PAGE LOAD TIME

அசத்தப் போவது யாரு..?

விஜய் டி.வியில் 'கலக்கப் போவது யாரு'ன்னு கலக்கியவர்கள் இன்று முதல் சன் டி.வியில் அசத்தக் கிளம்பியிருக்கிறார்கள்.
முதல் நிகழ்ச்சி வடிவேலு தொடங்கி வைக்க அசத்தலாகவே இருந்தது.
வெங்கடேஷ் என்பவர் சங்கர் டைரக்ஷனில் எம்.ஜி.யார் எப்படி அந்நியன் ஸ்டைலில் நடித்திருப்பார் என செய்து காட்டினார்.
இரண்டு பேர் 2 மசால் வடை சாப்பிட்டா தப்பா
இல்லை
2 பேர் 2 முறை 2 ,2மசால் வடை சாப்பிட்டா தப்பா
தப்பு மாதிரிதான் தெரியுது
2 பேர் 200 முறை 2,2 வடை சாப்பிட்டா?
பெரிய தப்புதாங்க
அதுக்குத்தான் நான் தண்டணை தருகிறேன்.இந்தா இது போன வருஷம் செய்த வடை இதைச் சாப்பிடு என்று எம்.ஜி.யார் குரலில் அசத்தினார்.
பின் 'ரோபோ சங்கர்,அர்விந்த் என்ற ஜோடி 'என்னம்மா கண்ணு' பாட்டை உல்டாப் பண்ணிப் பாட ஆரம்பமே களை கட்டியது.
முத்து என்பவர் 'நான் ஸ்டாப்பாக அவிழ்த்து விட்ட ஜோக்குகள்தான் இன்று எனக்கு ஜல்லி[பதிவு] போட உதவியது.
பேஷண்ட்: டாக்டர் உங்க பிஸ்கிரிப்ஷனில் புள்ளையார் சுழி போடாதீங்க
டாக்டர்:ஏன்
பே:அதுக்கும் சேர்த்து கடையில மருந்து குடுக்கிறாங்க

பேஷண்ட்:என்ன டாக்டர் கையில பண்ணவேண்டிய ஆப்ரேஷனை கால்ல பண்றீங்க
டாக்டர்: உஷ்..நான் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

கண்டக்டர்:தெப்பக் குளம் வந்துடுச்சி இறங்குங்க
பயணி:எனக்கு நீச்சல் தெரியாதே

ஒருவர்:காந்தி நல்லவரா,கெட்டவரா
மற்றவர்:ஏன் கேக்குற?
ஒருவர்: பின்ன ஏன் அவர் பொறந்த நாளைக்கு பேங்க்,ஒயின் ஷாப்பெல்லாம் மூடுறாங்க

அவர்:குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கியா?
இவர்:கேட்டேன் குடுக்கவில்லை

அவன்:உன் காதலிக்கு நாளைக்கு கல்யாணமாமே
இவன்:எனக்கு காலையிலேயே தெரியும்
அவன்:எப்படி?
இவன்:குடு குடுப்பைக்காரன் காலையில 'நல்ல காலம் பொறக்குதுன்னு சொன்னானே'

மாணவன்:சார் நான் யூரின் பாஸ் பண்ணப் போறேன்
ஆசிரியர்:சரி அதையாவது 'பாஸ்' பண்ணு

அவர்:அந்த பஸ் எப்படி ஆக்சிடெண்ட் ஆச்சி?
இவர்: டிக்கெட் வாங்காதவங்க கையத் தூக்குங்கன்னு கண்டக்டர் சொன்னதும் டிரைவர் ஸ்டியரிங்கிலிருந்து கைய தூக்கிட்டார்


என்ன அடிக்கணும் போல இருக்கா...ஹி..ஹி..
இனி வாராவாரம் இது மாதிரி ஜல்லி கொட்டப்படும்
டில் தென் சீ யூ மக்கா...வர்ர்ர்ர்ர்ட்டா

7 மறுமொழிகள்::

சிநேகிதி said...

\\ஒருவர்:காந்தி நல்லவரா,கெட்டவரா
மற்றவர்:ஏன் கேக்குற?
ஒருவர்: பின்ன ஏன் அவர் பொறந்த நாளைக்கு பேங்க்,ஒயின் ஷாப்பெல்லாம் மூடுறாங்க
\\

ithu mattum puriyalai...

\\அவன்:உன் காதலிக்கு நாளைக்கு கல்யாணமாமே
இவன்:எனக்கு காலையிலேயே தெரியும்
அவன்:எப்படி?
இவன்:குடு குடுப்பைக்காரன் காலையில 'நல்ல காலம் பொறக்குதுன்னு சொன்னானே'\\
:-) :-)

கண்மணி said...

வருகைக்கு நன்றி சிநேகிதி
ஒயிஷாப்ப மூட வச்சா கெட்டவருதானே
ஒரு நாளைக்கு மக்க தவிச்சுப் போடாதா.அதான் நல்லவரான்னு டவுட்டு போலும்.

ஜி - Z said...

ஏனுங்க்கா... சுட்டதா இருந்தாலும் சூப்பரா இருக்குது... நீங்க போட்டுத் தாக்குங்க....

கண்மணி said...

சரிங்கன்ணா ஜி அண்ணா

Anonymous said...

நல்லாருக்கே நடத்துங்கோ

வெங்கட்ராமன் said...

/******************************
இனி வாராவாரம் இது மாதிரி ஜல்லி கொட்டப்படும்
******************************/

கொட்டுங்க எசமான் கொட்டுங்க,
எங்கள மாதிரி டி.வி பார்க்க முடியாதவங்க இப்படியாவது சிரிச்சுக்குறோம்.

goma said...

அடடா இத்தனை நாள் நம்ம தோஸ்த் மாதிரியான வலைப்பூ என் கண்ணில் எப்படி தப்பியது .இன்றுதான் மாட்டினீர்கள்.இனி தொடருவேன்
ஜல்லி கொட்டுங்க...கில்லி அடிங்க ..சொல்லி அடிங்க...ஹி ஹி ஹிக்க தயாராக இருக்கிறேன்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)