PAGE LOAD TIME

மதன்ஸ் திரைப் பார்வை...'வர்றேண்டா டோண்டு'

தமிழ்மணம் திரையில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'டோண்டு' .

தற்போது உலெகெங்கும் உள்ள சின்னத்திரைகளில்[கணீணீ] வெற்றிகரமாக ஓடிக் கொண்டிடுக்கிறது.

கலைஞரின் 'திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் '
அறிவிப்புக்குப் பிறகு வரிவிலக்குக்காக [தெலுங்குப்பட பாணியில் இதாண்டா போலீஸ் ரேஞ்சுக்கு]
'வர்றேண்டா டோண்டு' வாக [டோண்டு சொல்வதுபோல்]
தமிழில் பெயர் மாற்றம் அடைந்து ஹவுஸ்ஃபுல் காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.


கதைச் சுருக்கம்:

இரட்டை வேடத்தில் டோண்டு.
ஆக்க்ஷன்,காதல் கலப்புத்திருமணம்,நகைச்சுவை,பெரியார்,சோ என்று அனைத்து பரிமாணங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

தன்னைத் தாக்கவரும் எதிரிகளை மறைந்திருந்து தாக்குவதில் வல்லவர் .கேட்டால் [வாலி,சுக்கிரீவன் கதை சொல்வார்]யுத்த தர்மம் என்பார்

காதலித்து கலப்புத் திருமணம் புரிந்த வில்லனை ஓட ஓட விரட்டி வசனம் பேசி கோமா ஸ்டேஜுக்கு தள்ளியது கதையின் முக்கிய திருப்பம்.

நகைச்சுவையிலும் வெளுத்துவாங்குவார். தன்னுடைய ஃபேவரிட் போண்டா சரியாக உருண்டை வடிவில் போடவில்லை என்று ஹோட்டல்
முதலாளியைத் திட்டும் சீன் அருமை.ஹோட்டல் கிச்சனுக்கு தானே சென்று காம்பஸ் வைத்து வட்டமாக மாவை வரைந்து போட்டுக் காட்டும் சீன் பிரமாதம்.

இரட்டையரில் ஒருவரான முரளிசெய்த குற்றத்திற்கு
[கொசுவை அடிப்பதிற்கு பதில் புடுங்கி விட்டார்]
ராகவன் தண்டணை அடையும் போது தாய்மார்கள் விக்கி,விக்கி அழுகின்றனர்.இப்போதெல்லாம் படத்திற்கு வரும் தாய்க் குலத்திற்கு பெர்ர்ர்ரிய்ய்ய கைக்குட்டை தருகிறார்களாம்.

ஹீரோ அடிக்கடி சொல்லும் 'போடா ஜாட்டான்' ,'சமீபத்தில்' இவைகள் தான் படத்தின் பஞ்ச் டயலாக்ஸ்.

'சமீபத்தில்'என்று எழுதப்பட்ட டீஷர்ட் தான் ஹீரோவின் பாப்புலர் காஸ்ட்யூம்.

இவ்வளவு சாதுவான ஹீரோ தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது ரசிகர்கள் 'ஸீட் நுனிக்கே'வந்து நடப்பதை மெய்மறந்து [தம் அடிக்கக் கூட போகாமல்] பார்க்கின்றனர்.

ஒரு சமயம் 'என்னுடைய கார்' திநகர் சென்றபோது 'என்று பேசிய வசனம் 'வி.கே டிராவல்ஸ்' [வாடகை கார் தந்தவர்]தொடர்ந்த வழக்கால் நீக்கப் பட்டது.

இதேபோல் 'என்னுடைய இரயில் மாம்பலம் ஸ்டேஷனைத் தாண்டி போனது' என்ற வசனம் பெரிய சர்ச்சைக்குள்ளாகி பொது நல வழக்குத் தொடரப்பட்டு இரயில்வே அமைச்சர் 'லாலு பிரசாத்' வரைப் போக
அவர் வந்து பொது சொத்துக்களுக்கு இப்படி சேதம் விளைவிப்பதோ,உரிமை பாராட்டுவதோ தப்பு என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்ய படம் ஒருவழியாக முடிவடையும்.
பாடல்கள் எல்லாம் ஹிட்.கவிஞர் ஊத்தவாயன் எழுத தீவா இசையில் சூப்பர். டைட்டில் சாங் ;
வர்றேண்டா டோண்டு நாந்தான், ' எல்லா ஆட்டோக்களிலும் பாடிக் கொண்டிருக்கிறது.
தத்துவப் பாடலாக,
ஊரும் தெரிஞ்சிடிச்சி
பேரும் தெரிஞ்சிடிச்சி
கண்மணீ என் கண்மணி
சின்னக் கொசுவுன்னு
அலட்சியமா வுட்டுட்டேன்
என்னக் கடிச்சிப்புட்டு
பாடாப் படுத்துதடி
கண்மணி என் கண்மணி
[படிக்காதவன் ஊரைதெரிஞ்சிகிட்டேன் மெட்டு]
எல்லா டீக் கடையிலும் பாடிக் கொண்டிருக்கிறது

படத்தின் கதை,வசனம்,பாடல்கள்,நடிப்பு,டைரக்க்ஷன் என் அனைத்தும் அவரே.பல ஏரியாக்களில் வினியோக உரிமையும் அவரே.
'கண்மணி' புரொடக்க்ஷன்' என்ற டிஸ்ட்ரிபியூட்டர் மட்டும்
வினியோக உரிமையை அன் ஆத்தரைஸ்டாகப் பெற்று ஓட்டிக் கொண்டிருப்பதாக தகவல்.

டிஸ்கி: டோண்டு சாரை புண்படுத்த அல்ல இந்த பதிவு.தமிழ்மணத்தில் உள்ள தற்போது சூழலை நகைச்சுவையுடன் [என்றுநானாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்] சொல்ல விரும்பினேன்.
அவர் எதிர்ப்பு சொன்னால் பதிவு நீக்கவும் செய்வேன்.
[இதுவே அவரைப் பற்றின கடைசிப் பதிவு எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிறாரு அவரு ரொம்ப நல்லவரு என்பதால்.]

21 மறுமொழிகள்::

தங்கவேல் said...

¾¡Â£! §Åñ¼¡õ §À¡Ðõ þ§¾¡¼ ¿¢Úò¾¢ì¸¢í¸. :-)))

மணிகண்டன் said...

இந்த படத்தில் டோண்டு சார் பாடும் சூப்பர் ஹிட் பாடல்

கொசுபுடுங்கும் கையாலே என்னைப் புடிச்சான்..
சாயம் நீலச்சாயம் இப்போ வெளுக்குதம்மா
வீட்டுக்குள்ளே கொசு புகுந்து வாட்டுதம்மா
எங்கெ போயி ஒளிஞ்சுக்குவேன் பத்திரமா?

இதுவும் நகைச்சுவைக்காகவே..

கண்மணி said...

அய்யா தங்கமான வேலு சார் 'ஒன்னுமே புரியல ஒலகத்திலே'
உங்க ஃபான்ட் எனக்கு புரியலை

தங்கவேல் said...

என் இ கலப்பைக்கு யாரோ சூனியம் வைச்சிட்டாங்க தாயீ. எங் கமெண்டு இதுதான் "தாயீ! வேண்டாம் போதும் இதோட நிறுத்திங்கங்க" :-))

Anonymous said...

தங்கவேல் said...

தாயீ! வேண்டாம் போதும் இதோட நிறுத்திக்கிங்க. :-)))

Anonymous said...

டோண்டுவின் கதை வசனம் இரட்டை அர்த்தமாக இருந்தது. சோ தான் வசனம் எழுதியதாக லண்டன் பி பி சி கூறுவது உண்மையா?

Monkey Boy

சந்தோஷ் said...

//
ஒரு சமயம் 'என்னுடைய கார்' திநகர் சென்றபோது 'என்று பேசிய வசனம் 'வி.கே டிராவல்ஸ்' [வாடகை கார் தந்தவர்]தொடர்ந்த வழக்கால் நீக்கப் பட்டது.

இதேபோல் 'என்னுடைய இரயில் மாம்பலம் ஸ்டேஷனைத் தாண்டி போனது' என்ற வசனம் பெரிய சர்ச்சைக்குள்ளாகி பொது நல வழக்குத் தொடரப்பட்டு இரயில்வே அமைச்சர் 'லாலு பிரசாத்' வரைப் போக
அவர் வந்து பொது சொத்துக்களுக்கு இப்படி சேதம் விளைவிப்பதோ,உரிமை பாராட்டுவதோ தப்பு என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்ய படம் ஒருவழியாக முடிவடையும்.//
நல்ல நகைச்சுவை.. :))

மதுசூதனன் said...

நகைச்சுவை எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பின் ரசிக்கும்படி உள்ளது. இது நகைச்சுவை இல்லையெனில் இப்பதிவினை எதிர்ப்பவர்களில் நானும் ஒருவன்.

சந்தோஷ் said...

//மதன்ஸ் திரைப் பார்வை...'வர்றேண்டா டோண்டு'//
அவரோட வயதுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து இருக்கலாம் :(

ஜி said...

எப்படிங்க எவ்வளவு கிரியேடிவ்வா திங் பண்றீங்க....

//ஹோட்டல் கிச்சனுக்கு தானே சென்று காம்பஸ் வைத்து வட்டமாக மாவை வரைந்து போட்டுக் காட்டும் சீன் பிரமாதம்//

ROTFL :-)))) (இப்படினா என்னன்னு கண்டுபுடிங்க பாப்போம்)

நிறுத்திக்குவோம்!!! இத்தோட நிறுத்திக்குவோம்.... எத்தன தடவதான் அவர கலாய்க்குவீங்க.....

dondu(#11168674346665545885) said...

கண்மணி அவர்களே,

நன்கு ரசித்தேன்.

டிஸ்கி: டோண்டு சாரை புண்படுத்த அல்ல இந்த பதிவு.தமிழ்மணத்தில் உள்ள தற்போது சூழலை நகைச்சுவையுடன் [என்றுநானாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்] சொல்ல.
எதுக்கு இந்த டிஸ்கியெல்லாம். ஒண்ணு இது மனப்பூர்வமா இருக்கணும் இல்லே ஒப்புக்காக இருக்கணும். என்னைப் பொருத்தவரை எதுவாக இருந்தாலும் கவலையில்லை.

இதையும் சேத்துக்குங்க.

"இரட்டை வேடம் போட்டாக்க இரண்டுமே காண்ட்ராஸ்டாக இருக்கணும். ஆனாக்க இந்த மனுசர் எல்லா வேடத்திலேயும் ஒரே மாதிரி கண்ணியமா எழுதறுதாலே மாட்டிக்கிறார். கேட்டாக்க கண்ணியமா எழுதறதெல்லாம் டோண்டுதான்னு எதிராளிங்க நினைச்சுக்கிறதை தான் என்ன செய்யமுடியும்னு பதில் கேள்வி போடறார்".

//சின்னக் கொசுவுன்னு
அலட்சியமா வுட்டுட்டேன்
என்னக் கடிச்சிப்புட்டு
பாடாப் படுத்துதடி//
இதுக்கெல்லாம் போயி அலட்டிக்கலாமா. ஹிட் போட்டா தீந்தது மேட்டர். ஏற்கனவே யார் கிட்டவோ உதை வாங்கி கொசுவுக்கு சில பற்கள் அவுட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அம்மாடி said...

அம்மாடீடீடீ

பொன்னுக்குத் தங்க மனசு
பொங்குது டோண்டு மனசு
என்னத்தைச் சொல்லி அழுவேன்
பொல்லாத மனோகர் பேரைச்சொன்னேனே!
அம்மாடீடீ!

கண்மணி said...

அனானி திரைக்கதை வசன எழுதும் அளவு சோ வுக்கு மண்டையில் மு வும் இல்லை மூ வும் இல்லை.

கண்மணி said...

நன்றி சந்தோஷ்,மது சூதனன்
இது சுத்தமான அக்மார்க் காமெடி ஆனால் இதில் உண்மையிருப்பதாகத் தோன்றினால் நான் பொறுப்பல்ல.

கண்மணி said...

சந்தோஷ் 'வர்றேண்டா' என்பது டோண்டு சொல்வது போன்ற வசனம் .அதுவே படத்தின் தலைப்பு ஆனால் சட்டென்று பார்த்தால் நீங்கள் நினைப்பது போல் தெரியும்.

கண்மணி said...

ஜி சரண்டர்.எனக்குத் தெரியல நீங்களே சொல்லிடுங்க.
நீங்க என்ன டோ.பா.ச சங்கத் தலைவரா?என்னை நிறுத்து..நிறுத்துன்னு சொல்றீங்க.

கண்மணி said...

//சின்னக் கொசுவுன்னு
அலட்சியமா வுட்டுட்டேன்
என்னக் கடிச்சிப்புட்டு
பாடாப் படுத்துதடி//
இதுக்கெல்லாம் போயி அலட்டிக்கலாமா. ஹிட் போட்டா தீந்தது மேட்டர். ஏற்கனவே யார் கிட்டவோ உதை வாங்கி கொசுவுக்கு சில பற்கள் அவுட்//

ஹிட்டுக்கு அசையாது சார் இப்ப உள்ள கொசு எல்லாம்.ஆமா கொசுவுக்கு ஏது பல்லு? அதப்பத்தி ஒரு பதிவு போடுங்களேன்

கண்மணி said...

அம்மாடீ,நல்லா பாட்டு கட்டறீங்க டோண்டு சாரோட அடுத்த படத்துல உங்களுக்கும்.மண்கண்டனுக்கும் சான்ஸ் வாங்கித்தாரேன்.

கண்மணி said...

நன்றி டோண்டு உங்களை கலாய்த்தாலும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கிறீஙக.

வரவனையான் said...

ஹிஹிஹி


நன்கு ரசித்தேன்.

கண்மணி said...

நன்றி வரவனையான் வை தாலும் கோ பிக்கமாட்டார் டோண்டு

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)