PAGE LOAD TIME

சொல்லுங்க மக்கா என்ன நடக்குது இங்கே

எங்ஙன போய் முட்டிக்கிறது
இந்த மக்கா அடிக்கிற லூட்டி தாங்கலையேப்பா
என்னமோ தெரியலை கண்ணு பூத்துப் போச்சு.
காமாலை கண்ணன் போல எதப் பாத்தாலும் 'அதுவாவே' தெரியுது.

கண் டாக்டரிடம் போனேன்.
கண்ணுல கண்ணாடி பிரேம மாட்டிவிட்டு
'அந்தா அந்த போர்டுல இருப்பத படியும்லேன்னார்
டி.ஓ.என்.டி.யு அப்படின்னேன்
'எலே தமிழ் வேணாம் .அதோ இங்கிலிஷ் லெட்டர் இருக்கத படின்னார்.
'D..O..N..D..U.......DONDU'ன்னு படிச்சேன்
'என்னவே ஆச்சு ஒமக்கு சரி இந்த நெம்பரையாச்சும் கரெக்டா சொல்லு பாப்பமின்னார்.
#1168674346665545885 ன்னு படிக்க டாக்டர் ஓங்கி தலையில ஒன்னு போட்டார்.
'நான் 1234 படிக்கச் சொன்னா நீயி என்னமோ ஒரு நெம்பர சொல்லுத.ஒனக்கு கண்ணுல கோளாரு இல்லை மண்டையிலதான் என்னமோ எடம் மாறிப் போச்சி போய் நல்ல
சைக்கியாட்ரிஸ்ட் பாரும் என்றார்.
,இல்ல டாக்டர் நேத்துல இருந்துதான் இது மாதிரி எழுத்துல
டோண்டுவும்,நெம்பருல்ல இதுவும் மட்டுந்தான் தெரியுது என்றேன்.
'சரி நீ என்ன என்ன செஞ்சன்னு சொல்லு'
'டி.வி கூட பாக்கலை தமிழ்மண பதிவு மட்டும் தான் படிச்சென்,
'அதேதான்யா நானும் அத பாத்தேன் திரும்பிய பக்கமெல்லாம் .டோண்டு'ன்னு இருந்தது.அதுதான் உன் கண்ணை பாதிச்சுட்டுது. நீயாச்சும் பரவாயில்ல.எனக்கு ரெண்டு நாளா காதுல ஒரே இரைச்சல்' என்று டாக்டர் சொல்ல
;உங்களுக்கு என்ன டாக்டர்'
'அய்யோ என்னை விட்டுடுங்க விட்டுடுங்க' ன்னு ஒரு கிழவரின் குரல் கேட்டுக் கிட்டே இருக்கு'
'சரி வாங்க நாம் ரெண்டு பேரும் சேர்ந்தே சைக்கியப் பாப்பம் என்று கிளம்பி விட்டோம்.

[டோண்டு பற்றி பதிவு எழுதாவிட்டால் கருத்தாழம் மிக்க அவருடைய சப்பைப் பதிவுகள் புத்தமாக அனுப்பி வைக்கப்படும் என்ற மிரட்டலுக்கு பயந்து நானும் ஜோதியில் கலந்து கும்மி விட்டேன்.]


.

17 மறுமொழிகள்::

நாமக்கல் சிபி said...

:)))

கண்மணி said...

தல நீ படிச்சிக்கிட்டு இருக்கும் போதோ எடிட் பண்ணி டிஸ்கி போட்டேன் பாரும்.எல்லாம் உங்களப் பாத்துத்தான் எழுதுனோம்.

dondu(#11168674346665545885) said...

:)))))))))

சிறில் அலெக்ஸ் செய்திகள் கேட்டிங்களா?

//'அய்யோ என்னை விட்டுடுங்க விட்டுடுங்க' ன்னு ஒரு கிழவரின் குரல் கேட்டுக் கிட்டே இருக்கு'//
இதுதான் யாருன்னு புரியல்லே. எனக்கு முற்றும் தெரியாத ரெஃபெரன்ஸ் இதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கண்மணி said...

its all in the game sorry if i hurted you.sincerely i wish to respect your age but not your ideology

நான் கள்ளன் said...

"கண்மணீ"ன்னு பெயருள்ள நீங்களே கண் டாக்டருகிட்டேன்னா?... நாங்கள்ளாம்..அதுதாங்க கண்மணி (கவுதமி ?) நானும் புளாக் பதிய முடிவெடுத்து ஒரு ஐடி எடுத்துக்கிட்டேன்.

என்னமோ சொல்லனும்னு தோணுது, கண்ணை நல்லா வெச்சிருங்க - நாம்போடப்போற பத்வெல்லாம் படிக்கனும்ல - அதுக்குத்தான்

கண்மணி said...

வாங்க வாங்க நமக்கில்லாத இடமா?ஆனா ஒன்னு டோண்டு மாமாகாரு போல மாட்டிக்காம பதிவு போடனும் பின்னூட்டம் போடனும்.
அதென்ன 'கள்ளன்' திருட்டுப் பயலா?ஹி..ஹி வெல்கம்

நான் கள்ளன் said...

>>அதென்ன 'கள்ளன்' திருட்டுப் பயலா?ஹி..ஹி வெல்கம்<<

ஹி..ஹியா? என்னத்த சொல்ல அது எங்க சாதி பேருங்கக்கோவ்...:(

ஜி said...

வேற ஒன்னுமில்லீங்க... அது ஒருவித நோய்.. கொஞ்ச நாளைக்கு அப்படி இருக்கும்.. அடுத்தது ஒரு சில்பா ஷெட்டி மேட்டரோ... சுஜாதா கத ரீலீஸாச்சின்னாலோ.. இந்த நோய் போய் வேறொரு நோய் வந்திடும்.. :))

கண்மணி said...

[ஜி] வாங்க தலிவா ஆளக் காங்கலையேன்னு பாத்தேன். இப்பல்லாம் கதை எழுதிறீயளோ.நமக்கு டமாசுதான் புடிக்கும்.
அது சரி ஏதோ சொன்னிங்களே அடுத்த நோய் அதுக்கு எந்த டாக்டரைப் பார்க்கனும்

dondu(#11168674346665545885) said...

"its all in the game sorry if i hurted you.sincerely i wish to respect your age but not your ideology"

I suppose, you are referring to me. But what gave you the impression that I was hurt? That's your imagination sir.

By the way I never asked you to respect me. I only enjoyed the jike at my expense.

I also want to impress upon you that I am much younger in spirit than many of the socalled young people, who are just chronologically young but have fossilized brain.

Regards,
Dondu N.Raghavan

கண்மணி said...

i will get back my words.
we/i try to point out what you have done is wrong and willingly/unwillingly it hurted so many in so many ways.
even then when you posted a comment in my blog upon a post which is purely intented to criticise you, for courtesy sake i said that i respect your age despite of what i have said abt you
thats all.

கண்மணி said...

thank you sk sir for the correction.its the spirit i expect here to praise/critise in a friendly way.

கண்மணி said...

'நான் கள்ளன்' அவர்களுக்கு,
ஜாதிப் பேருன்னா நான் அப்பீட்டு.
சீக்கிரம் பதிவப் போடுங்க.'கள்ள'ப்பதிவு வேண்டாம்.நல்லப் பதிவா போடுங்க.

யெஸ்.பாலபாரதி said...

ஆத்தா அசத்துறியேம்மா...!
எப்படி இந்த பதிவுகளை படிக்காமலவுட்டேன்.

நல்லா இருக்கு!

:-)

கண்மணி said...

பாலபாரதி ரொம்ப புகழாதீங்க ஏன்னா நானும் பா.க.ச ஆளு[அது பா.க.ச உறுப்பினர்களுக்கே தெரியாது ஹி..ஹி..]
[ஒன்னும் இல்லை ஹி..ஹி..கண்மணி டிரேட்மார்க்]

Anonymous said...

ஏதொ அந்த பெரியவர் புண்ணியத்துல உங்க எல்லார் பொழப்பும் இந்த வாரத்தை சரிகட்டிடிச்சி.அடுத்து யாரு தலைய உருட்டப் போறிங்க

SP.VR.சுப்பையா said...

//பாலபாரதி ரொம்ப புகழாதீங்க ஏன்னா நானும் பா.க.ச ஆளு[அது பா.க.ச உறுப்பினர்களுக்கே தெரியாது ஹி..ஹி..]//

கமலஹாசன்: ஆனா எனக்குத் தெரியும்!

மணிவண்ணன்: எப்படித் தெரியும்!

கமலஹாசன்: அதான் இப்பச் சொல்லீட்டாங்கள்ள!

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)