PAGE LOAD TIME

தமிழ்மணத்தின் தாராள மனம்

என்னம்மோ நடக்கிறது எனக்குப் பிரியலையே

தமிழ்மணத்தில் மறுமொழிகளின் உயரெல்லை 30 ஆக மாற்றி மீண்டும்40 ஆக்கிய பிறகு என்னம்மோ நடக்கிறது எனக்குப் புரியலை.
யாருடைய மறுமொழி மட்டறுக்கப் பட்ட இடுகையைப் பார்த்தாலும் 46,47 என்று எல்லாம் '4' மயமாக இருக்கிறது.
பொதுவாக என்னுடையப் பதிவுக்கு 10 தாண்டுவதே கடினம்.டோண்டு பற்றிய பதிவிற்கு மட்டும் விழுந்து விழுந்து மறுமொழி இட்டு 30 ஆக்கினார்கள்.[ அவர் மேல அம்புட்டு பாசம்]
நேற்று என்னுடைய 'கொசு அடித்தால் என்ன கிடைக்கும்?'' பதிவை மிகுந்த சிரமத்திற்கு இடையே பதிவிட்டேன்.4,5 முறை பதிவை பப்ளிஷ் செய்தபோதும் திடீரென்று 'ஜீ பூம்பா' போல் மாயமாய் மறைந்து போனது .இன்னும் போய்க் கொண்டிருக்கிறது.அப்ப இந்த பதிவு எப்படின்னு பாக்கறீங்களா?எல்லாம் 'தீ நரி' உபயம்.[சரி என்னுடைய இண்டர்நெட் உலாவி கோளாறு என்று நினைக்கிறேன்]
விஷயத்திற்கு வருகிறேன்.இந்த கொசு பதிவ நேத்து போட்ட பிறகு 2 பின்னூட்டமும் என் மறுமொழியுமாக மொத்தம் 4 தான் உள்ளது .ஆனா என் இடுகைக்கு பக்கத்துல[24 மணிநேரத்தில்.....] பாத்தா 100 என்று இருக்கு.நம்ம சொன்ன கொசு எண்ணிக்கை தவறுதலா வந்துடுச்சோன்னு பாத்தா நெறையப் பேருக்கு இத விட கூத்தா இருக்கு.
நான் பரீட்சையிலேயே 100 க்கு 100 வாங்கினதில்லை .இப்ப 100 பாத்து எங்கண்ணுல காவிரி ஆறு.
ஆனாலும் நாம தான் டாப்புன்னு பாத்தா நெறையப் பேரு 1000,2000 ன்னு வாங்கியிக்காங்க.அட ஆமா அப்பூ இதோ லிஸ்ட் தரேன் சரி பாருங்க:
சர்வேசன்:47
இட்லிவடை:47
கூத்தாடி:47
மதிகந்தசாமி:100
கண்மணி:100
தமிழ் மணமும் பிளாக்கர் பீட்டாவும்:195
டோண்டு:412
கண்ண்பிரான்:428
கேதா சாம்பசிவம்:429
கோவி.கண்ணன்:437

துளசி கோபால் :4432

இது தமிழ் மணத்தை கேலி செய்யும் அல்லது கொச்சைப் படுத்தும் முயற்சி இல்லை.இந்தத் தவறு எதனால் என்று கண்டறிந்து சரி செய்ய விழைகிறேன்.
ஏனெனில் 10 கூட தாண்டாத என் பதிவுகள் 100 வாங்கியும் ஃபெயிலாப் போச்சே [மறுமொழி திரட்டப் படுவதில்லை] என்ற ஆதங்கம்.

தமிழ் மணம் விரைவில் சரி செய்யும் என்ற ந்ம்பிக்கையுடன் இந்த பதிவை வைக்கிறேன்.

7 மறுமொழிகள்::

அபி அப்பா said...

சரி பதிவு போட்டாச்சு! நா வந்து 1 முழுங்கியாச்சு. அப்பால வர்ரேன்.

துளசி கோபால் said...

//துளசி கோபால் :4432//

ஹைய்யாரே ஹைய்யா :-))))

அபி அப்பா said...

இது அநியாயம்! டீச்சர் 4432ஆ! சுத்தி போடனும்.

கண்மணி said...

சிரிக்காதீங்க அக்கா 100 வாங்கின நானே ஃபெயிலுன்னா 4432 வாங்குனா நீங்க மட்டும் பாஸா? 5 வருஷத்துக்கு பரீட்சை எழுத விடாம[டிபார்ட்] பண்ணிடுவாங்க ஆமாம்.

கண்மணி said...

எனக்கென்னமோ உம்ம சதியோன்னு லேசா டவுட் ஆவுது அபி அப்பா.பேசாம தங்க மணிகிட்ட போட்டுக் குடுத்துடப் போறேன்.

Anonymous said...

oho

கண்மணி said...

வாங்க அனானி பேரைப் போட்டு எழுதுனா நமக்கும் கொஞ்சம் மருவாதி கெடைக்குமில்ல

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)