PAGE LOAD TIME

ச்சுப்பிரமணிக்கு என்ன இனிஷியல்?[புகைப்படம் சேர்க்கப் பட்டுள்ளது]

ரெண்டு நாளா வீட்ல ஒரு பிரச்சினை.சின்னவன் அடம் தாங்கலை.ச்சுப்பிரமணிக்கு இனிஷியல் வச்சே தீரணும்னு ஒரே ரகளை.

ச்சுப்பிரமணி எங்க வீட்டுக்கு வந்து ஒரு வாரந்தான் ஆகுது. அதுக்குள்ள சின்னதும்,பெரியதும் அவனோடு நல்லா ஒட்டிக்கிட்டாங்க.

அவனும் பாக்க நல்லா வெள்ளையா கொழு கொழுன்னு இருப்பான்.துறு துறுன்னு அங்கியும் இங்கியுமா ஓடுவான்.
என்ன ஒன்னு பெரிசுக்கும்,சின்னதுக்கும் வாலு இல்லை.ச்சுப்பிரமணிக்கு வாலு இருக்கு.அட என்ன பாக்கறீங்க ச்சுப்பிரமணி எங்க வீட்டு குட்டி நாய்.{{ச்சுப்பிரமணி ரசிகர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி கு.ச்சுப்பிரமணியின் புகைப்படம் இணைத்துள்ளேன்.
பெ.ச்சுப்பிரமணி படம் வேண்டுவோர் இன்னும் 5 வருடம் கழித்து வந்து பார்க்கவும்}
இதுவரை கு.ச்சுப்பி படத்தைப் பார்க்காமல் பதிவு மட்டும் படித்த அவனது ரசிகர்களுக்கு படம் பிரசுரிக்கப் பட்ட சேதியைச் சொல்லவும்.}}

போன வாரம் ரங்கமணியோட அப்பா[மாமனாரு]தான் அவனைக் கொண்டுவந்தாரு.எங்க பேமிலி டாக்டரும் ரங்கமணி அப்பாவும் ஒன்னாத்தான் வாக்கிங் போவாங்க. டாக்டர் வீட்டுல இருந்த அவனும் இவரைப் பாத்ததும் வாலை ஆட்டியபடியே சுத்திச் சுத்தி வந்திருக்கான்.நல்லா வெள்ளையா குட்டியூண்டு இருக்கவும் தூக்கிக்கொஞ்சியிருக்காரு.அவனும் இவரு கைய நக்கியிருக்கான். அப்படியே உருகிப் போன ரங்கமணியோட அப்பா ''ச்சுப்பிரமணி'''' சுப்பிமணி'' ன்னு மூன்றாம் பிறை சீதேவி மாதிரி கூப்பிடவும்[அந்த காலத்துல சீதேவி ரசிகர் மன்றத் தலைவராக்கும்] அவனும் இவர்கிட்ட ஒட்டிக் கிட்டான்.
வீட்டுக்கு வந்ததும் எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிப் போச்சி.ஆளாளுக்கு,'டைகர்..ஜிம்மி..டாமி ன்னு பேர் சொன்னாங்க.ரங்கமணி அப்பா பிடிவாதமா ச்சுப்பிரமணிதான் ன்னுட்டார்.வயசானவரு ஆசையக் கெடுக்க வேண்டாம்னு ஓகே ன்னுட்டோம்.முந்தா நாள் சின்னவன் பிரண்ட் கிட்ட சுப்பிரமணி பத்தி அளந்திருக்கான்.உடனே அவன் ச்சுப்பிரமணிக்கு என்னடா இனிஷியல் னு கேக்கப் போய் தான் மண்டையப் பிச்சிக்கிட்டிருக்கோம்.
கண்ணா நாய்க்கெல்லாம் இனிஷியல் இல்லடா என்றபோது அப்ப ஏன் டைகர் ஜிம்மின்னு வைக்காம ச்சுப்பிரமணின்னு வச்சீங்கன்னு மடக்கினான்.
ரங்கமணி கிட்ட சொன்னதும் சரி அப்பா தானே அதை தூக்கி வந்தார் அவ்ரு பேர வச்சிடுவோம்னு சொன்னதுதான் மாமியார் சீரியல்ல வர சி.ஐ.டி சகுந்தலா மாதிரி சண்டைக்கு வந்துட்டாங்க.
''அந்த காலத்துல எங்அப்பா வீட்ல கோம்பை.ராஜபாளையம் னு ஜாதி நாய் வச்சிருந்தோம்.இந்த மாதிரி தெரு நாய்க்கு உங்கப்பா பேரா? வேணும்னா உன் மாமனார் பேர வய்யி''
உடனே நான் திருப்பி,''எங்க வீட்ல இன்னும் ராயலா டாபர்மேன்,கோல்டன் ரிட்ரீவர்,ஜெர்மன் ஷெப்பர்டு,லாப்ரடார் ஜாதிதான் வளக்கிறோம்.எங்க அப்பாவ எதுக்கு இழுக்கிறாங்கன்னு ரங்கமணி கிட்ட பாய,
''சரி சரி ரெண்டு பேரும் வேணாம் வேற யோசிப்போம்'' என்றார்.
அதுக்குள்ள பெரியவன் டாக்டர் அங்கிள் வீட்டுக்கிட்ட இருந்துதானே தாத்தா கூட்டி வந்தார் டாக்டர் பேர வைப்போம் ன்னதும் சின்னவன் வீல் என்று அலறினான்.
''வேண்டாம் போ அவுரு பெரிய்ய ஊசி போடுவாரு ஐ ஹேட் ஹிம் ச்சுப்பிரமணிக்கு அவரு பேர் வேணாம் ''என்று கத்தினான்.
சின்னவனை எப்படியாச்சும் தாஜா பண்ணி இந்த இனிஷியல் மேட்டர டிராப் பண்ணலாம்னு பார்த்தா அவனோ விக்கிரமாதிதன் கதையில் வரும் வேதாளம் போல புடிச்ச புடியவிட்டு இறங்கல்ல.
கடைசியாக டாக்டரிடமே போய் ஒரு ஐடியாக் கேட்க முடிவானது.
ரங்கமணிக்கு அவசர வேலையிருந்ததால் நான் மட்டும் ச்சுப்பிரமணியோடு சின்னவனையும் கூட்டிக் கொண்டு ஒரு ஆட்டோவில் டாக்டர் கிளினிக்குக்குப் போனேன்.ஆட்டோவுக்குப் பணம் கொடுக்க சூ.மணியைக் காலருகில் வைத்துவிட்டு பர்ஸ்லிருந்து பணம் எடுப்பதற்குள் சு.மணி என் செருப்பு வாரைக் கடித்து விட்டது.
அறுந்து போன செருப்புடன் காலை இழுத்து இழுத்து டாக்டர் ரூமுக்குள் போனேன்.
''வாங்க வாங்க நீங்க வருவீங்கன்னு தெரியும்''
''என்ன டாக்டர் சொல்றீங்க''
''ஊரெல்லாம் சிக்கன் குனியா வந்து நடக்க முடியாமா கஷ்டம்.நீங்க இப்படி முத்தவுட்டுத் தான் வர்றதா''என்று கேட்டபடியே தெர்மாமீட்டரை நாக்கு அடியில் வைத்து விட்டார்.
''இஷ்ஷீங்க டாக்ஷ்த்ர் ''நான் சொலவதை காதில் வாங்காமல், 'மனதில் உறுதி வேண்டும' எஸ்.பி.பி ரேஞ்சில் பாடிக் கொண்டே சு.மணியைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டார்.
என்ன டெம்ப்ரேச்சர் நார்மலா இருக்கே என்றவரிடம் எனக்கு ஒன்னும் இல்லை என்று சு.மணி மேட்டரைச் சொன்னேன்.
ஓஹோ என்று சிரித்தவர்,சின்னவனிடம் கேட்டார்''உன் ச்சுப்பிரமணிக்கு இனிஷியல் தானே வேணும்'' இவனும் ஆமாம் என்று தலையாட்ட,
''இனிமே அது கு.சுப்பிரமணி'' என்றார் .சின்னவனோடு நானும் புரியாமல் முழிக்க ,
கு.ஃபார்..குட்டி...குட்டிச் சுப்பிரமணி''
''அப்ப வளந்து ப்பெர்ரிசாயிடிச்சின்னா'' என்று சின்னவன் மடக்க,
''பெ.சுப்பிரமணி பெ. ஃபார்..பெரிய்ய''என்றார்.
சின்னவன் முகத்தில் ஆனந்தம் எனக்கும் அப்பாடா என்றிருந்தது.

38 மறுமொழிகள்::

சென்ஷி said...

போவியா...இனிமே கண்மனி வீட்டு பக்கம் போவியா....
சுப்பிரமணிக்கு இனிஷியல் வச்சதோட இல்லாம உள்ளே போன கடிக்க வைக்கிறாங்களே...

:)))

சென்ஷி

அபி அப்பா said...

அப்பாடீ!! எனக்கும் ஒரு பிரச்சனை தீந்துச்சுங்க கண்மணி. கு.டைகர் கொஞ்ச நாள் கழிச்சு பெ.டைகர்...ஹய்யா:-))

கண்மணி said...

வாங்க சென்ஷி எங்க ச்சுப்பிரமணிக்கு பல்லு இல்ல கடிச்சாலும் வலிக்காது.தொப்புள சுத்தி ஊசி போட வேணாம்.

அபி அப்பா said...

ஆஹா! சென்ஷி முந்திகிட்டாரே!! ச்சுப்ரமணிக்கு நான்னா ஒரு கவிதை எழுதி தரட்டுமா. கவிதைய படிச்சு காமிங்க அது டாக்டர் வீட்டுக்கே போயிடும்!!

கண்மணி said...

அபி அப்பா ரெண்டு நாளைக்கு ச்சுப்பிரமணிய அபி பாப்பாக் கூட வெளையாட அனுப்பறேன். ஆனா கவிதை சொல்லி அவனுக்கு வயித்தால போக வச்சிடாதீங்க.

கார்த்திக் பிரபு said...

ச்சு ன்னு வைங்க:)

கண்மணி said...

வாங்க கார்த்தி இனிமே இனிஷியல் மாத்தமுடியாதே ரேஷன் கார்டுல பதிஞ்சாச்சே.

முனிசிபாலிட்டி said...

ச்சுப்பிரமணிக்கு லைசென்ஸ் வாங்கிட்டிங்களா?

அடுத்த வாரம் நாய் ரெய்டு வரப்போறோம். மறக்காம லைசென்ஸ் வாங்கிடுங்க.

வாஸ்து நிபுணர் said...

வாஸ்துப்படி ச்சுப்புரமணிக்கு "ச்" வரக்கூடாது. ஒரு 500 வெட்டுனிங்கன்னா வாஸ்துப்படி பேர மாத்தி வெச்சிடலாம்.

கண்மணி said...

அய்யா வாஸ்து நிபுணரே ரங்கமணி அப்பா சீதேவி ரசிகர் அதான் சீதேவி மாதிரியே ''ச்ச்சுப்பிரமணி'' ன்னு பேர் வச்சுட்டார். அப்றம் ஒம்ம பேருலயும் வாஸ்து சரியில்ல.அதான் அனானியா உலாவரீரு..ஹி..ஹி

கண்மணி said...

மிஸ்டர்.முனிசிபாலிட்டி எங்க ச்சு.மணிக்கு ரேஷன் கார்டும்,எலக்ஷன் ஐடியும் இருக்குங்கோ. நீங்க வேற நாயப் புடிங்கோ.

சேதுக்கரசி said...

:-)))

கார்த்திக் பிரபு said...

லஞ்சம் கொடுங்க மாத்திரலாம்!!

துளசி கோபால் said...

உண்மையைச் சொல்லணுமுன்னா க. சுப்பிரமணின்னுதான் வைக்கணும்.

எங்க வீட்டுலே பூனை நாய்க்கெல்லாம் சர் நேம் எங்க பேர்தான்.

நம்ம வீட்டு ஆட்களில்(???) அதுவும் ஒண்ணுதானே. குடும்ப அங்கம்.

கண்மணி said...

துளசியக்கா [அக்கான்னு கூப்பிடலாந்தானே?]க.சுப்பு ன்னு வக்கத்தான் நெனச்சேன்.
'கண்மணிசுப்பு' ன்னு கண்ணதாசனோட மகன் ஒருத்தர் இருப்பதால [சுப்பையா அண்ணே ஆம் ஐ ரைட்?] வேண்டம்னு விட்டுட்டேன்.

கண்மணி said...

கார்த்திக் ப்ளீஸ் நாட்டக் கெடுத்தது போதும் தமிழ் மணத்தையுமா..[லஞ்சம் கொடுத்து] ஹி..ஹி..
[கொஞ்சம் கொறச்சிக்கக் கூடாதா?]

ரவிசங்கர் said...

நல்ல comedy :)

நெல்லை சிவா said...

செம சிரிப்பூ..(ஆமா வூட்ல உங்க ரவுச எப்படி தாங்குறாங்க?)

நெல்லை சிவா said...

கார்த்திக் ப்ளீஸ் நாட்டக் கெடுத்தது போதும் தமிழ் மணத்தையுமா..[லஞ்சம் கொடுத்து] ஹி..ஹி..

//[கொஞ்சம் கொறச்சிக்கக் கூடாதா?]//

லொள்..லொள்..லொள்..

அட..நானில்லைங்க அது, ச்சுப்ரமணிதான்

முத்துலெட்சுமி said...

கண்மணி,
தங்கமணி ரங்கமணி ,நாய்க்குட்டிக்கு சுப்ரமணி
நல்ல கூட்டணி தான்.

கண்மணி said...

நன்றி ரவி.நீங்கல்லாம் மெயின் ரோல் [கணிணி பயிற்சி] நமல்லாம் காமெடிதேன்

கண்மணி said...

அதெப்படி சிவா எங்க கு.ச்சுப்பி மாதிரியே[லொள் லொள் ன்னு] பேசுறீங்க.

ஜி - Z said...

ஒரு இனிஷியல்ங்ற பேருல ஒரு நாய இந்தப் பாடு படுத்தியிருக்கீங்க... இருங்க.. உங்கள் மேனகா காந்திக்கிட்டப் புடிச்சுக் கொடுக்குறேன்

கண்மணி said...

முன்னால கொசு இப்பால நாய்யி ஹூம் போய் மேனகா காந்திக்கிட்ட சொல்லும்.
கும்பகோணம் கொசுவையும்,குன்னூர் வெறி நாயையும் விட்டுக் கடிக்கச் சொல்றேன்..ஹி..ஹி

கோபிநாத் said...

அடடா...எப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க :)))

அருமையான நகைச்சுவையுடன் எழுதியிருக்கீங்க

அப்புறம் பொன்ஸ் பதிவில் உங்களை பற்றி பார்த்தேன்...அவுங்க சொல்லியிருப்பவை அனைத்தும் உண்மை...உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு...கலக்குறிங்க..வாழ்த்துக்கள்

கண்மணி said...

நன்றி கோபிநாத்.
செந்தில் பாணியில சொல்லனுமின்னா ''இதுக்குல்லாம் கொஞ்சம் கினி வேணுமிண்ணே''ஹி..ஹி

அருட்பெருங்கோ said...

:-)))

சீக்கிரமே கு. சுப்பிரமணி, பெ. சுப்பிரமணியாக வாழ்த்துக்கள்!!!

கலை said...

&&செம சிரிப்பூ..(ஆமா வூட்ல உங்க ரவுச எப்படி தாங்குறாங்க?)&&

அதையேதான் நானும் கேக்க நினைச்சேன். :)

நானானி said...

சுப்பிரமணிக்கு இன்ஷியல் வச்சாச்சு,போட்டாவும் அனுப்பியாச்சு...சரி..அதில் அவன்
கையெழுத்தும் வாங்கி அனுப்பியிருந்தால்.. நான் பத்திரமாக
வைத்துக்கொள்ளலாம்..அல்லே?

கண்மணி said...

நன்றி அருட்பெருங்கோ..கலை

கண்மணி said...

நானானி கு.சுப்பு இப்ப ரொம்ப பிஸி.ஆட்டோகிராப் போட டைம் இல்லையாம்.வேணும்னா 'சேரன்'கிட்ட வாங்கிக்கச் சொல்றான்.

சேதுக்கரசி said...

இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சேதுக்கரசி said...

நினைவூட்டல்: அன்புடன் கவிதைப் போட்டி - கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி!

சஞ்சய் said...

ஹிஹி.. கண்மணி அக்கா.. இனிஷியல் பத்தி சுப்புவோட ஸாரி கு. ச்சுப்புவோட அம்மாவுக்கு தெரியுமா? அப்புறம் அவர் உங்க மேல மான நஷ்ட வழக்கு போட்டுட போறார்.:P

... சும்மா டமாசுக்கு... எல்லாம் இந்த சிவா மாமாவோட சகவாசத்தால வந்தது.... :P

சஞ்சய் said...

//சேதுக்கரசி said...
நினைவூட்டல்: அன்புடன் கவிதைப் போட்டி - கடைசி நாள் ஏப்ரல் 14 இந்திய நேரப்படி இரவு 12 மணி! //

ஆஹா.. சேதுக்கா.. கண்மணி அக்கா நம்ம கும்பல சேந்தவங்களா? அன்புடன்ல பர்த்த மாதிரி ஞாபகமில்லையே. :(

சஞ்சய் said...

ஹய்யா... இந்த ஜிலேபிய IE-7 புண்ணியத்துல படிசிட்டேன். :) தமிழ்மணத்துல இன்ன்னொரு ரெளண்ட் வர வச்சாச்சி. ஸ்டார்ட் கும்மிஸ் ;P

cheena (சீனா) said...

கண்மணி, ச்சுப்பிரமணிக்கு முதலெஷுத்து வைப்பதில் இப்படி ஒரு சிரமமா ?? நகைச்சுவை அருமை. ரசித்துச் சிரித்தேன். சின்னவன் ஒத்துக்கொண்டானே - அது போதும்.

Anuradha said...

Hello Kanmani... excellent... just got to visit your blog becos of Surveysan. Thanks for Surveysan... Kalakkareenga ponga...

Naai seekrama perusaaga en saamikitta pray pannikkarennu enge veetu vaalu solluthu...

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)