PAGE LOAD TIME

பெண்ணே உன் அழகு.....

உன் செந்தூரச் சிவப்பிற்கு முன்னே

வானவில்லின் நிறங்கள் கூட பின்னே

உன் பட்டு இதழ்களின் மென்மை-என் விரல்கள்

தொட்டிட அஞ்சிடும் உண்மை

குவிந்து முறைத்தாலும் கொள்ளை அழகு-நீ

மலர்ந்து சிரித்தாலும் கோடி அழகு

உன்னை யாரிடமிருந்து காத்துக் கொள்ள-இந்த

**காவலர்கள் ***பெண்ணே

என்னங்க மக்கா ஏதோ அழகிப் போட்டியில ஜெயிச்ச ஐஸ்வர்யா ராயையோ,பிரியங்கா சோப்ராவையோ வச்சி இந்த கவுஜன்னு நெனச்சா அது உங்க தப்புங்கோ
விடுபட்ட இடத்துல முள் ரோஜாப் என்று சேர்த்துப் படிங்க புரியும்
[முட்காவலர்கள் ரோஜாப்பெண்ணே.....சரிதானுங்களா?ஹி..ஹி]

10 மறுமொழிகள்::

தம்பி said...

கவுத
கவுத

காட்டாறு said...

// குவிந்து முறைத்தாலும் கொள்ளை அழகு-நீ
மலர்ந்து சிரித்தாலும் கோடி அழகு //

கலக்கிடீங்க கண்மணி. என் காதல் கவிதைகளில் கண்மணி கண்மணின்னு மூச்சுக்கு முந்நூறு (வழக்க சொல்) முறை இருக்கும். உங்களுக்கு மறுமொழி இட்டதும், எனக்கு கவிதை எழுதும் எண்ணம் வந்தது கண்மணி.

கோபிநாத் said...

யக்கா.....என்னாக்கா தீடிரென்னு கவிதை எல்லாம் கலக்குது ;-)))

ஒவ்வொரு வரியும் அழகுக்கா ;-))

சும்மா சொல்லக்கூடாது கவிதை கூட நல்லா தான் எழுதுறிங்க.

(ஏதோ இந்த தம்பியால முடிஞ்சது)

கண்மணி said...

அய்யே தம்பி 'கழுத'ன்னு தகிரியமாச் சொல்லுங்களேன்.எங்கே நீங்களும் அபிஅப்பாவும் எழுதுங்க பாப்பம்.கோபி நீயிதான் நடுவர்[அப்பதானே எனக்கு சப்போர்ட் பண்ணுவ]

கண்மணி said...

காட்டாறு வருகைக்கு நன்றி.
கவிதைக்கு வித்திட்டேனா?-உங்க
கற்பனைக்கு உரமிட்டேனா?
தொடருங்கள்.போட்டியொன்று காத்திருக்கிறது தெரியுமா?வாழ்த்துக்கள்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

கண்மணி அக்கா, உங்களுக்கு உடம்பு கிடம்பு ஏதும் சரியில்லையா? ஏன் கவித பக்கம் தாவிட்டீங்க??

அபி அப்பா said...

//அய்யே தம்பி 'கழுத'ன்னு தகிரியமாச் சொல்லுங்களேன்.எங்கே நீங்களும் அபிஅப்பாவும் எழுதுங்க பாப்பம்.கோபி நீயிதான் நடுவர்[அப்பதானே எனக்கு சப்போர்ட் பண்ணுவ]//

என்னய வச்சி காமடி கீமடி செய்யலயே:-))

சென்ஷி said...

தம்பி தப்பா பாராட்டிட்டாரு..
இது..,

கவுஜ..
கவுஜ...

:))

சென்ஷி

கண்மணி said...

மை பிரண்ட் அப்படின்னா கவிஞர்கள் எல்லாம் 'சீக்காளி'களா?நானாச்சும் அப்பப்ப எழுதறன் .முழுநேரமா எழுதறவங்க?

கண்மணி said...

வாரும் அபிஅப்பா கவிதை எழுதி பாரும்.பொறவு தெரியும் சேதி...[சிங்கத்த உசுப்பி உட்டாச்சு]

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)