PAGE LOAD TIME

வாலண்டைன்ஸ் டே வித் விவேக்/பல்லி [பகுதி-3]

சீறிப் பறந்து வருகிறது போர்டு ஐக்கான்.
உள்ளே விவேக்கும் அவரது ஒல்லிக்குச்சி
அசிஸ்டெண்ட் பல்லியும்.
பல்லி,'பாஸ் நாம இப்ப எங்க போய்க்கிட்டிருக்கோம்'
விவேக்,'டேய் இன்னைக்கு என்ன நாள்.
புவர் பெல்லோ உனக்கு எங்க தெரியப்போவுது
இன்னைக்கு வாலண்டைன்ஸ் டே டா'
'அப்படின்னா என்ன பாஸ் சோறு போடுவாங்களா'
'ஹா.ஹா ஃபன்னி பெக்கர் வாலண்டைன்ஸ் டேன்னாகாதலர் தினம் டா'
'ஓ காதலர் தினம் சினிமாவா பாஸ்.நான் கூட பாக்கவேயில்லை'
'அய்யோ உன்ன மாதிரி அறிவிலிகள் இருக்கறதுனாலதான்டா காதல் வளருவதில்லை.
காதலர் தினம்னா காதலன் கிடைக்காத பெண்ணும்,காதலி கிடைக்காத ஆணும் சந்திச்சி கடலை போட்டா
அதுல ஒன்னு ரெண்டு ஒர்க் அவுட் ஆயி
காதல் பயிர் வெளையும் டா'
'சரி பாஸ் அதுக்கு இப்ப எங்க போறம்'
'லேடிஸ் காலேஜுக்கு எதிரே இருக்கிற பஸ் ஸ்டாப்புக்கு டா'
;வெளையாடாதீங்க பாஸ்'
'அடேய் மடையா பஸ் ஸ்டாப்புல தான்டா பல நடிகைகள் உருவாகறாங்க. பல காதல் சாம்ராஜ்யம் உருவாகுது'
'பாஸ் பாஸ்"
'ஏன்டா கதவிடுக்குல மாட்டின பல்லி மாதிரி கத்தற'
'அங்க பாருங்க அந்த ஸ்டாப்புல நிறைய சுடிதார் போட்ட பொண்ணுங்க நிக்குது.
போய் யாரையாச்சும் மடக்குங்க பாஸ் நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா'
ஹோ.ஹோ என சிரித்தபடியே 'டேய் டேய் ஜோக் அடிக்காதடா எங்கியாச்சும் ஓணான்,பல்லிய யாராச்சும் லவ் பண்ணுவாங்களா பேசாம் ஓரமா நின்னு வேடிக்கை பாரு என்ற விவேக்
காரை பார்க் செய்தபடி,'டேய் நானாப் போய் எந்த ஃபிகரையும் ஆட்டை போட மாட்டேன்.தானா வரும்டா .இப்பிடிச்சூடு' என்றபடி,
கையில் இருந்த ரோஜாவை பெண்கள் பக்கம் போட, எல்லாப் பெண்களும் அவரை நோக்கி ஓடி வருகிறார்கள்.
விவேக் பெருமிதமாக கண்டும் காணாதது
போல திரும்பிக் கொள்ள
திடீரென்று பல்லி,'பாஸ் பாஸ் அங்க பாருங்க ' என அலற
விவேக் திரும்ப, எல்லோரும் ஓடி காருக்கு பின்னால் வந்து நின்ற பல்லவனில் ஏறிக்கொள்கின்றனர்.
'என்ன பாஸ் இது'
'இது தான்டா காலக் கொடுமை. செம பெர்சனாலிட்டியோட
ஷாருக்கான் மாதிரி இங்க ஒருத்தன் நிக்கறேன்.
பிக்கப் செய்து ஐக்கான்ல போகாம,வௌவ்வால்க மாதிரி பல்லவன்ல தொங்கிட்டுப் போறாளுங்க.
சரி சரி விடு ஃபீல் ஆகாதே வா அப்படியே
பறவை முனியம்மா வைப் பாத்துட்டுப் போவோம்'
'அது யாரு புது பார்ட்டி பாஸ்'
'பார்ட்டி இல்லடா பாட்டி.சன் டி.வி ல எரியாத மண் அடுப்புல
அடியில கேஸ பத்தவச்சி கேப்பைக்கூழ் கிண்டும்.
அப்படியே ஏழரைக் கட்டையில பாட்டுப் பாடிக்கிட்டே
அம்மியில கொள்ளுத் தொவையல் அரைச்சிக் கொடுக்கும்
வா அந்த கிராமத்து விருந்த சாப்பிட்டு நொந்துபோன மனச
மராமத்து பண்ணிக்கிறேன்''
என்றபடி திரும்ப அவரோட அசிஸ்டெண்ட் பல்லி ஒரு குண்டுப்
பெண்ணுடன் சிரித்துப் பேசியபடியே, 'பாஸ் உங்களுக்கு ஒர்க் அவுட் ஆகாட்டியும் எனக்கு ஆயிடிச்சி நான் உங்கள அப்பறம் பாக்கறேன்' என்றபடி அவள் ஸ்கூட்டியில் பின்னால் தொத்தியபடி கையசைக்கிறார்.
நொந்து நூலாப் போன விவேக்,'இந்தப் பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பா. மொத்தமா 30 கிலோகூட தேறாத இத்துப்போன இவனுக்கெல்லாம் கிரீன் சிக்னல் குடுக்கறாங்க
நம்மள இப்படி பொலம்ப விட்டுட்டாங்களே '
என்றபடியே காரை எடுக்கிறார். [முற்றும்]

9 மறுமொழிகள்::

Syam said...

கலக்கல் போங்க...அதுவும் திருவிளையாடல் சூப்பர் ;-)

தம்பி said...

இதுதான் கலக்கல் வந்ததிலயே! :))

கண்மணி said...

விவேக் ன்னாலே காமெடி நல்லாத்தான் இருக்கும்.நன்றிங்க.

கண்மணி said...

நன்றி தம்பி,ஷியாம்

Anonymous said...

சூப்பருங்கோ.எங்கே14ந்தேதி பதிவக் காணோம்.வா.டே கொண்டாட்டமா?

கண்மணி said...

நன்றி அனானிமஸ். நமக்கு வா.டே யெல்லாம் பிடிக்காதுங்கோ ஹி..ஹி

vinoth said...

nice last one is better than other two

கண்மணி said...

நன்றி விநோத்

கலை said...

உண்மையாவே விவேக்கை படத்துல பாத்த மாதிரி இருந்துது. :)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)