PAGE LOAD TIME

கலங்க வைத்த காட்டாறு........

பொங்கி வரும் காவேரி
பயிர் செழிக்க வாழ்வு தரும்
புனிதமான கங்கை நதி
பாவச் சுமை கழுவி விடும்
தேனாறு,பாலாறு
பல உண்டு தரணியிலே
கலங்கடித்த காட்டாறு
புதிதாய் வந்தது தமிழ்மணத்தில்
மரணம் ஒரு விளையாட்டல்ல
மீண்டும் தொடந்து ஆடுவதற்கு
வாழ்க்கையை தொலைத்து நிற்கும்
மீளா நெடும்பயணம்.
வலி யாருக்காயினும் ஒன்றுதான்
உனக்கோ உன் மருமகனுக்கோ
புதிதாய் வந்த சுனாமியே
உன்னை நானறிவேன்-உன்
அண்ணன் மகனை யாரறிவார்
கவிதை முடிவிலேனும்
கோடிட்டிருக்கலாம் இது
அவனின் அன்னையென்று
கண்டதை விட்டுச் செல்லும்
கொண்டதை அடித்துச் செல்லும்
காட்டாறு நீயென்று காட்டிவிட்டாய்
பேசாதே 'போ'
உன் பேச்சு 'கா'


டிஸ்கி:காதல் கவுஜ எழுதினாலே மரை கழண்டு போச்சா,உடம்பு சரியில்லையா என பாசக்கார புள்ளைங்க காலைவாரி விடும்.இப்படி அழுகாச்சி கவிதை எழுத வச்சிட்டியே ..நல்லாயிரு தாயீ...காட்டாறு

12 மறுமொழிகள்::

.:: மை ஃபிரண்ட் ::. said...

me the firstuu?

சென்ஷி said...

இது யாருக்காச்சும் புரிஞ்சா எனக்கும் சொல்லுங்கப்பு... :(

ஆனாலும் பாராட்ட வேண்டியது நம்ம கடமையில்லையா... so,

கவுஜ..
கவுஜ....! :)

சென்ஷி

முத்துலெட்சுமி said...

கவிதை
அருமையோ அருமை.
நான் கூட காட்டாறு கூட கா
விடலாமான்னு யோசித்தேன்.
யக்கா யக்கான்னு கூப்பிட்டு கலாய்ச்சுட்டாங்க .

சென்ஷி ...காட்டாறு ஒரு கவிதை
எழுதி இருக்காங்க..சாமி ஆன அம்மா
ன்னு அதப்படிச்சு இப்படி ஆகிட்டோம்
நான்க. என்ன செய்ய..

கண்மணி said...

சென்ஷி முத்துலட்சுமி பதில் சொல்லிட்டாங்க சரியா?

கண்மணி said...

மு.லட்சுமி அந்த கவிதையின் வலி படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.பின்னூட்டத்தில் காட்டாறின் பதில் கண்ட பிறகு கோபம் வந்து இந்தப் பதிவு.இருந்தாலும் தங்கச்சிய மன்னிச்சிடலாம்.

அபி அப்பா said...

சென்ஷி! அந்த கவிதைய போய் படிங்கன்னு முத்துலெஷ்மின்னு டைவர்ட் செஞ்ச புண்ணியவான் நாந்தேங்! நீங்களும் போய் படிங்க!

கண்மணி said...

அபி அப்பா அது முத்துலட்சுமி பின்னூட்டம் தான்.ஏன் சென்ஷியக் கொழப்புரீரு

சென்ஷி said...

எனக்கொன்னு புரிஞ்சுப்போச்சு..
நான் காட்டாறு பதிவுல ரெண்டாவதா ஒரு பின்னூட்டம் போட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே இந்த பதிவுல
பின்னூட்டத்த போட்டுட்டேன். அதுக்கப்புறம் காட்டாத்தைப் போய் பாக்கச்சொல்ல மனசு கஷ்டமாயிடுச்சு. அங்கன வருத்தப்பட்டுட்டு இங்க வந்தா பின்னூட்டம் யாருக்காகன்னு குழப்புறாங்க...

என்ன கொடும இது சரவணா?

சென்ஷி

சென்ஷி said...

ஆக மொத்தம் க்ரெடிட், டெபிட் சேர வேண்டியது அபி அப்பாவுக்கு :)
அவர் பின்னூட்டம் பாத்துத்தான் நானும் போனேன்

சென்ஷி

காட்டாறு said...

மன்னிச்சிக்கோங்கோ.... மன்னிச்சிக்கோங்கோ..... இப்பிடி அழுகாச்சி வாரதுக்கு காரணானதற்கு..... இனி எல்லாம் சிரிப்பு மயம் தான். அது என்னவோ.. எழுத ஆரம்பிச்சதும் தோழி கண்ணுக்குள்ள ஆடுனாங்க... அப்பிடியே கொட்டிப் போட்டுடேனுங்க.....

மங்கை தப்பிதமா நம்ம பேர வியர்டு லிஸ்டுல (தெரிஞ்சி தான் சேத்திருப்பாகளோ?) சேத்துட்டாக.... வாரோமில்ல.... எல்லா வலியும் போயே போயிரும்...... அத்த படிச்சிட்டு என்னை அடிக்க வரமா இருந்தா சரி....


கண்மணி கண்ணின் மணியாயிட்டம்மா.... ஆயிட்ட........ எல்லாரும் சிரிக்கணுமுங்க.... வாழ்க்கைல தோல்வியும், வெற்றியும் சகஜங்கோ..... முத்துலெட்சுமிக்கா.... மைக்க உங்க கைலயிருந்து புடிங்கிட்டேன் போலேயே......

கோபிநாத் said...

முத்துலட்சுமிக்கா சொன்னது மாதிரி அங்கையும் போயு படிச்சேன். ம்ம்ம்....ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல ;-(

கண்மணி அக்காவின்
கவிதை காட்டாற்றில்
கலங்கிய கண்களுடன் ;-(

கண்மணி said...

கோபி அழுகாத அக்கா இன்னும் நெறய கவுஜ எழுதப் போறேன்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)