PAGE LOAD TIME

51.கண்மணி..கிரிக்கெட் மணி ஆன கதை...

பத்து வருசத்துக்கு முன்னாடி எனக்கு கிரிக்கெட்ன்னா இன்னான்னு தெரியாது.

கிரிக்கெட்டுக்கும் ஹாக்கிக்கும் வித்தியாசம் தெரியாது.ஏன் ரெண்டு பேரு மட்டும் மட்டை வச்சிருக்காங்க மத்தவங்களுக்கு இல்லை போல இருக்கு அதான் கோல் போடமாட்டேங்கிறாங்கன்னு நெனப்பேன்.

ஹாக்கி மேட்சைப் பார்க்கிறப்போ காசு உள்ளவக போல அதான் ஆளுக்கு ஒரு மட்டை வச்சிருக்காங்கன்னு தோனும்.

புத்தருக்கு போதி மரத்துல ஞானம் வந்த மாதிரி 96 ல வேர்ல்ட் கப் அப்ப ஞானம் வந்து ரங்கமணிகிட்ட கத்துக்கிட்டேன்.

இதுக்கு முன்னாடி ஸ்டெம்புக்கு மேல வைக்கிற பைல்ஸ் வுழுந்திருச்சின்னு யாராச்சும் சொன்னா விளையாடறவங்களுக்குத்தான் 'மூலம்' முத்திப் போச்சுன்னு நெனச்சவ,இன்னைக்கு கிரிக்கெட் கிரவுண்டை அவுட் ஆப் போகஸ்ல கோமிச்சாக் கூட 'பிட்ச் ரிப்போர்ட்'தர்ர அளவு தேறிட்டேன்.

ரங்கமணிக்கு கிரிக்கெட்ன்னா அவ்ளோ ஆசை. வேர்ல்ட் கப்புன்னா ஒரு மாசம் மெடிகல் லீவு போட்டுடுவார்.அவ்ளோ ஏன் ஒரு பேப்பர்ல 'கிரிக்கெட்' ன்னு எழுதித் தொங்க விட்டா ஹைலைட் பாக்குற மாதிரி பாப்பார்.எனக்கும் கிரிக்கெட் புடிக்குதுன்னு தெரிஞ்ச உடனே ரொம்ப பாசமாயிட்டார்.[இதுக்கு முன்னால டைவர்ஸ் பண்ணப் போறதா மிரட்டுவார்.அதுக்கு பயந்தே கத்துக்கிட்டேன்].

ரங்கமணிக்கு சச்சின் ன்னா அம்புட்டு பிரியம்.சச்சின் ன்னு பேர் வச்சதாலேயே விஜய் ப்படத்தை 15 முறை பார்த்தார்.பசங்க பேர சச்சின் பிச்சுமணி,சச்சின் கிச்சுமணி ன்னு தான் வச்சார்.

ஒரு தடவ சார்ஜாவுல இந்தியா,பாகிஸ்தான் மேட்சு.மொதல்ல பேட்டிங் பண்ண இந்தியா ரெண்டு விக்கெட் அவுட்.அந்த நேரம் உசிலம்பட்டியிலேர்ந்து எங்க சித்தப்பு வந்திருந்தார்.அவரு வந்த ராசியோன்னு கவலையாப் போச்சு.அந்த நேரம் சித்தப்பு டாய்லெட் பொக சச்சின் தீடீருன்னு விளாச ஆரம்பிச்சிட்டார்.சித்தப்பூ வராம இருந்தாத்தான் ராசின்னு அவர டாய்லெட்டுக்குள்ளயே வச்சி பூட்டி விட்டோம்.சித்தப்பு கோவத்துல கத்தி,ரகளை பண்ணி கதவ ஒடக்க ,சச்சின் 100 அடிச்ச பிறகுதான் திறந்து விட்டோம்.

கோபப்பட்ட சித்தப்பு கால்ல நானும் ரங்கமணியும் விழுந்துட்டோம்.போனாப்போவுதுன்னு மன்னிச்சார்.வடை பாயசம் பண்ணி தாஜாப் பண்ணேன்.

மதியம் பாகிஸ்தான் பேட்டிங்.சித்தப்புவ பாத்ரூம் கூட போகவிடாம அமுக்கிப் புடிச்சோம்.அவரு இருந்தாத்தானே ஆடறவங்க அவுட் ஆவாங்க.திடீரென்று சித்தப்பு ஒரு தும்மல் போட முதல் விக்கெட் அவுட்.ஆஹா..தெரிஞ்சி போச்சி .உடனே ஓடிப்போய் பிச்சுமணி கால்கிலோ மூக்குப் பொடி வாங்கிவர சித்தப்பு மூக்குல ஏத்திக்கிட்டே இருக்க ஒவ்வொரு விக்கெட்டா அவுட்.கொஞ்சமா போட்டா சரி வராதுன்னு நாங்கெல்லாம் மூக்கைத் துணியாலக் கட்டிக்கிட்டு அப்படியே மொத்தப் பொடியையும் காத்துல தூவ சித்தப்பு 'ஆஆஆஆஆஅச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுன்னு 'அடுத்தடுத்து ஒரு 'ஹாட்ரிக்' தும்மல் போட டி.வி லேசா ஆடுனாலும் 'இன்சமாம்' அவுட்.
நாங்கெல்லாம் சிரிக்க சித்தப்பு மூக்கு வெந்து அழுது கொண்டிருந்தார்.

இன்னொருமுறை இந்தியா விளையாடும் போது ரங்கமணி பச்சை சட்டைப் போட்டிருந்தார்.இந்தியா தோத்துடுச்சு.அடுத்து ஆசி கூட.அப்ப கருப்பு போட்டிருக்க அப்பவும் தோத்துப் போக,அடுத்த மேட்சுக்கு ரோஸ்ல பூப்போட்ட சட்டை.மூணாவது முறையும் தோக்க,அடுத்த மேட்சுக்கு மனுசன் கோவணத்தோட குத்த வச்சு மேட்சு பாத்தாரு.

நான் இந்த வேர்ல்ட் கப் ஜெயிச்சா நான் பால் காவடி,பைல்ஸ் காவடி,ஸ்டெம்ப் காவடி பேட் காவடி எல்லாம் எடுப்பதாக வேண்டிக்கிட்டேன்.
திங்கக்கிழமை சச்சினுக்காக சோமவாரம்
செவ்வாய் டிராவிட் பேர்ல அர்ச்சனை
புதன் புதுப் பையன் உத்தப்பாவுக்காக அடிபிரதட்சிணம்
வியாழன் கும்ப்ளேக்காக தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை
வெள்ளி திரும்பி வந்த கங்குலிக்காக நெய் விளக்கு
சனி கல்யாண்மாகாத தினேஷ் கார்த்திக்காக அஞ்சநேயருக்கு வடைமாலை
ஞாயிறு மொத்த் டீமுக்காக சர்ச்சுல பிரார்த்தனை...மசூதியில தொழுகைன்னு சமத்துவக் கூட்டுப் பிரார்த்தனை எல்லாம் செஞ்சேன்

ஆனா என்னிக்கு இந்தப் பயலுக வேர்ல்ட் கப்புல தோத்துட்டு வந்தாங்களோ அன்னிக்கே கிரிக்கெட்டுனு யாராச்சும் சொன்னாலே சாமி ஆடுவேன்.

ஏங்க நானும் தெரியாமத்தான் கேக்குறேன் 'பத்து மீட்டர் இடை வெளி விடுன்னு ' பஸ்ஸுல எழுதுவாங்க.நம்ம ஆளுங்க ஏன் பந்துக்குப் பின்னாடி பத்து மீட்டர் இடைவெளிவிட்டு ஓடுறாங்க.

இதேப் பாருங்க விளம்பரப்படத்துல மட்டும் படுத்துக்கிட்டே கூட பின்னுறானுங்க.நம்ம பவுலருங்க பவுலிங் பண்ணும் போது மட்டும் பந்து ஸ்டெம்ப்ல படாம 'தீட்டுங்கிற'மாதிரி விலகிப் போகுது?

இந்தியா மட்டும் வேர்ல்ட் கப்புல ஜெயிச்சா ரங்கமணிக்கும்,பிச்சு,கிச்சுக்கும் மொட்டை போட்றதா வேண்டியிருந்தேன்.இப்ப நீளமா முடி வளர்த்துக்கிட்டு' குவாலியர் சூட்' க்குப் போஸ் தர்ர 'தோனீ' மட்டும் மாட்டுனா மொட்டைதேன்.


வேற மொழியில வர்ர கதையை தமிழாக்கம் பண்றோம்..வேற மொழிப்படங்களின் ரீமேக் பார்க்கிறோம்.அதுமாதிரி இதுவும் நான் படித்த ஒரு 'லொள்ளின்' சுட்ட பதிவு.ஹி..ஹி
பிடிச்சிருந்தா இந்த மாதிரி சுட்ட செய்திகள் ரீமேக் செய்து பதியப் படும்.

20 மறுமொழிகள்::

Anonymous said...

நல்ல காமெடி, சுட்ட விதமும் அருமை...நன்றாக சிரிக்க வைத்த பதிவு..

செந்தழல் ரவி

கண்மணி said...

முதலில் பின்னூட்டம் இட்ட செந்தழல் ரவிக்கு ஒரு ஒடஞ்ச கிரிக்கெட் மட்டை பரிசளிக்கப் படுகிறது.

முத்துலெட்சுமி said...

இது தானே கண்மணி உங்க 50 தாவது
பதிவு[33 + 17 =50] .. வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

//இதுக்கு முன்னாடி ஸ்டெம்புக்கு மேல வைக்கிற பைல்ஸ் வுழுந்திருச்சின்னு யாராச்சும் சொன்னா விளையாடறவங்களுக்குத்தான் 'மூலம்' முத்திப் போச்சுன்னு நெனச்சவ//

:))

//ரங்கமணிக்கு கிரிக்கெட்ன்னா அவ்ளோ ஆசை. வேர்ல்ட் கப்புன்னா ஒரு மாசம் மெடிகல் லீவு போட்டுடுவார்.//

இப்பவுமா?

இலவசக்கொத்தனார் said...

இந்த கதவை பூட்டுன மேட்டரை அபி அப்பா எழுதிட்டாரே. நீங்க எல்லாம் பேசி வெச்சுக்கிறது இல்லையா? :))

காட்டாறு said...

மூக்குப் பொடி காட்சிய கண்ணு முன்னால கொண்டு வந்தா... நா ... அச்சின்றேன்..... பக்கத்து சீட்டுக்காரர் 'Bless you'ன்னு சொல்ல சிரிப்பு தாங்கல எனக்கு.

கட்ட கடேசில ஏமாத்திப்புட்டீகளே... இது உங்க சொந்த கத இல்லன்ன உடனே அழுகாச்சியா வந்துட்டு அப்பூ....

Fast Bowler said...

தாங்கல... வேணாம்....

அபி அப்பா said...

//இதுவும் நான் படித்த ஒரு 'லொள்ளின்' சுட்ட பதிவு.ஹி..ஹி
பிடிச்சிருந்தா இந்த மாதிரி சுட்ட செய்திகள் ரீமேக் செய்து பதியப் படும்.//

எங்க சுட்டீங்க, நல்லாயிருக்கே! எனக்கும் அந்த இடத்தை சொன்னீங்கன்னா ரொம்ப உபகாரமா இருக்கும்:-))

அபி அப்பா said...

சர்வ சாதாரணமா அடிச்சு தூள் பண்ணுரீங்க!
வெட்டி என்னான்னா கண்மணியும், அபிஅப்பாவும் காமடி நல்லா எழுதுவதால் நான் C++ கிளாஸ் எடுக்க போறேன்ன்னு போறார்.

பொன்ஸ் என்னான்னா தேவ் பேட்டியில அபிஅப்பா, கண்மணின்னு புது வரவுகள் கவணிக்கபடுகிரார்கள் ன்னு எழுதியிருக்காங்க..
என்ன நடக்குது, ஒன்னியும் பிரியல:-))
உங்கள சொன்னா சரி:-)

கோபிநாத் said...

\\ேற மொழியில வர்ர கதையை தமிழாக்கம் பண்றோம்..வேற மொழிப்படங்களின் ரீமேக் பார்க்கிறோம்.அதுமாதிரி இதுவும் நான் படித்த ஒரு 'லொள்ளின்' சுட்ட பதிவு.ஹி..ஹி
பிடிச்சிருந்தா இந்த மாதிரி சுட்ட செய்திகள் ரீமேக் செய்து பதியப் படும்.\\\

அக்கா.....இதுக்குதான் நாங்க எல்லாம் இருக்கோம். உங்களுக்கு எதுக்கு இந்த சுட்ட பதிவு எல்லாம் ;-( நீங்க எப்பவும் போல சுடாம சொந்தமாகவே எழுதுங்க

ரொம்ப நல்லாயிருக்கும் ;-)))

ஜி said...

http://vavaasangam.blogspot.com பாருங்க.. உங்களுக்கான செய்தி வந்திருக்குது. சங்கத்துக்கு ஆள் எடுக்குறாங்களாம். அதுவும் காமெடி பண்றவங்கதான் வேணுமாம். சீக்கிரம் ஒரு அப்ளிகேஷன் போடுங்க ;)))

Anonymous said...

//மூணாவது முறையும் தோக்க,அடுத்த மேட்சுக்கு மனுசன் கோவணத்தோட குத்த வச்சு மேட்சு பாத்தாரு//

இப்பத்தான் புரியுது இந்திய அணி ஏன் தோற்றது என்று! அடுத்த முறை தோற்றால் "மனுசன்" திகம்பர சாமியாகிவிடுவாரென்று!

சந்தோஷ் aka Santhosh said...

கண்மணியக்கா கலக்கி இருக்கீங்க. சிரிச்சி சிரிச்சி முடியலை போங்க.

கண்மணி said...

சிபி இப்பல்லாம் கிரிக்கெட்டுன்னு பேரக் கேட்டாலே சாமியாடிடுவேன்

கொத்ஸ் அபிஅப்பாவோட கதவு மேட்டரு என்ன?நிசம்மா தெரியாது?சொல்லியெல்லாம் வச்சிக்கிறது இல்லை.அவரு ரேஞ்சே தனி

கண்மணி said...

அபி அப்பா இந்த நக்கலுதானே வானாங்கிறது.நாந்தேன் சுடறேன்.உமக்கென்ன அனுபவமா பின்னுகிறீரே

கண்மணி said...

கோபி அப்பப்ப இப்படி வெரைட்டியிருந்தாதான் நாலு பேரு வருவாங்க.
எந்நாளும் ச்சுப்பிரமணி,கிச்சுமணின்னு சொன்னா ஓட மாட்டாங்க?

கண்மணி said...

பாஸ்ட் பௌலர்,சந்தோஷ்,அனானி வருகைக்கு நன்றி.
ஒரு சி.என்.என் நியூஸ் என்னன்னனா
நாம 'கமான் இந்தியா'...'கமான் இந்தியா' ன்னு கத்துனதாலதான் அவிங்க சுருக்கா திரும்பி வந்துட்டாங்களாம்.

தருமி said...

உங்க பதிவுகளை அப்பப்ப பிள்ளைகளுக்கு அனுப்பிக்கிட்டு இருக்கிறேன். ரெண்டு நாளுக்கு ஒருதடவை அனுப்ப வேண்டியதிருப்பதால் நீங்கள் நிறைய எழுதியே ஆக வேண்டும்; சரிங்களா..?

கண்மணி said...

நன்றி தருமி சார்.ஆனா அனுப்பறேன்னு சொல்றீங்களே ஏன்?வெவ்வேறு இடமோ?நானும் உங்க பதிவுகள் படிச்சிருக்கேன் ஆனா பின்னூட்டம் போட்டதில்லை.

cheena (சீனா) said...

எல்லாப் பதிவுமே 50க்கு குறையாமெ மறுமொழி வாங்குது. இதுலேந்து தெரியறது என்னன்னா - தமிழ் மண ரசிகர்கள் கண்மணியின் நகைச்சுவைப் பதிவுகளின் ரசிகர்களாகி விட்டார்கள். சூடா சுட்டதுன்னாலும் சுட்ட பழம் இனிக்குதுங்க

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)