PAGE LOAD TIME

வாலண்டைன்ஸ் டே வித் வடிவேலு/பார்த்திபன் [பகுதி-2]

மஞ்ச கலரு லுங்கி,பச்சை ஜிப்பா,நீலக் கலரு ஸ்கார்ப் கழுத்தில்கட்டிய கெட்டப்பில் கையில் ரோஜாப் பூவுடன் வடிவேலு ,

'சப்போஸ் நானும் காதலிச்சி
சப்போஸ் நானும் பேதலிச்சி
சப்போஸ் உன்னைக் கைபிடிச்சா
என்ன செய்வே' என்று பாடியபடியே வருகிறார்.

'சப்போஸ் நீயும் காதலிச்சா
சப்போஸ் நானும் செருப்பால் அடிப்பேன்
என்ன செய்வே'என்று எதிர் பாட்டுக் கேட்டுத் திரும்ப

பார்த்திபன் எதிரே வருவதப் பார்த்து,

'ஆஹா..கெலம்பிட்டான்யா கெலம்பிட்டான்"

'எங்கடா ஈஸ்ட்மென் கலருல்ல கெலம்பிட்ட'

'இந்தா பாருப்பா நா முக்கிய சோலியாப் போறன் வம்பு பண்ணாதே ஆளவுடு'

'அப்டி என்ன முக்கியமா கிழிக்கப் போற?'

'இன்னிக்கு வாலண்டைன்ஸ் டே ப்பா கையில ரோசா வோடப் போயி நம்ம கரெக்ட் பண்ற ஆளுக்கு குடுக்கணும்'

'டேய் உனக்கே இது ஓவராத் தெரியல?
ஏழு கழுத வயசாவுது உனக்கு வலண்டைன்ஸ் டே வா'?

'காதலுக்கு ஏதுப்பா வயசு'?

அது சரி பச்சைக் கலரு ஜிங்குச்சாமஞ்ச கலரு ஜிங்குச்சான்னு இப்படி போறயே இது ஞாயமா '?

'அட நீயின்னாப்பா புரியாத புள்ளையாட்டம்.வாலண்டைன் டேன்னா இதான் செய்யனும்.பச்சைக் கலருன்னா ஐ யாம் ஃபிரீ ன்னு அர்த்தம் ப்பா'

'ஓ அப்படியா ஏண்டா நீ தெருவுல வர்றப்பவே இதப்பாரு ஒன்னப் பாத்து நாலு காக்கா செத்துப் போச்சிஅதோ ரெண்டு மாடு மெரண்டு ஓடுது போஸ்ட் கம்பத்துல காலத் தூக்குன நாயி கூட பாதியில ஓடிப் போச்சிஇப்ப நீ யாரப் போயி சாவடிக்கப் போற?'

வடிவேலு,மனதுக்குள்' ஆய்ய்ங்....நமக்குன்னு வர்ராங்கப்பா...இதுக்குன்னே யோசிப்பாய்னுங்களோ
மனுசன சாவ அடிக்கிறானே'

'பார்த்திபன் 'என்ன பேச்சக் காணோம்'

'அது ஒன்னுமில்லப்பா'

'ஏய் நிறுத்து நிறுத்து நானும் வந்ததுல இருந்து பாக்கறேன்
அப்பா அப்பான்னு நூறு தடவை சொல்ற உனக்குநான் அப்பனா?
நீ சின்னப் பப்பாவா"

'அட அது இல்லப்பா'

'மறுபடியும் நான் அப்பாவா..நீ பப்பாவா வாலண்டைன்ஸ் டேக்கு நாதாறி மாதிரி டிரஸ் பண்ணிட்டுப் போவ நான் இங்க .....டுங்கிட்டு இருக்கனுமா?'

'சரி இப்ப நான் என்னப்பா செய்யனும்'?

'அப்படி கேளு இந்தப் ரோசாப்பூவ அதோ அங்க இருக்கிற புள்ளையாருக்கு வச்சிட்டு, இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்னு 100 தோப்புக் கரணம் போடு'

'ஆய்ய்ய்ய்ங்ங்...இது இன்னாப்பா நான் அப்படியென்ன பண்ணிட்டன் நாம ஒன்னுக்குள்ள ஒன்னுப்பா'

'பாரு மறுபடியும் பேசுனா 200 போடணும்'

வடிவேலு கோயிலை நோக்கி ஓடுகிறார்.

[நாளை வா.டே வித் விவேக்/பல்லி]

4 மறுமொழிகள்::

தம்பி said...

யெக்கா செம காமெடி!

ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் பாத்து போடுங்க

இன்னும் கொஞ்சம் இழுத்து விடுங்க சின்ன சின்னதா இருக்குதா உடனே முடிஞ்சுடுற மாதிரி இருக்கு :((

கண்மணி said...

\\ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் பாத்து போடுங்க//
தம்பி எங்ஙன தப்புன்னு சொன்னாக்கா திருத்திக்கிடுவம் இல்ல.ஆனா பாருங்க நா பேச்சு வழக்குல எழுதறதால அதை ஸ்பெல்லிங் மிஷ்டேக்காப் பாக்கறதில்லை.
மூன்று பகுதியும் சேர்த்து ஒன்னாப் போடத்தான் ஐடியா .ஆனா ஓரே பதிவா போட்டுட்டா அப்பறம் மண்டயக் கொடாஞ்சாதானே அடுத்தப் பதிவு போடமுடியும்.எதுக்கு ன்னுட்டுதான் 'பிட்டு பிட்டா', புட்டுப் போட்டுட்டேன் ஹி..ஹி

SP.VR.சுப்பையா said...

மதியம் 2 மணிக்குப் போட்ட பதிவை
காலி செய்து விட்டு மீண்டும் 6 மணிக்கு அதே பதிவை வலை ஏற்றியிருக்கிறீர்கள்
- என்ன குழப்பம்?

அது சரி அதில் நான் இட்டிருந்த பின்னூட்டம் என்ன்னவாயிற்று?

கண்மணி said...

3 பதிவுகளையும் முன்னமே டிராஃப்ட்டில் வைத்திருந்தேன் .பதிவுடும் போது வரிசை மாறிவந்ததால் மீண்டும் சாபி பேஸ்ட் செய்து புதிதாகப் போட்டேன் .உங்கள் பின்னூட்டம் வரவில்லை.[புது அனுபவம்.மன்னிக்கவும்]

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)