PAGE LOAD TIME

இவர்கள் பாபாவைச் சந்தித்தால்...

இவர்கள் பாபாவைச் சந்தித்தால்..
தலைப்பைப் பார்த்து ஏதோ பா.க.ச பதிவுன்னு நெனக்காதீங்க
நெசமாவே [சாய்]பாபாவை சந்தித்தால் என்
சுட்ட பதிவு பாதியும்,உல்ட்டா பண்ண
சொந்த பதிவு பாதியும் இருக்கு

முதல்ல ஒரிஜினல்:[சுட்டது]

விஜயகாந்த்: ''பாபா சார்..நாட்டுல இருக்கிற எந்த புல்டோசரும் வேலை செய்யக்கூடாது.பாலுன்னு பேர் இருக்கிற அமைச்சருக்கெல்லாம் பதவி பறிபோகனும்.ரெய்டுக்கு வரவங்களுக்கு கண்ணு திடீரென்று குருடாயிடனும்.இதுக்கு மட்டும் அருள் புரிஞ்சிங்கன்னா போதும் "

டாக்டர் அய்யா: " பாபாஜி, ஒரு சினிமா தியேட்டரும் இயங்கக் கூடாது.எல்லா புரெஜெக்டரும் ரிப்பேர் ஆயிடனும்.ஷூட்டிங் நடக்காதபடி காமெராவெல்லாம் ரிப்பேர் ஆகனும்.முக்கியமா,ராத்திரி எட்டு மணிக்கு மேல எவனாவது நடமாட நினைச்சா,கால் முடமாகிறபடி பண்ணிக்கொடுங்க போதும் "

ஆற்காடு வீராசாமி: " கோர்ட்டு சம்பந்தமா துடுக்குத்தனமா பேசிப் புடுறேன்.பாபா அய்யா அப்ப மட்டும் வாய் ஆட்டோமேட்டிக்கா கப்புனு மூடற மாதிரி செஞ்சிடுங்க."

ஜெயலலிதா: "மிஸ்டர் பாபா!இந்த கருணாநிதி கையெழுத்துப் போடற அரசாங்க ஃபைல் ,கையெழுத்துப் போட்டப்புறம் ராஜினாமா லெட்டெரா உங்க மாஜிக்ல மாறி,எங்கைக்கு வந்துடணும்."

அஜீத்: " வண்க்கம் பாபா சூப்பரா இருக்கேன்னு நெனைக்கற கதை ஊத்திக்கிது.ரிஜக்ட் பண்ற கதைசூப்பர் ஹிட் ஆகுது.நல்ல கதையை கண்டு பிடிக்கிற தெறமைய கொடுத்து ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்"

இனி நம்ம சரக்கு:***

தனுஷ்: '' குரு இன்னா தின்னாலும ஒடம்பு உடும்புமாதிரியேக்கீது
என்னாச்சும் புஷ்டியா துன்ற அயிட்டமா சொல்லி என்னை தேத்துங்க குருவே. "

விஜய்: ''பாபாங்ணா வணக்கமுங்ணா நாம்ப திரிஷா கூட இல்லாட்டி அசின் கூட கட்லை போட்டாலும் ஒன்னுந்தெரியாத
கொளந்த மாதிரி மொகத்த வச்சிக்கிறம்ணா.அத்த அப்டியே மெய்ன்டைன் பண்ணனும்ணா அவ்ளவ்தாங்ணா ''

வடிவேலு: '' எஞ்சாமீ..ஏதோ இப்பத்தான் டாப்பு கியருல போய்க்கிட்டிருக்கோம். ஒங்கள பாத்ததே நமக்கு கண்ண கட்டுது
ந்ம்மள வச்சி காமெடி கீமெடி பண்ணிடாதீங்க சாமீ ''

நயன்தாரா: '' பாபாஜி, என்ட 'தேவதை'ன்னு ஞான் பறஞ்சது எல்லாம் இப்ப 'சாத்தான்' ஆயிந்தி.என்ட சிம்புவோட கிஸ்ஸடிச்ச போட்டோ வெல்லாம் இண்டர்நெட்டிலிருந்னு மாயமாயிட்டு மறஞ்சு போகான் வேண்டி நிங்கள்ட்ட ஞான் சம்சாரிக்கின்னு அதே.''

கண்மணி[நானாக்கும்]: '' பாபா எனக்குன்னு எதுவும் வேண்டாம்.ஆனா தமிழ்மணத்தைப் பாக்கிறவங்களுக்கு என்னோட பதிவு மட்டும்தான் தெரியணும்.மத்ததெல்லாம் அவுட் ஆஃப் போகஸ்தான்...ஹி...ஹி...ஹி''

[பிடிச்சிருக்கா...ஹி..ஹி..]

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி
வேறொன்றறியேன் பராபரமே


14 மறுமொழிகள்::

நாமக்கல் சிபி said...

//கண்மணி[நானாக்கும்]: '' பாபா எனக்குன்னு எதுவும் வேண்டாம்.ஆனா தமிழ்மணத்தைப் பாக்கிறவங்களுக்கு என்னோட பதிவு மட்டும்தான் தெரியணும்.மத்ததெல்லாம் அவுட் ஆஃப் போகஸ்தான்...ஹி...ஹி...ஹி''//

இதுக்கு நம்ம பாபா தான் அருள் புரியணும்! (பா.க.ச பாபா)
:))

கண்மணி/kanmani said...

கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்க சிபி
இல்லாட்டி 'சுடர' பா.பா பக்கம் போட்டுடுங்க.

Anonymous said...

எவ்வளவு நல்ல எண்ணம் உங்களுக்கு
பொழைச்சுப் போங்க

கண்மணி/kanmani said...

யாரு பாபாவா அருள் புரிந்தது அனானிமஸாக வந்து என்னே என் பாக்கியம்.தன்யனானேன் ஸுவாமி.

கதிர் said...

''பாபா எனக்குன்னு எதுவும் வேண்டாம்.ஆனா தமிழ்மணத்தைப் பாக்கிறவங்களுக்கு என்னோட பதிவு மட்டும்தான் தெரியணும்.மத்ததெல்லாம் அவுட் ஆஃப் போகஸ்தான்...ஹி...ஹி...ஹி''

அப்போ ஒரு நாளைக்கு 25 பதிவு போடுங்க.

நான் அம்பது கமெண்ட் போடறேன் அதுக்கு ஒன் பை ஒன்னா பதில் சொல்லுங்க

அப்புறமா தமிழ்மணத்துல நீங்கதான் தெரிவிங்க!

வேற பொழப்ப எல்லாத்தையும் விட்டுட்டு இதத்தான் நீங்க பாக்கணும். :))

கண்மணி/kanmani said...

அய்ய இதோ பார்ரா தம்பி வந்துட்டாரு
பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஐடியாவோட!!!!!
நான் ஒன்னே ஒன்னுதான் ஒரு நாளைக்கு பதிவேன்[அதுக்கே கண்ண கட்டுது] அது பாபா அருளால தமிழ்மணம் பூராத்தெரியும்.

Anonymous said...

காஞ்சி சங்கராச்சாரி...
நேக்கு ஒரு வழி காட்டுங்கோ.உம்ம வீடியோவிலேயே பிடிச்சா ஒன்னும் ஆகலை,என்னை இந்த செல்போன்ல பிடிச்சுட்டு இப்படிப் படுத்துறாளே.நேக்கு செல் போனெல்லாம் தெரியாமப் பூடுத்தே!இத்துனூண்டு இருக்கு இதுக்கு இவ்வ்ளவு பவரா?

ஜி said...

நான் ஒரு ஐடியா கொடுக்குறேன் கேளுங்க....

தமிழ்மணம் வலைதளத்தை ஹைஜாக் பண்ணி, அதுல ஒரு வைரச விட்டு, யாரு எந்தப் பதிவுப் போட்டாலும், அத போட்டது உங்க பேராவும், அதுல வர்ற ஐட்டம் பலசுவைப் பக்கத்துல இருந்து வர்ற மாதிரியும் பண்ணிடுங்க...

அப்புறம் தமிழ்மணத்துல என்ன? கூகில ஓபன் பண்ணினாலே உங்க பக்கம்தான். என்ன சொல்றீங்க???

கண்மணி/kanmani said...

ஜி இந்த நக்கலு நையாண்டிதானே வேணாங்கிறது.நமக்கு ஒரு டெம்ப்லெட்டே மாத்தத் தெரியல.கருவிப்பட்டைய சேக்கறதுக்கே கண்ண கட்டிடிச்சி.நா இன்னா பொட்டிதட்டற படிப்பா படிச்சேன்? இதுல வைரசாம்,ஹைஜாக்காம் போமய்யா....பாபா பாத்துப்பார் ஹி..ஹி

பொன்ஸ்~~Poorna said...

:)))))))))))

கண்மணி/kanmani said...

வாங்க பொன்ஸ் வருகைக்கு நன்றி
இரண்டு மாசமா குப்பைக் கொட்டுறேன் கண்டுக்கிடல போங்க
[கோப்ப்ப்ப்பத்துடன் கண்மணி]
சிமைலி பிரியலமா?

Anonymous said...

ரொம்பத்தான் நல்ல மனசும்மா உங்களுக்கு

கலை said...

நல்லா இருக்கு, ஹி ஹி.

சோமி said...

கண்மணி உங்களுக்கு பின்னூட்டம் போடவேணுமெண்டு அடிகடி உங்கள் பதிவுகலை வாசிக்கும் போது நினைப்பேன் நேரம் கிடைப்பதில்லை.

பாபாவின் கிருபையால்(!?) பின்னூட்டம் போட முடிந்தது. ஒருவேளை உங்கள் வேண்டுகோள் பாபாவின் கவனத்துக்கு போயிருக்கிறது போல,பொறுமையா இருங்கல் வாயிலோ வய்த்திலோ இருந்து புதிய தமிழ்மனத்தை உருவாக்கித் தருவார்.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)