வெட்டித் தம்பிக்குப் பரிசாக
இந்த டெல்லி கோ.மா.[ கோக்கு மாக்கு] சித்தப்பூ பதிவு.
நேத்துத்தான் மெயில் வந்தது டெல்லி சித்தப்பாக் கிட்டயிருந்து.இன்னும் நாலு நாளைக்குள்ள இங்க வர்றாராம்.விஷயம் தெரிஞ்சதிலிருந்து ரங்கமணி கடுகடுன்னு இருக்கார்.ரங்கமணி அம்மாவும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.
ரங்கமணி கண்டிஷனாச் சொல்லிட்டார் பிச்சுவையும்,கிச்சுவையும் அவரு வந்து போறவரைக்கும் அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பறதுன்னு.ஆனா ரெண்டும் முடியவே முடியாது டில்லித் தாத்தாவ பாத்தே தீருவோம்னுட்டு அடம்.
சரி எப்படியோ போங்க உங்க நேரம் சரியில்லை நான் ஆபிஸ் வேலையா பெங்களூர் போகப்போறேன். புள்ளைங்கள அவருகூட அதிகம் பழக விடாதேன்னார்.
எனக்கு கோபம் கோபமாக வந்தது சித்தப்பூவ இப்படிப் பேசறாங்களேன்னு.ஆனாப்பாருங்க அவரு குணத்தப் பத்திக் கேட்டா சரிதான்னு தோணும்.
என்னடா பீடிகை பலமாயிருக்கே அவரு என்ன புலியா சிங்கமான்னு கேக்கறீங்கதானே.அதுங்ககூட இவரு அளவு சேட்டை பண்ணாதுங்க.
சித்தப்பூ சின்னவயசிலேர்ந்தே இப்படித்தான்னு எங்கப்பா சொல்லுவாங்க.எதையும் வித்தியாசமா செஞ்சிப் பாக்க நினைச்சி அவரு செய்யறது மத்தவங்களுக்கு கிண்டலா இருக்கும்.
ஒரு நாளைக்கு பிரஷ் வச்சி பல்லு தேய்ப்பார்.ஒரு நாள் பல்பொடி யூஸ் பண்ணுவார்.மறுநாள் பேஸ்ட்ட பிரஷ்ல வச்சிஅதை ஒரு எடத்துல ஸ்ட்ராங்கா செருகிவச்சிட்டு 'ஈ' ன்னு இளிச்சிகிட்டே வாயை கிட்டகொண்டு போய் மண்டைய ஆட்டி ஆட்டித் தேய்ப்பார்.சோப்பு வாசனையா இருக்கான்னு நாம் மோர்ந்து பாப்போம் அவரு 'டேஸ்டா' இருக்கான்னு தின்னே பார்ப்பார்.
அவரு நாலாப்பூ படிக்கும் போது ஸ்கூல் ஆண்டுவிழாவுக்கு மாறு வேஷப் போட்டியில கலந்துகிட்டாராம்.எல்லாரும் குறத்தி,முருகன்,பாரதியார் ,வீரபாண்டிய கட்டபொம்மன் அப்படின்னு வேஷம் கட்ட இவரு என்னா செஞ்சாருன்னு கேளுங்க.
ஔவையார் போல நரைச்ச விக்கு..கிருஷ்ணர் போல நாமம்..பாரதியார் கோட்டு..திருவள்ளுவர் தாடி..எம்.ஜி.யார் கூலிங் கிளாஸ்..கீழே குறத்தி பாவாடையோட ஒரு கையில காந்தி தாத்தா தடியும் இன்னொரு கைல இராமர் வில்லும் வச்சிகிட்டு ,
'வரி வட்டி,திரை,கிஸ்தி..எங்களோடு வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா? மாமனா?..மச்சானா?..மானங்கெட்டவனேன்னு' கட்டபொம்மன் வசனம் பேச அத்தனை பேரும் சிரித்த சிரிப்பில் ஆடிட்டோரியமே ஆடிப்போனதாம்.பெருமையாச் சொல்லுவார் .முதல் பரிசு கிடைத்தது வேறு அவருடைய கிறுக்குத்தனத்தை மேலும் வளர்த்து விட்டது.
கல்யாணம் பண்ணா திருந்துவார்னு எங்க தாத்தா பொண்ணு பாக்க இவரப் பத்தி தெரிஞ்சவங்க பொண்ணுகுடுக்கல. எப்படியோ சித்தியப் புடிச்சி கல்யாணம் பண்ண அங்கியும் கழுத்துல தாலி கட்டறதுக்கு பதில் கையில் கட்றேன் முதுகுல கட்றேன்னு முரண்டுபண்ண மாமனார் வீராச்சாமி மாதிரி அறுவாள தூக்குனதுக்கு அப்றம்தான் ஒழுங்கா தாலி கட்டுனார்.
பொங்கலுக்கு பட்டாஸு வெடிப்பார்.தீபாவளிக்கு கேக் வெட்டுவார்.கிறுஸ்துமஸ் அன்னிக்கு கொலு வைப்பார்.
ஆரம்பத்துல பயந்துபோன சித்தியும் அவரு புள்ளைங்களும் பிறகு திருத்த முடியாத கேஸுன்னு கண்டுக்காம விட்டுட்டாங்க எப்பவாச்சும் ரொம்ப எடக்கு மடக்கு பண்ணா சித்தி அவங்க அப்பா குடுத்த அரிவாளக் காட்டினா அடங்குவாரு..
[சித்தியோட சீர் வரிசையில் அரிவாள் தான் மெயின்]
புத்தகத்தை கண்ணாடி முன்னால வச்சிட்டு தலை கீழா நின்னு படிப்பார்.டி.வி.டியில முழுப்படத்தையும் கிளை மாக்ஸிலிருந்து ரீவைண்ட் செய்து ஓடவிட்டு கிய்ய்யாகிய்முய்ய்யா ன்னு ரீவைண்ட் சத்தத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்.
ரெண்டு வருஷம் முன்னாடி இங்க வந்தவரு அப்படித்தான் வாக்கிங் போகும் போது நாய்க்கு பதிலா [அப்ப ச்சுப்பிரமணி வரல்ல]ஒரு கோழி கழுத்துல கயித்தக் கட்டி அழைச்சிட்டுப் போனார். பக்கத்து வீட்டு நாய்க்கு பாட்டுச் சொல்லித்தரேன்னு அதுகிட்ட போயி 'ச..ரி..க..ம..ன்ன அது வள்ளுன்னு புடுங்கி வச்சது.ஒரு மாசத்துக்கு அம்புஜம் மாமி எல்லோருக்கும் நேர்லயும்,போன்லயும் சொல்லிச் சொல்லி மானத்த வாங்கினா.
மோர் சாதத்துக்கு ஜாங்கிரி தொட்டுப்பார்.உப்புமாவுல சிக்கன் போட்டு சமைக்கச் சொல்லுவார். மீன் போட்டு ரசம் வக்கச் சொல்வார்.
ஊறுகாய் மட்டுமே புல்மீல்ஸ் கணக்கா சாப்பிடுவார்.
ஏன் சித்தப்பா இப்படி பண்றீங்கன்னா ரொட்டீனா எதுவும் செஞ்சா போர் அடிச்சிடும் அதான் வித்தியாசமா டிரை பண்றேன்னு கூலாச் சொல்லுவார்.இப்படி வித்தியாசமா செய்யறதுனால நான் ஒன்னும் வியர்ட்டு இல்ல அப்படிப் பார்த்தா ஜி. டி நாயுடுல இருந்து தாமஸ் ஆல்வா எடிசன் வரைக்கும் புதுசு புதுசா கண்டுபிடிச்சிருப்பாங்களான்னு கேட்டு தன்னை ஏதோ ஒரு விஞ்ஞானி ரேஞ்சுக்கு நெனச்சுக்குவார்.
இதுக்கு முன்னால கிச்சுவும்,பிச்சுவும் சின்னப் புள்ளங்க அதானால அவரு சேட்ட புரியாமா இருந்தது.இப்ப வளர்ந்துட்டதால அவரப் பாத்து இதுங்களும் எடக்கு மடக்கா கிறுக்குத்தனம் பண்ணுங்களோன்னுதான் ரங்கமணிக்கு கவலை.
ஒரு சுபயோக சுபதினத்தில் சித்தப்பா வந்து சேர்ந்தார்.வாங்கன்னு சந்தோஷமாக் கூப்பிட்டாலும் மனசுக்குள்ள பயம்தான்.இவரு அடிக்கிற கூத்துல புள்ளங்க மட்டுமில்ல ச்சுப்பிரமணியும் லூசாயிடுமோன்னு பயம்.
ஆனாப் பாருங்க வந்ததிலிருந்து சித்தப்பூ சேட்டை பண்ணாம அமைதியாவே இருந்தார்.தாத்தா ஏதாச்சும் டிபரண்ட்டா பண்ணுங்கன்னு இதுங்க நச்சரிக்க நோ நோ சமர்த்தா அம்மா சொல்றபடி நடங்கன்னு அட்வைஸ் வேறு.எனக்கு மயக்கம் வராத குறைதான்.
அவரப் பாக்க வந்த அம்புஜம் மாமியும் மேட்டர் ஒன்னும் கிடைக்காத எரிச்சலில் ,''ஏங்க உங்களுக்கு ஏதானும் உடம்பு சரியில்லையான்னு''அவர்கிட்டயே கேட்டார்.
கிறுக்குப் பண்ணும்போது ஊர் முழுக்க 'லூசு'ன்னு சொல்ல வேண்டியது ஒழுங்கா இருந்தா 'உடம்பு சரியில்லையான்னு' சந்தேகம் இந்த மாமிக்கு என்று எரிச்சல் பட்டாலும் நானும் இன்னைக்கு ,நாளைக்கு அவரு வேலையைக் காட்டப் போறாருன்னு எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாற சித்தப்பூ 'நல்ல அப்பூ' வாக ஊருக்குத் திரும்பிப் போயே போய் விட்டார்.
ரங்கமணி ஆபிஸ் டூர் முடிச்சு வந்ததும் முதல் வேலையா இதைச் சொல்ல
நமட்டுச் சிரிப்பூ சிரித்தார் மனுஷன்.
சித்தப்பூ ஆபிஸ் எம்.டியும் ரங்கமணி ஆபிஸ் எம்.டியும் சொந்தமாம்.ரங்கமணி அவரோட எம்.டி மூலம் சித்தப்பூ எம்.டி கிட்ட சொல்ல,அவரும் ஊருக்குப் போயி எந்த கிறுக்குத்தனமும் பண்ணாம வரணும்னு உத்தரவு போட்டாராம்.புரமோஷனை எதிபார்த்துக் கொண்டிருக்கும் சித்தப்பூவும் பொட்டிப் பாம்பாக அடங்கிப் போயிருக்கிறார்.
எப்பவாச்சும் இப்படி சமர்த்தா யோசனை பண்ணும் ரங்கமணியை பாராட்டினாலும் புள்ளைங்க ஏமாந்ததை நினைச்சா கஷ்டமாயிருக்கு.
நீங்களும் தானே?
[பி.கு:சித்தப்பூ டெல்லியிலிருந்து வந்ததால் சென்ஷிக்கு இந்தப் பதிவு குடுக்கவில்லை.சென்ஷியும் சித்தப்புவும் நல்ல்லலல பிரண்ட்ஸாம்.சித்தப்புவச் சொன்னா சென்ஷிக்கு கோபம் வருமே அதான்.நெக்ஸ்ட் இஸ் யுவர்ஸ் சென்ஷி]
PAGE LOAD TIME
வகை*
டெல்லி சித்தப்பூ
Subscribe to:
Post Comments (Atom)
Labels
reverse/flip text விளையாட்டு
(1)
test
(1)
அனுபவம்
(12)
உரையாடல்-கவிதை--போட்டிக்கு
(3)
உலகம்
(6)
எப்ரல் 1
(1)
கண்மணி
(9)
கருத்து கந்தசாமி
(4)
கலாய்ப்பு
(5)
கவிதை
(32)
கவிதை--போட்டிக்கு
(1)
கிசு கிசு
(2)
கிசுகிசு
(2)
குறும்படம்
(2)
சிறுகதை
(2)
சிறுகதை-போட்டிக்கு
(1)
சுட்ட மொக்கை
(1)
சுப்பிரமணி
(4)
செய்தி
(6)
செய்தி விமர்சனம்
(6)
சோதிடம்
(1)
டி.வி.விமர்சனம்
(1)
டி.விவிமர்சன.ம்
(1)
டெல்லி சித்தப்பூ
(1)
டோண்டு
(2)
தகவல் தொழில்நுட்பம்
(1)
தமிழ் நயம்
(4)
தமிழ் மணம்
(1)
தமிழ்மணம்
(6)
திரை விமர்சனம்
(2)
தேர்வு டிப்ஸ்
(1)
தொடர் விளையாட்டு
(3)
நகைச்சுவை
(7)
நட்சத்திரம்
(13)
நித்தியா
(1)
நையாண்டி
(8)
படம் காட்டுதல்
(6)
பதிவர் வட்டம்
(4)
பயணம்-1
(1)
புதிர்
(2)
புலிநகம்
(1)
மகளிர்
(3)
மகளிர் தினம்
(1)
மாமா
(3)
மாமி
(5)
முதுமை
(2)
மொக்கை
(17)
ரீமிக்ஸ் பாடல்கள்
(1)
ரெண்டு போட்டிக்கு
(1)
வாலண்டைன்ஸ் டே
(4)
வாழ்க்கை
(1)
வாழ்த்து
(3)
வியர்டு
(1)
விவாதம்
(5)
விழிப்புணர்வு
(3)
விழிப்புணர்வு மீள்பதிவு
(1)
விழிப்புணர்வு/அனுபவம்
(1)
வெட்டி ஆராய்ச்சி
(1)
43 மறுமொழிகள்::
யக்கோவ் அவரு உங்க சித்தப்புவா அபிசித்தப்புவா?
இந்த பதிவை சென்ஷிக்கு தர்ரேன் என்று சொன்னீர்களே கண்மணியக்கா.. வெட்டியண்ணனுக்கு கொடுத்துட்டீங்களே? ;-)
டெம்லேட் மிக அழகாக இருக்கின்றது. ;-)
//புள்ளைங்க ஏமாந்ததை நினைச்சா கஷ்டமாயிருக்கு.
நீங்களும் தானே?//
ஆமாங்க.. என்ன கூத்து பண்ணினாரோன்னு கடைசிவரைக்கும் மூச்சு விடாம வேகமா படிச்சு வந்து பார்த்தால், ஒரு மேட்டரும் இல்லாம போச்சு.. :-(
அடுத்த தடவை உங்க சித்தப்புவை இயல்பா இருக்க சொல்லுங்க. நீங்களும் அதை தொடரா எழுதலாம். ;-)
நல்ல தொடர் பதிவாய் வர வேண்டிய சித்தப்பூவின் வருகையை ஒரு பதிவாக மாற்றிய ரங்கமணிக்கு என் கண்டனங்கள்.
//
.:: மை ஃபிரண்ட் ::. said...
இந்த பதிவை சென்ஷிக்கு தர்ரேன் என்று சொன்னீர்களே கண்மணியக்கா.. வெட்டியண்ணனுக்கு கொடுத்துட்டீங்களே? ;-)//
ஆ...ஆனந்த கண்ணீரா வருது
என்மேல இவ்ளோ பாசம் வச்சிருக்கற மை பிரண்டு, உங்க சார்பா இந்த பின்னூட்ட ஸ்மைலிய போட்டுடறேன்..
:))
சென்ஷி
//பி.கு:சித்தப்பூ டெல்லியிலிருந்து வந்ததால் சென்ஷிக்கு இந்தப் பதிவு குடுக்கவில்லை.சென்ஷியும் சித்தப்புவும் நல்ல்லலல பிரண்ட்ஸாம்.சித்தப்புவச் சொன்னா சென்ஷிக்கு கோபம் வருமே அதான்.நெக்ஸ்ட் இஸ் யுவர்ஸ் சென்ஷி] //
ம்ஹூம்.. நல்ல மனுசன இப்படியெல்லாம் பழிவாங்குறது நல்லாவா இருக்குது..
அவர்கிட்ட எனக்கு பிடிச்சதே...
//சோப்பு வாசனையா இருக்கான்னு நாம் மோர்ந்து பாப்போம் அவரு 'டேஸ்டா' இருக்கான்னு தின்னே பார்ப்பார்.//
இந்த மேட்டர் தாங்க. எத்தன சோப்பு கம்பெனி இவரால வாழுது தெரியுமா :)
சென்ஷி
//மோர் சாதத்துக்கு ஜாங்கிரி தொட்டுப்பார்.//
நான் நெசமாவே இப்டி செய்வேன், அப்போ தங்கமணி ஒரு புழுமாதிரி என்னை பார்க்கும் ஸ்டைலே அழகுதான் போங்க:-)))
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
இந்த பதிவை சென்ஷிக்கு தர்ரேன் என்று சொன்னீர்களே கண்மணியக்கா.. வெட்டியண்ணனுக்கு கொடுத்துட்டீங்களே? ;-)\
பிரண்ட் எங்க உங்களோட வழக்கமான பின்னூட்டம் ;-))) அப்புறம் உங்க கேள்விக்கு தான் கண்மணிக்கா பி.கு.வில் பதில் சொல்லியிருக்காங்களே... ;-)
\\ புள்ளைங்க ஏமாந்ததை நினைச்சா கஷ்டமாயிருக்கு.
நீங்களும் தானே?\\
அக்கா ஓவர் ஆணியாக்கா? கொஞ்சம் ஏமாந்துட்டேன் ;(
அப்புறம் டெம்லேட்டுல ஒரு பெண்னை அடச்சிவச்சுருக்கிங்க யாருக்கா அது?
\\[பி.கு:சித்தப்பூ டெல்லியிலிருந்து வந்ததால் சென்ஷிக்கு இந்தப் பதிவு குடுக்கவில்லை.சென்ஷியும் சித்தப்புவும் நல்ல்லலல பிரண்ட்ஸாம்.சித்தப்புவச் சொன்னா சென்ஷிக்கு கோபம் வருமே அதான்.நெக்ஸ்ட் இஸ் யுவர்ஸ் சென்ஷி]\\
சென்ஷி இது இன்னாய்யா புதுக்கதை.......சித்தப்பா சீக்கிரம் வாப்பா ;-)))
எப்போதும் எதாவது வித்தியாசம் பண்ணிடுவார்ன்னு நினைச்சீங்களா அதான் இந்த தடவை எதும் பண்ணாம அவர் குணத்துக்கு வித்தியாசமா நடந்துக்கிட்டார்..அவர் மாறல.
ஹல்லோ மை பிரண்ட் டெம்ப்ளேட் அழகா இருக்கு ஆனா சீக்கிரம் ஓப்பன் ஆகாம படுத்துது.
சித்தப்பூ பண்ணது போதாதா இன்னுமா?
கொத்ஸ் தொடர் பதிவா வேணும்?நான் என்ன அரசியல் அல்லது பார்ப்பனீயம் எழுதறனா?எனக்கு ஏங்க மைனஸ் குத்து. கண்மணி ஏதோ கூத்தடிச்சா நீங்க அபி அப்பா கோபி சென்ஷி மை பிரண்ட் மாதிரி கொஞ்சம் பேர் பின்னூட்டமிடுறீங்க.எனக்கும் எதிரியா?
வருத்தமாயிருக்கு.இருந்தாலும் ஐ டோன்ட் கேர்
வாங்க முத்துலட்சுமி.நீங்க சொன்ன மாதிரி சும்மாயிருந்து சாதனை பண்ணிட்டாரு சித்தப்பூ
கோபி உம்ம அக்காவப் பாத்து யாரோ வயித்தெரிச்சப் படறாங்க அப்பூ.நமக்கு ஒரு எதிரியா ?அதான் டெம்ப்ளேட்டுக்குள்ள அடஞ்சிக்கிட்டேன்.
//மோர் சாதத்துக்கு ஜாங்கிரி தொட்டுப்பார்.//
எங்க இதை நீங்க டிரை பண்ணியது கிடையாதா? பாயாசத்துக்கு உருளை வறுவல் ரொம்ப சூப்பரா இருக்கும், அதை அவர்கிட்ட சொல்லவும்.
//ஊறுகாய் மட்டுமே புல்மீல்ஸ் கணக்கா சாப்பிடுவார்.//
இது எல்லாம் ரொம்ப சாதரணம்ங்கோ...
//வருத்தமாயிருக்கு.இருந்தாலும் ஐ டோன்ட் கேர் //
வருத்தமா.... கூடவே கூடாது... அதுவும் நீங்கள் கண்டிப்பாக கூடாது....
ஸ்மைல் ப்ளிஸ்......
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்...
அய்யோ அபிஅப்பா கோபி யாராச்சும் வாங்களேன்..சித்தப்பு பதிவு படிச்சி 'தம்பி'க்கு என்னமோ ஆயிட்டுது.சாமி பாட்டெல்லாம் பாடுது ஏன்னு கேளுங்க.
//எப்போதும் எதாவது வித்தியாசம் பண்ணிடுவார்ன்னு நினைச்சீங்களா அதான் இந்த தடவை எதும் பண்ணாம அவர் குணத்துக்கு வித்தியாசமா நடந்துக்கிட்டார்..அவர் மாறல. //
முத்துலெட்சுமி, கலக்கிட்டீங்க... இந்த கலக்குறது... கதை எழுத ஆரம்பிச்சதுல இருந்து தானா.... இல்ல பிறப்புலேவா? :)))))
ரொம்ப ஏமாந்திட்டேன் கண்மணி. அடுத்தமுறை சித்தப்பூவ சித்தப்பூவா இருந்தா மட்டும் வீட்டுக்குள்ள ஏத்துங்க. பாருங்க மாமிக்கு கூட ஏமாத்தமா போச்சி.
யக்கா வழக்கம் போல கலக்கி இருக்கீங்க.
//சோப்பு வாசனையா இருக்கான்னு நாம் மோர்ந்து பாப்போம் அவரு 'டேஸ்டா' இருக்கான்னு தின்னே பார்ப்பார்.//
கேட்கும் பொழுதே எனக்கு வாயல நுரை தள்ளுது. :)) நம்ம கொத்ஸ் சொன்ன மாதிரி தொடரா வரவேண்டியதை சிம்பிளா முடிச்சிடிங்க இப்ப கூட ஒண்ணும் கெட்டுப்போகலை கீழ ஒரு தொடரும் போட்டிங்கண்ணா தொடர்ந்துகலாம் :)).
கண்மணி இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. நான் சாம்பார் சாதம் செய்ய சமயற்குறிப்பு எழுதினாக்கூட மைனஸ் குத்தும் உலகம் இது.
உங்க பின்னூட்டத்தைப் படிச்சு ஒரு நிமிஷம் நாந்தான் மைனஸ் குத்தினோம் எனச் சொல்ல வறீங்களோன்னு பயந்துட்டேன்.
//நான் என்ன அரசியல் அல்லது பார்ப்பனீயம் எழுதறனா?// என்ன இது? அதுக்கு மட்டும்தான் தொடரா? சிரிப்புக்கும் தொடர் போடுங்க. நம்ம ஆதரவு அதுக்கு கட்டாயம் உண்டு.
தேங்ஸ் சந்தோஷ் அன்ட் கொத்ஸ்
நேரமிருந்தால் தொடர் நகைச்சுவையும் போட்டுடலாம். யாரிடமும் பயமில்லை வருத்தம் மட்டுமே.
அன்புநண்பர் கோபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தம்பி என்னய்யா குழப்பிகிறீர்.கோபித்தம்பிக்கு பிறந்த நாளா?அவரு பதிவுல சொல்லாமே என் பதிவுல ஏன்?ரெண்டு நாளா ஒரு மார்க்கமாவே பின்னூட்டம் போடுறீர்.அதுசரி இங்கயே வெயில் மண்டையப் பொளக்குது அங்க கேக்கனுமா எதுக்கும் அப்பப்ப லெமென் தேச்சுக்கங்க.
கோபி பிறந்தநாளா
அக்காவின் வாழ்த்துக்கள்.
ஹேப்பி பர்த் டே கோபி
ட்ரீட் எப்போ?
சென்ஷி
ரொம்ப , மிக நல்லா இருக்குங்க..
மேடம் நீங்க என் பதிவுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.உங்க பதிவுகள் பாத்து உங்களைப் பற்றியும் சார் [மாசிலாமணி]பற்றியும் தெரிந்து கொண்டேன்.கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்களின் அன்பு எங்களுக்கும் உரித்தாகட்டும்.
கோபிக்கு பொறந்த நாளா?
தம்பி மறுபடியுமா ??
:)
கண்மணி உங்க பதிவ நான் ஆபீஸ் ல படிக்கிறது இல்ல வெறும் பின்னூட்டம் மட்டும்தான் ..நான் கொஞ்ச நாள் இங்க காலந்தள்ள வேண்டி இருக்கிறதால :)
அய்யனார் ப்ளீஸ் நீங்களாச்சும் சொல்லுங்க இங்க என்ன நடக்குதுன்னு.தம்பியோட பின்னூட்டமெல்லாம் மர்மமாயிருக்கு.முதல் பின்னூட்டத்துல கந்தன் பாட்டு.ரெண்டாவதுல கோபி பர்த்டே மேட்டர்.என்னை வம்புல இழுக்காதீங்க உங்க ஆட்டைக்கு நான் வரலை.
பை த பை என் பதிவு படிக்கிறதில்லை..இன்னும் கொஞ்சநாள் காலம் தள்ளனும் என்றால் என்ன அர்த்தம். நமக்கு இந்த உள் குத்து மேட்டர்லாம் புரியாதுங்கோ.என் பதிவு புடிக்கலைன்னா ப்ளீஸ் படிக்காதீங்க.
//
இன்னும் கொஞ்சநாள் காலம் தள்ளனும் என்றால் என்ன அர்த்தம். நமக்கு இந்த உள் குத்து மேட்டர்லாம் புரியாதுங்கோ.என் பதிவு புடிக்கலைன்னா ப்ளீஸ் படிக்காதீங்க.
///
ஹி ஹி ஹி ஹி ஹி
இப்படி சிரிச்சா ஆணி புடுங்க முடியுமா...???
::)))
/நமக்கு இந்த உள் குத்து மேட்டர்லாம் புரியாதுங்கோ.என் பதிவு புடிக்கலைன்னா ப்ளீஸ் படிக்காதீங்க./
யாரோ என் நலம் விரும்பி வேற பேர்ல அழகா சொல்லிட்டார்..அனானி வாழ்க!!
கண்மனி என்ன இப்படி சொல்லிடிங்க உங்களுக்காக துபாய் கிடேசன் பார்க் ஐ ஒட்டி ஒரு ரசிகர் மன்றத்தை ஆரம்பிச்சி அதுக்கு கவுரவ தலைவரா அபி அப்பாவ நியமிச்சி பொது சேவை செய்துட்டு வரேன் ..இப்படி சொல்லிட்டிங்களே
ஆணி புடுங்குற எடத்துல எசகு பிசகா சிரிச்சி மாட்டி ஏற்கனவே எம்மேல இருக்குற அபாண்டமான பழிகளோட இதயும் add பண்ணிக்கனுமா ன்னுதான்
மத்தபடி உங்களோட தீவிர ரசிகன் ல நானும் ஒருத்தன்
:)
அதுஒண்ணுமில்லைங்க கண்மணியக்கா!
நேத்து கோபிய பாத்தேன் அவரோட வியர்டு பதிவு நல்லா இருக்குன்னு பாராட்டினேன். அதுல சொல்லாம விட்ட ஒரு வியர்ட என்கிட்ட சொல்லுப்பான்னு சொன்னேன்.
அதுக்கு அவர் சொன்னாரு...
யாராச்சும் என்னை வாழ்த்திகிட்டே இருந்தாங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி எல்லார்கிட்டயும் பொய் சொல்லி வாழ்த்து வாங்குவேன் இதான் முக்கியமான வியர்டுன்னு சொன்னாரு.
சரி அவர் மேல பாசம் வச்சிருக்க கூட்டம் இங்கதான இருக்கு இங்க எதாச்சும் சொன்னா வாழ்த்து மழை பொழியுதான்னு டெஸ்ட் பண்ணேன்.
ஒர்க் அவுட் ஆச்சி :)))
அப்படியே கவிதை எழுதி தாளிச்சிட்டிங்களே :))
சாரி பார் த டிஸ்டர்பர்ன்ஸ்.
எலே தம்பி எங்கிட்டயே குசும்பா இப்ப பாரு இந்த அருள் வாக்கு அம்மிணி சாபத்தை....
இனிமே உமக்கு கனவுல 'பாவனா' வரமாட்டா 'சொர்ணாக்கா' தான் .
அடுத்த சித்திரை வரை உமக்கு நித்திரை கிடையாது.
வாங்க அய்யனார்.இதுதான் உங்க முதல் பின்னூட்டம் இதுல ரசிகர்மன்றன்,தீவிர ரசிகன்னு ...சாமி ..அபிஅப்பா இதுல கௌரவ தலைவர்...சாமி ஆளை வுடுங்க.
ஆகா....கொஞ்சம் ஆணியை புடிங்கிட்டு வறதுக்குள்ள இங்க மொத்த கும்மியும் என்னையை பத்தி தானா!!!
\\தம்பி said...
அதுஒண்ணுமில்லைங்க கண்மணியக்கா!
நேத்து கோபிய பாத்தேன் அவரோட வியர்டு பதிவு நல்லா இருக்குன்னு பாராட்டினேன். அதுல சொல்லாம விட்ட ஒரு வியர்ட என்கிட்ட சொல்லுப்பான்னு சொன்னேன்.
அதுக்கு அவர் சொன்னாரு...
யாராச்சும் என்னை வாழ்த்திகிட்டே இருந்தாங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி எல்லார்கிட்டயும் பொய் சொல்லி வாழ்த்து வாங்குவேன் இதான் முக்கியமான வியர்டுன்னு சொன்னாரு.
சரி அவர் மேல பாசம் வச்சிருக்க கூட்டம் இங்கதான இருக்கு இங்க எதாச்சும் சொன்னா வாழ்த்து மழை பொழியுதான்னு டெஸ்ட் பண்ணேன்.
ஒர்க் அவுட் ஆச்சி :)))
அப்படியே கவிதை எழுதி தாளிச்சிட்டிங்களே :))
சாரி பார் த டிஸ்டர்பர்ன்ஸ்.\\
அடப்பாவி...என்ன இதெல்லாம்....நேத்து போன் பண்ணி நாளைக்கு கண்மணிக்கா பதிவுக்கு சீக்கிர்ம போய் பார்ன்னு சொன்னியே அது இதுக்கு தானா?
\\இனிமே உமக்கு கனவுல 'பாவனா' வரமாட்டா 'சொர்ணாக்கா' தான் .
அடுத்த சித்திரை வரை உமக்கு நித்திரை கிடையாது.\\
அக்கா இந்த சாபம் தம்பியை ஒன்னும் பண்ணாது. ஏன்னா இப்போது எல்லாம் அவருக்கு நைட்டு சிப்டு தான். வேற ஏதவாது நல்ல சாபமாக கொடுங்க ;-)))
ஆஹா கண்மணி அக்கா,
எனக்கு தந்த பதிவ 41 போட்டு நானே தூக்கறனே...
இதுல நீங்க சொல்றது தொல்ஸ் அண்ணனதான்னு நல்லா தெரியுது. அவரும் அப்பாவி மாதிரி வந்து வாக்கு கொடுத்துட்டு போயிட்டாரு :-)
இத நம்ம கொத்ஸ் சொல்ற மாதிரி ஒரு தொடரா வெச்சிருக்கலாம்... அவ்வளவு நல்லவரா இருக்காரு நம்ம சித்தப்பூ :-)
நகைச்சுவைத் திலகம் கண்மணி - பல்லு விளக்குறதும் சோப்பு மோந்து பாக்குறதும், பண்டிகைகள் கொண்ட்டாடுறதும், வாக்கிங் போறதும், நளபாக சமையலும் - அய்யொ அய்யோ தாங்கல - கோ.மா பணர் - அடிக்குற - கூத்து - ஜி.டி.நாய்டுவா - ம்ம்ம்ம்ம்ம்ம்
பாராட்டுகள்
Post a Comment