PAGE LOAD TIME

ச்சுப்பிரமணிக்கு வயிறு சரியில்லை...

இந்தப் பதிவு 'மை பிரண்ட்'க்கு பரிசாக பதியப் படுகிறது.

இந்த கண்மணி ஒரேயடியா போரடிக்குதே,மேல் மாடியில சரக்கு காலியாடிச்சி போலும் அதேன் எப்ப பார்த்தாலும் ச்சுப்பிரமணிய வச்சே பதிவு போட்டு 'போர்' அடிக்குதுன்னு சொன்ன அனானி நண்பருக்கும் ,சொல்லாவிட்டாலும் மனசுக்குள்ள நினைக்கும் பதிவ்ர்களுக்கும் சொல்றேன்.

மொதல்ல அவங்கள நிறுத்தச் சொல்லுங்க.நான் நிறுத்தறேன்

யாருன்ன கேக்கறீங்களா?

செந்தழல் ரவி 'மொக்க'ப்பதிவு போட்றத நிறுத்தச் சொல்லுங்க.
அபி அப்பா 'பாப்பா' பத்தி பதிவு போட்றத நிறுத்தச் சொல்லுங்க.
சர்வேசன் 'சர்வே'எடுக்கறத நிறுத்தச் சொல்லுங்க
பொன்ஸ் 'யானைப்படம்' போட்றத நிறுத்தச் சொல்லுங்க.
பாலபாரதியக் 'கலாய்க்கறத'நிறுத்தச் சொல்லுங்க.
விடாது கறுப்பு 'பெரியார்' பத்தி பதிவு போட்றத நிறுத்தச் சொல்லுங்க.

நானும் 'ச்சுப்பிரமணி மேட்ர' போட்றத நிறுத்திக்கிறேன்......

.ஸ்..ஸ்...மூச்சு வாங்குது..இருங்க.அப்படீன்னு எல்லாம் சொல்லி யாரையும் வம்புக்கு இழுக்க மாட்டேன்.ஆள விடுங்க சாமீ.புடிச்சா படிங்க. இல்லாட்டி திட்டுங்க..ஹி..ஹீ[படிச்சிட்டுதானே திட்டுவீங்க?]

ரெண்டு நாளா நானும் ரங்கமணியும் ஊர்ல இல்லை.திரும்பி வந்த பிறகு பார்த்தா ச்சுப்பிரமணி சோர்ந்து படுத்திருந்திச்சி.எதுவும் சாப்பிடலைன்னு சொன்னாங்க.சரி எப்பவாச்சும் வர்ற வயித்துக் கோளாறாயிருக்கும் போனமாசம் பூச்சி மருந்து குடுக்க மறந்துடுச்சின்னு நெனச்சேன்.
ரங்கமணி அப்பா போன்ல யார்க்கிட்டயோ'நேத்தக்கி பங்கஜம் ஏதொ டிபன் செஞ்சா பாரு சும்மா முறு மொறுன்னு பூந்து விளையாடிட்டேன்லே' ன்னு சொன்னதக் கேட்டு மாமியார்ட்ட விசாரிச்சேன்.மொளகா பஜ்ஜி போட்டதாச் சொன்னார்.ச்சுப்பிரமணியும் ரெண்டு சாப்டுச்சாம்
எனக்கு வந்ததே கோபம் இப்படியா பண்ணுவீங்கன்னு கத்தினேன்
ஆனா மறுநாளும் ச்சுப்பிரமணி ஒன்னும் சாப்பிடலை.புரண்டு புரண்டு படுத்தான்.அப்பத்தான் அவன் வயத்துக்குள்ள ஏதோ பெரிசா இருக்கற மாதிரி தெரிஞ்சது.கிட்டப் போய் அவனைத் தூக்கிப் பார்த்தா உருண்டயா வயித்துக்குள்ள ஏதோ .மிளகாப் பஜ்ஜின்னா நீட்டா யில்ல இருக்கும் இது ஒரு வேளை குட மிளகாய் அல்லது வெங்காயமான்னு சந்தேகம் வர,ச்சே அதுவா இருந்தாலும் ஸ்லைஸ் பண்ணித்தானே போடுவாங்கன்னு முடிவு பண்ணி டாக்டருக்கு போன் பண்ணேன்
அவரு,டோன்ட் ஒர்ரி ஏதாச்சும் அஜீரணமா இருக்கும் 'ஜெலுசில்' சிரப் மூணு வேளை குடுங்க சரியாகும்ன்னார்.
அப்படியும் சரியாகலை.சரி டாக்டர் கிட்டயே கூட்டிப் போவோம்னு போனேன்.
ச்சுப்பிரமணி வயித்த தொட்டுப் பார்த்த் டாக்டருக்கே ஷாக் 'வாட் ஈஸ் திஸ் ஏதோ உருண்டையா இருக்கு.கட்டின்னாலும் ஒரே இடமா இருக்கும் இது மூவ் ஆகுதேன்னார்.சரி எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுப்பம்ன்னார்.ஸ்கேன் ரிசல்ட்ல பெர்ரிய கொய்யாப்பழம் அளவு ஏதோ தெரிஞ்சது.
டாக்டர்;'மிஸஸ் ரங்கமணி ச்சுப்பு ஏதோ விழுங்கியிருக்கு.முதல்ல அது என்னன்னு தெரிஞ்சாதான் ஆப்பரேஷன் பண்ணமுடியும்னு பயம் காட்டினார்.வீட்டுக்குப் போய் விசாரிச்சிட்ட்டு வந்து நாளைக்கு அட்மிட் பண்ணுங்கன்னார்'.
வீட்டுக்கு வந்ததும் .உருண்டையா என்ன பொருள் எல்லாம் காணோம்னு ஆராய்ச்சி தொடங்கிடுச்சி.

ரங்கமணி டேபிள் மேல இருந்த கண்ணாடி பேப்பர் வெயிட்
ஆப்பிள் வடிவ பிளாஸ்டிக் சால்ட்-பெப்பர் ஜாடி
குளோப் வடிவ பேனா ஸ்டாண்ட்
ஆரஞ்சுப் பழம் போல் இருக்கும் மெழுகு மோல்டு
என்னுடைய பைனாப்பிள் டிசைன் வெல்வெட் ரிங் பாக்ஸ்

எல்லாம்..எல்லாமும் வச்ச எடத்துலயே இருந்தது.அப்படீன்னா ச்சுப்பிரமணி எதை முழுங்கியிருப்பான்னு மண்டையப் பிச்சுக்கும் போது
'மம்மீ எனக்கு ஞாபகம் வந்துடுச்சி 'என்று பிச்சுமணி அலற
'என்னடா சீக்கிரம் சொல்லு சீக்கிரம் என்று ஏதோ கஜினி பட சூர்யா மாதிரி 15 நிமிஷத்துல மறந்துடப் போற மாதிரி அவசரப் படுத்தினோம்.
'நாங்க ரெண்டு நாளாடீம் சேர்த்து 'கிரிக்கெட்' விளையாடினோம்.நாங்க இந்தியா டீம்.ராகுல் பெர்முடா கோபி சிறீலங்கா.பால் பொறுக்கிப் போட கிச்சு வர்ர மாட்டேன்னுட்டான்.
வேற ஆளு இல்லன்னு ச்சுப்பிரமணிதான் பால் எடுத்துட்டு வந்து குடுத்துச்சு.மொத நாள் நாங்க பெர்முடாக் கூட ஜெயிச்சிட்டோம்.மறுநாள் கோபியோட சிறீலங்காக் கூட விளையாடும்போது ஒவ்வொருத்தரா அவுட் ஆனபோது ச்சூப்பிரமணி கோபமா பந்து பொறுக்க மாட்டேன்னு அடம் புடிச்சது.நிச்சயம் ஜெயிப்போம் ப்ளீஸ் ச்சுப்புன்னு கேட்டதும் ஹெல்ப் பண்ணுச்சு.ஆனா பாதி ஆட்டத்துல பால் எங்கியே போய் விழுந்துடுச்சு.என்ன பண்ரது ன்னு யோசிச்சப்பத்தான் எனக்கு நம்ம பக்கத்து வீட்டு அம்புஜம் பாட்டி[எனக்கு மாமி]
குடுத்த லட்டு ஞாபகம் வந்தது.அதைக் கடிக்கவும் முடியலகல்ல வச்சி ஒடைக்கவும் முடியலை.பிறகு பார்க்கலாம்னு பாக்கெட்ல வச்சதை எடுத்து மீதி ஆட்டத்தை ஆடினோம்.எங்கஇந்தியா டீம் தோத்துப் போயிடுச்சுன்ன உடனே ச்சுப்பு கோபமா கத்திட்டு பாலை முழுங்கிடுச்சி.சரி லட்டுதானே சாப்பிடட்டும்னு இருந்தேன் மம்மீ' என்றதும்
அப்பாடி நல்ல வேளை ஏதும் கண்ணாடி பிளாஸ்டிக் அயிட்டம் இல்லைன்னு நிம்மதியோட டாக்டருக்கு போன் பண்ணோம்.
டாக்டர் வந்து ச்சுப்பிரமணிக்கு'எனிமா' குடுத்துட்டு 'டோன்ட் வொர்ரி சரியாயிடும். கக்காவுல வெளிய வந்துடும் இல்லன்னா ஆப்பரேஷன் தான்'னு எங்களுக்கும் 'எனிமா'குடுத்துட்டு மறக்காமா 'பீஸ்'வாங்கிட்டு கெளம்பிட்டார்.

விஷயம் கேள்விப்பட்ட அம்புஜம் மாமி நாலு நாளா வீட்டுப் பக்கமே வரலை.

தினமும் லட்டு முழுசாவோ கரைந்தோ வெளிய வ்ருதான்னு .......காத்துக்கிட்டு..பார்த்துக்கிட்டு இருக்கோம்.

20 மறுமொழிகள்::

துளசி கோபால் said...

:-))))))))))))))

இலவசக்கொத்தனார் said...

நான் கூட பந்துன்னுதான் நினைச்சேன், இப்படி மாமியை இந்த ஓட்டு ஓட்டிட்டீங்களே!! :)))

MyFriend said...

என் பதிவுக்கு நான் ஃபர்ஸ்ட்டு இல்லையா??

MyFriend said...

யக்கா.. நான் அம்பதாவது பதிவுதானே கேட்டேன்??

ஓ! 49-உம் எனக்கே.. 50-உம் எனக்கேவா? (பதிவின் நம்பர் இது.. வயது இல்லை!!! :-P)

MyFriend said...

ச்சுப்ரமணிக்கு சீக்கா?

எலேய் கூப்பிடுல அந்த நாய் டாக்டர.. ச்சுப்ரமணிக்கு ஸ்பெஷல் ட்ரீட்மண்டு ஆரம்பிச்சடலாம்..

[ஆனா, கொஞ்சம் அதிகமா சார்ஜ் ஆகும். அதுக்குதான் கண்மணி அக்கா வீடு இருக்கே! அதை வித்து பணம் பார்த்துடலாம்.. ஹீஹீ]

MyFriend said...

இன்னைக்கு தமிழ்நாட்டுல நடந்த பந்துக்கு கூட அந்த மாமியிடம் 1000 லட்டுகள் செய்ய சொல்லி ஆர்டர் வந்ததாய் தகவல் கசிய தொடங்கியாச்சு. ;-)

MyFriend said...

//தினமும் லட்டு முழுசாவோ கரைந்தோ வெளிய வ்ருதான்னு .......காத்துக்கிட்டு..பார்த்துக்கிட்டு இருக்கோம்.//

தெரிஞ்சதும் சொல்லுங்க.. கரைஞ்சு வருதா முழுசா வருதான்னு எங்களுக்கும் சொல்லுங்க.. :-P

கதிர் said...

முள்ள முள்ளாலதான் எடுக்கணும். மாமிகிட்ட சொல்லி இன்னொரு பெரிய லட்டு குடுக்க சொல்லுங்க எல்லாமே பிச்சிகிட்டு வெளிய வந்துடும்.

பாவம் அந்த ச்சுப்பிரமணிய ரோட்லயே விட்டுருந்திங்கன்னா இநேரம் நல்ல நிலைமைல இருந்திருக்கும்.

இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு.
இந்த பாவம்லாம் சும்மா விடாது உங்கள.

Anonymous said...

ச்சுப்பிரமணிக்கு ஏதாச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா
மிருகவதை தடை சட்டத்தின் கீழ் மாமியை கைது செய்ய நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இக்குற்றத்திற்கு துணை போன அச்சு, பிச்சு,கிச்சு, தங்கமணி & கோ என அனைவரையும் கூண்டோடு சிறை தள்ளப்படுவீர்.

சீக்கிரம் ச்சுப்பு உடல் நலம் தேற ஆவன செய்வீர். இல்லாவிட்டால் சட்டம் உங்கள் மீது பாய்ந்து பிறாண்டும் என அறியவும்.

இப்படிக்கு
ப்ளூகிராஸ் அமைப்பு
அண்ணா நகர் கிளை.
(எங்களுக்கு ஏகப்பட்ட கிளைகள் உண்டு)

காட்டாறு said...

எப்படிங்க... எப்படிங்க..... கக்கா கத எழுறத விடுங்க.... அத படிச்சி சிரிக்க எங்கள மாதிரி ஒரு கும்பல பிடிச்சி போட்டிருக்கீங்களே... அத சொன்னேன்.

சிலர் தல குனிஞ்சி நடந்தா நல்லாயிருக்கும்ன்னு சொல்லுவாங்க... வேறு சிலர் தல நிமிர்ந்து நடந்தா நல்லாயிருக்கும்ன்னு சொல்லுவாங்க... சில பேரு தலையே இல்லனா(?) நடந்தா நல்லாயிருக்கும்ன்னு சொல்லுவாங்க... அது பத்தில்லா கவல படாம எழுதுனதுக்கு.... என்ன கொடுக்கலாம்? பங்கஜம் மாமிக்கு முத்துலெட்சுமி அக்காட்டா சொல்லி பாடம் எடுக்க சொல்லலாம்.

Anonymous said...

எம்புள்ளய இப்படி கொடுமைபடுத்தறாங்களே இத கேக்கறதுக்கு யாருமே இல்லியா??

Anonymous said...

என் நண்பனை இப்படி கொடுமை பண்ணிறிங்களே இதை கேட்க யாருமே இல்லையா..லொள்...லொள்

கோபிநாத் said...

மாமி லட்டு அவ்வளவு எபக்டா....ச்சீச்சீ...அவ்வளவு வேயிட்டா இருக்குமா? ;-(

கவலைப்படாதிங்க்கா.....ச்சுப்புக்கு சரியாக இங்க சோனி தலைமையில ஒரு கூட்டு பிரத்தானை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம் எல்லாம் சரியாகிடும்.

Anonymous said...

ச்சுப்பு அண்ணாவுக்கு என்ன ஆச்சு?

கண்மணி/kanmani said...

துளசியக்கா,இலவசம் வருகைக்கு ச்சுப்பு 'லொள்ளு'கிறது.என்னா ஒரு ஹார்லிக்ஸ் கூட இல்லாம பாக்க வந்துட்டீங்களேன்னு கோபமாயிருக்கு.

Anonymous said...

பாவி மக்கா! என் சர்வர் சொதப்புது, பிளாக் கடிக்குது. என்னமா அடிச்சு ஆடிகிட்டு இருந்தேன். இப்ப என்னய வச்சு காமடியா ஓடிக்கிட்டு இருக்கு, பதில் சொல்லகூட முடியலையே:-) மதுரைக்கு வந்த சோதனையா இது:-))

கண்மணி/kanmani said...

அபி அப்பா நீங்களும் அபிபாப்பாவும் செய்யும் லொள்ளு தாங்காம தான் பிளாக்கர் சொதப்புது.

Anonymous said...

எனக்கென்னவோ பொன்ஸ் யானைத்தோழின்னு ஒரு பட்டத்தை டீச்சரிடம் இருந்து வாங்கின மாதிரி நீங்க இந்த நாய்த்தோழி பட்டத்தை அபி அப்பாக்கிட்ட இருந்து லவட்டிட்ட மாதிரி இருக்கு...

ஆனாலும் அந்த மாமி செஞ்ச லட்டை அந்த ஓட்டு ஓட்டியிருக்கவானாம்...கோபம் வந்த அந்த லட்டாலே எறிஞ்சுட போறாங்க...அப்புறம் பொது மருத்துவமனைக்கு போவனும் நீங்க

:))))

Anonymous said...

மை பிரண்டு, இதெல்லாமா நாமெ போய் பாக்க முடியும். சுத்த வெவஸ்தை கெட்ட லேடிங்க நீங்க :)))))))))))

delphine said...

if you had just done an ultrasonogram. you would have fixed the problem.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)