PAGE LOAD TIME

பிச்சுமணியும் மாறுவேடமும்

சாயந்திரம் ஸ்கூல்ல இருந்து வந்ததிலிருந்து பிச்சுமணி ஒரே யோசனையாய் இருந்தான்.
பிச்சுமணி யாருன்னு கேக்கறீங்களா? மூத்தது பிச்சுமணி,சின்னது கிச்சுமணி.வளர்ப்பு பேருதான் எல்லோருக்கும் தெரியுமே கு.ச்சுப்பிரமணி.
''என்னடா பிச்சு பலமா யோசனை'' ன்னு கேட்டேன்.
''ஒன்னுமில்ல மம்மீ நாளைக்கு என்னை ஸ்கூல்ல யாரும் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது.அதுக்குத்தான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்''
''ஏன்டா ஏதாச்சும் மாறுவேட போட்டியா''
''இல்ல மம்மி"
ஃபிரண்ட்ஸுல்லாம் ஜாலியா ஒரு போட்டி வச்சிருக்காங்களா''
''அப்படின்னா முகத்துக்கு 'க்ருஷ்'மாஸ்க் போடப்போறியா?''
''டோண்ட் பீ யஸ்டுப்பீட் மம்மீ மூஞ்சி மூடிக்கிட்டா எப்படி ஸ்க்கூல் போறது.என் டிரஸ்ஸிங்ல கொஞ்சம் சேஞ்ச் பண்ணீக்கிறன்'' என்றான்.
வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டுவானேன் என்று என்னவோ செய்யென்று நகர்ந்தேன்.
மறுநாள் காலை.குளித்துவிட்டு தலை வாரிவிட பிச்சுமணி பாட்டியத் தேடினான்.
எனக்கு ஒன்னும் புரியல.பாட்டி தலைவாரிவிடக் கூப்பிட்டாலே ரெண்டும் ஓடி ஒளிஞ்சிக்கும்.அரை பாட்டில் எண்ணைய தலையில கவுத்து விட்டு படிய வாரிவிடுவாங்க.
''ஏன் பாட்டி அப்படியே சடைபிண்ணி பூ வச்சி விடேன்'' என்று முறைக்கும்கள்.பாட்டியும் ''உங்க அப்பனுக்கு சின்ன வயசுல அப்படித்தான் கண்ணு ரெட்ட சடை போட்டு ரிப்பன் வச்சி பூ வச்சி அனுப்புவேன்'' என்பார்.
நான் உடனே ரங்கமணிய திரும்பிப் பார்த்து ரெட்டைசடையில் கற்பனை செய்ய,பிள்ளைகள் கைகொட்டி சிரிக்கும் ரங்கமணி அம்மாவை முறைப்பார்.
பாட்டி சந்தோஷமாக எண்ணை பாட்டிலுடன் வந்து தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்.
பாட்டி இன்னும் கொஞ்சம் எண்ணை வைங்கன்னு சொல்லி சொல்லி பிச்சுவின் முடியிலிருந்து எண்ணை சொட்டவே ஆரம்பித்தது.மாறுவேஷத்திற்கு பாட்டி ஏன் தலை வாரிவிடனும்?
சாதாரணமா பிச்சு தலைய படிய வாரி விட்டாலே முன் முடியைக் கலைத்துக் கொண்டு ரஜினி ஸ்டைல் காட்டுவான்.இன்னைக்கு நிறைய எண்ணை வச்சி நேர் வகிடு எடுத்து படிய தலை வாரி அப்படியே மாயாபஜார்2005 ல வர்ர 'ராம்கி' மாதிரி இருந்தான்.
ஹேர் ஸ்டைல் ஒருவழியா முடிஞ்சதும்,பரண்மேல வச்சிருந்த பழைய துணீ மூட்டைய எடுத்தான்.
சனிக்கிழமை அன்யூனிபார்ம் என்பதால் நல்ல டிரஸ்தான் போடுவான்.மூட்டையிலிருந்து சாயம் போன யாருக்காவது கொடுக்கலாம்னு வச்சிருந்த பழைய சட்டை டவுசரை மாட்டிக் கொண்டான்.
எனக்கே அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.கு.சுப்பிரமணி வேறு பயந்து போய் யாரோயென்று குலைத்துக் கொண்டேயிருந்தது.
வாக்கிங் போய் திரும்பிய தாத்தா ''யாருடா தம்பி நீ பிச்சுக்கு பிரண்டா'' என்றபடியே அவன் தலையில் கைவைத்தவர் எண்ணையில் வழுக்கித் தடுமாறினார்.
''மம்மி என்னை அடையாளம் தெரியலைதானே''என்று உறுதிப் படுத்திக்கொண்டான்.
கு.சுப்பி முன்னாடி போய் நின்றதும் அது ஒரேயடியாய் பயந்து போய் ஓடியது.மிகவும் திருப்தியுடன் ஸ்கூலுக்கு கிளம்பினான்.
கொஞ்சநேரம் கழித்து பிச்சுவின் மிஸ் போன் பண்ணி ,'என்ன மேடம் பிச்சுக்கு இன்னைக்கு எண்ணைத் தேச்சு விட்டீங்களா? ஷாம்பு போடாம அனுப்பிப்பிட்டீங்களா''என்றார்.
பிச்சு ஏன் இப்படி செய்கிறான் என்று புரியவில்லை.மதியம் மூணு மணிக்கு மறுபடியும் பிச்சுவின் மிஸ் போன் பண்ணி பிரின்சிபல் வந்து பார்க்கச் சொன்னதாகச் சொன்னார்.
நான் போனபோது பிரின்ஸ்பல் ரூமில் பிச்சுவும்,வாட்ச்மேன் தாத்தாவும் இருந்தனர்.பிச்சு முகத்தில் வழிந்த எண்ணையை கர்சீப்பால் துடைத்து விட்டபடியே இருந்தான்.
''என்ன மிஸஸ்.ரங்கமணி பிச்சு இப்படி செய்யறான்'' என்றார்.
''என்ன சார் நடந்தது''
''நேத்து ஸ்கூல் முடிஞ்சி போகும்போது வாட்ச்மேனை ஏதோ கிண்டல் செஞ்சிருக்கான்.அவர் எங்கிட்ட சொல்றேன்னு சொன்னதும் அவருக்கு தன்னை அடையாளம் தெரியக் கூடாதுன்னு இன்னைக்கு இப்படி ஒரு டிரஸ்ல வந்திருக்கான்.நான் கூப்பிட்டு கண்டிச்சதும் சாரி கேட்டுக் கிட்டான்.போங்க அவனை அழைச்சிட்டுப் போய் கிளீன் பண்ணிவிடுங்க'' என்றார்.
வெளியில் அழைத்து வரும்போது கேட்டேன்,''என்னடா வாட்ச்மேனைக் கிண்டல் செஞ்சே''
''நான் அவர ஒன்னும் சொல்லல மம்மீ ஒரு பாட்டுத்தான் பாடினேன் கோச்சுக்கிட்டார்.''
''என்ன பாட்டு''
''நேத்து நம்ம காய்கறி வண்டிக்காரரோட பையன் பாடினான்.நானும் அதை ஸ்கூல்ல என் பிரண்ட்ஸ்கிட்ட பாடி காமிச்சேன்.அதுக்கு வாட்ச்மேன் தாத்தா பிரின்சிபல்ட்ட சொல்லிட்டாரும்மா''
''என்னடா பாட்டு அது''
''குப்பனுக்கும் சுப்பனுக்கும்
ஒரே பொண்டாட்டி
பல்லில்லாத கிழவனுக்கு
ரெண்டு பொண்டாட்டி''
நெசமாலுமே ரெண்டு பொண்டாட்டி போலும் வாட்ச்மேன் தாத்தாவுக்கு அதான் கோபப்பட்டிருக்கார்.
இதுக்குப் போயி இப்படி பயந்து கூத்தடிச்சிதேன்னு நொந்தபடியே இழுத்துக் கொண்டுபோனேன்.

24 மறுமொழிகள்::

சென்ஷி said...

என்ன கொடும இது சரவணா..?

:((

சென்ஷி

கண்மணி/kanmani said...

சரவணா?யாருங்க சென்ஷி

அபி அப்பா said...

என்ன கொடுமை சரவணன்:-)))

கலக்க போவது யாரு, அட நம்ம சகோதரி கண்மணிதாங்கோ!!

அபி அப்பா said...

சரவணன் = பிரபு பொதுமா? இல்ல தெரிஞ்சுகிட்டே நக்கலா:-)))

கண்மணி/kanmani said...

வேண்டாம் ..வேண்டாம் நான் அழுதுடுவேன்...நெஜமாலுமே எனக்குப் புரியல.என்ன கொடும யிதுன்னு...நான் அபிபாப்பா மாதிரி,அப்பிராணி...என்னைய வச்சி காமெடி பண்ணாதீங்க..அப்புறம் அண்ணிகிட்டயே சொல்லிடுவேன் உம்ம அழும்பயெல்லாம்.

அபி அப்பா said...

//நான் அபிபாப்பா மாதிரி,அப்பிராணி..//

நீங்க காமடி பண்ணுவீங்கன்னு தெறியும். அதுக்குன்னு இந்த அளவுக்கா:-))

அதாவது! சந்திரமுகி படத்துல ஜோ சந்திரமுகியா மாறுவதை ரஜினி பிரபுகிட்ட சொல்லும்போது பிரபு " என்ன கொடுமை சரவணன் இது"ம்பார். இது ஜோக்கில்லை.

இத வச்சு வெட்டிதம்பி ஒரு காமடி ஜோக் போட்டார். அது..

//பிரபு: என்ன கொடுமை சரவணன் இது
ரஜினி: எது ஜோ வை உனக்கு ஜோடியா போட்டதா//

இந்த ஜோக் வலைப்பூவில் சூப்பர் ஹிட் ஆச்சு. அதில இருந்து அது வலைப்பூவின் முக்கிய மொழியாயிடுச்சு. இந்த பதில கேட்டு நீங்களும் மறு மொழி அததான் சொல்லப்போறீங்க-- போதுமா விளக்கம்?;-)))

பொன்ஸ்~~Poorna said...

அடையாளம் தெரியக் கூடாதுன்னு சொன்ன போதே இப்படித் தான் ஏதாச்சும் இருக்கும்னு நினைச்சேன்..

//என்ன கொடும இது சரவணா..?//
சென்ஷிக்கு ஒரு ரிப்பீட்டே...

அபி அப்பா said...

////என்ன கொடும இது சரவணா..?//
சென்ஷிக்கு ஒரு ரிப்பீட்டே... //

பத்தீங்களா கண்மணி! பொன்ஸக்கா கூட...இது வலைப்பூ மொழி:-)))

கண்மணி/kanmani said...

மட சாம்பிரானி [அபிஅப்பா] அண்ணனுக்கு மக்கு சாம்பிரானி தங்கச்சி[கண்மணி] எழுதியது.
எது கொடுமன்னுதான் இன்னும் புரியல. என்னோட பதிவா?பிச்சுமணிக்கு வந்த கஷ்டமா?

சென்ஷி said...

பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..பதிவு..வ்

இதுக்குமேல அழுதுடுவேன் :(

சென்ஷி

அபி அப்பா said...

//மட சாம்பிரானி [அபிஅப்பா] அண்ணனுக்கு மக்கு சாம்பிரானி தங்கச்சி[கண்மணி] எழுதியது.
எது கொடுமன்னுதான் இன்னும் புரியல. என்னோட பதிவா?பிச்சுமணிக்கு வந்த கஷ்டமா?//

வாசனையான தங்கச்சி, வாசனையான அண்ணன் சொல்றது இன்னான்னா சும்மா நின்ன வாட்ச்மேனை இந்த வயசிலேயே காலாய்ச்சி, காமடிவாரிசுவால் பாதிக்கப்பட்ட வாட்ச்மேன் பத்திதான் இந்த "என்ன கொடுமை சரவணன்"--போதுமா?

கோபிநாத் said...

ஆமா....பதிவுக்கு ஏன் லேட்டு??

தாய போல தான் பிள்ளைன்னு பொரியவங்க சும்மாவா சொன்னாங்க ;)))

கோபிநாத் said...

\\எது கொடுமன்னுதான் இன்னும் புரியல. என்னோட பதிவா?பிச்சுமணிக்கு வந்த கஷ்டமா?\\

இன்னும் புரியலியா !!!! என்ன கொடும இது சரவணா?

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\எது கொடுமன்னுதான் இன்னும் புரியல. என்னோட பதிவா?பிச்சுமணிக்கு வந்த கஷ்டமா?\\

இன்னும் புரியலியா !!!! என்ன கொடும இது சரவணா? //

அட இது நல்லாயிருக்கே...
என்ன கொடும இது சரவணா..?:)

சென்ஷி

சென்ஷி said...

////மட சாம்பிரானி [அபிஅப்பா] அண்ணனுக்கு மக்கு சாம்பிரானி தங்கச்சி[கண்மணி] எழுதியது.
எது கொடுமன்னுதான் இன்னும் புரியல. என்னோட பதிவா?பிச்சுமணிக்கு வந்த கஷ்டமா?//

வாசனையான தங்கச்சி, வாசனையான அண்ணன் சொல்றது இன்னான்னா சும்மா நின்ன வாட்ச்மேனை இந்த வயசிலேயே காலாய்ச்சி, காமடிவாரிசுவால் பாதிக்கப்பட்ட வாட்ச்மேன் பத்திதான் இந்த "என்ன கொடுமை சரவணன்"--போதுமா?//

அய்யய்யோ சத்தியமா அப்படி இல்ல.

இவங்க ரெண்டு பேரு கொடும பெருங்கொடுமயா இருக்கும் போலருக்கே சாமி..! :))

சென்ஷி

கண்மணி/kanmani said...

என்ன கொடும இது சரவணா?
இந்த சென்ஷி அடிச்ச கூத்துல பின்னூட்டம் பூரா ஒரே 'கொடுமயா' க்கீதே சாமி.இதக் கேக்க ஆளில்லையா சரவணா?

ஜி said...

கொடும கொடுமன்னு பல்சுவைப் பக்கம் வந்தா அங்க ஒரு சரவணன் கொடுமையா தலைய விரிச்சு ஆடிச்சாம்...

"என்ன கொடும சரவணன்"

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

எல்லா பசங்களுமே சின்ன வயசுல இப்படி ஏதாச்சும் intelligentஆ escape ஆகும் plan போடுவார்கள் :)

கண்மணி/kanmani said...

சரியச் சொன்னீங்க ரவி இதுவும் கற்பனை கலந்த உண்மைதான்.

சென்ஷி said...

//கண்மணி said...
சரியாச் சொன்னீங்க ரவி இதுவும் கற்பனை கலந்த உண்மைதான். //

அட இது உண்மையான கொடுமப்பா :)

சென்ஷி

வல்லிசிம்ஹன் said...

கண்மணி, இப்பதான் படிக்கிறேன்.
நல்ல கலக்கல் காமெடி.
இயல்பான நகைச்சுவைதான் நம்மளை எல்லாம் கட்டிப் போடுது.
ரொம்ப நல்லா இருந்ததுப்பா.

இலவசக்கொத்தனார் said...

கண்மணி, இது படிக்காம விட்டுடேனே. சூப்பர்!!! :))

கண்மணி/kanmani said...

நன்றி வல்லியம்மா.laughter is the best medicine

கண்மணி/kanmani said...

வாங்க கானா உலக நாதன் [கொத்ஸ்] நம்ம பதிவு எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் சூப்பருங்கோ

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)