PAGE LOAD TIME

52.திருவாளர்& திருமதி ரங்கமணி

என் பதிவுகளைப் படித்தும் உள்ளது உள்ளபடியே விமர்சனமும் செய்யும் 'தம்பி' உமாகதிருக்கு இந்தப் பதிவு பரிசளிக்கப்படுகிறது


சன் டி.வி.ல இருந்து 'திருவாளர் திருமதி'

நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்ததிலிருந்து எனக்கு கையும் ஓடலை.காலும் ஓடலை.

போனவாரம்தான் போட்டிக்கான அப்ளிகேஷனை அனுப்பியிருந்தேன்.செலக்ட் ஆயி வர்ர வாரமே புரோகிராம்னுட்டாங்க.

இன்னும் நாலு நாள்தான் இருக்கு.அதுக்குள்ள ரங்கமணியத் தயார் பண்ணனும்.

ரங்கமணி விஷயம் கேள்விப்பட்டு ஆபிசுக்கு லீவ் போட முடியாதுன்னிட்டார்.

நானே அவர் பாஸுக்கு போன் செய்து ரங்கமணி பாட்டிக்கு உடம்பு முடியலைன்னு சொன்னேன்.

' எந்த பாட்டி' ன்னு பாஸ் கேட்க

'அஞ்சாவது பாட்டி சார்'

'வாட்....?'

'ஆமாம் சார் அவருக்கு மொத்தம் ஆறு பாட்டிங்க இவங்க அஞ்சாவது'

மறுபடியும் பாஸ் 'வாட்' என்று கத்த தேங்க்யூ சார்னு போனைக் கட் பண்ணிட்டேன்.

திருவாளர் திருமதியில் மொத்தம் நாலு ரவுண்டு.தம்பதியர் அறிமுகத்திற்குப் பிறகு
1.டூயட் ரவுண்டு 2.ஷாப்பிங்.3.சிசுவேஷன் 4.அண்டெர்ஸ்டாண்டிங் ரவுண்டு.

இதெல்லாம் முடிஞ்சதும் அதிஷ்டச் சக்கரம் சுத்தி ஏதாவது ஒரு வெளி நாடு அல்லது உள்நாடு போகும் வாய்ப்பு.

எப்படியும் இதில ஜெயிச்சிடணும்.பரிசுப் பணம் என்னவோ கம்மிதான்.

அதுவா முக்கியம் ஜெயிக்கிறதும் வெளிநாடு போறதும் தான் திரில்லே.
[ஓசியிலன்னா போறோம்..]

கிச்சு,பிச்சு உதவியோடு டூயட்டுக்குக்கான பாட்டை செலக்ட் பண்ணோம்.
அதுக்கான கோரியோகிராபியும் அதுங்கதான் .
ரங்கமணி அம்மாவும் ஆர்வமா ஊக்கப் படுத்தினாங்க.

ஷாப்பிங் பண்ணுவது பற்றி ஒன்றும் பெரிதாக பயிற்சி வேண்டாம்னுட்டு சிச்சுவேஷன் ரவுண்டு பற்றி விவாதித்தோம்.

எந்த மாதிரி சிச்சுவேஷன் குடுத்தாலும் 2 நிமிஷத்துக்குள்ள ஜோரா சண்டை போட்டு சமாதானம் ஆகணும்னு ரங்கமணிகிட்ட சொல்லி வச்சோம்.

அப்படியே யாருக்கு என்ன பிடிக்கும் என்ன கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு நாலு நாளுக்குள்ள நானும் பசங்களும் சொல்லிக் குடுத்தோம்.

ஸ்கூல்ல கூட ரங்கமணி இவ்ளோ ஹோம் வொர்க் பண்ணியிருக்க மாட்டார்.

போட்டி நாளும் வந்து சன் டி.வி அரங்கத்துக்கு வந்து சேர்ந்தோம்.போட்டியும் ஆரம்பித்தது.

நடிகை ஜெயஸ்ரீ தம்பதிகளை அறிமுகப்படுத்திய பிறகு முதல் ரவுண்டு ஆரம்பித்தது.

எதிரணி தம்பதி ஒரளவு ஆடினர்.அடுத்து நாங்கள் ஆடத்தொடங்கினோம்

'அடிதடி' படத்துல சத்யராஜும் நடிகை ரதியும் ஆடும் 'உம்மா..உம்மம்மா..' பாட்டு.
பாஸ்ட் மூவ் மெண்ட்ஸ் குடுக்கலாம் என்பதற்காகத் தேர்ந்தெடுத்தது.

ஆடை,முகபாவனைக்கெல்லாம் தனித்தனி மார்க் உண்டு என்பதால் ரங்கமணிக்கு டைட் ஜீன்சும் ஜிகினா ஒர்க் செய்த கையில்லாத டி சர்ட்டும்
எனக்கு காக்ரா வும் செலக்ட் செய்திருந்தோம்.

பாட்டுக்குத் தகுந்தவாறு வேகமாக மூவ்மெண்ட்ஸ் கொடுத்தோம்.
ரங்கமணி கங்காரு மாதிரி குதித்து குதித்து ஆடினார்.

முகபாவனைக்காக உம்மா வுக்கு வாயை குவித்து 'உவ்வ்' வென்று
வைத்துக் கொண்டே ஆடியது எனக்கே வேடிக்கையாக இருந்தது.

ஒரு மூவ்மெண்டில் 'உவ்வ்' வென்று வாயோடு உம்மா கொடுப்பதுபோல்
ஜெயஸ்ரீ அருகில் போக அவங்க பயந்து ஓடிட்டாங்க.

திடீரென்று சி.டியில் ஏதோ கோளாறாகி பாட்டு உ..ம்...........மா...உ....ம்...ம....ம்..மா
என ஸ்லோ மோஷனில் இழுக்க
அதுக்கு ஏற்ப ஆட வேண்டி நானும் ரங்கமணியும்
மெது ..வா..கக் காலைத் தூக்கித் தூக்கி ஸ்டெப் வைக்க
ஒரு வழியாக டூயட் முடிந்தது.

நடிகை ஜெயஸ்ரீ ''என்ன மிஸ்டர் & மிஸஸ் ரங்கமணி கடைசியில
இப்படி சாணி மிதிச்சிட்டீங்களே என்று சிரிக்க
முதல் பரிசு எதிரணிக்குத்தான்.

[பிறகுதான் தெரிந்தது ச்சுப்பிரமணி சி.டி ய பிராண்டியிருக்குன்னு]

அடுத்து ஷாப்பிங் ரவுண்ட்.

கொடுக்கப்பட்ட லிஸ்டில் உள்ள பொருளை 2 நிமிடத்திற்குள் கலெக்ட் செய்யனும்.
ரங்கமணி தடவித் தடவி பொருட்களைத் தேட போட்டி முடிந்த பிறகு
பார்த்தால் சோப்பு க்கு 'சோம்பு வையும் உ.பருப்புக்கு உப்பையும் எடுத்திருந்தார்.

என்ன ஆச்சின்னு. நான் முறைக்க
கண்ணாடி போடாததால் சரியாப் புரியலைன்னார்.
நாந்தான் கண்ணாடியில்லன்னா கொஞ்சம்
யெங்காத் தெரியும்னு போட வேண்டாம்னேன்.

இந்தமுறையும் பரிசு எதிரணிக்குத்தான்.

மூணாவது சிச்சுவேஷன் ரவுண்ட் எப்படியும் பிச்சு
உதறுவதுன்னு முடிவு செஞ்சேன்.

கணவன் கிரிக்கெட் மேட்ச் பார்க்கணும்னு சொல்ல
மனைவி மெகா சீரியல் பார்க்கணும்னு சொல்ல டி.வி சானல் மாத்தற சிச்சுவேஷன்.
தயக்கத்தோடயே ரங்கமணி சண்டைய ஆரம்பிச்சார்.

'வேர்ல்ட் கப்பு முக்கியமா இந்த அழுகாச்சி முக்கியமா இதை
பத்து எபிசோடு உட்டுட்டுப் பார்த்தாலும் கதை புரியத்தான் போவுது.
கிரிக்கெட் அப்படியா லைவா பாத்தாத்தான் திரில்'என்று ரங்கமணி முறைக்க

'ஆமா நீங்க வேர்ல்ட் கப்புக்கு ஆடிய லட்சணம்தான் ஊருக்கே தெரியுமே
இன்னும் இந்த கிரிக்கெட்டக் கட்டிக்கிட்டு அழுவனமா'
என்று பதிலுக்கு நான் கத்த

உடனே ரங்கமணி 'சரி சரி நீயே பாருன்னுட்டார்.
இன்னம் ஒரு நிமிஷம் இருக்கு இன்னும் கொஞ்சம்
வேகமா சண்டை போடுங்கன்னு நான் கிசுகிசுக்க

'உன்னை நான் என்னைக்கு திட்டியிருக்கேன்
மனசு வரல்ல தங்கம்னு அவர் சொதப்ப

டைம் முடிந்தது. பாவி மனுஷா உம்ம அன்பை
இப்படித்தான் காட்டணுமா ன்னு நான் பல்லைக்கடிக்க,

'என்ன மிஸ்டர் ரங்கமணி பொண்டாட்டியத் திட்டக்கூடத்
தெரியாம இப்படி வாயில்லாப் பூச்சியா இருக்கீங்க என்ற ஜெயஸ்ரீ
முதல்பரிசை மறுபடியும் அடுத்த தம்பதிக்கே கொடுத்தார்.

கடைசியாக கேள்விபதில் ரவுண்ட்.

முதலில் கேள்விகளை என்னிடம் கேட்ட ஜெயஸ்ரீ பிறகு ரங்கமணியிடம் கேட்கத் தொடங்கினார்.

1.ஜெ:உங்களுக்குப் பிடித்த டிபன் என்ன?
ர:உப்புமா
[உங்க மனைவி பூரிதான் உங்களுக்குப் பிடிக்கும்னு சொன்னாங்களே]

[வாரத்தில் ஐந்து நாள் உப்புமாவே சாப்பிடுவதால் பிடிச்சிப் போயிடுச்சி.பூரி தங்கமணியோட உறவுக்காரங்க வந்தா மட்டும்தான் செய்வா]

2ஜெ.உங்க மனைவிக்குப் பிடிக்காதது என்ன?
ர:எங்க அம்மா

[மிஸஸ் ரங்கமணி பொய் சொன்னா பிடிக்காதுன்னாங்களே]
[அவங்க சொல்லலாம் பொய்]

3.ஜெ:உங்க மனைவி எதுக்கு எப்ப அழுவாங்க?
ர:தினமும்

[என்ன?ரங்கமணி என்னை சந்தோஷமா வச்சிருக்கார் அதுனால நோ அழுகைன்னாங்களே]
[டி.வி யில சீரியல் ஆரம்பிச்சது முதல் முடியும் வரை சீரியலோடு ஒன்றிப்போய் அழுவாங்க]

4.ஜெ:உங்களுடைய ஒரு பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வேணும்னா எது உங்க முதல் சாய்ஸ்?
ர:வீட்டுக்குப் போனதும் தங்கமணி கிட்ட மாட்டப் போறத எப்படி சமாளிக்கிறது என்பதுதான்

[ஓ..உங்க மனைவி இந்த போட்டியில ஜெயிக்கற வழிதான் முதல் சாய்ஸ் என்றார்.ஓகே]

5.ஜெ:அடுத்த பிறவியில என்னவா பொறக்க விரும்புவீங்க?
ர:இன்னும் யோசிக்கல

[உங்க மனைவி மீண்டும் உங்க மனைவியாவே ஆகனும்னு சொல்றாங்க]
[அப்படிச் சொல்லித்தான் பயம் காட்டுகிறாள்.]

ஓகே மிஸ்டர்&மிஸஸ் ரங்கமணி எல்லா பதில்களும் வேறயா இருந்ததால போட்டியில நீங்க இரண்டாவதுதான் என்றார்

எல்லாப் போட்டியிலும் முதலில் வந்த தம்பதியினர் வெளிநாடு போக அதிர்ஷ்டச் சக்கரத்தைச் சுற்றி 'சிங்கப்பூர்' தேர்ந்தெடுத்தனர்.

நான் உள்நாட்டு சுற்றுலாத்தலத்திற்கு போக சக்கரத்தைச் சுற்ற சக்கரம் வேகமாக சுழன்று...மெது வாக.... சுற்றி கொடைக்கானலுக்கும்...ஊட்டிக்கும் இடையில் இரண்டையும் பிரிக்கும் கோட்டின் மீது நிற்க

ஜெயஸ்ரீ,'சாரி மிஸஸ் ரங்கமணி சக்கரம் எந்த ஊரையும் காட்டாததால் உங்களுக்கு ஜாலி டிரிப்பும் இல்லை என்றார்.

ரங்கமணியோடு சேர்ந்து சக்கரமும் இப்படி சொதப்பியது வேதனையாக இருந்தது.

பரிசு கிடைக்காததைவிட எதிர் பார்ட்டி தம்பதியினர் முதல் பரிசு வாங்கியது இன்னும் வேதனையாக இருந்தது .பார்ட்டி யாருன்னு கேக்கறீங்களா அதாங்க 'பாப்பாவ' வச்சி பதிவு போடுவாரே அவருதேன்.

ஓகே மிஸ்டர் & மிஸஸ் ரங்கமணி இந்தப் போட்டியில பார்ட்டிசிபேட் பண்ணதப் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று ஜெயஸ்ரீ கேட்க,

வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு ஜெயிக்கிறது முக்கியமில்லை மேடம் கலந்து கொண்டதே சந்தோஷம் என்றேன்.

'வெல் செட் மிஸஸ் ரங்கமணி வாழ்த்துக்கள்.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.பை த பை உங்க டிரஸும் ஜுவல்ஸும் சூப்பர்ப். யூ லுக் கார்ஜியஸ்.இந்த புரோகிராம் பாக்கறவங்க என்னுடையதைவிட உங்க காஸ்ட்யூம்,ஜுவல்ஸ்தான் பார்ப்பாங்க என்றதும்

பத்து போட்டியில் ஜெயிச்ச சந்தோஷம் பொங்கியது.

சும்மாவா பின்னே இந்த ஷோவுக்காகவே 'போத்தீஸ்ல' 15,000 க்கு டிசைனர் சாரியும் மேட்சிங் ஜூவல்ரியும் வாங்கியது வீண் போகலை.

[பரிசு எவ்ளோன்னு கேக்கறீங்களா அது ஜஸ்ட் 4,000 ரூபாய்தாங்க]

44 மறுமொழிகள்::

இலவசக்கொத்தனார் said...

அங்க போற எல்லா தம்பதிகள் வீட்டுலும் இப்படித்தான் நடக்கும் போல. நல்லா எழுதி இருக்கீங்க போங்க! :))

(ரங்கமணிக்கு தையல் எல்லாம் பிரிச்சாச்சா? காலில் மாவு கட்டு எப்ப பிரிக்கறாங்க?)

✪சிந்தாநதி said...

?! ;)

Anonymous said...

Vazakkam Pola Galatta Kalakkal Comedy...

Ravi

கண்மணி/kanmani said...

வாங்க இலவசம் மொத விருந்தாளி நீங்கதேன்.உம்ம வீட்டம்மாவும் இப்படித்தானா?

கண்மணி/kanmani said...

வருகைக்கு நன்றி சிந்தாநதி ஆனா ஸ்மைலி புரியலீங்க.

கண்மணி/kanmani said...

வாங்க அனானி 'வழக்கம் போல' ன்னு சொல்றீங்க.நம்ம பதிவு படிப்பீங்க போல பொறவு ஏன் அனானியா அலையறீர்?

கதிர் said...

யெக்கா, கிச்சன்ல உக்காந்து யோசிப்பிங்களோ???

பாப்பாவ வச்சி யாருங்க பதிவு போடறது. எனக்கு தெரிஞ்சி தமிழ்மணத்துல யாருமே இல்லியே!

பரிசு கிடைக்காட்டினா என்னங்க நிகழ்ச்சி மூலமா உங்க ஜோடிபொருத்தம் என்னன்னு தெரிஞ்சிருக்குமே!

இந்த பதிவை யாருக்கும் காணிக்கையாக்கலயே ஏன்?

Santhosh said...

கலக்கி இருக்கிங்க போங்க. ரங்கமணிக்கு சுப்பிரமணிக்கும் உடம்பு சரியா போச்சா? //இந்தமுறையும் பரிசு எதிரணிக்குத்தான்.//
எப்படிங்க உங்களால மட்டும் இப்படி முடியுது. இந்தியா கிரிக்கெட் டீமுக்கு அடுத்த படியா நீங்க தான் ரொம்ப நல்லவங்களா இருக்கிங்க.

SHIVA said...

உக்காந்து யோசிப்பிங்களோ???

கதிர் said...

//என் பதிவுகளைப் படித்தும் உள்ளது உள்ளபடியே விமர்சனமும் செய்யும் 'தம்பி' உமாகதிருக்கு இந்தப் பதிவு பரிசளிக்கப்படுகிறது//

இப்பதான் இணைச்ச மாதிரி இருக்கு! இதையெல்லாம் கேட்டு வாங்கற மாதிரி ஆகிபோச்சு! :))

வல்லிசிம்ஹன் said...

கண்மணி உங்களுக்கு
நகை(ச்சுவை) மணி
பட்டம் இங்கேயே இப்போதே
கொடுக்கிறேன்.
சூப்பர் கற்பனை.
நிஜமாலும் ஜோடிப் பொருத்தம் பார்த்த எஃபெக்ட் கொடுத்திட்.டிங்க.

MyFriend said...

இந்த ப்ராக்ராம் இன்னும் டீவியில பார்க்கலைன்னாலும், அதை உங்க ப்ளாக் டீவி மூலமா பர்த்த திருப்ப்தி அக்கா. ;-)

MyFriend said...

உங்களுக்கு அபி அப்பாவை தூண்டலைன்னா தூக்கம் வராது போல? ஹீஹீஹீ.. ;-)

அபி அப்பா said...

கோபம் வந்தாதான் எங்க வீட்டு தங்கமணி ஆடிதீத்துடுவாங்கன்னு அந்த டூயட் ரவுண்டில் அபி பாப்பா தார்குச்சியால் தங்கமணியை குத்தியதை இந்த பதிவில் குறிப்பிடாமல் என்னை காப்பாதியதுக்கு நன்றி, நன்றி நன்றி!!!;-)))

அபி அப்பா said...

சரள்மா காமடி வருதே, ஹய்யோ ஹய்யோ...:-))))

கோபிநாத் said...

\\என் பதிவுகளைப் படித்தும் உள்ளது உள்ளபடியே விமர்சனமும் செய்யும் 'தம்பி' உமாகதிருக்கு இந்தப் பதிவு பரிசளிக்கப்படுகிறது
\\

அமீரகத்தில் இருக்கும் எல்லாருக்கும் பரிசு பதிவு கொடுத்திட்டிங்க போல ;-))

கோபிநாத் said...

\\'உன்னை நான் என்னைக்கு திட்டியிருக்கேன்
மனசு வரல்ல தங்கம்னு அவர் சொதப்ப \\

இது பயத்துல சொன்ன டைலக்கு மாதிரி தெரியுது ;-)))

பரிசு வாங்கலைன்னா என்ன நீங்களும் உங்க ரங்கமணியும் சூப்பர் ஜோடி தான்.

கோபிநாத் said...

\\தம்பி said...
யெக்கா, கிச்சன்ல உக்காந்து யோசிப்பிங்களோ???

பாப்பாவ வச்சி யாருங்க பதிவு போடறது. எனக்கு தெரிஞ்சி தமிழ்மணத்துல யாருமே இல்லியே!\\

அபி அப்பா இதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு ;-)))

CVR said...

நல்ல பதிவு கண்மணி அக்கா!!! :-)
அந்த நிகழ்ச்சியை யூட்யூப்ல பதிவேற்றி உங்க வலைபூவுல ஒரு பதிவா போட்டீங்கன்னா பார்த்து ரசிக்க வசதியா இருக்கும்!! :-)

நாமக்கல் சிபி said...

//அபி அப்பா இதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு //

ஒரு சூட்கேஸ் கைமாறினதா சி.என்.என் செய்திகள் சொல்லுது!

லொடுக்கு said...

அபிஅப்பா! சொல்லவே இல்லை?

கண்மணி/kanmani said...

என்ன கொடுமையிது சரவணா?நம்ம பதிவு படிச்சிட்டு ஒன்னுமே சொல்லாம அபி அப்பா பத்தி பின்னூட்டம் போடறாங்களே.அவரு தொல்லைத் தாங்கலியே?

அபி அப்பா said...

//என்ன கொடுமையிது சரவணா?நம்ம பதிவு படிச்சிட்டு ஒன்னுமே சொல்லாம அபி அப்பா பத்தி பின்னூட்டம் போடறாங்களே.அவரு தொல்லைத் தாங்கலியே? //

"உங்கள் நண்பன்" சரவணன் இப்போ வந்து அபிஅப்பாவுக்கு ஒரு வோட்டு போட்டுட்டு போங்க, சீக்கிரம் வாங்க, பாசமலர் சீக்கிரம் வாங்க:-))

நாமக்கல் சிபி said...

//ஒரு சூட்கேஸ் கைமாறினதா சி.என்.என் செய்திகள் சொல்லுது! //

கைமாறிய சூட்கேஸில் ரெண்டு செட் வேட்டி சட்டையும், சிகப்பு கலர் குற்றால துண்டு ஒண்ணும், பிரஸ், பேஸ்ட், சோப்பு...இத்யாதிகள் மட்டுமே இருந்ததால் சூட்கேஸ் வாங்கிய பார்ட்டி டென்ஷனில் இருப்பதாக இன்னொரு லேட்டஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

கண்மணி/kanmani said...

ஐயோ பாவம் அபிஅப்பா ரொம்ப நல்...ல்..வரு..உட்டுடுங்க சிபி...
வேட்டி துண்டோட இமயமலை பக்கம் போறதா 'ரா' பிரிவு தகவல் சொல்லுது .நெஜம்மான்னு கேட்டுச் சொல்லுங்க [நமக்கு போட்டியில்ல ஜாலி]

Anonymous said...

//வேட்டி துண்டோட இமயமலை பக்கம் போறதா 'ரா' பிரிவு தகவல் சொல்லுது .நெஜம்மான்னு கேட்டுச் சொல்லுங்க [நமக்கு போட்டியில்ல ஜாலி]//

சைக்கிள் கேப்புல நீங்களும் எங்க அண்ணனைக் கலாய்க்குறீங்களே தாயீ!

நாமக்கல் சிபி said...

//வேட்டி துண்டோட இமயமலை பக்கம் போறதா 'ரா' பிரிவு தகவல் சொல்லுது .நெஜம்மான்னு கேட்டுச் சொல்லுங்க //

விசாரிச்சேன். ரா பிரிவு தகவல் உண்மைதானாம்.

அந்த வேட்டி துண்டையும் கூட ஒரு சூட்கேஸில்தான் வெச்சி எடுத்துகிட்டுப் போறாராம்.

சென்ஷி said...

சற்றுமுன் கிடைத்த முக்கிய தகவலின் படி அபி அப்பாவை துரத்தியடித்த கண்மனி அக்காவுக்கு ஏதாவது ஒரு ரத்னா அவார்டு கொடுக்க வேண்டியுள்ளதால், எதை அளிப்பது என்று பின்னூட்டத்தில் ஆலோசனை தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொல்கிறேன்...

பி.கு. சிறந்த பட்டத்திற்கு 2 பின்னூட்டங்கள் தரப்படும். அனானிகளுக்கு முன்னுரிமை உண்டு.

டெல்லியிலிருந்து
ஏஜென்சி செய்திக் குறிப்பிற்காக..

சென்ஷி

கண்மணி/kanmani said...

சென்ஷி அடுத்த பதிவு உமக்கு பரிசா குடுத்திடறேன்.இப்படி அபி அப்பாவ நான் துரத்தி அடித்ததா புரளி கெளப்பாதீர்.திருவாளர் திருமதி போட்டியில கூட எதுக்கு வம்புன்னு அவரு ஜெயிக்கட்டும்னு விட்டுக்கொடுத்திட்டோம்.அவரு ரேஞ்சே வேற அப்பூ.இப்படிக்கு அபி அப்பா ன்னு மொக்கை போட்டாக்கூட 100 பின்னூட்டம் வருமில்ல

சேதுக்கரசி said...

//[பிறகுதான் தெரிந்தது ச்சுப்பிரமணி சி.டி ய பிராண்டியிருக்குன்னு]//

பின்ன? நீங்க அதை ஹெல்ப் பண்ணவே அனுமதிக்கலியாமே? :) கலக்கல் பதிவு.

கண்மணி/kanmani said...

வாங்க சேதுக்கரசி மேட்டர் என்னன்னா ஓனிடா டி.வி.டி விளம்பரத்துல வர்ர நாய் சி.டி.ய [தன்னை யாரூம் கவனிக்கலன்னு]பிராண்டும். ஆனாலும் சி.டி. நல்லா ஒர்க் பண்ணும்.நாய் கடுப்பாகும் அது மாதிரி ச்சுப்பிரமணி அவனையும் சன்.டி.வி ஷோவுக்கு கூப்பிடலைன்னு பிராண்டிட்டான்.

அபி அப்பா said...

http://sivamgss.blogspot.com/2007/04/test.html

இப்படிக்கு அபிஅப்பான்னா 100 நமக்கு வருதோ இல்லியோ மேலே உள்ளதை பாருங்க, அப்ப தெரியும்:-))
முடிஞ்சா அங்க உங்க பங்கு கருத்தையும் சொல்லிடுங்க:-)))

கண்மணி/kanmani said...

அபி அப்பா நீங்களும் கீதா மேடமும் ஒரு ? குறி போட்டாக்கூட பின்னூட்டம் குவிஞ்சிடும்.நாம அப்படியா?

delphine said...

என்ன சொல்ல? சிரிச்சு சிரிச்சு வயிரு வலியே வந்துட்டதுங்க..

கண்மணி/kanmani said...

ரொம்ப நன்றி டெல்ஃபின் மேடம் .you made my day.எல்லாப்பதிவுகளையும் இன்னைக்குத்தான் படிச்சீங்களா?ஒவ்வொன்னுக்கும் கமென்ட் போட்டு ரசிச்சதுக்கு தேங்ஸ்.

காட்டாறு said...

அங்க போற எல்லா தம்பதிகள் வீட்டுலும் இப்படித்தான் நடக்குமான்னு சந்தேக வந்துருச்சி. தெரிஞ்சவங்க யாராது தெளிவுபடுத்துங்கப்பா.

கண்மணி, இதுவும் கலக்கல்.

கண்மணி/kanmani said...

காட்டாறு தங்கச்சி பெரும்பாலான தம்பதிகள் வீட்டுலயும் இந்தக் கூத்துதான்.

CVR said...

போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!! :-)

Arunkumar said...

போட்டியில கலக்கிட்டீங்க.
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

ஷைலஜா said...

வாழ்த்துகள் கண்மணி பரிசுக்கு!
ஷைலஜா

கண்மணி/kanmani said...

நன்றி ஷைலஜா,arunkumar,cvr
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
இது போன்ற ஊக்கமளிப்பு இனியும் தொடர்ந்து பல புதிய பதிவர்களை ஊக்கப் படுத்த வேண்டும்.

துளசி கோபால் said...

டிசைனர் புடவையா?

டிவியிலே இப்படியெல்லாம் வேற நடக்குதா?

பேசாம 'சன்' வாங்கிரட்டுமா?

கண்மணி/kanmani said...

அடடா அக்கா கோபால் சாருக்கு செலவுக்கு வழி பண்ணிட்டேனா?நீங்க சன் டிவீ பார்க்க ஆரம்பிச்சா சார்தான் பாவம்.டிரஸ்ஸுக்கும்,நகைக்குமே சரியாயிருக்கும்.

cheena (சீனா) said...

அரை மணி நேரம் தங்க, ரங்க மணிகளை தொலைக்காட்சிலே காமிக்குறான்னா, 15000 செலவழிக்கலாம் - தப்பில்ல

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)