PAGE LOAD TIME

100 கொசு அடித்தால் என்ன கிடைக்கும்??

ஒருமுறை ஒரு தமிழ் வாரப் பத்திரிக்கையின் இணையப் பக்கத்தில் உலாவ்விக் கொண்டிருக்கும் போது ஆன்லைன் விளையட்டுக்கள் பகுதியில் ஒரு விளையாட்டு பார்த்தேன்.
''கொசு அடிக்க வாரீகளா'' ன்னு ஒரு விளையாட்டு.100 கொசு அடித்தால் பரிசாம்.

முறத்தால் புலி அடித்த மறத்தமிழச்சி வம்சம்னாலும் நமக்கு கரப்பன் பூச்சியைக் கண்டாலே குலை நடுங்கும்.[அப்படி சொல்லிக்கிட்டத்தான் சினிம நடிகை ரேஞ்சுக்கு ஒரு கெத்தாக இருக்கும்].சரி கொசுதானே அடிக்கச் சொல்றாங்க.பரிசு வேறு உண்டாம்.இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ஆன்லைன் போட்டியில் ஒரு பைக் வின் பண்ணாராம்.[சொல்லிக் கேட்டதுதான்].

இந்த கொசு அடிக்கும் போட்டிக்கு ஒரு மடிக் கணிணியோ அல்லது டிஜிடல கேமராவோ கிடைக்கலாம்.ஒருவேளை நீங்களே தேர்ந்தெடுங்கள் என்றல் என்ன செய்வது.சரி ரங்கமணிக்கு ஒரு போன் போட்டுக் கேட்டுடுவோம் என்று போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தேன்.

முதலில் இஷ்ட தெய்வத்தையெல்லாம் கும்பிட்டுக் கொண்டேன்.100 கொசுவுக்கு பேசாம 108 தேங்காய் ஒடைப்பம் என்று தோன்றியது.இருந்தாலும் அவசரப்பட்டு 'டீல்'வைக்க வேண்டாம் என்று வெறும் விண்ணப்பத்துடன் நிறுத்திக் கொண்டேன்.

'ஸ்டார்ட்' பட்டனை அழுத்தியதும் ஒரு பின் புலத்தில் கொசுக்கள் அங்கும், இங்கும் பறந்து கொண்டிருந்தன.எலிக்குட்டியை [மவுஸ்]கொசுவின் மீது வைத்ததும் மவுஸுடன் சேர்ந்து ஒரு வலை தோன்றியது.அடிபட்ட கொசுவைப் பிடித்துப் போடவாம்.

ஒவ்வொரு கொசு அடிபடும் போதும்,கிரிக்கெட் ஸ்கோர் போல திரையில் எண்ணிக்கை ஓடியது.45..46.48.49...என்று ஸ்கோர் போய்க் கொண்டிருந்தபோது 'சுரீரென்று' கையை ஒரு கொசு கடித்தது. திடுக்கிட்டுத் திரும்பினல் ஒரு நிஜக் கொசு கடித்துக் கொண்டிருந்தது. ஓங்கி அடித்து அரை சதம் வந்து விட்டதா என்று பார்த்தால்,எலிக்குட்டி நிஜக் கொசுவை கணக்கில் எடுக்காமல் 49 ஸ்கோரே காட்டியது.[நிஜக் கொசுவுக்கும் கணிணி கொசுவுக்கும் ஆகாதோ]

ஒருவழியாக 67..69..70 என்று போனது. அப்போது,''அய்ய் என்ன செய்றீங்க'' என்றபடி ஓடி வந்தது பக்கத்து வீட்டு அரை டவுசர் வாண்டு.
''கொசு அடிக்கிறேண்டா கண்ணா ''என்றதும் நக்கலாக ஒரு பார்வையுடன்,''அய்ய் இப்படியா அடிப்பாங்க என்றபடி ஓடிப் போனது.அப்பாடா ஒரு வழியக இப்போதைக்கு தொல்லை விட்டது என்று கொசு அடிப்பதில் மும்மரமானேன்.சட்டென்று முதுகில் ஏதோ படவே திரும்பினால் ப்.வீ.வாண்டு ஒரு 'ஹிட் ஸ்பிரேயருடன்'நின்றிருந்தது.அடப்பவி நல்ல வேளையாக முகத்தில் அடிக்காமல் விட்டாயே என்று மெதுவாக விஷயத்தைச் சொல்லி பக்கத்தில் அமர வைத்து வேலையைத் தொடர்ந்தேன்
76..78...79..81..84..மறுபடியும் முதுகில் ஒரு 'முசுமுசு' குட்டிப் பிசாசு என் தோளில் சாய்ந்தபடி முசுமுசுன்னு மூச்சு விட்டுக் கொண்டே ''ஹிம் ம் அதை அடிங்க..இதை அடிங்க ''என்று பரபரத்தது.88..93...95...வாண்டு அப்படியே சாய்ந்து முன்னல் வந்து தானே என் கையைப் பிடித்து எலிக்குட்டியை நகர்த்தியது..98..99..100..ஸ்ஸ் அப்பாடா
வெற்றிகரமாக 100 கொசு அடித்தாகிவிட்டது.
திரையில் ''வாழ்த்துக்கள்'' என்ற அறிவிப்புடன 'பரிசுக்கு இங்கே அழுத்து' என்று வந்தது.
அதை அழுத்திவிட்டு படபடப்புடன் காத்திருந்தால்..
''கொசு அடித்தது போதும் போய் வேலையப் பாரு ராசா'' என்று வந்தது.
என் முகத்தில் கொசு ஆட சாரி ஈ ஆடவில்லை.
ப.வீ.வாண்டு 'ஹிக்ஹிக்கீ' என்று கை கொட்டி சிரித்தது.

26 மறுமொழிகள்::

Anonymous said...

hi hi eee

Anonymous said...

அட்ரஸை சொல்லுங்க. சிக்குன் குனியாவோட வர்றோம்

அபி அப்பா said...

அவனவன் பதிவு போட மேட்டர் கிடைக்காம கொசு ஓட்டிகிட்டு இருக்கான். நீங்க கொசு அடிச்சதையே ஒரு பதிவா போட்டுட்டீங்களே!! ரொம்ப வெவரம்தான்!!-:)))

Anonymous said...

படித்தேன், குழுங்கிக், குழுங்கிச் சிரித்தேன், நன்றி.

உங்களுக்கு ''கொசுக்கண்மணி'' என்னும் பட்டத்தினை
அன்புடன் சூட்டுகிறேன்.

கொசுக்கண்மணி வாழ்க!
கொசுக்கண்மணி வாழ்க!!

கதிர் said...

இந்த பதிவினில் நான் இட்ட ஒரு பின்னூட்டத்தை காணவில்லை என்ற எனது புகாரினை இங்கு பதிவிடுகிறேன்

கண்மணி/kanmani said...

அய்ய்யே இதப்பார்றா அடிபட்டும் இந்த கொசுவுக்கு தில்லு ஜாஸ்திதான்.சிக்கன்குன்னியா வோட வருதாமில்ல.

கண்மணி/kanmani said...

நீங்க பாப்பா மேட்டர இப்படி பத்த வைக்கிறது பாப்பாக்கு தெரியுமா?இருங்க போன் போடுறன்.

கண்மணி/kanmani said...

நீங்க 'சிறைக்குள்ள பறவையா' இருந்தபோது [ஜெயிலுக்கு போன போது] நெறைய வெவகாரமாயிட்டுது தம்பி.அக்காவுக்கு என்னைக்கு 10 கமெண்ட்டுக்கு மேல வந்தது.ஏதொ உம்ம போல தம்பிங்க ,அப்பாங்க[அபி] போடறதுதேன்.அத்த 100 ன்னு சொல்லி நம்ம பதிவ காட்டாம வுட்டுட்டாய்ங்கப்பூ.மறுபடியும் மீள் பதிவுதேன்.ஹி..ஹி அதான் இப்ப உங்க பதிலு போட்டுட்டேனே.

Anonymous said...

"நீங்க அடிச்சது ஆன்லைன் கொசு நான் அக்மார்க் கொசு"

எந்த புகைக்கும் அஞ்சாத கொசு.

கண்மணி/kanmani said...

கொசுக் கண்மணி என்று பட்டம் கொடுத்த் அனானி உங்க பேரைச் சொல்லக் கூடாதா.எங்க சங்கத்துல சேத்துக்குவோமில்ல[கொசு அடிப்பு சங்கம்]

கண்மணி/kanmani said...

கொசுக் கண்மணி என்று பட்டம் கொடுத்த் அனானி உங்க பேரைச் சொல்லக் கூடாதா.எங்க சங்கத்துல சேத்துக்குவோமில்ல[கொசு அடிப்பு சங்கம்]

Santhosh said...

கொசு எல்லாம் நல்லா அடிப்பிங்க போல, நம்ம ஏரியா பக்கமும் கொஞ்சம் கொசு இருக்கும் வந்திங்கண்ணா கொஞ்சம் வசதியா இருக்கும். :))

கண்மணி/kanmani said...

சந்தோஷமா வர்ரேன்.நமக்கு என்ன கும்பகோணமா?அங்கனதான் ஆளையே தூக்கற கொசு இருக்காம்.

Anonymous said...

எங்ககிட்ட வம்பு வச்சுக்காதீங்க நாங்க பாட்டுக்கு 'ஙய்ய்' ன்னு சுத்துறோம்.கடிச்சா தாங்க மாட்டீங்க.

கோபிநாத் said...

\\அவனவன் பதிவு போட மேட்டர் கிடைக்காம கொசு ஓட்டிகிட்டு இருக்கான். நீங்க கொசு அடிச்சதையே ஒரு பதிவா போட்டுட்டீங்களே!! ரொம்ப வெவரம்தான்!!-:)))\\

ரிப்பீட்டேய்...கொன்னுட்டீங்க......கொசுவை :)))

ஜி said...

யக்கோவ் கொசுக்கண்மணி...

100 கொசுவ அடிச்சீங்களா? உங்க பேருல நூறு பாவம் சேந்திடிச்சு... அதுக்கு என்ன பரிகாரம் செய்யப் போறீங்க????

கண்மணி/kanmani said...

ஜி தம்பி பரிகாரம் செய்யப் பரிவாரங்களுடன் கெளம்பிட்டேய்யா..கெளம்பிட்டேன்ய்யா

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல comedy :)

நாமக்கல் சிபி said...

//''கொசு அடித்தது போதும் போய் வேலையப் பாரு ராசா'' //

:))

கண்மணி அன்போட நீ அடிக்கும் கொசு இல்லை மஸ்கிட்டோ.. இல்லை இல்லை.. கொசுவே இருக்கட்டும்!

நாமக்கல் சிபி said...

//கொசு எல்லாம் நல்லா அடிப்பிங்க போல, நம்ம ஏரியா பக்கமும் கொஞ்சம் கொசு இருக்கும் வந்திங்கண்ணா கொஞ்சம் வசதியா இருக்கும். :))
//

சந்தோஷ்! உங்க ஏரியாவுல கொசு பிரச்சினையா இல்லை பேன் பிரச்சினையா?

கண்மணி/kanmani said...

என்னங்க சிபிய்யார கொஞ்ச நாளாக் காணோம்.வாங்க இப்பல்லாம் கொசுவ கையால அடிக்கிறது இல்லங்க 'எலக்ட்ரிக் டிராப்' தான்.வேணுமா?

கதிர் said...

யெக்கா எத்தனி நாளைக்கு குந்துன எடத்துலேயே கொசு அடிச்சுட்டு இருப்பிங்க, சட்டு புட்டுனு ஒரு டைனோசரையோ, காட்சில்லாவையோ அடிச்சுட்டு போவியளா, உங்க லெவலுக்கு கொசு விளாட்டெல்லாம் விளையாடுங்களா..
இப்பலாம் நிறையா கேம்ஸ் வருதாம்ல..
நாளைக்கே டைனோசரை அடித்தால் என்ன கிடைக்கும்னு ஒரு பதிவு போடுவீங்கதான :)))

கண்மணி/kanmani said...

அக்காவிடம் அடிவாங்கும் 'தம்பிகள்'
ஒரு பதிவு ரெடியாகுது அதுல மெய்ன் ரோல் நீரும்,ஜி யும் தான்.

கலை said...

இது உண்மையாலும் நடந்துதா? :)

கண்மணி/kanmani said...

aamaam kalai.oru websitil viLAIYAADINEEN

வெட்டிப்பயல் said...

//ஒரு பதிவு ரெடியாகுது அதுல மெய்ன் ரோல் நீரும்,ஜி யும் தான்.//

அந்த பதிவுக்காக ஆவளுடன் காத்திருக்கிறேன்...

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)