PAGE LOAD TIME

54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க

உளுந்துவடை..மசால்வடை.. .ஆமவடை... தவளவடை. தெரியும் அது இன்னா சொலவடைன்னு கேக்கறீங்களா?சொல்றேன்

தேவையான பொருட்கள்:


யோசிக்க விரும்பும் மண்டை:ஒன்று
செலவழிக்க :கொஞ்சம் நேரம்
தேவை :அதிக பொறுமை
தவிர்க்க வேண்டியது:எரிச்சல்[இதுக்கா இந்த பில்டப்புன்னு]
தேவையானால் [ஆப்ஷனல்]:கொஞ்சம் மூளை யோசிக்க[அய்யே ஆட்டு மூளை இல்லீங்க]
விருப்பமானால்:முயற்சிக்கலாம்
விரும்பாவிட்டால்:கழட்டிக்கலாம் போட்டியிலிருந்து
முடிவு:40 பின்னூட்டத்திற்கு பொறவு அறிவிக்கப்படும்.அய்ய இல்லாட்டி நாம எப்டி பொழக்கறது.

சொலவடைன்னா..விடுகதை
ரெடி ஸ்டார்ட்:

1.கடல் நீரில் பிறந்தானாம் வெள்ளையப்பன்
மழை நீரில் மறைந்தானாம் வெள்ளையப்பன்......அவன் யார்?

2.உயர்ந்த இடத்தில் பிறந்தானாம்
ஒரு ஜாணு மனுஷன்
ஒரு ஜாணு மனுஷனுக்கு
அரை ஜாணு குடுமி...............அவன் யார்?

3.மூடித் திறக்கும் பெட்டி
முத்திருக்கும் பெட்டி
பாட்டுப் பாடும் பெட்டி
பாம்பிருக்கும் பெட்டி...............அது என்ன பெட்டி?

4. காகிதத்தைப் பார்த்தாலே குட்டியக்கா
கண்ணீரு வுடுவாளே குட்டியக்கா
முக்காடு போட்டிருப்பா குட்டியக்கா
சொருக குச்சி வச்சிருப்பா குட்டியக்கா......அவள் யார்?

5. மரம் போல வளர்ந்திருக்கும்
வேர் இருக்காது
கிளையிருக்கும் கிளைதனிலே
இலை இருக்காது..................அது என்ன?

கண்மணியக்காவுக்கு காமெடி மட்டும்தான் தெரியுமா? புதிரும் போட்டுப் பார்ப்பமேன்னு தான்
40 பின்னூட்டம் வந்தாதான் விடை சொல்லுவேன்.

44 மறுமொழிகள்::

நாமக்கல் சிபி said...

1. உப்பு

2. தேங்காய்

கண்மணி said...

போட்டின்னா சிபி முன்னாடி வந்துடுவீங்களே ஓகே மத்த மூணு?
சொன்னாலும் முடிவு 40 க்கு பிறகுதான்

நாமக்கல் சிபி said...

//உளுந்துவடை..மசால்வடை.. .ஆமவடை... தவளவடை//

எனக்கு எலந்த வடை ரொம்ப பிடிக்கும்!

நாமக்கல் சிபி said...

//சொன்னாலும் முடிவு 40 க்கு பிறகுதான் //

40 தானே! இதோ!

மக்கள்ஸ்! இன்னும் 1/4 மணி நேர டார்கெட்டு 40!

ஓகேவா! ரெடி ஒன், டூ, த்ரீ, ஸ்டார்ட் மீசிக்!

இண்ட்ரஸ்ட்டேட் கேண்டிடேட் said...

யோசிக்க விரும்பும் மண்டை : சாரி!
தேவை :அதிக பொறுமை : ரொம்ப சாரி!
தேவையானால் [ஆப்ஷனல்]:கொஞ்சம் மூளை யோசிக்க : ம்ஹும்! (ஆஹா போகாத ஊருக்கு வழி கேக்குறாங்க)

விருப்பமானால்: ஆசையாத்தேன் இருக்கு!

விரும்பாவிட்டால்:கழட்டிக்கலாம் போட்டியிலிருந்து!

அப்பாடா! உடு ஜூட்!

Radha Sriram said...

1) உப்பு

2) தேங்காய்

3) நம்மளோட வாய்

aravindaan said...

4. Pen

aravindaan said...

3. Mouth

VSK said...

1.உப்பு
2.தேங்காய்
3.வாய் [பல், தொண்டை,நாக்கு இவை இருப்பதால்]
4.பேனா
5.டி.வி.அன்டென்னா?? தந்திக்கம்பம்?

துளசி கோபால் said...

என்னமோ 'வடை,ன்ற இனிய சொல் கண்ணுலே பட்டதேன்னு ஆசையோடு பார்க்க வந்தேன்.

சரி வந்ததுக்குத் தெரிஞ்சதைச் சொல்லிட்டுப்போறேன்.

1. உப்பு

2. தேங்காய்

3,வாய்

4. பேனா

5. மனுஷன்

Chinna Ammini said...

1. உப்பு
2. தேங்காய்
3. வாய்
4. தெரு விளக்கு
மத்ததை யோசிக்கணும்.
இதுக்கே மேல் மாடி காலியாய்டுச்சுங்க‌

Chinna Ammini said...

Change the ansewer 4. to 5.
hehe
மேல் மாடி காலி‌

Chinna Ammini said...

Answer for the missing 4. is Kuchi Ice
Correct???

கண்மணி said...

வாங்க ராதா,vsk,அரவிந்தன் 1,2,3,4 வரை கரீட்டு.
5 தான் ரொம்பக் கஷ்டம்.கண்டுபிடிங்க.
துளசியக்கா உங்களுக்கு ரொம்பத்தான் 5.க்கு மனுஷன்னு சொல்றீங்க. மனுஷன் என்ன மரமா?கிளைன்னா கை காலா? அய்யே ....

கண்மணி said...

சின்ன அம்மிணி மேல்மாடி வாடகை விட்டுட்டீங்களா?1,2,3 வரை ரைட்

கண்மணி said...

இன்ட்ரெஸ்ட்டட் கேண்டிடேட்
உம்ம பாத்த பாவமாயிருக்கு இப்படியே சுத்தமா வாஷ் அவுட்டாயிருக்கும் மேல்மாடி அய்யோ அய்யோ...

நாகு (Nagu) said...

40

delphine said...

கடைசியில் இதில் எதுவும் இல்லை என்று எஸ்கேப் ஆகிவிடுவீர்கள் அம்மணி.. கண்மணி..பார்ப்போம்...

துளசி கோபால் said...

இன்னொண்ணு சொல்லவிட்டுப்போச்சு.

இது (சொல) 'வடை கிடை' ஒண்ணும் இல்லீங்க. விடுகதைன்னு சொல்வாங்க.

அபி அப்பா said...

சகோதரி கண்மணி! ஒரு யோசனை, நீங்க பதில் சொன்னவங்க பதிலை பப்ளிஷ் பண்ணாதீங்க, ஏன்னா கோபிதம்பி எல்லாத்துக்கும் ரிப்பீட்டேன்னு போட்டுட்டு பரிசு வாங்கிட்டு போயிடுவான், ஆமா பரிசு உண்டுல்ல:-))

கோபிநாத் said...

சீக்கிர்ம 40 போடுங்கப்பா......

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
சகோதரி கண்மணி! ஒரு யோசனை, நீங்க பதில் சொன்னவங்க பதிலை பப்ளிஷ் பண்ணாதீங்க, ஏன்னா கோபிதம்பி எல்லாத்துக்கும் ரிப்பீட்டேன்னு போட்டுட்டு பரிசு வாங்கிட்டு போயிடுவான், ஆமா பரிசு உண்டுல்ல:-))\\

அண்ணாத்த இங்க பதில் சொல்லனும்.......இப்படி எல்லாம் என்னை வச்சி காமெடி பண்ணக்கூடாது....அப்புறம் நான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

சென்ஷி said...

கோபித்தம்பிக்கு ஆதரவாக ரிப்பீட்டு சொல்லும் போராட்டம் தற்போது டெல்லியில் தொடங்கியுள்ளது..

ரிப்பீட்டேஏஏஏ :)

சென்ஷி

இலவசக்கொத்தனார் said...

கண்மணி,

இந்த மாதிரி போட்டி வெச்சா விடை வர பின்னூட்டங்களை உடனே வெளியிடாம இருந்தா அடுத்து வரவங்களும் விடை சொல்லப் பார்ப்பாங்க.

(இதுனால 40 வர நேரமாகும். அதுக்குப் பின்னாடி விடை வந்த பின்னூட்டங்களை வெளியிட்டு அதுக்கு ஒவ்வொண்ணா பதில் சொன்னா 100 வரும். இப்படி எல்லாம் நினைச்சு சொல்லலைங்கோ!) :))))

தம்பி said...

//சகோதரி கண்மணி! ஒரு யோசனை, நீங்க பதில் சொன்னவங்க பதிலை பப்ளிஷ் பண்ணாதீங்க, ஏன்னா கோபிதம்பி எல்லாத்துக்கும் ரிப்பீட்டேன்னு போட்டுட்டு பரிசு வாங்கிட்டு போயிடுவான், ஆமா பரிசு உண்டுல்ல:-)) //

ரிப்பீட்டேய்

நான்கூட பதில் சொல்லலாம்னு வந்தேனுங்க ஆனா பாருங்க எல்லா வடையும் சொல்லிட்டாங்க அப்படியே போயிடலாம்னு பாத்தேனுங்க.
கட்சீல மன்சு கேக்கலங்க
ஒரு பின்னூட்டமாச்சும் போட்டு போடான்னு கண்மணியக்கா சொல்ற மாதிரியே இருந்துச்சு.

உண்மைய சொல்லணும்னா ஒரு விடைகூட இந்த மூளையால யோசிக்க முடியல :))

தம்பி said...

பாலாடை எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க

தம்பி said...

பொன்னாடை கூட பிடிக்கும் இதுவரைக்கும் யாரும் போர்த்தினதுல்ல!

சந்தோஷ் aka Santhosh said...

சே நான் சொல்லணும் நினைச்சதை முன்னாடியே சொல்லிட்டாங்க ரீப்பீட்டுன்னு சொல்லாம் அப்படின்னு நினைச்சா அதையும் நம்ம கோபி சொல்லிட்டாரு.

.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கோ,

என் மூளையை நண்பர் ஒருவருக்கு கடன் கொடுத்திருக்கிறேன். அதனால், உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிஅயலைங்கோ. இந்த தங்கச்சிமேலே இரக்கப்பட்டு என் காதில் மட்டும் பதிலை சொல்லுங்கக்கா. :-)

நியாஸ்தன் said...

1.உப்பு
2.தேங்காய்
3பேனா
4.மனிதன்
5.மின்கம்பம்

சிஜி said...

1.உப்பு
2.தேங்காய்
3.வாய்
4.பேனா
5.மின்கம்பம்/ஆண்டெனா

கண்மணி said...

அடடா எல்லோருக்கும் எவ்ளோ பொறுப்புணர்ச்சி.நல்லாவே சிந்தித்து பதில் சொல்லியிருக்கீங்க.கொஞ்சம் பொறுங்க.40 வந்துடுடட்டும்.
மை பிரண்ட் இல்லாதத எப்டி கடன் குடுத்தீங்க.

ஆழியூரான் said...

'பச்சைக் கலர் பெயிண்ட் கடை..
உள்ளப்போனா மைண்ட் தடை்'

-நீங்க முதல்ல இதுக்கு ஆன்ஸர் சொல்லுங்கோ...அப்பால உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லிக்கிறன்..

கண்மணி said...

வாங்க ஆழியூரான்...பாப்பாவுக்கு கன்னம் சரியாயிடுச்சா?
[உங்க புளாக்குல ஊதி ஊதிக் காட்டுமே]
பச்சை ...விளக்கு..கடை..
மைண்ட்...யோசிக்க...தடை...
தண்ணி[சரக்கு] மேட்டர்தானுங்களே?

ஆழியூரான் said...

அந்த பாப்பா ரொம்ப நாளா ஊதிகிட்டே இருந்துச்சா...? கன்னம் வீங்கிப்போயி ீஇப்பம் பெரிய ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கு.

சரக்கு மேட்டரை சரியாக் கண்டுபிடிச்சுட்டீங்களே..

aravindaan said...

5.Kadal Pasi? or Mushroom?

கண்மணி said...

sorry aravindan its hard like a tree with branches w/o leaves not soft material as mushroom.
plz wait tonight im gvng the ans[romba alattareenaa?]

கண்மணி said...

38ல் பதில் சொல்றேனுங்க பொறவு யாராச்சும் ரெண்டு பின்னூட்டம் போட்டு 40 ஆக்கிடுங்க.
பெரும்பாலும் 3 விடை [ஈஸியா இருந்ததால]சொன்னாங்க
வி.எஸ்.கே,துளசியக்கா,அரவிந்தன் 4 விடை சரியாச் சொன்னாங்க.
5.யாரும்யூகிக்கல.மனுஷன்,ஆண்டெனா,தந்திக்கம்பம் எல்லாம் சரி போலத் தோன்றும் தப்பான ஆன்ஸர்ஸ்.
5.மான் கொம்பு
இதுதான் சரியான விடை பரிசாக கொடுக்கவிருந்த ஒரு கிலோ [மாமி வீட்டு] அல்வா திருடு போனதால் யாருக்கும் பரிசு இல்லை.வாழ்க வளமுடன்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

ரெண்டு பின்னூட்டம்தானே!

உங்களுக்காக இந்த இந்த தங்கச்சி பண்ண மாட்டேனா என்ன!!!

இந்த பதிலை போட சொல்லலாம்ன்னுதான் இங்கே வந்தேன்.. நீங்களே பதில் சொல்லிட்டீங்க.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

எப்படியக்கா இப்படியெல்லாம் கேள்விகளை யோசிக்கிறீங்க.. பதிலே சொல்ல முடியலை.. :-(

இது உங்களது 40 வது பின்னூட்டம்..
நீங்க அடுத்த போஸ்ட் எழுத தயாராகலாம்.. :-)

aravindaan said...

Coral Reef Harda than irukkum, atharkkum killai irkku.. nan oththukka matten.. alwa enakkuthan :)

cheena (சீனா) said...

40 பின்னூட்டம் முடிஞ்சு போச்சு - இருந்தாலும் நானும் எழுதுவேன். சொலவடன்னா பழமொழியா விடுகதயா - யாரோ பழமிழ்ன்னு எனக்குச் சொல்லித் தந்தாங்க அந்தக் காலத்துல - தெரில

நானானி said...

நீங்க சொன்ன எதுவும் இப்ப கைவசம் இல்ல. பதில்களையும் பாத்துட்டேன். ரெண்டு தவிர மிச்சம் எனக்கும் தெரிஞ்சுது. விடைத்தாள் வெளியானவுடன் படீட்சை எழுதுவது நியாயமில்லை. இனிமே புண்ணியமில்ல..அதா விட்டுட்டேன்.

சீனா சொன்ன அக்காலத்து, ‘பழமிழ்’ நல்லாருக்கே!!
இன்னும் அக்கால வழக்குத் தமிழ் பத்தியும் யாராவது சொல்லுங்க.
பரிசு எனக்கு வேண்டாம்...எனக்கு வேண்டாம்!!

pushpa blogg said...

சொலவடை வேறு... விடுகதை வேறு...

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)