PAGE LOAD TIME

வியர்டுன்னா என்னாங்கோ..[இலவச இணைப்புடன்]

தம்பி கோபிநாத் இப்டி நம்மள வம்புல மாட்டும்னு நெனைக்கலைங்க.ஒரு வாரமா தமிழ்மணத்துல நம்ம வரமுடியலிங்க.அம்புட்டு பிஸிதேன்.[அப்பாடான்னு சில மக்கா நிம்மதியா இருந்திருப்பாங்க.ஆனா வந்துட்டம்ல.
இந்த கேப்புல எங்க திரும்பினாலும்,யாரப்பாத்தாலும்'வியர்டு'ன்னு சொல்லிக்கிட்டுத் திரியறாங்கப்பா.
நானும் டிக்ஷ்னரியப் பொரட்டுனன்.வித்தியாசமான,விந்தயான,உலகத்திற்கு ஒவ்வாத ன்னு பல அர்த்தம் குடுத்திருந்துச்சி.ஆனா நம்ம மக்கா 'லூஸு' 'கோக்கு மாக்கு','குண்டக்க மண்டக்க'அப்டீன்னு தங்களப் பத்தி எடுத்து விட்டிருக்காங்க.
யாராச்சும் மிகச் சரியா பொருந்தும் வகையில் ஒரே ஒரு [தமிழ்ல] வார்த்தை சொல்லுங்கப்பூ.
சரி நாமளும் ஜோதியில கலந்துடுவமின்னு வந்துட்டனுங்க.ஏன்னா அடுத்த வாரம் மறுபடியும் நான் 10 நாளைக்கு லீவுங்கோ[ஐய் ஜாலி].
எல்லோரும் ஒரு விதத்துல சம்திங் டிபரண்ட் தான்.என்னப் பத்தி ரசிக்கும்படி சொல்ல பெரிசா எதுவுமில்லைன்னாலும் சந்தேகமே இல்லாமல் நான் ஒரு 'வியர்ட்டு'தாங்க.
லேஸி லதா:
யாரு நாந்தான்.இந்தியன் பங்க்சுவாலிட்டிக்கு ஒரு எக்ஸாம்பிள் நாந்தேன்.9 மணிக்கு கெளம்பனும்னா 9.30 ஆக்குவேன்.9.30 க்குன்னா 10 மணிக்கு பறப்பேன்.10 க்கு வாங்கன்னு சொன்னா 10.30க்கு போய் நிப்பேன்.வெக்கமா இருக்கு ஆனா திருத்திக்க முடியல[முயற்சிக்கல].'சுக்குலே' ல வர்ர 'லேஸி லதா' மாதிரி ஒரு சோம்பேறி.[பைட்ஸ்,குர்குரே மாதிரி ஒரு ஸ்நாக் விளம்பரம்]நேரமிருக்குன்னு லேஸியா இருந்துட்டு லெவந்த் அவர்ல லேஸிலதா மாதிரி அரக்கப் பரக்க டென்ஷன்தான்.
எங்க பாட்டி சொல்லுவாங்க 'எட்டு நாளைக்கு எட்டு கோட்டை எல தக்கிறவ சந்தைன்னிக்கு[ஒரே நாள்ள]எட்டு கோட்டை எலை தைப்பாளாம்.புரியுதுங்களா?[ஏழு நாளைக்கு சோம்பேறியா இருந்துட்டு கடைசி நாள் அதிரடிதான்.[வாழ்வா சாவான்னு நம்ம 'கிரிக்கெட் டீம் போல]
ஆனாப் பாருங்க கடைசி நேரத்துல செய்தாலும் 'ஸ்லோ வின் த ரேஸ்' மாதிரி எல்லா 'கிரெடிட்டும்' நமக்கு வரும்போது கூட இருப்பவங்க வயித்தெரிச்சலுக்கு காவிரி தண்ணி மொத்தமும் காணாது.
டவுட் தங்கமணி:
நமக்கு மட்டும் பாருங்க எல்லா விஷயத்திலயும் டவுட்டு வரும்.முக்கியமா வெளிய கெளம்பும் போது கேஸ் நிறுத்தனமா,கதவ ஒழுங்காப் பூட்டுனமா,அயர்ன் பாக்ஸ் அணைச்சமா,லைட்ட ஆப் பண்ணமா இப்டி ஏகப்பட்டது.சமயத்துல மாத்திரையை சாப்பிட்டு விட்டு சாப்பிட்டமா இல்லையான்னு கூட தோனும்.மறுபடியும் சாப்பிடலாம்னா ஓவர் டோஸ் ஆயிடுமோன்னு பயம் ஹி..ஹி.இதுக்கு ஏதோ ஒரு புக்குல படிச்ச ஐடியா கொஞ்சம் கைகொடுக்குது.இந்தமதிரி வேலை செய்யும் போது 1,2,3 [ஒன்,டூ,த்ரீன்னு]கவுண்ட் பண்ணா அது நமக்கு நல்ல பலன் தருமாம்.நல்லாவே எனக்கு ஒர்க் அவுட் ஆகுது.மாத்திரையை நாக்குல வச்சிட்டு கண்ணாடி பாத்தபடியே போட்டிருக்கிற டிரஸ்ஸோட மேட்ச் பாத்தா சாப்பிட்டமா என்ற டவுட்டே வர்ரதில்லை.ஏதாவது செய்ய வேண்டிய வேலையை நினைத்தபடியே கர்ச்சீப்பில் ஒரு [புடவையில்கூட]'நாட் போட்டால் நிச்சயம் அந்த நாட்டை மறுபடி பார்க்கும் போது ஞாபகம் வரும்.இதையெல்லாம் ஒரு 'ஆர்கனைசர்'வச்சிக்காம இப்டி செஞ்சா நான் ஒரு வியர்டுன்னு சொல்லுவீங்க.ஆனா நான் இப்படித்தான் செய்வேன்.[நீங்களும் ட்ரை பண்ணுங்க]
காமெடி ஆச்சி:
என்னமோங்க நமக்கு காமெடிதான் புடிக்கிது.தமிழ்மணத்துல எழுத நெனச்சப்போ என்னுடைய டிராக் காமெடிதான்னு முடிவு செஞ்சேன்.எப்பவும் நம்மள சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்.[பயித்தியங்க பின்னாடி கூட கூட்டம் இருக்கும்].இன்னைக்குப் பொறந்த பாப்பா முதல் குடுகுடு பாட்டி வரை எல்லோருக்கும் நாமதான்ஹிட்கவுண்டர்.கலாய்க்கறதுக்கும்,கடிக்கிறதுக்கும்,காமெடிக்கும் நாமதேன் அதுங்களுக்கு டார்கெட்.
வயது,படிப்பு,பதவின்னு எல்லாத்தையும் தாண்டி சிறுசுங்களோடவும்,பெரிசுங்களோடவும் நையாண்டி பண்ணி வம்புக்கு இழுக்கப் பிடிக்கும்.
அளப்பு அலமு:
மனுசங்கள நைச்சியம் பண்ண [கஜோல் பண்ண] கொஞ்சம் அளந்தாத்தான் வேலைக்காகும்.
காக்கான்னு நெனைச்சிடாதீங்க.நான் சொல்றது எங்க வீட்டுக்குள்ள மட்டும்.பிச்சுமணி,கிச்சுமணி ய டாஜா பண்ணனும்னா செல்லம் நீயி அஜீத் மாதிரி இருக்க விஜய் மாதிரி சிரிக்கிறன்னு சொல்லனும்.இப்ப ஒரு வாரமா சேவாக்குக்குப் பதில் நம்ம பிச்சு விளையாண்டா வேர்ல்ட் கப்பு தான்னு 'கப்ஸா' விடணும்.
ரங்கமணி கிட்ட ஒரு வேலையாகனும்னா 'ஏங்க நேத்து பார்ட்டிக்குப் போனமே நீங்க நல்லா யங்கா ஷாருக் மாதிரி இருந்தீங்க [நெசத்துல ராம ராஜன் மாதிரி இருந்தாலும்]நான் தான் அந்த ஓல்டு பேஷன் காஸ்ட்யூம்ல கொஞ்சம் ஏஜ்டா தெரிஞ்சேன் அப்டீன்னுட்டா அடுத்த வாரம் தி.நகர் தான்.
மாமியார ஹேண்டில் பண்ரது தனி கலை.'மாமி நீங்க இந்த வயசுலயும் இத்தனை சுறுசுறுப்பா அனுசரணையா இருக்கீங்க உங்க புள்ளையப் பாருங்க இந்த சாமான் வாங்கச் சொல்லி நாலு நாளா காதுலயே போட்டுக்கலைன்னு சொல்லிட்டா அவ்வளவுதான் அப்படியே பூரிச்சிப் போயி,மனோகரா கண்ணாம்பா மாதிரி ரங்கமணி முன்னாடி போய் 'பொறுத்தது போதும் பொங்கி எழு ரங்கா மார்க்கெட்டுக்குன்னு' கெளப்பி விட்டுடுவாங்க.நமக்கும் வேலையாகும்.
கோபக் கோமளம்:
நம்ம கிட்ட இருக்கிற ஒரே வீக் பாயிண்ட் முசுக்குன்னு வர்ர கோபம் தான். கோபத்துல 'பட பட'ன்னு கடுகு மாதிரி பொரிஞ்சிடுவம்ல.ஆனா எந்த அளவுக்கு கோபம் வருதோ அதை விட சீக்கிரமா அதை மறந்துட்டு அன்னியோன்யம் ஆயிடுவேன்.வீட்டிலயும் சரி வெளியேயும் சரி.
தமிழ்ல எனக்குப் பிடித்த ஒரே நல்ல வார்த்தை 'மன்னிப்பு'.கோபப் படுவது இயற்கை.ஆனால் அதன் காரணகாரியங்களைப் பகுத்துணர்ந்து அதை மறக்கவும் தெரிஞ்சுக்கணும்.நான் அப்படித்தான்.
இணைப்பு:
[அபி அப்பாவும் வம்புக்கு இழுத்ததால் இந்த இலவச இணைப்பு சேர்க்கப் பட்டுள்ளது]
இவ்ளோ நேரம் சொன்னதெல்லம் நம்மள பத்தி ஒரு ஹைலைட்தான்.உண்மையான கிறுக்குத்தனம் இப்ப சொல்றேன்.
1.கோபம் வரும்னு சொன்னேன் .கோபமா இருக்கும் போது எதாவது பாத்திரமோ,பொருளோ கீழே விழுந்து சத்தம் வந்த இன்னும் டென்ஷனாகி அந்தப் பொருளின் மீது கோபம் திரும்ப அதை நானே நாலு தடவை தூக்கிப் போடுவேன்.
2.மனசுக்கு சந்தோஷமா ஏதாவது விஷயம் நடந்தா சாமிகிட்ட கொஞ்சிப் பேசி தேங்க்ஸ் சொல்லுவேன்.[நேராயில்ல அப்பூ சாமியெல்லாம் தைரியமா நம்மளப் பாக்க வந்துடுமா?].சாமி படத்துக்கு இல்லை சிலைக்கு முன்னாடி நின்னு ரொம்ப சந்தோஷமா நன்றி சொல்லி[பிளையிங் கிஸ் கூட உண்டு].பேசுவேன்.இதே ஏதாச்சும் கஷ்டமான சூழல்னா அதே சாமிகீட்ட கோச்சிக்கிட்டு 'டூ கா' வும் விட்டுட்டு கொஞ்ச நாளைக்குப் பேச மாட்டேன்.
3.யாருகிட்டயாவது ஏதாவது மேட்டர் சொல்லணும்னா அவங்களப் பாக்கறவரை மனசுக்குள்ளேயே பேசிப் பேசி ஒத்திகைபார்த்துப்பேன்.ஆனா நேரா அவங்ககிட்டப் பேசும் போது ஒத்திகையெல்லாம் மறந்து ஓரிரு வார்த்தையில் மேட்டரை முடிச்சுடுவேன்.எதுக்காக இவ்ளோ பேசிப் பார்த்தேன்னு இருக்கும்.ஆனாலும் மறுமுறையும் இதுபோல் செய்வேன்.
4.யாருகிட்ட எதச்சொல்றதுன்னாலும் ஒரு எக்ஸாம்பிளுடன் [உதாரணம்] சொல்ல வந்துடும்.உன் டீச்சர் புத்தி போகலையேன்னு ரங்கமணி திட்டுவார்.

இது எல்லாம் வித்தியாசம்னா நிச்சயம் நானும் ஒரு 'வியர்ட்டு' தானுங்களே.
ஏன் அப்பூ இத மொத்ல்ல ஆரம்பிச்ச புண்ணியவான்/வதி யாருங்கோ.அவிங்க நல்லாயிருக்கட்டும்.இப்டியா மனுசங்கள போட்டு வாங்கறது.
நான் யாரையும் வம்புக்கு இழுக்க விரும்பவில்லை.அதனால் யார் பெயரையும் குறிப்பிட வில்லை.என் பதுவு படிக்கும் [என் ரசிகர்கள் தான் அப்பூ]நண்பர்கள் அனைவருக்கும் ஒரு 'பொது அழைப்பு' விடுக்கிறேன்.
வாங்க அப்பூ உண்மையைச் சொல்ல ஒரே ஒரு சந்தர்ப்பம் சொல்லிடுங்க.

21 மறுமொழிகள்::

ramachandranusha said...

ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது, "நம்ம" பதிவு எல்லாம் வீட்டுல படிக்கிறது இல்லே :-)
(நம்ம- நாம ரெண்டு பேரூம் மட்டும் இல்லே)

கண்மணி said...

சரியாச் சொன்னீங்க உஷா எனக்கும் இந்த டவுட்டு உண்டு[ எத்தனை பேரு தங்கமணி கிட்ட பதிவு படிக்கச் சொல்லுவாங்கன்னு]
அதே கதைதான் தமிழ் மணத்து ரங்கமணிகளுக்கும் சரிதானே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

வியர்ட்டு விஷயம் எல்லாரையும் நல்லா ஆட்டிக்கிட்டு இருக்கு. ;-)

துளசி கோபால் said...

கண்மணி 'டச்' மிஸ்ஸிங்.

இதுவே ஒரு வியர்டுதானே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சமயத்துல மாத்திரையை சாப்பிட்டு விட்டு சாப்பிட்டமா இல்லையான்னு கூட தோனும்//

அது மறதியாச்சே? டவுட் லிஸ்ட்ல சேர்த்துட்டீங்க?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கோபத்துல 'பட பட'ன்னு கடுகு மாதிரி பொரிஞ்சிடுவம்ல.ஆனா எந்த அளவுக்கு கோபம் வருதோ அதை விட சீக்கிரமா அதை மறந்துட்டு அன்னியோன்யம் ஆயிடுவேன்.//

same pinch.. ;-)

கண்மணி said...

மை பிரண்ட் நம்மளும் அப்பப்ப ஜொதியில கலக்கலனா தமிழ்மணத்துல நம்ம மறந்துடுவாங்க.அதேன் வியர்டு மேட்டரும்.

இலவசக்கொத்தனார் said...

//தமிழ்மணத்துல எழுத நெனச்சப்போ என்னுடைய டிராக் காமெடிதான்னு முடிவு செஞ்சேன்.//

அப்போ இது மட்டும் ஏன் இம்புட்டு சீரியஸாப் போச்சு?

அபி அப்பா said...

வியர்டுன்னா என்னாப்க்கவா? நீங்க, நானு அல்லாரும்தேன்:-)

அபி அப்பா said...

எங்க போயாச்சு இத்தினி நாள்? வியர்டுன்னு சொன்னவுடனே சர்ன்னு வந்து குதிச்சாச்சா:-)

கண்மணி said...

ரொம்ப பிஸி அத்தோட உங்களுக்கு போட்டியா வரக்கூடாதுன்னுதான் ஒதுங்கிட்டேன்.ஹி..ஹி..மறுபடியும் 10 நாள் வரமாட்டேனே.
நாம வியர்டுன்னு நாமே சொல்லக்கூடாது.

கோபிநாத் said...

கண்மணி அக்கா ரொம்ப நன்றிக்கா ;-)))

சும்மா பிச்சிட்டுக்கா...
கலக்கிட்க்கா..
தூள் கிளப்பிட்டக்கா...

கோபிநாத் said...

\\வயது,படிப்பு,பதவின்னு எல்லாத்தையும் தாண்டி சிறுசுங்களோடவும்,பெரிசுங்களோடவும் நையாண்டி பண்ணி வம்புக்கு இழுக்கப் பிடிக்கும்.\\

உங்ககிட்ட கொஞ்சம் உசாரா தான் இருக்கனும் போல ;-))

\\கோபக் கோமளம்:\\

இது நமக்கும் இருக்குக்கா ;-))

கோபிநாத் said...

\\ அதை நானே நாலு தடவை தூக்கிப் போடுவேன்.\\

அய்யோ....இந்த பொருளுக்கே இந்த நிலைமைன்னா ரங்கமணி சாரு நிலைமையை நெனைச்சுக்கூட பார்க்க முடியலப்பா ;-((

கோபிநாத் said...

\\உன் டீச்சர் புத்தி போகலையேன்னு ரங்கமணி திட்டுவார்.\\

யக்கா.....வாத்தியார் அம்மாவா நீங்க ;-)) உங்க்கிட்ட படிக்கற புள்ளைங்க ரொம்பபபபபபபபபபபபப கொடுத்து வச்சப் புள்ளைங்க....... எப்ப பார்த்தாலும் சிரிச்சிக்கினே இருப்பாணுங்க ;-)))))

கோபிநாத் said...

\\கண்மணி said...
ரொம்ப பிஸி அத்தோட உங்களுக்கு போட்டியா வரக்கூடாதுன்னுதான் ஒதுங்கிட்டேன்.ஹி..ஹி..மறுபடியும் 10 நாள் வரமாட்டேனே.
நாம வியர்டுன்னு நாமே சொல்லக்கூடாது.\\

இன்னும் 10 நாளைக்கு அபி அப்பா ஒன்டே மேச்சு தானா??
சீக்கிரம் வாக்கா ;-((

கண்மணி said...

கோபி தம்பி 10 நாளைக்கு ஒன் மேன் ஷோ பாருங்க.ஒன் மேனா இருந்தாலும் அண்ணன் அடிச்சி தூள் கெளப்பிடுவாருல்ல.

சென்ஷி said...

//கண்மணி said...
சரியாச் சொன்னீங்க உஷா எனக்கும் இந்த டவுட்டு உண்டு[ எத்தனை பேரு தங்கமணி கிட்ட பதிவு படிக்கச் சொல்லுவாங்கன்னு]
அதே கதைதான் தமிழ் மணத்து ரங்கமணிகளுக்கும் சரிதானே?//


நான் இதுக்கு உஷாக்கா பதிவுல சேம் ப்ளட்ன்னு (same blood) போட்டுட்டேன் :))

சென்ஷி

சென்ஷி said...

//காமெடி ஆச்சி:
என்னமோங்க நமக்கு காமெடிதான் புடிக்கிது.தமிழ்மணத்துல எழுத நெனச்சப்போ என்னுடைய டிராக் காமெடிதான்னு முடிவு செஞ்சேன்.எப்பவும் நம்மள சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்.//

எனக்கென்னமோ இதுதான் செம காமெடியா தோணுது :))

சென்ஷி

கண்மணி said...

சென்ஷி நம்மள சுத்தி கூட்டம் இருக்குன்னு சொல்லல்ல [நாம் இன்னா அவ்ளோ பெரீய ஆளா]இருக்கனும்னு ஆசைப்படுகிறேன் ஹி..ஹி

delphine said...

Man!you made me to laugh..

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)