PAGE LOAD TIME

அம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....

தீபாவளி ,பொங்கல் சிறப்புப்போல இது 'மகளிர்தின சிறப்புப் பதிவு'.

இது மகளிர் தினக் கொண்டாட்டத்தின் சிறப்பு 'சிரிப்புப் பதிவு'
என்பதிவுக்கு முதல் வெளிச்சம் காட்டிய நண்பர் நெல்லை சிவாவுக்கு நன்றியும்]மேலும் வெளிச்சம் போட்டுக்காட்டிய தோழி பொன்ஸுக்கு பரிசுமாக இந்தப் பதிவு


நேத்து ரங்கமணி மீன் வாங்க மார்க்கெட்டுக்கு கெளம்பினாரு.

பக்கத்து வீட்டு அம்புஜம் மாமி [மாமி எப்படியிருப்பான்னு யோசிக்கிறவங்க நம்ம கோலங்கள் சீரியல்ல வர்ர ஆதியோட பாட்டி 'பாம்பே ஞானம்' த்தை நினச்சிங்கங்க.நல்ல செவப்பா மூக்கும் முழியுமா குண்டாவும் இருப்பா]

''ரங்கமணீ மார்க்கெட்டுக்காப் போறே நானும் சித்த வரேண்டா''என்றார்.

உடனே நான்,''மாமி அவுரு மீனு வாங்கப் போறாரு நீங்க எப்படி''என்று இழுக்க

''ரங்கம் நீர் வாழக்கா வாங்கப் போறான்[மீனுக்கு மாமி வச்ச பேரு]
நான் நெஜ வாழக்கா வாங்கனும்டி ஊருக்குப் போன மாமா ராத்திரி வர்ராரு மொளகு ரசம் வச்சி வாழக்கா பொடிமாசு பண்ணச் சொன்னாருடி போன்ல''

''சரி சரி மாமிய சித்த அழைச்சிண்டு போங்க ன்னு சொன்னபோது என் நாக்குல சனியிருந்தது போலும் .அப்பறந்தான் வெவகாரமே.

மாமிய ரங்கமணியோட பைக்குல உட்காரச் சொன்னா ஏறமுடியாம காலு எட்டாம தவிக்கிறா.
ரங்கமணி பைக்க தம் கட்டி கொஞ்சம் சாய்த்துப் பிடிச்சிட்டு ஒக்காரச் சொன்னா மாமி ஏறி ஏறி சறுக்கு மரம் வெளையாடறா

''என்ன மாமி பைக்குல சீக்கிரம் ஏறுங்க. நேரமாவுது .முடியல்லனா விட்டுடுங்கோ நானே வாழக்கா வாங்கி வர்ரேன்' என ரங்கமணி சொல்ல
மாமி முடியாது நானும் வருவேன் என்று அடம் பிடித்தாள்.

இதில் எங்க பைக்க பாத்து கமெண்ட் வேறு.

''மாமா வண்டி சின்னதா அடக்கமா நன்னா இருக்கும்.ஏண்டியம்மா உங்காத்து வண்டி இத்தாம் பெரிசா இருக்கு மனுஷி ஏறக்கூட முடியாலயே'' என்றாள்.

மாமா வச்சிருக்கிறது ஒரு அரதப் பழசான TVS 50 .டி.வி.எஸ் கம்பெனிக்காரங்க மொத மொதல்ல உருவாக்கினதாம்.
மாமா அந்த கம்பனியிலிருந்து ரிட்டயர் ஆனபோது அவருக்கே பரிசா கொடுத்துட்டாங்களாம்.

இப்ப எப்படி மாமிய வண்டியில ஒக்கார வைக்கறதுன்னு யோசிச்சப்ப ஒரு ஐடியா.உள்ளே ஓடிப் போய் ஒரு முக்காலி எடுத்து வந்து போட்டு ''இப்ப ஏறுங்க மாமின்னேன்.''

மாமி ஏதோ ரன்னிங் ரேசுல ஓடி ஜெயிச்சி முதல்ல வந்து விக்டரி ஸ்டேண்டுல நிக்கறா மாதிரி ரெண்டு காலையும் வச்சி ஏற மாமியோட 80 கிலோ வெயிட்டு தாங்காம 'முக்காலிக்கு' ஒரு காலு போயி 'ரெண்டுகாலி'ஆச்சி.

இதுக்குள்ள ரங்கமணீ முறைக்க மறுபடியும் உள்ளே போய் ஒரு 'இரும்பு நாற்காலி' [மாமி வெயிட் தாங்கற மாதிரி] எடுத்து வந்து போட்டேன்.

மாமி அழகா லாவகமா ஏறி பின் சீட்டுல ஏதோ பட்டத்து ராஜா பதவி ஏற்புக்கு சிம்மாசனத்துல ஒக்கார்ர மாதிரி உட்கார்ந்தார்.

ஒருவழியா ரங்கமணி மாமியோட கெளம்பிப் போகவும் நான் நிம்மதியா உள்ளே போனேன்.ஆனா போன பத்து நிமிஷத்துல ரங்கமணிகிட்டயிருந்து செல்போன்.

போகும் போது வழியில ஏதோ காம்பவுண்டு சுவத்தில என்.டி.ராமாராவ் நடிச்ச சாமிபட போஸ்டர்[சிவராத்திரிக்கு ராத்திரி 3 மணி ஷோக்கு போட்டதா இருக்கும்] இருக்க மாமி பைக்குல இருந்தபடியே எட்டித் தொட்டு கண்ணுல ஒத்திக் கொள்ள வண்டி நிலைதடுமாறி ஆட ரங்கமணி கஷ்டப் பட்டு பேலன்ஸ் பண்ணிட்டு,
மாமிகிட்ட சொன்னாராம்
''மாமி இப்படியெல்லாம் செய்யாதீங்க கையக் கட்டிக்கிட்டு பேசாம வாங்கோ.''அப்படீன்னு.

கொஞ்ச தூரம் போனதும் வண்டி காத்துல பறக்கற மாதிரி இருந்திச்சாம்.இது ஏதடா சிமெண்ட்
மூட்ட கணக்கா பின்னாடி மாமி இருந்தா இப்ப இவ்வளவு லைட்டாயிருக்கேன்னு திரும்பினா மாமியக் காணோமாம்.

இவரு கைக்கட்டிக்கிட்டு பேசாம வாங்கன்னதாலா மாமி ரெண்டு கையையும் கட்டிக் கிட்டுவர ஒரு ஸ்பீடு பிரேக்கர்ல வண்டியேறும்போது அப்படியே எதையும் புடிக்காம 'புளி மூட்டை' கணக்கா விழுந்திருக்கா.

ரங்கமணி பயந்து போய் தூக்க நல்ல வேளை அடி ஒன்னும் இல்லை.ஆன்னா மறுபடியும் யாரு வண்டியில ஏத்தி ஒக்கார வைப்பதுன்னு புதுப் பிரச்சனை.சரி மாமிய ஒரு ஆட்டோ புடுச்சி அனுப்பலாம்னா முடியவே முடியாதுன்னுட்டாளாம்.

சரின்னு அங்க நின்னுக்கிட்டிருந்த ரெண்டு பசங்களக் கூப்பிட்டு கைபுடிச்சி ஏத்திவிடச் சொன்னா அதுக்கும் 'நோ' சொல்லிட்டாளாம் கண்டவா தொடப்படாதுன்னு.

அப்பறம்தான் எனக்குப் போன் பண்ணாராம்.

நான் உடனே ஒரு ஆட்டோவுல மாமிய ஏத்தி உட்ட நாற்காலியோடு வரவான்னு கேட்டேன்.

ரங்கமணி போன்லயே என்னை எரிச்சி சாம்பலாக்கினார்.''ஏண்டி நீ ஆட்டோவுல வந்து திரும்ப ஆட்டோவுல போகனுமா மாமிதான் பைக்கிலயேதான் வருவேன்னுட்டாளே''

என்றதும் சிறிது யோசனைக்குப் பின் கேட்டேன் அவங்க எந்த எடத்துல இருக்காங்கன்னு.

ரங்கமணி சொன்ன எடத்துல ஒரு பெரியார் சிலை இருக்கும்.அதுக்கு எப்பவாச்சும் மாலை போட அந்த சிலையின் அடிபாகத்தோடு சேர்ந்தா மாதிரி ஒரு இரும்பு ஏணியும் பதிச்சி வச்சிருக்கும்.மாமிய அந்த ஏணிப்படியில ஏறச் சொல்லி வண்டியில உக்காரச் சொல்லுங்கன்னேன்.

மாமி பெரியார் சிலைகிட்ட அழைச்சிட்டு வந்து ஏணியில ஏறச் சொல்லியிருக்கார்.மாமி மூணு படி ஏறுவதும் மறுபடி பயத்துல ரெண்டு படி எறங்கறதுமாவே இருந்திருக்கா.

அந்த நேரம் இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆள் தன் செல்போனை எடுத்து யாருக்கோ பேசியிருக்கான்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு போலிஸ் ஜீப்பும் அதில் நாலு போலிஸும் ஒரு இன்ஸ்பெக்டரோட இறங்கியிருக்காங்க.

''என்ன மேன் என்ன நடக்குது இங்கே பெரியார் சிலைகிட்ட நின்னு என்ன பண்றீங்க. இந்தம்மா யாரு தீவிரவாத கும்பலா நீங்கெல்லம் ''என் அதட்டிய பிறகுதான்ரங்கமணிக்கு புரிந்தது.யாரோ தப்பா சந்தேகப்பட்டு போலிஸுக்கு சொல்லிட்டாங்கன்னு.

ரங்கமணி ஒருவழியாக நிலைமையை விளக்கி போலிஸிடம் உதவி கேட்க,
இன்ஸ்பெக்டர் மிரட்டலுக்குப் பயந்து மாமியும் ரெண்டு கான்ஸ்டபிள் தூக்கிவிட பேசாமல் வண்டியில் உட்கார ஒருவழியாக வீடு வந்து சேர்ந்ந்தார்கள்.

மாமி ரொம்ப அசால்ட்டாக,''உன் ஆம்படையான் என்னடி இப்படி வண்டி ஓட்டறான்.பொம்மணாட்டி ஏறி உட்காரகூட முடியலை.''என்றபடியே வீட்டுக்குப் போனார்.

அன்னைக்கு எங்க வீட்டுல மீனும் இல்லை ,மானும் இல்லை வெறும் ரசம்தான்.அதுகூட வேண்டாம்னுட்டு ரங்கமணி கோபமா சாப்பிடலை.

மறுநாள் காலை பேப்பெர் படித்துக் கொண்டிருந்தவ்ர்,''ஐயோ என்னை,மாமிய எல்லாம் போட்டோ புடிச்சிப் போட்டிருக்கான்''என்று அலற

''நிஜம்மாவாப்பா நல்லா விழுந்திருக்கீறா? மாமி உங்க மூஞ்சிய மறைச்சிட்டாளா?நேத்துப் பார்த்து சாயம் போன சட்டையப் போட்டுன்னு போனிங்களே''என்றபடி வந்தவளிடம்,

''மேல செய்தியைப் பாரு ''என்றார்

மடிசார் மாமியும் பைக்கில் வந்த மர்ம ஆசாமியும் என்று தலைப்புச் செய்தி போட்டிருந்தான்.

44 மறுமொழிகள்::

அனானி said...

லொல்லு தாங்கலயே தாயீ.

கலை said...

:))))

கண்மணி said...

thanks kalai.enakkum smiley poodak kaththukkubbiinggaLaa?

பொன்ஸ் said...

//லொல்லு தாங்கலயே தாயீ//
ரிப்பீட்டே...

இலவசக்கொத்தனார் said...

:)))

ஆனா ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டா உங்க பேச்சு கா!

நானானி said...

நல்ல காமடி! குலுங்கி குலுங்கி சிரிக்கவைத்தது..பாவம்..!ரங்கமணி!!
அப்புரம்..?அந்த டூவிலர் என்னாச்சு?

கோபிநாத் said...

அக்கா வழக்கம் போல சூப்பரு...கலக்கிட்டீங்க
முடியல....சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலி ;))))

\\[மாமி எப்படியிருப்பான்னு யோசிக்கிறவங்க நம்ம கோலங்கள் சீரியல்ல வர்ர ஆதியோட பாட்டி 'பாம்பே ஞானம்' த்தை நினச்சிங்கங்க\\\

இன்னாது அவுங்க மாமியா??? உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல....அவுங்க பாட்டிக்கா பாட்டி

\\ உங்க மூஞ்சிய மறைச்சிட்டாளா?நேத்துப் பார்த்து சாயம் போன சட்டையப் போட்டுன்னு போனிங்களே''\\

;)))))))))) உம்ம குசும்புக்கு அளவே இல்லையா??

Seemachu said...

அன்பு கண்மணி,
நல்லா எழுதியிருக்கீங்க..
நகைச்சுவை நன்றாக வந்திருக்குது..
வாழ்த்துக்கள்..
அன்புடன்,
சீமாச்சு

சென்ஷி said...

:)))))))))

கண்மணி said...

பொன்ஸ்,நானானி நன்றி.
பொன்ஸ் லொல்லு தாங்கலைன்னு வருத்தப் படறதால ரெண்டு நாளைக்கு லீவ் போடலாம்னு இருக்கேன்.

கண்மணி said...

வாங்க கொத்ஸ் நீங்கதான் அந்த 'வால மீனு'பாட்டு பாடுனதா.போட்டோவுல நல்லா செவப்பா இருக்கீரு.
இதுதான் என் பதிவுக்குப் போட்ட முதல் பின்னூட்டம் .அலுத்துக்கிறீங்களே.

கண்மணி said...

நான்+அனானி=நானானி...வாங்க டூவீலர் ஒர்க்ஷாப்புக்குப் போனது இன்னும் வ்ரல.
அம்புஜம் மாமி இப்பல்லாம் பைக்குன்னு பேர் கேட்டா காத தூரம் ஓடுறா..ஹி..ஹி

கண்மணி said...

கோபிநாத் தொடர்ந்து நமக்கு ஆதரவு தரீங்க.நன்றி.உண்மையிலேயே சிரிக்க வச்சிருந்தா [வயித்து வலின்னா] ஒரு மாத்திரை போட்டுக்கங்க.
அடுத்த பதிவு வந்துகிட்டேயிருக்கு.

கண்மணி said...

சென்ஷி நன்றி.ஆனா ஸ்மைலி ஐகானாத்தெரியாம கோடிங் போலத்தானே வருது.பிறகு ஏன் எல்லாரும் யூஸ் பண்றீங்க.

கண்மணி said...

சீமாச்சு வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி.
சிரிப்பு ஒரு வகையான டிரீட்மெண்ட்.
அதனால நான் 'டாக்டர் மாதிரி'..ஹி..ஹி

.:: மை ஃபிரண்ட் ::. said...

unge blog-ku thinamum varum baktai aayidden naan.. :-)

நாகை சிவா said...

பதிவு எல்லாம் உங்க பெயரா இருக்கேனு பாக்க வந்தேன்... சூப்பரா கலக்குறீங்க போங்க....:-))))))))

//நேத்துப் பார்த்து சாயம் போன சட்டையப் போட்டுன்னு போனிங்களே//

ஆஹா என்ன ஒரு கடமை உணர்ச்சி....

நாகை சிவா said...

//போட்டோவுல நல்லா செவப்பா இருக்கீரு.//

சங்கத்தில் சூப்பர் படம் பிடிக்கிற ஆளுங்க நிறையா இருக்காங்க... அதனால அவரு அப்படி இருக்காரு....

//இதுதான் என் பதிவுக்குப் போட்ட முதல் பின்னூட்டம் .அலுத்துக்கிறீங்களே. //

பின்னூட்ட சூறாவளி, பின்னூட்ட சூப்பர் சுனாமி பத்தி இப்படி ஒரு அபாண்ட குற்றச்சாட்டா, இதை நான் மென்மையாக கண்டிக்குறேன்.

அபி அப்பா said...

அருமை அருமை. கண்டிப்பா விடாது கருப்பு கோவிச்சுக்கமாட்டார். நகைச்சுவைக்கு என்றைக்குமே எதிர்ப்பு கிடையாது. சூப்பரான காமடி. கலக்குங்க:-)))))))

அபி அப்பா said...

நான் சின்ன புள்ளயா இருந்த போது போட்ட பின்னூட்டம் இப்போதான் வருது! ஹும்:-)))

கண்மணி said...

my friend.thank you for your visit.
you r a serious writer and iam just a comedian hi..hi..

கண்மணி said...

sorry abiappa i hv been out of station.[in the mean time 'thambi'has been selected as 'star' enna kodumaiyithu]

கண்மணி said...

thanks siva [naagai siva].etho kubbai kottikittu irukken.

ஜி - Z said...

யக்கோவ்... அசத்திப்போட்டீங்க...

கொஞ்சம் லேட்டா மகளிர் தின வாழ்த்துக்கள்....

எப்படி தினமும் உங்களாலையும், அபிஅப்பாவாலையும் காமெடி பண்ண முடியுது???

கண்மணி said...

அருமைத் தம்பி 'ஜி' அதுக்கெல்லாம் கொஞ்சம் 'தில்லு' வேணும்லே.புடிக்காட்டி கல்லும் வந்து விழுமில்ல.இப்பனே பாருங்க நமக்கு யாரோ டபுள் மைனஸ் குத்திட்டாங்க.ஏனுங்க தம்பி நம்மல புடிக்காதவியளும் இருக்காக இல்ல.அப்ப 'தில்லு' வோனுமில்ல.என்ன நாஞ்சொல்றதுங்கோ.

வல்லிசிம்ஹன் said...

கண்மணி, எப்படி இத்தனை சரளமா காமெடி கலக்கல் போடுறீங்க. அப்படீயே விஷூவலைஸ் செய்து கண்ணே சுளுக்கிக்கிச்சு.
:-))))))

கண்மணி said...

ரொம்ப நன்றி வல்லியம்மா.எதோ உங்களமாதிரி பெரியவாவும் விரும்பிப் படிப்பது சந்தோஷம்மா.

வெட்டிப்பயல் said...

அருமையாக இருந்தது... பல இடங்களில் (இல்லை முழு பதிவிலும்) வாய்விட்டு சிரித்தேன்...

வெட்டிப்பயல் said...

இருங்க.. மத்த பதிவுகளையும் படித்து விட்டு வருகிறேன் :-)

ஜி - Z said...

//இப்பனே பாருங்க நமக்கு யாரோ டபுள் மைனஸ் குத்திட்டாங்க.//

அடப்பாவமே!!! இதெல்லாம் எங்குன போய் பண்றது??

[ச்சே.. முன்னாலையே தெரியாமப் போச்சே... ;))))]

கண்மணி said...

வாங்க வெட்டித் தம்பி.இம்புட்டு நாளாச்சா நம்ம பதிவ எட்டிப் பாக்க [அதுசரி நாமதேன் ஒரு குருப்பா சேந்து கும்மியடிக்கவே டைமில்லயே.]

வெட்டிப்பயல் said...

//கண்மணி said...

வாங்க வெட்டித் தம்பி.இம்புட்டு நாளாச்சா நம்ம பதிவ எட்டிப் பாக்க [அதுசரி நாமதேன் ஒரு குருப்பா சேந்து கும்மியடிக்கவே டைமில்லயே.] //

என்னக்கா பண்றது கண்மணினு பேர் பார்த்தவுடனே ஏதோ சீரியஸான பதிவர்னு நினைச்சிட்டேன்...

இனிமே ஒரு பதிவ கூட மிஸ் பண்ண மாட்டேன்... ரொம்ப அருமையா எழுதறீங்க.

கண்மணி said...

முன்னமே தெரியணுமா எனக்கு 'ஜி' மேலதான் லேசா டவுட் ஆவுதுங்கோ

Anonymous said...

நல்லா இருக்கு. இப்பத்தான் படிக்க ஆரம்பிச்சேன்.தொடர வாழ்த்துக்கள்.அப்படியே வயித்து வலிக்கு மாத்திரையும் சப்ளை பண்ணிடுங்க.

viswa said...

அக்கா சூப்பரு...கலக்கிட்டீங்க
முடியல....சிரிச்சு சிரிச்சு வயிறு வலி ;))))

viswa said...

அக்கா சூப்பரு...கலக்கிட்டீங்க
முடியல....சிரிச்சு சிரிச்சு வயிறு வலி ;))))

DesiGirl said...

மகளிர் தின சிரிப்பு பரிசு பெரிய்ய்ய்ய்ய சக்ஸஸ்!
மேலும், மேலும் ரீல் விடவும்.
:)

நெல்லை சிவா said...

பாத்துங்க, 'கிரேசி' மோகனுக்குப் பதிலா, உங்கள புடிச்சுக்கப் போறாங்க..அசத்தறீங்க.

delphine said...

hey! great!

Anonymous said...

வெளியூர் போனா என்ன? ஹாய் கோபியிலேயோ இல்ல tamil.net-லேயோ போய் type பண்ணி copy paste பண்ணிக்கலாம்ல

வெட்டிப்பயல் said...

கொஞ்சம் கண்ணு கூசற மாதிரி இருக்கு.. கலரை கொஞ்சம் குறைங்களேன்...

கண்மணி said...

பிளாக் பேக் ரவுண்ட்க்கு ஒயிட்தான் டிபால்ட் டார்க் புளூவும் டிபால்ட். இப்ப பரவாயில்லயா?

cheena (சீனா) said...

கண்மணி, உண்மையிலேயே நகைச்சுவைன்னா இது தாந் சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாகி, கண்ணுலே தண்ணி வந்துருச்சி. அருமை அருமை. நச்சுனு முடிவுலே முத்திரை பதிச்சிட்டீங்க. மடிசார் மாமியும் மர்ம ஆசாமியும் - கலக்கல்.

இதெ வின்னராகவும் ச்சுப்பிரமணியெ ரன்னராகவும் போட்டிருக்கலாமே. அது சரி - விருப்பங்கள் மாறுபடலாம்.

Anonymous said...

very nice one enjoyed

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)