PAGE LOAD TIME

வித்தியாசமாய் ஒரு மகளிர் தினக் கொண்டாட்டம்

மார்ச் 8 வந்திடுச்சி.இன்னைக்கு ஒரு நாளைக்காவது மொத்தமா சுதந்திரமா இருக்கணுமின்னு யோசிச்சி,இத எப்பிடி வித்தியாசமா கொண்டாடலாம்னு மண்டயப் பிச்சிக்கிட்டு [நாலு முடி கையோடயே வந்துடிச்சின்னா பாருங்க] நின்னப்ப ஒரு ஐடியா தோணிச்சி.
நாளைக்கு ஒரு நாள் ரங்கமணி ,புள்ளைங்ககிட்ட இருந்து விடுதலை வேணும். அப்படின்னதும் ஏதோ ரங்கமணி என்னைக் கொடுமை படுத்தறதா மகளிர் சங்க அமைப்புங்க போர்க்கொடி தூக்கிடாதீங்க.உண்மையிலே ரங்கமணி தான் நம்ம ரவுஸு தாங்காம அப்பப்ப கண்ணுல தண்ணி வுடுது [ஆனந்தக் கண்ணீர்தான் அப்பூ]
ரங்கமணி கேட்டாரு,''ஒனக்கு விமன்ஸ் டேக்கு என்னம்மா வேணும்.''
நான் சொன்னேன்''இந்த முறை எனக்கு புடவை,தங்க நகையெல்லாம் வேண்டாம்ப்பா''
நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே ரங்கமணிக்கு கைகால்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சி .ஏதேது இந்த முறை ஆத்தா வைரத்துக்கு மாறிட்டேனோன்னு.
''பொருளா எதுவும் வேண்டாம்ப்பா.நாளைக்கு ஒரு நாளைக்கு நீங்க நானாவும்,நான் நீங்களாவும் இருக்கோனும்''

''ஆத்தா நீ வைரமாக் கேட்டாலும் வாங்கித்தாரேன் இந்த விஷப் பரீட்சை வேணாந்தாயீ.நான் நீம்பே நீ நான்னு சொல்லுவே.உன்ன மாதிரி நான் பொடவை கட்டணுமா''

''ஐய்யே ரொம்பத்தான் ஒமக்கு நெனப்பு நான் ஜீன்ஸ் போட்டாலும் 10 வயசு கொறஞ்ச மாதிரி இருக்கும் .நீரு பொடவ கட்டி வெளியப் போனா பொசுக்குன்னு நாலு பேரு மண்டயப் போட்டுடுவாங்க.வடிவேலு சேல கட்டின மாதிரின்னா இருக்கும் உவ்வே''

''சரி தாயீ நாள ஒரு நா பொழுதுதானே நீ சொல்றா மாதிரி இருந்துட்டுப் போறேன்.என்னன்னு சொல்லு''
மறுநாள் காலை எழுவதிலிருந்து புள்ளைங்கள கெளப்பி அனுப்புவது,சமைப்பது எல்லாம் என் வேலையை ஒட்டு மொத்தமாக லீஸுக்கு விடறேன் என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்கப் போனேன்.

மறுநாள் காலை அலாரம் சத்தம் கேட்டு முழித்தேன்.ரங்கமணியக் காணோம்.எழுந்து வாசலுக்கு வந்து பாத்தா முறுக்க ஒடச்சி ,ஒடச்சி போட்ட மாதிரி வாசல்ல ஒரு கிறுக்கல் .ஓ ஐயா போட்ட கோலமாக்கும்.
உள்ளே வந்தபோது செய்தித்தாளுடன்,கையில் காபியுடன் [லேசான வெட்கத்துடனும்] ரங்கமணி.

சிரிப்பை அடக்கிக் கொண்டு காபியக் குடிச்சிட்டு என்ன டிபன் என்றவரிடன் 'உப்புமா' என்றுவிட்டு நியூசை மேயத்தொடங்கினேன்.

மம்மீ என்னைக் குளிக்க வைங்க என்ற குட்டிப்பிசாசை'டோன்ட் டிஸ்டர்ப் மீ' ன்னுஅப்பாவிடம் துரத்தினேன்.

பாத்ரூமிலிருந்து வந்த பையன் முதுகுப் பக்கம் நனையவே இல்லை.யூனிபார்ம் மாட்டி விட்ட பிறகு பார்த்தா கோமாளி மாதிரி இருந்தான்.சட்டையும்,டவுஸரும் பின் பக்கம் பொரட்டிப் போட்டு விட்டிருந்தார்.ஏதோ பெரியவன் தானாக் கெளம்பிட்டான்.

''டாடி என்னக் கொல்ல்றாரும்ம்மி'' சின்னவன் அலறல் கேட்டு வந்தா,கழுத்துல 'டை' இறுக்கி கட்டியிருக்கு.சரி போய் அடுப்பு வேலையப் பாருங்க .நான் அட்ஜெஸ்ட் பண்றேன்னு 'பெரிய மனது' பண்ணி அவர இதிலிருந்து 'ரிலீஸ்' செஞ்சிவிட்டேன்.

ஸ்கூலுக்கு கிளம்பிவிட்டு லன்ச்க்கு காசு குடுங்கன்னான்.ஏன் அப்பா செஞ்ச உப்புமா என்னாச்சு என்றதும் ''அய் அது உப்புமாவா நான் அப்பா கோந்து செஞ்சிருக்காருன்னு நெனச்சேன்.இன்னிக்கு புராஜெக்ட்டுக்கு நெறய ஸ்டிக்கர் ஓட்ட வேணும் அதான் எடுத்துக் கிட்டேன்'' என்றான்.

ரங்கமணி முகம் பார்க்கப் பாவமாக இருந்தது.அதுக்குள்ள கு.ச்சுப்பிரமணி கத்தியது.அதுக்கு இன்னும் பிரேக்பாஸ்ட் கொடுக்கலியாம்.
''ஏங்க சு.மணிக்கு பாலும்.பிரட்டும் வச்சிட்டு அப்டியே அவன 'கக்கா' வுக்கு கொஞ்சம் வெளியே புடிச்சிட்டுப் போங்க ''என்றேன்.

முறைத்தபடியே போனவரிடம் வேலைக்கார முனியம்மா வந்து.அய்யா சாமி பாத்திரத்த எடுத்துப் போட்டுடு போவியா நான் நாலு வூடு போனமில்ல'' என்றாள்.
தெருவில் தள்ளு வண்டிக் காய்காரன் நாலு தெரு போகனும் சீக்கிரம் வாங்கன்னு குரல் கொடுத்தான்.

காய்கறிக் கூடையை எடுத்தபடியே வெளியே வந்தவர் போன் அடிக்கும் சத்தம் கேட்டு மறுபடி உள்ளே ஓடி வர ,குறுக்க வந்த கு.சுப்பிரமணி காலை மிதிக்க அது 'வள்வள் 'என்றபடியே அவரை முறைத்தது.
போனில் பேசிக் கொண்டிருக்கும்போதே பக்கத்து வீட்டு அம்புஜம் மாமி வந்து,''கொஞ்சம் காபி பொடி தாயேன்டியம்மா''என்றதும்

''ஏம்மா கொஞ்சம் நீதான் போன் எடுக்கக் கூடாதா நாந்தான் வேலையா இருக்கேன் இல்ல''
''ஹூம் நான் பிஸியா பேப்பர் படிச்சிட்டிருக்கேன் .சீக்கிரம் கெளம்புங்க நேரமாகுது.போறவழியில ஒங்கள டிராப் பண்ணிட்டுப் போறேன்.லேட் ஆச்சின்னா நீங்க நடந்தே போயிடுங்க இல்ல ஆட்டோ பிடிங்க ''

மாமி காபி பொடியுடன் ஒன்னும் புரியாமல் மலங்க மலங்க முழித்தபடியே போனார்.இன்னைக்கு எங்க ஏரியாவுல 'ஹாட்' டாபிக் ரங்கமணிதான்னு தெரிஞ்சி போச்சி.

''ஆத்தா சரண்டர் உங்க வேலையெல்லாம் ரொம்ப பெரிசுதான்.என்னையும் கவனிச்சு,புள்ளங்களையும் பாத்துக்கிட்டு,குடும்பத்தையும் கவனிச்சிக்கிட்டு வேலைக்கும் போகும் தாய்க்குலமே வாழ்க. உங்களுக்கு வருஷம் பூராவும் மகளிர் தினமா அறிவிக்கச் சொல்லி வேணும்னாலும் போராடுறோம்.என்ன வுட்டுடு தாயீ.''

''ஹூம் இந்த 3 மணி நேரக்கூத்துக்கே உம்மால தாக்குப் புடிக்க முடியலை மாசம் 30 நாளும் வருசம் 365 நாளும் நாங்க என்ன பாடுபடறோம் தெரிஞ்சுக்கங்க''

என்னடா தங்கமணி இப்படி துள்ளுச்சே மாமியாரு எங்கன்னு கேக்கறீங்களா ஊருக்குப் போயிட்டாங்களே.

[இந்த பதிவு பிடிக்காதவங்களுக்காக ஒரு ஸ்பெஷல் கிளைமேக்ஸ் : மறுநாள் காலை அலாரம் அடித்தது.எழுந்து பார்த்தேன் ரங்கமணி குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.ச்சே எல்லாம் கனவுதானா?என்று 'ஜில்லுனு ஒரு காதல் ஜோதிகா' மாதிரி அலுத்தபடியே வேலையைத் தொடங்கினேன்]

25 மறுமொழிகள்::

ஜி said...

எப்படியக்கோவ் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....

நமக்கெல்லாம் க்ளைமாக்ஸ்தான் எப்போதுமே புடிக்கும்.. இங்கையும்தான் :))))

Anonymous said...

ஹூம் ஹும் இப்படியெல்லாம் கூட ஆசையா ஏதோ கனவுன்னு சொன்னதால விடுறோம் இல்ல அப்துல் கலாம் கிட்டயே சொல்லிடுவோம் [அவுருதானா கனவு காணச் சொன்னது]

கதிர் said...

''//ஐய்யே ரொம்பத்தான் ஒமக்கு நெனப்பு நான் ஜீன்ஸ் போட்டாலும் 10 வயசு கொறஞ்ச மாதிரி இருக்கும் .நீரு பொடவ கட்டி வெளியப் போனா பொசுக்குன்னு நாலு பேரு மண்டயப் போட்டுடுவாங்க//

அய்யஹோ இந்த பெண்ணீயத்தை எதிர்ப்பவர்கள் யாருமே இல்லையா??

இப்படிக்கு
ரங்கமணி ஆதரவாளர்கள் சங்கம்

கதிர் said...

தம்பியின்

மகளிர் தின வாழ்த்துக்கள்.

சந்தோஷமா இருங்க!!

MyFriend said...

உங்க ஒருநாள் "முதல்வர்" கனவு இந்த வருடம் பளிக்குமா கண்மணி??? ;-)

சிறில் அலெக்ஸ் said...

அருமையா எழுதியிருக்கீங்க. நான் இப்ப தனிமையில உக்காந்து சமைக்கும்போதுதான் எல்லாம் தெரியுது. முக்தி பெற்றுவிட்டேன்.

:)))

மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பொரண்டு பொரண்டு சிரிச்சுக்கிட்டிருக்கேன். :)))

-மதி

சீனு said...

//நாலு முடி கையோடயே வந்துடிச்சின்னா பாருங்க//

குத்தலு...எங்களுக்கு முடி இல்லைன்னு சொல்லி காட்டரீங்களா? B-)

துளசி கோபால் said...

//உள்ளே வந்தபோது செய்தித்தாளுடன்,கையில் காபியுடன் [லேசான வெட்கத்துடனும்] ரங்கமணி.//

:-))))))))))))))

கோபிநாத் said...

அக்கா " பெண்கள் தின"வாழ்த்துக்கள்....டைம் இல்ல பிறகு வருகிறேன்..

Unknown said...

எப்படிங்க இப்படியெல்லாம்… சும்மாப் பின்றீங்க…
வருசத்துல எல்லா நாளும் பெண்கள் நாளாகனும்…எல்லா பெண்கள் நாளையும் நீங்க இதே மாதிரி வித்தியாசமாக் கொண்டாடனும்னு வாழ்த்துறேன் :-))))

கலை said...

நல்லா சிரிக்க வைக்கிறீங்க. :)) இன்னைக்கு உங்க பதிவெல்லாம் ஒரு கை (இல்லை இல்லை, ஒரு கண்) பாக்கணும்.

இலவசக்கொத்தனார் said...

:)))

வர வர உங்க பதிவுக்கு வந்து சிரிப்பான் போடறதே வாடிக்கையாப் போச்சு!! :)

நானானி said...

ஒரு நாள் கணவன் - ஆசையெல்லாம்
கனவோடு சரி.ரங்கமணியை அப்படி
விட்டிருந்தால்...மறுநாள் நீங்கள்
வீட்டை சரி பண்ண வேண்டிய உளவாரப்பணியை எண்ணி இந்தமாதிரி
ஆசைகளை விட்டுவிடுங்கள்!!!சரியா?

சென்ஷி said...

//ஜி - Z said...
எப்படியக்கோவ் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க....

நமக்கெல்லாம் க்ளைமாக்ஸ்தான் எப்போதுமே புடிக்கும்.. இங்கையும்தான் :))))//

ரிப்பீட்டே..

தமிழ்மணத்துல கண்மனி கொடி பறக்குது.. :)))

சென்ஷி

வெட்டிப்பயல் said...

//
தமிழ்மணத்துல கண்மனி கொடி பறக்குது.. :)))

சென்ஷி//

ரிப்பீட்டே!!!

வெட்டிப்பயல் said...

//
தமிழ்மணத்துல கண்மனி கொடி பறக்குது.. :)))

சென்ஷி//

ரிப்பீட்டே!!!

கண்மணி/kanmani said...

ஜி,சென்ஷி கிளைமாக்ஸுனா எது 'சரண்டர்தானே'?ஹி..ஹி..நீங்கமட்டுமில்ல ஒட்டுமொத்தமா உங்களுக்கு கடவுளோட ஆசிர்வாதமே அதுதானெ.

கண்மணி/kanmani said...

வெட்டி நன்றி.கொடியெல்லாம் இல்ல.முடிஞ்சவரை குப்பைக் கொட்டுறன்.

கண்மணி/kanmani said...

தம்பி பெண்ணியத்தையா குறை சொல்லுறீர்.இந்தாரும் பிடியும் எங்க தண்டனையை.ஒரு வாரம் முழுக்க 'தமிழ்மணத்துல' நட்சத்திரமாகக் கடவது.

கண்மணி/kanmani said...

மை பிரண்ட் உங்க 'பிரண்டா' இருக்கேன் அதென்ன ஒருநாள் 'முதல்வர்'.என்ன வம்புல இழுத்துவிடாதீங்க தாயீ

கண்மணி/kanmani said...

சி.அலெக்ஸ் ,மதியக்கா ,துளசியக்கா
வருகைக்கு நன்றி

லக்ஷ்மி said...

கலக்கலா எழுதறீங்க. வாழ்த்துக்கள் கண்மணி.

delphine said...

WOW! WOW! superb!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மகளிர் தினம் கொண்டாடுவது பிற்போக்கு தனத்தின் சின்னம். மகளிர் தினம் என்பது நம் சமுதாயத்தில் முன்பு இருந்ததா?

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)