PAGE LOAD TIME

கண்மணி அருள் வாக்கு அம்மணி ஆனது எப்படி?

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைன்னு சொல்லுவாங்க.காக்கையோட குச்சியான காலுக்கும்,பழத்தோட வெயிட்டுக்கும் பொருந்துமா தெரியாது ஆனா பாருங்க நமக்கு நல்லாவே பொருந்துது.
நம்ம கொஞ்சம் நல்ல மனசுக்காரங்களாச்சா,அதனால எதையுமே பாசிட்டிவா நடக்கட்டும்னு சொல்லிடுவேன்.
அப்படித்தான் நம்ம அம்புஜம் மாமி பேத்திக்கு வரன் தகையாம இருந்தது.மாமி ரொம்ப வருத்தப்பட்டா.நான் சொன்னேன் 'மாமி கூடிய சீக்கிரமே அவளுக்கு வரன் அமையும் பாருங்கோ மாப்பிள்ளை அமெரிக்காவிலேர்ந்து வரப்போறான்னேன்.காசா பணமா நாலு வார்த்தை மாமிக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு எதையோ சொல்லி வச்சேன்.மூணாம் மாசமே மாமி யோட தூரத்து சொந்தக்காரர் யு.எஸ் ல இருந்த தம் புள்ளைக்கு மாமியோட பேத்திய கட்டினுட்டார்.
மாமி என்னைக் கொண்டாடாத குறைதான்.'தங்கமணி உன் நாக்குல நல்ல வாக்கு சுத்தம் டி'ன்னு சிலாகித்தார்.பின்னாளில் மாமி பேத்திய தனியாக் கூப்பிட்டு விசாரிச்சப்ப அவ சொன்னா அந்த பையனுக்கூம் அவளுக்கும் 6 மாசமா 'சாட்' மூலம் பழக்கமாம்.விசாரித்ததில் மாமி உறவுன்னு தெரிந்ததும் ஓகே சொல்லிட்டாங்களாம்.
இப்படித்தான் போன வருஷம் ரங்கமணியோட நண்பர் தன் பையன் ஒழுங்காப் படிக்கிறதில்ல பாஸ் ஆவாதே சந்தேகம்னு வருத்தப் பட்டார்.நானும் என் நல்ல மனசோட 'நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க அவன் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணுவான் பாருங்க ன்னு சொல்லவும் அவர்,'ஏம்மா கிண்டல் பண்றதுக்கும் ஒரு அளவில்லையான்னு ன்னுட்டு' போனவர் ரிசல்ட் வந்ததும் நிறைய ஸ்வீட்டும் ,சிரிப்புமாக வந்து,'தாயீ உன் வாக்குல சரஸ்வதிதான் குடியிருக்கா எம் பையன் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸாயிட்டான் 'என்றார்.
அடுத்து நம்ம டிடெக்டிவ் வேலைய ஆரம்பிச்சி அவனை மடக்கியபோது, கமல் தான் தனக்கு ஹெல்ப் பண்ணதாச் சொன்னான்.
'யாருடா உனக்கு முன்னாடி எக்ஸாம் எழுதுனவனா'
'இல்லை ஆன்டி வசூல் ராஜா கமல்.அவர மாதிரியே புளூடூத் போன் வாங்கி காதுல ஹெட் செட் வச்சிக்கிட்டு வெளியில இருந்த என் பிரண்ட் ஆன்சர் சொல்ல சூப்பரா எழுதினேன்'ஆனா என்ன ஒன்னு போனுக்கு,பிரண்டுக்கு எல்லாம் ஒரு 20,000 வரை செலவாயிடுச்சி' என்றானே பார்க்கணும்.
எது எப்படியோ நம்மள மக்கள் அருள் வாக்கு சொல்லும் அம்மணி ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்க.
இப்படித்தான் போன மாசம் வேலைக்காரி முனியம்மா ஒரு தட்டுல வெத்திலை,பாக்கு,பழம்னுட்டு என் முன்னாடி வச்சி,'தாயீ,ஆத்தா நாலு நாளைக்கு முன்னால 100 ரூபா பணம் காணாமப் போய்ட்டுது எங்கிருக்குன்னு கண்டுபிடிச்சி சொல்லு தாயீ'ங்கறாள்.வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு போய் உன் புருஷனக் கேளு என்று விரட்டினேன்.
மறுநாள் வேலைக்கு வந்தவ ஓடி வந்து கால்ல விழுந்து 'ஆத்தா நீ சொன்ன மாதிரியே எம் புருஷந்தேன் எடுத்துப் போயி குடிச்சிருக்கு 'என்றாள்.முனியம்மா புருஷன் குடிகாரன் என்பதால் நான் சொன்னது அருள் வாக்காகி விட்டது.
அப்படி இப்படி பலதும் நடக்கவும் நெசமாவே எனக்கு எதோ பவர் இருக்குன்னு ரங்கமணியும் புள்ளைங்களும் முடிவே செய்து விட்டனர்.
ரங்கமணி அம்மாக்கு E.S.P [extra sensory power]இருக்குன்னு சொல்ல சின்னது வந்து என் தலையை ஆராந்துவிட்டு ஆண்டெனா எங்கப்பா என்றது.தலையில ஈ.டி மாதிரி ஆண்டெனா இருக்கும்னு நெனச்சிட்டுது.
மாமியாரோ குல தெய்வம் 'பேச்சியம்மன்'தான் மருமக ரூபத்துல வாக்கு சொல்லுதுன்னு வெள்ளிக்கிழமையானா என்னை மஞ்ச புடவதான் கட்டணும்னு உத்தரவு இல்லயில்ல வேண்டிக் கொண்டாங்க.
முந்தா நாள் சின்னவன் கையில் ஒரு வெத்தலையோடு வந்து 'மம்மீ என் புது இரேசர் காணம் கண்டுபுடிச்சி சொல்லு 'என்றான்.
அதுக்கு வெத்தலை ஏண்டா என்றால்'மை டியர் பூதத்துல வர்ர மந்திரவாதி மாதிரி மை தடவி கண்டு புடிங்கிறது.சின்னவன் பொருளை பெரியவன் தானே எடுப்பான்னு போய் பிச்சுவோட பையில பாருன்னேன்.இரேசர் கிடைத்ததும்
ஐய் மம்மி மை தடவாமலேயே கண்டு புடிச்சிட்டாங்க என்று குதித்தது.நேத்திக்கு பிச்சுமணீயோட கு.சுப்புவும் வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
[கு.சுப்பிரமணி யாருன்னு தெரியாதவங்க சுப்பிரமணிக்கு என்ன இனிஷியல் பதிவு பார்க்கவும்]
என்னப்பா என்றாதும் பிச்சு தயங்கியபடியே 'மம்மீ சுப்பிரமணிக்கு வச்ச பிஸ்கட்டைக் காணோம் தேடிக்குடு' என்றதும் கு.சுப்புவும் வாலை வாலை ஆட்டியபடி என்னிடம் 'கண்டுபிடி' என்றது.
கோபப்படுவதா சிரிப்பதா என்று தெரியாமல் பக்கத்து வீட்டுப் பூனை தின்னிருக்கும் போய்ப்பாரு என்றேன்.உண்மையிலேயே பக்கத்து வீட்டுப் பூனைதான் சாப்பிட்டிருக்கிறது.

[இந்த சுப்பு முளைச்சி மூணு பல்லு கூட விடவில்லை அதுக்குள்ள பக்கத்து வீட்டு ரோஸியைப் பார்த்து ஜொள்ளு.அதான் பிஸ்கட்டை பூனை தின்னுடிச்சி.]

இது எங்கு போய் முடியும் ஏன் இப்படி நடக்கிறது என்று குழம்பிப்போனேன்.
நாம் எது சொன்னாலும் வானத்திலிருந்து தேவர்கள் 'ததாஸ்து'ன்னு ஆசிர்வதிப்பார்கள்.அதனால் எப்போதும் நல்லதையே சொல்ல வேண்டும் என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது.அதற்காக தேவர்கள் ஒரேயடியாய் எங்க வீட்டுப் பக்கத்திலேயே 'டேரா' போட்டு நான் சொல்றதெல்லாம் பலிக்கச் செய்கிறார்களோ என்று இரவு மொட்டை மாடிக்குப் போய் மேல ஏதாச்சும் 'டெண்ட்' போட்டிருக்கான்னு பார்த்தேன்[நான் வியர்டுன்னு ஏற்கனவே கன்பெஸ் பண்ணிட்டேன் ஆமாம்]
இருந்தாலும் இதிலிருந்து தப்பிக்கணும்னா ஏதாச்சும் தப்பா சொல்லி பொய்யாக்கனும்னு முடிவோட இருந்தப்ப எங்க காய்கறி வண்டிக்காரர் சொன்னார்,'அம்மா அல்லாருக்கும் நல்ல குறி [குறி சொல்றனாம்!!]சொல்றயே எம் பொண்ணு எப்ப கல்யாணம் ஆயி 'மாமியார்வீட்டுக்குப் போகும்னு சொல்லும்மா.பையந்தான் உருப்படாமா சுத்திக்கிட்டிருக்கான்'என்றபடியே வெற்றிலையை எடுக்க
நான் ஏகக் கடுப்பாகி ,'உங்க பையந்தான் கூடிய சீக்கிரம் மாமியார் வூடு போவான்' என்றேன்.
பிக்பாக்கெட் வழக்கில் மாட்டி நெசம்மாவே அவர் பையன் 'மாமியார் வூடு'[ஜெயில்] போனதும் அவர் எங்கால்ல விழுந்ததும் தனிக்கதை.
யாருக்காவது 'அருள் வாக்கு சொல்லனுங்களா?'ஏன் மக்கா இப்படி ஓடுறாங்க?

44 மறுமொழிகள்::

தம்பி said...

ய்யக்கா அரியானா லாட்டரி வாங்க்யிருக்கேன். பதினஞ்சி லட்சம் எனக்கு விழுமான்னு பாத்து சொல்லுக்கா!

தம்பி said...

யாஹூ சாட் ரூம்
ஆர்குட்
ஷாதி ன்னு எந்நேரமும் பொண்ணுங்க புரொபைல் பாக்கறதுலயே 18 மணி நேரம் செலவிடறான். ஆனா இவன் ப்ரொபைல யாருமே சீண்டறதுல்ல அது வேற விஷயம்.

எல்லாத்துலயும் என் ப்ரெண்ட் தினமும் தவறாம வலம் வர்றான் ஆன ஒண்ணுமே செட் ஆக மாட்டேங்குது. நல்லதா நாலு அருள் வார்த்தை சொல்லுங்கக்கா. அவன் பேரு கூட அருளுதான்.

தம்பி said...

உங்கள மாதிரி ஒரு ஆளத்தான் தேடிகிட்டு இருந்தேன்.

உலக கோப்பைய யாரு வாங்குவாங்க???

பாத்து சொல்லுங்க, பந்தயம் கட்டணும்.

தம்பி said...

ரொம்ப நாளுக்கப்புறம் நல்ல காமெடி பதிவு போட்டுருக்கிங்க!

கண்மணி said...

வாங்க தம்பி நட்சத்திரமாயிட்டீங்கன்னு பயந்துதேன் ஒதுங்கி இருந்தேன்.
என்ன கேட்டிங்க ஒலக கோப்பையா?கச்சிராபாளையம் சந்தையில இல்லாங்காட்டி மடப்பட்டு சந்தையில கெடக்கிமான்னு வெத்தலையில மை போட்டு சொல்லுதேன் வெயிட்டு பண்ணும்.

கண்மணி said...

நீங்க சொன்ன அருளுக்கு நிக்காஹ் ஆனதா வெத்தல சொல்லுதே.ஒருக்கா அடுத்ததுக்கா?

கண்மணி said...

நீரு நம்ம பதிவுக்கு வந்தே நாளாச்சு. மத்த பதிவெல்லாம் கெட்ட பதிவா?இருங்கோ அம்புஜம் மாமிகிட்டயே சொல்றேன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

சூப்பர்..
கலக்கல்..
என்னன்னு சொல்றது? பின்னிட்டீங்க.. போச்ட்லயும்.. வேத வாக்குலேயும்.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

உங்களை மாதிரி எங்களுக்கெல்லாம் எப்போதும் தேவை.. உங்கா காண்டெக் (contact) நம்பர் கொஞ்சம் கொடுத்துட்டு போங்க.. ரொம்ப யூஸ் ஆகும் போல இருக்கு!!

நிறைய சாதிக்கணும்.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

தருவீங்கள்ளே?

இப்பவே லிஸ்ட்டு ரெடி பண்ண ஆரம்பிச்சுடறேன். ;-)

Radha Sriram said...

கண்மணி கொஞ்சம் ஜாகிரதையா இருங்க ghost சினிமால வர whoopi Goldberg மாதிரி திடீர்னு கண்ணூக்கு தெரியாம குரல் மட்டும் கேக்க போவுது!! :):)

கோபிநாத் said...

தம்பி.....இந்த மாதிரி விஷயத்திற்கு எல்லாம் முன்னாடி வந்துடுவியே......யாருக்கிட்டையும் சொல்லாம ;-)))

கோபிநாத் said...

எல....எல்லோரும் வரிசையில தான் வரனும் என்ன புரியுதா....

யக்கா ஒருத்தனுக்கு அரியான லாட்டரி வாங்குறதுக்கு காசு கொடுத்தேன் அந்த காசு திரும்ப வருமான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுக்கா!;-)))

கோபிநாத் said...

யாரு அது தலையில முக்காடு போத்திக்கிணு......அட அபி அப்பா ;-)))

அபி அப்பா said...

தம்பிக்கு இவ்ளவு பிரச்சனை இருக்கா? சொல்லவேயில்லயே?

கண்மணி! செம காமடி! ஆஃபீஸ்ல உக்காந்து தானா சிரிச்சா பாக்கிறவன் என்ன நினைப்பான். உங்க அருள் வாக்கு எப்பவும் பலிக்கனும்ன்னு மனபூர்வமா வேண்டிகிறேன்!!

அபி அப்பா said...

தம்பிக்கு இவ்ளவு பிரச்சனை இருக்கா? சொல்லவேயில்லயே?

கண்மணி! செம காமடி! ஆஃபீஸ்ல உக்காந்து தானா சிரிச்சா பாக்கிறவன் என்ன நினைப்பான். உங்க அருள் வாக்கு எப்பவும் பலிக்கனும்ன்னு மனபூர்வமா வேண்டிகிறேன்!!

கண்மணி said...

மை பிரண்ட் உங்களுக்கு இல்லாததா?என்ன வேணும் எடுங்க லிஸ்ட்ட
அட யாருப்பா ஆம்பளைங்கெல்லாம் ஒரு ஓரமாப் போய் ஒக்காருங்க.லேடிஸ் பர்ஸ்ட்.

கண்மணி said...

தம்பி கோபி நீயி வெவரமான ஆளுன்னு நெனச்சேன் இப்படி 'தம்பி'கிட்ட ஏமாந்திட்டியேப்பூ.சரி சரி 'தம்பிக்கு' ' அரியானா' மேட்டருல்ல ஆப்பு வச்சிடுவோம்ணேன்.

கண்மணி said...

அபி அப்பா என் அருள் வாக்கு பலிச்சி உங்க 'ஆசை' நல்லபடியா யெல்லாம் நிறைவேறட்டும்

கண்மணி said...

வாங்க ராதா வருகைக்கு நன்றி.

கண்மணி said...

ஆங் மறந்துட்டேன்.'தம்பி' என்ன கேட்டிங்க அரியானா 15 லட்சமா ஓகே அந்த ஏஜண்ட் கிட்ட பேசிட்டேன்
உமக்கு 60% ஏஜண்ட்க்கு 25% எனக்கு 15% ஓகேவா?[கோபி காதுல விழாம பாத்துக்கங்க]

அபி அப்பா said...

//உமக்கு 60% ஏஜண்ட்க்கு 25% எனக்கு 15% ஓகேவா?[கோபி காதுல விழாம பாத்துக்கங்க] //

கோபிதம்பி! ஒடியா ஒடியா, இங்க சதி நடக்கல..ரெக்க கட்டி பறக்குது:-))

அபி அப்பா said...

//அபி அப்பா என் அருள் வாக்கு பலிச்சி உங்க 'ஆசை' நல்லபடியா யெல்லாம் நிறைவேறட்டும் //

thx :-))

இம்சை அரசி said...

ஐயய்யோ
அது வலைச்சரம்ல போட வேண்டியது. மன்னிச்சுக்கோங்க அக்கா.

நீங்க ரொம்ப அருமையா எழுதறீங்க. விழுந்து விழுந்து சிரித்தேன்.

கண்மணி said...

அபி அப்பா நீங்க என்னதான் கூட்டு சேர்ந்தாலும் கோபி அக்காவ விட்டுக் கொடுக்காது.

கண்மணி said...

வருகைக்கு நன்றி இம்சை.அப்படியே ரசிக்கறதோட பின்னூட்டமும் போடுங்க.ஓரேயடியா அபி அப்பா ஆட்டம் தாங்கல கண்ணு.

இராம் said...

யக்கோவ்,

உங்க டெம்பிளேட்'ஐ கொஞ்சம் மாத்துங்களேன், Font Aligement தப்பா இருக்கிறதினாலே சரியா படிக்க முடியலை :(

கண்மணி said...

ராமுத் தம்பி அல்லோருக்கும் நல்லாத் தெரியுது.ஒனக்கு மட்டும் இன்னாப்பா?தீ நரியா நீயி?எனக்கும் தீ நரியில்ல ஒடைஞ்சி ஒடஞ்சி தெரியுது.ரொம்ப ஆசையா டெம்ப்ளேட் மாத்துனேன்.தம்பி ராம் இ.எக்ஸ் புளோரர்ல படி ராசா

கோபிநாத் said...

\\கண்மணி said...
அபி அப்பா நீங்க என்னதான் கூட்டு சேர்ந்தாலும் கோபி அக்காவ விட்டுக் கொடுக்காது.\\

இப்படி சொல்லி சொல்லியே தலையை மொட்டை
அடிச்சுடுக்கா ;-)))

கண்மணி said...

கோபி இப்படியெல்லாம் கோச்சுக்கப் படாது நீயே பின்னூட்டம் போடலன்னா வேற யாரு போடுவா...ஹூம்..அழுதுடுவேன்.

சென்ஷி said...

//கண்மணி said...
கோபி இப்படியெல்லாம் கோச்சுக்கப் படாது நீயே பின்னூட்டம் போடலன்னா வேற யாரு போடுவா...ஹூம்..அழுதுடுவேன்//

தோ ஆட்டைக்கு நானும் வந்துட்டேன்.

இந்த பதிவுக்கு எத்தனை பின்னூட்டம் விழும்ன்னு சொல்லுங்க பாப்போம்.. :)

சென்ஷி

அபி அப்பா said...

//தோ ஆட்டைக்கு நானும் வந்துட்டேன்.

இந்த பதிவுக்கு எத்தனை பின்னூட்டம் விழும்ன்னு சொல்லுங்க பாப்போம்.. :)

சென்ஷி //

சென்ஷி! நா சொல்லட்டுமா 111 :-))

அபி அப்பா said...

சென்ஷி! கொஞ்சம் ஒத்தாசைக்கு வந்தா 200 அடிக்கலாம். புலி கூட இன்னிக்கு கானும் :-))

கண்மணி said...

சென்ஷி அக்காவுக்கு எழுதறது கடமைன்னா,அதப் படிக்கிறது உம்ம தலைவிதி.இதுல நானு பின்னூட்டம் பத்தி கவலப் பட முடியுமா?அபி அப்பாவா நானு 100 அடிக்க?

சென்ஷி said...

// கண்மணி said...
சென்ஷி அக்காவுக்கு எழுதறது கடமைன்னா,அதப் படிக்கிறது உம்ம தலைவிதி.இதுல நானு பின்னூட்டம் பத்தி கவலப் பட முடியுமா?அபி அப்பாவா நானு 100 அடிக்க?//

அவ்வளவுதானா.. இதோ ஆரம்பிச்சாச்சு

111க்கு என்னோட 3வது பின்னூட்டம்

சென்ஷி

Anonymous said...

சாய்பாபாவ பாப்பீங்களா?

அநாநி

சென்ஷி said...

இந்த வெர்ல்டு கப் யாருக்கு?

மை தடவுன வெத்தலய பாத்து சொல்லு ஆத்தா...

சென்ஷி

hai said...

ஆத்தா நம்ம கேப்டன்தானே அடுத்த சி.எம்?

சென்ஷி said...

ஆத்தா....

வரம் வாங்க எந்த தேதி வரணும்..
எத்தனை எலுமிச்சம் பழம் வாங்கணும்..
எந்த பூ சேக்கணும்..

தட்சணை பணம் என்ன பண்றது?

இது எதுவுமே இன்னும் சொல்லலியே ஆத்தா..

டெல்லியில ஒரு ப்ராஞ்ச் திறந்துடட்டுமா..?

வர்ற வசூல பாத்துட்டு அப்புறம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லைன்னு விகடன்ல விளம்பரம் கொடுத்துடக்கூடாது. :)


:))

அருள் தரும் கண்மணி ஆத்தா பேரவை
டெல்லியின் பக்த கேடி (ஸாரி) பக்த கோடி..

சென்ஷி

Anonymous said...

உங்களோட முதல் சில பதிவுகள் நல்லா இருந்துச்சு..இப்ப ரொம்ப சிரிக்க வைக்கணும்னு நினைச்சு எழுதுறீங்களோ என்னவோ.சிரிப்பே வரல..

காட்டாறு said...

ஆத்தா.... மகமாயீன்னு...... அப்படியே கீழ விழுந்து எழுந்து பாத்தா..... என் மானேஜர் புள்ளக்கு என்ன ஆச்சோன்னு லுக்கு விட்டுட்டு நிக்குது.... நம்ம ஜனகராசு ஸ்டைலுல...... படக்குன்னு எழுந்து.... கைல ஏற்கனவே வச்சிருந்த பென்சில காமிச்சி...... பென்சில் கீழ விழுந்துருச்சின்னு சொல்லி சாமாளிச்சேன். இப்பிடி காலங்காத்தால பொய் சொல்ல வச்சிட்டியே ஆத்தா..... நா சொர்க்கம் போவேனான்னு குறி சொல்லம்மா.

கண்மணி said...

அனானி இதுவரை என் பதிவுகளில் ஒரு மெல்லிய நூலிழை போன்ற உண்மை அனுபவக் கலப்பு இருக்கும்.அந்த உண்மை நூல் கொண்டுதான் கற்பனை பூக்கள் தொடுத்து நகைச்சுவை மாலை செய்தேன்.எல்லாமும் எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்பது நியதியில்லையே.சரியா.

கண்மணி said...

மகளே காட்டாறு இப்படியே நிதம் நாலு பதிவு போட்டு காட்டாத்து வெள்ளத்துல எங்கள அடிச்சிட்டுப் போனியானா உனக்கு நரகம்தான்

கண்மணி said...

hi

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)