அவருடைய 2 கால்களும் இருந்தது..ஆடியபிறகு நின்று காட்டினார்
அந்த 5 1/2 உயர மனிதர்.

ஒரு அரசியல்வாதி ஆசிரியராக இருந்தால் எப்படி கதை சொவார் என்று தாகத்திற்கு தண்ணீர் பானையில் தலைவிட்டு பின் கல்லெடுத்துப் போடும் கதை சொன்னார்.அரசியல் பாணியானதால்
பானையில் தண்ணீர் குறைவாக இருந்தது எதிர் கட்சிகளின் சூழ்ச்சி என்றார் ஒரு க.மன்னன்.

இன்னொரு கலக்கல் மன்னன் தத்து...பித்து..தத்துவம் சொன்னார்.

மீன் பிடிப்பவன் மீன்வன் என்றால்

மான் பிடிப்பவன் மாணவனா?

புள்ளீமானுக்கு உடம்பெல்லாம் புள்ளீ இருக்கும்

கன்னுக் குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா?

என்பதுபோல 'கடித்தார்' [கண்மணியே தேவலாம் என்ற ரேஞ்சுக்கு..ஹி..ஹி]

வினுசக்ரவர்த்தி,ஜனகராஜ்,விசு,கவுண்டமணி,செந்தில்,டைரக்டர் சூர்யா என் அத்தனை பேரின் குரலிலும் தொடர்ச்சியாக ஒரு கல்யாண மண்டப கலாட்டாவை தன் மிமிக்ரி மூலம் ஒரு க.ம அரங்கேற்றினார்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இரண்டு நாகேஷ்கள் வந்து,ஆம் இரண்டுபேர் கிட்டத்தட்ட நாகேஷ் சாயலில்,மேக்கப்பில் வந்ந்து பாடி ஆடி அசத்தினர்.

என்னடா கதை சொல்றாங்களே முக்கியமான கடி ஜோக்ஸ் எங்கேன்னு பாக்கிறீங்களா?இதோ:

1.அவன்:இதுதாண்டா சரியான சண்டப்படம்
இவன்:எப்படி
அவன்:டிக்கெட் வாங்கும் போதே மோரையப் பேத்துட்டாங்களே

2.இண்டர்வியூவில் அதிகாரி:எலெக்டிரிகல் என்ஜின் எப்படி ஓடும்
மாணவர்:டூர்ர்டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டூஊர்ர்ர்ர்
அதி:ஷிட் நிறூத்து
மாணவர்: மெதுவான குரலில்...ட்ட்டடடப்..டடப்
அதிகாரி:எம்.எஸ் ஆபிஸ் தெரியுமா?
மாணவர்:அட்ரஸ் குடுங்க சார்

3.ஒரு குரு சிஷ்யர்களிடம் சொன்னார்.இந்த யாகத்தின் போது யாராவது கெட்டதை நினைத்தால் இறந்து விடுவார்கள் .ஓழுங்காக கவனிங்க என்று சொல்லிவிட்டு யாகம் தொடங்கினார்.10 நிமிடம் கழித்து'மும்தாஜ் என்றதும் 20 சீடர்கள் இறந்துவிட்டனர்,அடுத்த 10 நிமிடம் சென்று 'ஜோதிகா' என்றர்.மேலும் 10 சீடர்கள் செத்துவிழுந்தனர்.கொஞ்சநேரங்கழித்து,ஒரு மாணவன் 'நமீதா' என்றதும் 'குருவே' செத்து விழுந்து விட்டார்.

4.ஜட்ஜ்:உனக்கு நாளைக்கு காலை 5 மணிக்கு தூக்கு என்றார்.
கைதி கட கடவென சிரித்தான்.
ஜட்ஜ்:ஏன் சிரிக்கிறாய்
கைதி:நான் காலையிலே 7 மணிக்குதானே எழுந்திருப்பேன்
ஜ்ட்ஜ்: சரி சரி உன் கடைசி ஆசை என்ன?
கைதி:என்னைத் தலை கீழாத் தூக்குல போடுங்க அய்யா.

5.ஒருவன் இப்படி ஒரு குறள் எழுதினானாம்

''நீ நோக்கியப் பெண் உன்னை நோக்காவிடின்
நோக்கியா வாங்கி என்னபயன்''
இப்படிக்கு திருட்டுத் திருவள்ளுவர்.


எப்படி இருக்கு? இது ஆரம்பம்தானாம். மார்ச் 3 ம் தேதியிலிருந்துதான் ஸ்பெஷலாக அசத்தப் போகிறார்களாம்.

7 மறுமொழிகள்::

சிநேகிதி said...

"Nilavai muthala thodathu yaaru"
pathil : S.J. Sooryathan

..itha eluthama vididengale :-)

கண்மணி said...

நன்றி சிநேகிதி நீங்களும் பார்த்து இரசித்தீர்களா.பதிவின் நீளம் கருதி 2,3 ஜோக் விட்டுவிட்டேன்.

அபி அப்பா said...

கண்மணி!! நானும் நேத்திக்கு பாத்தேன். செம கலக்கல். அதிலும் அந்த நாகேஷ் டான்ஸ் ஆடிய இருவர் ஒரே பாட்டுக்கு வேறு வேறு டான்ஸ் மூவ்மென்ட். ரொம்ப அருமை. இதுக்கு பதிவு போட்ட மாதிரி டி.ஆரின் அரட்டை அரங்கம் விமர்சனம் போட்டால் தமிழ்மணம் கமகமக்கும்.

கண்மணி said...

நன்றி அபிஅப்பா.ஆனா அந்த'ஆரஞ்சு அழகி' வந்து கலக்கும் போது தூங்கிப்பிடாதேயும்.விஜய.ரா பதிவு யோசனையில் இருக்கு.

ஜி - Z said...

வெறும் சீரியலப் போட்டு கொல்றாங்களேன்னு சன் டிவிய வாங்காம விட்டுட்டேன்.. இப்ப வாங்கணும் போலிருக்குதே...

எனக்குப் புடிச்ச காமெடி... தூக்கு தண்டனை கைதி :))))

Anonymous said...

superungoo

கண்மணி said...

நன்றி அனானி
ஆமாம் ஜி சன் டி வியில இந்த புரோகிராம் நல்லாத்தான் போகுது

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)