PAGE LOAD TIME

திருவிளையாடல் ஆரம்பம்....[பகுதி-3]

மண்டபத்தில் தருமி புலம்புகிறார்.
'எனக்கு வேணும்.யாரோ புதுசா பாட்டு போடறவன் குடுத்தான்னு
பாட்டை வாங்கிகிட்டு போனது தப்பா போச்சே'
அப்போது அங்கு வரும் சொக்கன்,'தருமியே,நன்றாக கிடைத்ததா?'
'ஹூம் எல்லாம் கிடச்சது ஒதை ஒன்னுதான் பாக்கி'
'சபையில் நடந்ததைக் கூறும்'
'பேசும்போது நல்லா பேசுங்க எழுதும்போது கோட்டை விடுங்க'
'என்ன நடந்தது'
'உம்ம பாட்ட ஒரு கிழவன் தப்புன்னு சொல்றாரு'
'என்ன என் பாட்டிலா? வா என்னோடு'
சொக்கன் தருமியுடன் மண்டபத்திற்குள் நுழைந்து,
'என் பாட்டை குற்றம் சொன்னவன் எவன்' என
மன்னன்,'அவன்,இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்.பொறுமையாகக் கேளும்'
நக்கீரர் ,'நாந்தான் குறை சொன்னவன்'
'என்ன குற்றம் கண்டீர்,சொல்லிலா,பொருளிலா?'
'சொற்குற்றம் என்றால் மன்னித்து விடலாம்.பொருளில் தான்'
'முதலில் எழுதிய நீர் வராமல் அவரை ஏன் அனுப்பினீர்'
'அது உமக்குத் தேவையில்லை.ஒருவர் பதிவுக்கு நாம் போடும் பின்னூட்டத்திற்கு வேறொருவர் பதில் தருவதுபோலத்தான்'
'சரி உம் பாட்டின் பொருள் என்ன?'
'ஹா ஹா இதுகூடப் புரியாமலா இங்கு குப்பை கொட்டுகிறீர்?
தமிழ்மணமும் வலைப்ப்பதிவும் போல,வைகோவும் ம.தி.மு.கா போல,சோவும் வழுக்கையும் போல தாத்தாவும் பேரனும் போல பிரியாதிருப்போம் என்று காதலன் ,காதலியிடம் சொல்கிறான்'
'இதில்தான் தவறு'
'என்ன'
முதல் உவமை சரியானதே.[அங்கேயும் தான் தமிழோடு ஆங்கிலமும் கலந்து விளையாடுதே]
இரண்டாவது எப்படி?இப்போதுதான் ம.தி.மு.கா வினர் இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றனரே?'
'அது உம்மைப்போல் மூடர்கள் கருத்து.வைகோ ஆரம்பித்தது தானே அவர்தான் ம.தி.மு.க'
'முதலில் அரசியலைச் சொன்னதே தவறு.யார் எந்த கட்சியில் என்று இருப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது.சரி மூன்றாவது?'
'ஊருக்கே வெட்ட வெளிச்சமான விஷயம்.சோ மண்டையில் முடி முளைக்குமோ'
'விக் வைக்க முடியுமே,அப்படித்தானே படங்களில் வந்தார்.'
'நான் இயற்கையான தோற்றத்தைச் சொன்னேன்'
'சரி கடைசியாகச் சொன்ன தாத்தா,பேரன்?;
'இதுவும் ஊரறிந்த இரகசியம்.தாத்தா இல்லாமல் பேரனும்,பேரன் இல்லாமல் தாத்தாவும் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்காங்களா?'
'முடிவில் என்னதான் சொல்கிறீர்' என நக்கீரர் கேட்க,
'ஆரம்பத்துல இருந்தே சொல்றேன்.அவங்க அவங்க வேலையைப் பாத்துட்டுப் போங்க.பெரிய இது மாதிரி குத்தம் கண்டு பிடிக்காதீங்க.தருமிக்கு சேர வேண்டியதக் குடுங்க'
'என்னவோ போங்க, இங்கயும் முடிஞ்சவரை ஜல்லியப் போட்டு வாங்க வேண்டியத வாங்கிட்டுப் போங்க.நான் என்னத்தச் சொல்ல''மன்னா இங்க தமிழுக்கோ ,கருத்துக்கோ மதிப்பில்லை.எல்லாம் எண்ணிக்கைதான்..உங்க விருப்பம் போல் செய்ங்க'
பாண்டியன் பொற்கிழி தர,தருமி சந்தோஷமாகிறார்.
[இதில் உள் குத்து ஏதும் இல்லை..இருக்குதுன்னு நினைச்சா நான் பொறுப்பில்லை]
[முற்றும்]

5 மறுமொழிகள்::

Anonymous said...

உள் குத்து இல்லைன்னும் போதே ஏதோ இருக்குதுங்க

கண்மணி said...

அப்படி நீங்க நெனச்சா நானா பொறுப்பு,,ஹி..ஹி

பிரேமி said...

ஆஹா ஒருவழியா முடிஞ்சதா?நிம்மதியாத் தூங்குவேன்

தருமி said...

ஆஹா ஒருவழியா தருமிக்கு பொற்கிழி கிடச்சிருச்சி ...

cheena (சீனா) said...

ம்ம்ம் தருமிக்கு பொற்கிழி - எதற்காக - என்ன செஞ்சாரு அவரு - நாயமாப் பாத்தா சொக்கனுக்குத் தான் கொடுக்கணும்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)