PAGE LOAD TIME

என்ன கொடுமையிது சரவணா...?

டிஸ்கி1:
தலைப்பு உபயம்:சென்ஷி&அபிஅப்பா

ஏதோ வளர்ந்தோம் வாழ்க்கையில செட்டில் ஆனோம்னு இருப்பது சிலபேர். வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேண்டும் என்று ஆசைப்படுவது சிலபேர்.
ஆசையிருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுத மேய்க்கன்னு ஒரு சொல்வழக்கு [பழமொழி?]உண்டு. நாம அந்த ரகம்தான்.
ஏதாவது சாதிக்கணும்னு அப்பப்ப மனசுல ஆசை வரும்.முயற்சியும் செய்து முடியாமல் போகும் ஆனாலும் அடுத்த சாதனைக்கு மனம் தாவும்.
பாட்டுலயும் ,பரதத்திலேயும் சாதித்தவங்கள பார்த்தபோது அந்த ஆசை வந்தது.ஒரு ருக்குமணி அருண்டேல் மாதிரி இல்லாட்டியும் 'லக லக' ஜோதிகா மாதிரி ஆடணுமின்னு கத்துக்க நெனச்சேன்.'' கத்திரிக்காவுக்கு கையும் காலும் முளச்ச மாதிரி ஒசரத்துக்கு ஒனக்கு இந்த ஆசையான்னு ரங்கமணி 144 போட்டுட்டார்.[நெசமாலும் நான் ஒன்னும் அப்டியில்ல]
அவரப் பொறுத்தவர 6-7 அடி இருந்தாத்தான் அபிநயம் நல்லாவருமாம்.
அடுத்து விஜயசாந்தி பைட்டெல்லாம் சினிமாவுல பாத்து கராத்தே கத்துக்கப் போனேன்.சரி ஏதோ வீட்ல தனியா இருக்கும்போது பாத்ரூமில கரப்பான் பூச்சி அடிக்கவாவது உப்யோகப்படுமின்னு ரங்கமணி ஓகே சொல்லிட்டார்.
சரியா ஒரு மாசம் கூட போகலை பிராக்டிஸ் பண்ணரேன்னு கையக் காலத் தூக்கி காத்துல ஒதைக்கும் போது கால் ஸ்லிப்பாயி விழுந்து மாவு கட்டு போட்டதோட கராத்தேவும் கட்டு.
வீல் சேர்ல வச்சி தங்கப் பதக்கம் சிவாஜி மாதிரி ரங்கமணி என்னை தள்ளிக்கிட்டே'சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்னு [என் 60கிலோ வைட்ட மறைமுகமா சொல்றாரு]
பாடுவதை சகிக்காமா 30 நாள்ள பிரிக்க வேண்டிய கட்டை 20 நாள்ளயே பிரிச்சி நொண்டியடிக்க ஆரம்பிச்சிட்டேன்.
இண்டோர்/அவுட்டோர் கேம் மாதிரி இந்த அவுட்டோர் கலைகளை விட்டுட்டு வீட்டுக்குள்ளயே தூள் கெளப்புவம்னு குக்கரி கத்துக்கிட்டேன்.
ஒருமுறை அல்வா கிண்ட முடிவுபண்ணி செய்யப்போக பதம் தப்பிப் போய் வாணலியும் கரண்டியும் ஒப்பந்தம் போட்டுட்டு பிரிய மாட்டேன்னுட்டுது.ஒரு பக்கம் ரங்கமணியோட அப்பாவும் ,அம்மாவும் வாணலியப் பிடிச்சிக்க மறுபக்கம் நானும் ரங்கமணியும் கரண்டியப் பிடிச்சி 'டக் ஆப் வார்' மாதிரி இழுக்க கரண்டி பாதி கையோட வந்துட்டுது. அல்வா இன்னும் வாணலியிலேதான் இருக்கு.
அடுத்தது டிராயிங்கும்,பெயிண்டிங்கும்.கடவுள் உருவம் வரஞ்சி ரிஸ்க் எடுக்க வேண்டாமின்னு மனித முகம் வரையப் பழகினேன்.ஒரு நாள் நான் வரைந்த மாடர்ன் ஆர்ட் பெண் படத்தப் பார்த்துட்டு சின்னவன்,'ஐய் மம்மீ இது இன்னா சுடிதார் போட்ட கொரில்லா படமான்னான்'.ச்சே நம்மள என்கரேஜ் பண்ணலனாலும் இப்படி காலை வாருதுகளேன்னு அதையும் கைவிட்டேன்.
மனம் தளராமல் அடுத்த முயற்சியில் இறங்க நான் போனது தையல் கிளாஸ்.நான் கட் பண்ணி பழகிய துணியில 50 டஸ்டர் செஞ்சு பிச்சுமணி ஸ்கூலுக்குக் குடுத்தேன்.ஒருவழியா ஜிப்பா தைக்கக் கத்துக்கிட்டு பிச்சுக்கும்,கிச்சுக்கும் தைக்க ஆரம்பித்தேன்.ரெண்டு பேருக்கும் தைக்க நெனச்சதாலயோ என்னவோ ரெண்டயும் ஒன்னா சேத்து பெர்ர்ர்ர்ர்ர்ரிசா தைச்சிட்டேன்.
ஒரே ஜிப்பாவுல பிச்சும்,கிச்சும் காலை உட்டுக்கிட்டு 'ரெண்டுதலை ஒரே உடல் உள்ள அதிசய குழந்தைகள்'அப்படீன்னு விளையாடுவது ஒவ்வொரு சம்மரிலும் ஸ்பெஷல் விளையாட்டு.[அதுக்கு போக்கிரிங்க 50காசு கட்டணம் வேறயாம்.]இப்ப அவிங்களோட கு.ச்சுப்பிரமணியும் சேர்ந்துக்கிச்சு.மூணு பேரும் ஒரே ஜிப்பாக்குள்ள இருந்தா எப்டி தலைப்புன்னு என்ன நச்சரிக்கிறாங்க.மே மாசம் லீவு விடுவதற்குள் யாராச்சும் ஐடியா குடுங்க.
இல்லாட்டி சர்வேசன் கிட்ட சொல்லி ஒரு போட்டி வைக்கச் சொல்லணும்.
இப்படி பல சாதனைகளை சோதித்துப் பார்த்து விட்டு கடைசியா எழுதுவம்னு முடிவு பண்ணன்.புலிட்சர்,புக்கர் அவார்டு கெடைக்கலன்னாலும் யாராச்சும் படிக்க மாட்டாங்களான்னு நெனைச்சி ஆரம்பிச்சேன்.ஒருவழியா எழுதத் தொடங்கி 43 பதிவு போட்டுட்டேன்.தமிழ்மண பதிவருங்க தலைவிதிய யாரு மாத்த முடியும்.ஒருவழியா குப்பை கொட்டிகிட்டிருக்கேன்.
பத்தோடு பதினொன்றாக இருந்த நேரம் சிவா,பொன்ஸ் போன்றவர்களால் கொஞ்சம் அறியப்பட்டு அலப்பரையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
ஓ..இன்னும் தலைப்ப ஜஸ்டிபை பண்ண்லையே...
என்ன கொடுமையிது சரவணா..?
[கண்மணி பேரையேக் காணோமே]
தமிழ்மணத்துக்கு வந்த சோதனை.ஓகேவா?

30 மறுமொழிகள்::

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மணி நீங்க நல்லா எழுதறீங்க..எழுத்துல வர பாத்திரங்களுக்கு
நடப்பதைத்தான் என்ன கொடுமை இப்படி இவங்களூக்கு ஆச்சேன்னு
சொல்லலாம்.தமிழ்மணத்துக்கு சோதனை
அப்புறம் பரிசோதனை இதெல்லாம் பண்ணறதுக்கு எல்லாம் வேற ஆளுங்`க இருக்காங்க.`

ஜி said...

என்னக் கொடுமை கண்மனியக்கோவ்??

இப்படி மொக்கைப் பதிவெல்லாம் படிக்க வச்சிட்டீங்களே??

ACE !! said...

nalla nagaichuvai.. kalakareenga..
("enna kodumai ithu" pinnoottangal super)

வெட்டிப்பயல் said...

படம் வரையறதுல நீங்களும் நம்ம கேஸ்தானாக்கா???

நான் குதிரை படம் வரைஞ்சதை பார்த்த என் நண்பன் நாய்க்கு என்னடா வாய் வித்யாசமா இருக்குனு சொன்னான்...

இருக்கறதுலயே பெஸ்ட் இங்க எழுதறதுதான்... எப்படியும் நாலு பேர் துப்பினாலும் அவன் எதிர்கட்சிக்காரம் அதுக்காகவே மொக்கையான பதிவுக்கும் சூப்பர்னு 40 பின்னூட்டம் போடுவான்... அதனால இதையே கண்டினியூ பண்ணுங்க :-)

கண்மணி/kanmani said...

ஜி தம்பி பதிவு பப்ளிஷ் பண்ற்துக்குள்ள நீர் போட்ட பின்னூட்டம் காணாமப்போயிடுச்சி.இதுவே மொக்கைன்னா செ.ரவி போடற பதிவுக்கு [டம்ளர்,பின்னூட்டங்கள் ]இன்னாபா பேரு?

இலவசக்கொத்தனார் said...

ரொம்பவே கோவம் வருது போல. சரி உங்களுக்கும் வேண்டாம் அவருக்கும் வேண்டாம். ஒரு தரமான மொக்கைப் பதிவுன்னு வெச்சுக்கலாமா? :))

கண்மணி/kanmani said...

வாங்க முத்துலட்சுமி நீங்க நிஜம்மாவே சகலகலாவல்லி ன்னு உங்க பதிவுகள் பாத்தா தெரியுது.நாம் எல்லாத்துலயும் ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் டைப்தேன்.

கண்மணி/kanmani said...

வாங்க இலவசம் உங்களுக்கு 'மிஸ்டர்.நாரதர்ன்னு 'ஒரு பட்டம் தர நெனச்சிருக்கேன்.உஷாக்கா பதிவ பாத்தாலே காரணம் புரியும்.இப்ப நம்ம பதிவுலேயும் [ரவி மேட்டர்]ஆரம்பிச்சிட்டீங்களா[நா.க.ந.மு.சரி]

சென்ஷி said...

//இலவசக்கொத்தனார் said...
ரொம்பவே கோவம் வருது போல. சரி உங்களுக்கும் வேண்டாம் அவருக்கும் வேண்டாம். ஒரு தரமான மொக்கைப் பதிவுன்னு வெச்சுக்கலாமா? :)) //

இதுக்கு நான் எவ்வளவோ தேவல.
பாருங்க கொத்ஸ் ஈஸியா மொக்க பதிவுன்னு சொல்லிட்டு போயிட்டாரு..
அங்க உங்க அண்ணாத்த அபி அப்பா அடிச்சு ஆடுறாரு.. சீக்கிரம் கெளம்பி வாங்க..
அப்புறம் நான் மறுபடியும் கொடும போட ஆரம்பிச்சுடுவேன்..

சென்ஷி

சென்ஷி said...

//என்ன கொடுமையிது சரவணா..?
[கண்மணி பேரையேக் காணோமே]
தமிழ்மணத்துக்கு வந்த சோதனை.//

எது உங்க பதிவ தமிழ்மணத்துல படிக்குறதா?.. :))))))

சென்ஷி

கண்மணி/kanmani said...

எல்லாம் உம்மாலதான் சென்ஷி நீங்க சொன்னதையே தலைப்பா வச்சி 'மொக்கை' பதிவு போட்டுட்டேன்.நா இந்த ஆட்டத்துக்கு வர்லப்பா.ராவு பூரா தூக்கத்துல என்னகொடுமையிது சரவணான்னு புலம்ப,ரங்கமணி அம்மா வேப்பிலைய தலைல சொருகி, விபூதி வச்சிவிட்டு,இதுக்குத்தான் 24 மணி நேரமும் தமிழ்மணம் பக்கம் பாக்காதன்னு சொன்னேன் கேட்டியா அங்கன எதையோ கண்டு மெரண்டுட்ட ன்னாங்க.
நான் என்ன சொல்ல அடிச்சி ஆடும் அபிஅப்பா,பாசத்த பின்னூட்டமா பொழியும் ஜி,சென்ஷி,கோபிநாத்து,புது வரவு வெட்டி, வந்தா கலகத்தோட வரும் இலவசம் இவிங்களப் பாத்ததை சொல்லமுடியுமா?

கண்மணி/kanmani said...

thanks ace for ur visit.sometimes comments are more interesting than postings.hi..hi..it offen happens in my case.

கோபிநாத் said...

\\ஒருவழியா எழுதத் தொடங்கி 43 பதிவு போட்டுட்டேன்.தமிழ்மண பதிவருங்க தலைவிதிய யாரு மாத்த முடியும்.ஒருவழியா குப்பை கொட்டிகிட்டிருக்கேன்.\\

43 பதிவு போட்டு கலக்கிக்கிட்டு இருக்கீங்க...ஒவ்வொரு பதிவும் நகைச்சுவையுடன் நல்லா இருக்கு இதை போயி குப்பைன்னு சொல்லிக்கிட்டு ;-)

ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்பதேன் !!!

கோபிநாத் said...

\\இதுக்கு நான் எவ்வளவோ தேவல.
பாருங்க கொத்ஸ் ஈஸியா மொக்க பதிவுன்னு சொல்லிட்டு போயிட்டாரு..
அங்க உங்க அண்ணாத்த அபி அப்பா அடிச்சு ஆடுறாரு.. சீக்கிரம் கெளம்பி வாங்க..
அப்புறம் நான் மறுபடியும் கொடும போட ஆரம்பிச்சுடுவேன்..

சென்ஷ\\\

தமிழ்மணத்துல அபி அப்பாவுக்கும், உங்களுக்கும் தான் போட்டியே..;)))

ரெண்டு பேரும் சூப்பரா எழுதுறிங்க...இப்படியே கண்டினியூ பண்ணுங்க.....

கண்மணி/kanmani said...

கோபி தம்பி நீங்க ரொம்ப பாசக்கார புள்ளன்னு தெரியும் ஆனா அதுக்காக எனக்கும் அபிஅப்பாக்கும் போட்டின்னு சொல்லி வம்புல மாட்டிவிடாதீரும்.நான் அவரோட முதல் ரசிகை.அண்ணாத்த பக்கத்துல கூட நாம் நிக்க முடியாது.அடிச்சி ஆட்ராரு இல்ல.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மணி மணியா மணிக் குடும்பத்தை பத்தி எழுதுறீங்க..அப்பாசாமி கதைகள் மாதிரி மணிக் கதைகள் வர வாழ்த்துக்கள். ஆனா, கொஞ்சம் கூடின இடைவெளிகள்ல இதைத் தரலாம்..இல்லாட்டி சீக்கிரம் மக்களுக்கு bore அடிக்கலாம் !!

கண்மணி/kanmani said...

நன்றி ரவிசங்கர்.நானும் அதையே நினைச்சேன்.வேலை பளுவும் ஜாஸ்தி.இனி வாரம் 2 அ 3 பதிவுதான்.இடையிடையே கவுஜ போடலாம் என்று ஐடியா படிக்கத்தான் ஆள் வேணும்.

சென்ஷி said...

//கண்மணி said...
நன்றி ரவிசங்கர்.நானும் அதையே நினைச்சேன்.வேலை பளுவும் ஜாஸ்தி.இனி வாரம் 2 அ 3 பதிவுதான்.இடையிடையே கவுஜ போடலாம் என்று ஐடியா படிக்கத்தான் ஆள் வேணும்.//

நீ கவலைய விடுக்கா..
நான், அபி அப்பா ரெண்டு பேருமே இது ஒரு நல்ல கொடுமைன்னு பின்னூட்டம் போடுறோம்..
(அபி அப்பாவ சேத்ததுக்கு காரணம்-தனியா அடி வாங்க முடியாதுல்ல அதான்..) :))


சென்ஷி

கண்மணி/kanmani said...

ரொம்ப நல்லாவே புரியிது சென்ஷி என்னை தமிழ்மணத்தவிட்டு தொரத்தறதுன்னு கங்கணம் கட்டிட்டீரு வாழ்க

ramachandranusha(உஷா) said...

புலிட்சர்,புக்கர் அவார்டு கெடைக்கலன்னாலும் யாராச்சும் படிக்க மாட்டாங்களான்னு நெனைச்சி ஆரம்பிச்சேன்//
கண்மணி...அது! என்னடா க்யூல நின்னுக்கிட்டு இருக்கோமே, தள்ளிக்கிட்டு முன்னால போயிட்டாங்களான்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)

அபி அப்பா said...

சென்ஷி @ //அங்க உங்க அண்ணாத்த அபி அப்பா அடிச்சு ஆடுறாரு.. சீக்கிரம் கெளம்பி வாங்க..//


கண்மணி @ //நான் என்ன சொல்ல அடிச்சி ஆடும் அபிஅப்பா,பாசத்த பின்னூட்டமா பொழியும் ஜி,சென்ஷி,கோபிநாத்து,புது வரவு வெட்டி, வந்தா கலகத்தோட வரும் இலவசம் இவிங்களப் பாத்ததை சொல்லமுடியுமா?//

கோபி @ //தமிழ்மணத்துல அபி அப்பாவுக்கும், உங்களுக்கும் தான் போட்டியே..;)))

ரெண்டு பேரும் சூப்பரா எழுதுறிங்க...இப்படியே கண்டினியூ பண்ணுங்க..... //


கண்மணி @ //கோபி தம்பி நீங்க ரொம்ப பாசக்கார புள்ளன்னு தெரியும் ஆனா அதுக்காக எனக்கும் அபிஅப்பாக்கும் போட்டின்னு சொல்லி வம்புல மாட்டிவிடாதீரும்.நான் அவரோட முதல் ரசிகை.அண்ணாத்த பக்கத்துல கூட நாம் நிக்க முடியாது.அடிச்சி ஆட்ராரு இல்ல. //

சென்ஷி @ //நீ கவலைய விடுக்கா..
நான், அபி அப்பா ரெண்டு பேருமே இது ஒரு நல்ல கொடுமைன்னு பின்னூட்டம் போடுறோம்..
(அபி அப்பாவ சேத்ததுக்கு காரணம்-தனியா அடி வாங்க முடியாதுல்ல அதான்..) :))//

கொஞ்சம் ஆணிபுடுங்கிட்டு இங்கன வரல்லாம்னு பாத்தா நம்மல வச்சி காமடி பண்ணிட்டீங்களே!! நல்லா இருங்கப்பா:-)))

துளசி கோபால் said...

//இதுக்குத்தான் 24 மணி நேரமும் தமிழ்மணம் பக்கம்
பாக்காதன்னு சொன்னேன் கேட்டியா அங்கன எதையோ
கண்டு மெரண்டுட்ட ன்னாங்க.//

சூப்பரைப்போய் யாருய்யா மொக்கைன்னது? :-)))))


//இடையிடையே கவுஜ போடலாம் என்று ஐடியா ...//

ஐய்யோ...........

கண்மணி/kanmani said...

உஷா நான் அரிச்சுவடி எழுத்துல உங்கள போயி முந்தறதாவது?கியூவுலேயே கடேசி நாமதேன்.

கண்மணி/kanmani said...

துளசியக்கா நம்ம கவுஜ எல்லாம் படிச்சதில்லையா?கொஞ்சம் பரவாயில்ல ரகம் தான்.ஆனா இலக்கணச் சுத்தம் இருக்காது

அபி அப்பா said...

//கண்மணி said...
துளசியக்கா நம்ம கவுஜ எல்லாம் படிச்சதில்லையா?கொஞ்சம் பரவாயில்ல ரகம் தான்.ஆனா இலக்கணச் சுத்தம் இருக்காது//

நீங்க நம்ம கவிதைய படிச்சதில்லயா, வேனும்னா ஒன்னு எழுதவா?:-))

கண்மணி/kanmani said...

அபி அப்பா கவுஜ எழுதுங்கன்னுதான் சொல்றேன் ஆனா ஒரு கண்டிஷன் படிச்சா சிரிப்பு வரக் கூடாது.ஓகே

சென்ஷி said...

// கண்மணி said...
அபி அப்பா கவுஜ எழுதுங்கன்னுதான் சொல்றேன் ஆனா ஒரு கண்டிஷன் படிச்சா சிரிப்பு வரக் கூடாது.ஓகே //

இதுக்கு நான் ஒரு சிரிப்பான் போட்டுக்கறேன் :)

சென்ஷி

Santhosh said...

யக்கோவ், சரவணனுக்கு என்னவோ பிரச்சனை அப்படின்னு வந்தா இப்படி புலம்பி இருக்கீகளே இது நியாயமா?

உண்மைத்தமிழன் said...

முழுசையும் படிச்சேன்.. எதைன்னு கேக்குறீங்களா? நீங்க எழுதியிருக்குற கதையை.. ஆமா.. என்ன எழுதியிருக்கீங்க.. ஒண்ணும் புரியலை.. ஒருவேளை நமக்குத்தான் கண்ணுல கோளாறோன்னு நினைச்சு கண்ணாடியைத் துடைச்சுட்டு கூடப் படிச்சுப் பார்த்தேன். தலையைப் பிச்சுக்கலாம் போல இருந்துச்சு.. இந்த லட்சணத்துல இதுக்கு பாசமா முப்பது கமெண்ட்ஸ் வேற.. ம்.. என்ன பண்றது?

கண்மணி/kanmani said...

உண்மைத் தமிழன் ஐயா உம்மோட புரோபைல்ல சொன்ன மாதிரி உயிரோடு இருப்பதைத் தவிர ஒன்னும் நானும் சாதிக்கலை என்பதைத்தான் கதையாச் சொன்னேன்.அதுகூட புரியலைன்னா நான் என்ன செய்ய?ஐயோ பாவம் நீங்க

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)