பல பதிவுகளாக பரிசளிக்காமல் சென்ஷிக்கு அல்வா குடுத்து வந்ததால் இந்த ஸ்பெஷல் அல்வாப் பதிவு சென்ஷிக்குப் பரிசாகத் தரப் படுகிறது.பதிவு மட்டும்தான் [அல்வாயில்லை]
எங்க ஏரியாவுல ஒருவாரமா ஏதாச்சும் பொருள் காணாமப் போகுது.
எல்லாம் சின்ன சின்ன திருட்டாயிருக்கவும் யாரும் அதைப் பெரிது பண்ணலை.முதல்ல காணாமப் போனது கிச்சுவோட பிரண்ட் முரளியோட அழி ரப்பர்,பிறகு எதிர் வீட்டு விச்சுவோட பேனா மூணாவது வீட்டு கோபியோட வாட்ச் என்று ஆரம்பித்து கோடி வீட்டு கோகிலாவுடைய செல்போன் வரை ஒவ்வொன்றாகத் திருடு போகத் தொடங்கியது.
இதுவரைக்கும் ஆனந்தம் காலனியில் இந்த மாதிரி திருடு போனதில்லை.இப்பத்தான் இப்படி.இன்னைக்கு காலைல பக்கத்து வீட்டு அம்புஜம் மாமி செஞ்சு வச்சிருந்த ஒருகிலோ அல்வா சம்படத்தோட [பாக்ஸ்] காணோமாம்.மாமி ஒரே ரகளை.
ஆனந்தம் காலனி பேர் மாத்தி வச்சி இன்னையோட ஒரு வருஷம் ஆகுது அதக் கொண்டாட மாமி செஞ்சாளாம்.
அது சரி ஆனந்தம் காலனி எங்கிருக்கு ஏன் பேர் மாத்துனீங்கன்னு கேக்கிறீங்கதானே.
சந்தோஷ் நகர்னு இருந்ததைப் பேரு மாத்துனது ஒரு பெரிய்யகதை.
தமிழ் செம்மொழியாக்கப்பட்டதும்,கோப்புகள் எல்லாம் தமிழ்ல கையெழுத்துப் போடனும்னு சட்டம் வந்ததும் தமிழ் ஆர்வலர்களுக்கு கொண்டாட்டம்.அப்பதான் நம்ம பக்கத்து வீட்டு அம்புஜம் மாமியோட வீட்டுக்காரர் கிட்டு மாமா தமிழ் ஆர்வத்துல சந்தோஷ் நகர் என்ற பேரை சுத்த தமிழ்ல மாற்றனும்னு அசோஷியேஷன் மீட்டிங்ல சொன்னார்.
ஆளாளுக்கு ஒன்னு சொல்ல கிட்டுமாமா 'சந்தோஷ்னா' ஆனந்தம் 'நகர்னா' காலனி'ன்னு மொழிபெயர்த்து 'ஆனந்தம் காலனி' ன்னு மாத்தி வச்சார்.
சொந்தக்காரங்க,நண்பர்கள் எல்லோர்கிட்டயும் பேரு மாத்துனதச் சொல்லி வைக்கனும்னு முடிவாச்சு.அதுக்குப் பிற்கு கொஞ்சநாளா யாருக்கும் தபால் ஏதும் வரலை.
அம்புஜம்மாமி 'ஏன்டி தங்கமணி எல்லோரும் ஈ மெயில் இண்டர்நெட்டுன்னு மாறிட்டாங்களா போஸ்ட்மேன் வீரப்பனுக்கு உடம்பு சரியில்லையா நம்ம ஏரியாவுக்கு லெட்டெர் வந்தே ஒரு மாசத்துக்கு மேலாச்சுன்னு' புலம்பினார்.
'லெட்டர் வேணாப் போடாம மெயில் எஸ்.எம்.எஸ்ஸுனு வரும். ஆனா ஒரு கல்யாணப் பத்திரிக்கைகூட வரலயேன்னு கிட்டு மாமாக்கு சந்தேகம்.மாசத்துல பாதி நாள் மாமியோட சமையல்ல இருந்து தப்பிக்க ஒரு கல்யாணம் காட்சின்னு மிஸ் பண்ணாம கிளம்பிடுவார்.
டவுட்டாயிப் போன கிட்டுமாமா ரங்கமணி அப்பாவைக் கூட்டிக்கொண்டு போஸ்ட் ஆபீஸ் போனார். போஸ்ட்மாஸ்டர்கிட்ட சேதியச் சொல்லி ஏன் எங்க ஏரியாவுக்கு கொஞ்சநாளா லெட்ட்ர் எதும் வரலைன்னு கேட்க,
போஸ்ட் மாஸ்டர்,'நீரு வரலைன்னு கவலைப்படுறீர் நான் அட்ரஸ் தெரியாம வந்ததை எங்கே அனுப்பறதுன்னு மூட்டை கட்டி வச்சிருக்கேன்னு காட்ட 'ஆனந்தம் காலனி' ன்னு பேர் எழுதுன மூட்டை ஒன்னு இருந்தது.
விஷயம் புரிந்த கிட்டுமாமா பேர் மாத்துன மேட்டரச் சொல்ல,கடுப்பாகிப் போன போஸ்ட்மாஸ்டர்
'என்ன வே ஒம்ம இஷ்டத்துக்கு பேர் மாத்திட்டு உறவுக்கு எல்லாம் சொன்னீங்க இந்த ஏரியா போஸ்ட் ஆபீஸ்ல சொல்ல வேண்டாமா பெயர் பலகையும் மாத்தலை' என்று கோபித்துக் கொண்டு மூட்டையைக்கொடுக்க
வீரப்பனுக்கு பதில் கிட்டு மாமாவே ரெண்டுநாள் அலைஞ்சி 235 லெட்டரையும் டெலிவரி பண்ணார்.அதுல அவர் போக முடியாம மிஸ் பண்ணது 26 கல்யாணம்,5 வளைகாப்பு,4 காதுகுத்து இன்விடேஷன்ஸ்.
எங்க ஏரியா பேர் பலகையிலும் சந்தோஷ் நகர் அலையன்ஸ் ஆனந்தம் காலனி ன்னு எழுதியாச்சு.
இப்பேர்பட்ட ஆனந்தம் காலனியின் பேர் மாத்தி ஒரு வருஷம் ஆனதை முன்னிட்டு கிட்டுமாமா அம்புஜம் மாமியை அல்வா கிண்டி காலனிவாசிகளுக்கு கொடுக்கச் சொல்ல, அதைத்தான் யாரோ திருடி விட்டார்கள்.
மாமி 'போயிடுச்சே ஒரு கிலோவும் போயிடுச்சே போலிஸுக்கு போவோம்' என்று புலம்ப,
'செல்போன் பறிகொடுத்த நானே சும்மாயிருக்கேன்' என்று கோடி வீட்டு கோகிலா கடுப்பானாள்.
முடிவில் போலீசில் கம்ப்ளெய்ன்ட் தர, ஒரு எஸ்.ஐ யும்,கான்ஸ்டபிளும் வந்தனர்.
பார்க்க அபூர்வ சகோதரர்கள் இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் மாதிரி இருந்த அவர்,
'இன்னா மாமி இந்த அல்வாக்குப் போயி இப்டி பேஜார் பண்ற வேணும்னா நான் அய்யிரு கடையில இஸ்பெஷலா போட்டு வாங்கித்தரேன்' என
'நீங்க முடியலைன்னா சொல்லுங்கோ நான் ஐ.ஜி கிட்ட சொல்லிக்கிறேன் .போன வாரம்தான் ஐ.ஜி பொண்ணுக்கு சீமந்தம்னு பட்சணம் பண்ணித் தந்தேன்' ன்னு மாமி சொன்னதைப் பார்த்து கோகிலா மோவாயில் இடித்துக் கொண்டாள்.நமக்கேன் வம்புன்னு இன்ஸ்பெக்டர்
மாமி வீட்டு கிச்செனை தரோவாக செக் பன்னிவிட்டு,கடைசியில் அல்வா கிண்டிய வாணலியைக் கையால் தடவிப் பார்த்தவர் பிறகு கையை மூடியபடியே,'மாமி சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம்' என்று கிளம்பினார்.
மறுநாள் அந்த ஏரியாவுல பிரபல ரவுடி கம் திருடன் கோயிந்தை விசாரிக்க,'சாமீ என்ன இம்மாம் அல்ப சொல்பமா நெனக்காதே.இந்த மாதிரி கலீஜி புடிச்ச அல்வா திருட்டு நான் பண்ணமாட்டேன் .நம்ம ரேஞ்சே வேற பிரோ புல்லிங்,செயின் ஸ்நேட்ச்சிங்,ஹவுஸ் பிரேக்கிங் ன்னா நம்மளாண்டை கேளு 'என்றான்.
மூணுநாள் கழித்து உண்மையான திருடனுடனும் கையில் பேண்டேஜ் உடனும் எஸ்.ஐ வந்தார்.அய்யோ பாவம் திருடனைக் கையும் களவுமாப் புடிக்கும் போது அடிபட்டுடிச்சின்னு வருத்தப் பட்டோம்.
திருடன் வேறு யாருமில்லை.எங்க ஏரியாவுக்கு மினரல் வாட்டர் சப்ளை பண்ற பையன்.சின்னப் பையனாச்சேன்னு அவனை யாரும் சந்தேகப் படவேயில்லை.
'எப்படி சார் புடிச்சீங்க' ன்னு கிட்டுமாமா கேட்க,
'எல்லாம் உங்க மாமியோட அல்வா தான்.அன்னைக்கு நான் அல்வா செஞ்ச வாணலியில் கைரேகையிருக்கான்னு செக் பண்ணும்போது கை விரல் ரெண்டும் ஒட்டிக்கிச்சு.எவ்ளோ முயன்றும் பிரிக்க முடியலை.டாக்டர்கிட்ட போயி ஆப்ரேஷன் செஞ்சிதான் பிரிச்சி கட்டு போட்டிருக்கேன்.அப்பத்தான் தோனுச்சு.நமக்கே இப்படின்னா அல்வா மொத்தமும் தின்னவன் கதி என்னாயிருக்கும் என்று இந்த ஏரியாவுல எல்லா டாக்டரையும் விசாரிக்க நான் நெனச்சபடியே அல்வாவ தின்னுட்டு வாயத் திறக்க முடியாம ஒரு டாக்டர்கிட்ட ஆப்ரேஷனுக்கு போயிருக்கான். நான் கண்டு பிடிச்சதும் பேப்பர்ல எழுதி காமிச்சி ஒத்துக்கிட்டான். நாளைக்குத்தான் ஆப்ரேஷன்.அதுக்கான மொத்த செலவையும் கிட்டு மாமாதான் ஏத்துக்கணும்னு இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு
திருடு போன பொருட்களை அவரவர்களிடம் ஒப்படைத்தார்.
அல்வாவோடு பணமும் போகுதேன்னு மாமா மாமியை முறைக்க செல்போன் திரும்பக் கிடைத்த சந்தோஷத்தைவிட மாமிக்கு பணம் செலவு வந்ததேன்னு கோகிலா ரெட்டிப்பு ஆனந்தப்பட,
ஐயோ அந்த அல்வாவை மாமி காலனிவாசிங்களுக்கு குடுத்திருந்தா எல்லோர்கதியும் என்னாயிருக்கும் ஏதோ தெய்வாதீனமா இந்த 'அல்வா அபாயத்திலிருந்து' தப்பித்தோம்னு ஏதோ 'சுனாமி' யிலிருந்து தப்பிச்ச மாதிரி மற்றவர்கள் பெருமூச்சு விட்டனர்.
எனக்கும் பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய நிம்மதி.
இருக்காதா பின்னே?போனவாரம்தானே மாமியோட லட்டு சாப்பிட்டு
'ச்சுப்பிரமணிக்கு வயிறு சரியில்லாமப் போச்சு'இப்ப அல்வா சாப்பிட்டிருந்தா?
அப்படியே ஏனோ ஐ.ஜி வீட்டு நெனப்பும் அடிக்கடி வந்தது பாவம்.விசாரிக்கனும்.
தம்பி உமாகதிருக்காக மாமிய ஸ்பெஷலாச் செய்யச் சொல்லி ஒரு கிலோ அல்வாக்கு ஆர்டர் கொடுத்திருக்கேன்.யாராச்சும் துபை போறீங்களா? சென்ஷி நீங்க போறீங்களா?
[டிஸ்கி:முஜே ஹிந்தி மாலும் நை .எதையோ அழுத்த ஹிந்தியும் வந்துடுச்சு.இதுக்காக ரிஜக்ட் பண்ணா மாமி வீட்டு அல்வா ரெடியா இருக்குன்னு சொல்லிக்கிறேன்.இது மிரட்டல் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்]
PAGE LOAD TIME
வகை*
மாமி
Subscribe to:
Post Comments (Atom)
Labels
reverse/flip text விளையாட்டு
(1)
test
(1)
அனுபவம்
(12)
உரையாடல்-கவிதை--போட்டிக்கு
(3)
உலகம்
(6)
எப்ரல் 1
(1)
கண்மணி
(9)
கருத்து கந்தசாமி
(4)
கலாய்ப்பு
(5)
கவிதை
(32)
கவிதை--போட்டிக்கு
(1)
கிசு கிசு
(2)
கிசுகிசு
(2)
குறும்படம்
(2)
சிறுகதை
(2)
சிறுகதை-போட்டிக்கு
(1)
சுட்ட மொக்கை
(1)
சுப்பிரமணி
(4)
செய்தி
(6)
செய்தி விமர்சனம்
(6)
சோதிடம்
(1)
டி.வி.விமர்சனம்
(1)
டி.விவிமர்சன.ம்
(1)
டெல்லி சித்தப்பூ
(1)
டோண்டு
(2)
தகவல் தொழில்நுட்பம்
(1)
தமிழ் நயம்
(4)
தமிழ் மணம்
(1)
தமிழ்மணம்
(6)
திரை விமர்சனம்
(2)
தேர்வு டிப்ஸ்
(1)
தொடர் விளையாட்டு
(3)
நகைச்சுவை
(7)
நட்சத்திரம்
(13)
நித்தியா
(1)
நையாண்டி
(8)
படம் காட்டுதல்
(6)
பதிவர் வட்டம்
(4)
பயணம்-1
(1)
புதிர்
(2)
புலிநகம்
(1)
மகளிர்
(3)
மகளிர் தினம்
(1)
மாமா
(3)
மாமி
(5)
முதுமை
(2)
மொக்கை
(17)
ரீமிக்ஸ் பாடல்கள்
(1)
ரெண்டு போட்டிக்கு
(1)
வாலண்டைன்ஸ் டே
(4)
வாழ்க்கை
(1)
வாழ்த்து
(3)
வியர்டு
(1)
விவாதம்
(5)
விழிப்புணர்வு
(3)
விழிப்புணர்வு மீள்பதிவு
(1)
விழிப்புணர்வு/அனுபவம்
(1)
வெட்டி ஆராய்ச்சி
(1)
43 மறுமொழிகள்::
கண்மணியக்கோவ்,
ராயல் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே கிடேசன் பார்க்ல வச்சி துபாய் மக்களுக்கு அல்வா குடுத்தாச்சி.
அல்வா ஏற்பாடு பண்ணது கோபிதான்
அனேகமா அவந்தான் அல்வா திருடியிருக்கணும்.
மாமிகிட்ட சொல்லி வேற எதுனா கிண்ட சொல்லுங்க. அல்வா சாப்பிட்டு போரடிக்குது.
அது எப்படி காலனி (colony) தமிழ் வார்த்தை ஆகும்?
அக்காவ்,
ஆனந்தம் காலனில "காலனி" இங்கிலிபிஸ் வார்த்த தானே :P
அப்ப அந்த அல்வா திருடனால காலனியே தப்பிச்சிடுச்சி... அந்த தியாகிக்கு ஒரு சில வெச்சிடுங்க :-)
//மாமிகிட்ட சொல்லி வேற எதுனா கிண்ட சொல்லுங்க. அல்வா சாப்பிட்டு போரடிக்குது.//
முன்னாடி ஜெயில்ல பிரியாணி சாப்பிட்டு போர் அடிக்குதுனு சொன்ன, இப்ப அல்வா சாப்பிட்டு போரடிக்குதா???
நடத்து ராசா நடத்து...
(நம்ம ஊர் சத்யா ஸ்வீட்ஸ் அல்வா ஞாபகம் வருது :-(( )
//நம்ம ஊர் சத்யா ஸ்வீட்ஸ் அல்வா ஞாபகம் வருது :-(( //
நம்ம ஊர் சத்யா ஸ்வீட் உனக்கும் பிடிக்குமா?
நான் ஒருமுறை மிக்சர் சாப்பிடும்போது பெரிய கரப்பான்பூச்சி இருந்ததுப்பா அதுல இருந்து மிக்சர் சாப்பிடறதே விட்டுட்டேன்.
நம்ம பேவரிட் பாஸந்தி.
//முன்னாடி ஜெயில்ல பிரியாணி சாப்பிட்டு போர் அடிக்குதுனு சொன்ன, இப்ப அல்வா சாப்பிட்டு போரடிக்குதா???//
500 திராம்ஸ் குடுத்தாலும் அந்தா பெரிய வசதிகளோட துபாய்ல ஒரு சூப்பர் அக்காமடேஷன் கிடைக்காது அங்கிட்டு இருக்கறது சொகம்யா!
என்ன எழவு கொஞ்ச நாள்ல போரடிச்சிடும்.
இத நான் சொல்லலப்பு, போய்ட்டு வந்த ஒரு ஆளு சொன்னது.
எலே தம்பி கதிரு,வெட்டி நீங்க திருக்கோயிலூர் சத்யா ஸ்வீட் பத்தி பேசுறீங்களா?நாசமாப் போச்சு.நமக்கு பரிசுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா.
hfgtr
DFDFHDFH
dfdhfdh
//எலே தம்பி கதிரு,வெட்டி நீங்க திருக்கோயிலூர் சத்யா ஸ்வீட் பத்தி பேசுறீங்களா?நாசமாப் போச்சு.நமக்கு பரிசுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா.//
கண்மணி அக்கா,
அது திருக்கோவிலூர் சத்யா இல்லை... கள்ளக்குறிச்சி சத்யா ஸ்வீட்ஸ் :-)
பரிசு ஏற்பாடு ஆகிட்டு இருக்கு :-)
நீங்க எந்த ஊர்க்கா? (ஆட்டோ எல்லாம் அனுப்ப மாட்டோம்)
வெட்டி நமக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர்...பிறந்ததுல,படிச்சதுல, புகுந்ததுல இப்ப வலையிலன்னு நமக்கு தோஸ்த் ஜாஸ்தி.
ஒரு குளூ நான் பிறந்ததும்,புகுந்ததும் பாடல் பெற்ற,பேர் பெற்ற தலங்கள்.
நமக்கு திருக்கோயிலூரும் தெரியும் கள்ளக்குறிச்சியும் தெரியும்.
ஏனுங்க சபரிதா,சிவா நம்மள ஏதும் கெட்ட வார்த்தையில வைய்யறீங்களா?
//கண்மணி said...
வெட்டி நமக்கு யாதும் ஊரே யாவரும் கேளீர்...பிறந்ததுல,படிச்சதுல, புகுந்ததுல இப்ப வலையிலன்னு நமக்கு தோஸ்த் ஜாஸ்தி.
ஒரு குளூ நான் பிறந்ததும்,புகுந்ததும் பாடல் பெற்ற,பேர் பெற்ற தலங்கள்.
நமக்கு திருக்கோயிலூரும் தெரியும் கள்ளக்குறிச்சியும் தெரியும். //
தில்லை???
எந்த மாவட்டம்னு க்ளூ கொடுங்க :-)
//.[व.वा.सा //
ஸ்பெல்லிங் மிஷ்டேக் இருக்கே.
"சங்கத்துக்குக் கால் முளைத்தது ஏன்? "
இந்த வார சந்தணத்தில் அப்படின்னு செய்தி வந்தாலும் வரும்.
//'நகர்னா' காலனி'ன்னு மொழிபெயர்த்து//
தமிளு?!!
//இது மிரட்டல் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்//
இந்த மிரட்டலுக்கு எல்லாம் சங்கத்தினர் பயப்பட மாட்டார்கள் என்பதை சொல்லிக் கொல்லுவதில் பெருமை அடைகிறேன்.
கண்மணியக்கா சந்தோஷ் தமிழ் பெயர் இல்லையா என்ன கொடுமை சந்தோஷ் இது. இந்த பெயர் தமிழ் பெயர் இல்லாட்டி வேற எந்த பெயர் தமிழ் பெயர். இதை கண்டிச்சி சாகும் வரை டீ குடிக்க போறான் நம்ம கதிரு.
என்னிக்கு ஊருக்கு போனாலும் அங்க இருந்து தான் மிச்சர் வாங்கிட்டு வருவாங்க அள்ளி அள்ளி தின்பேன் அய்யோ நினைச்சாலே வாந்தி வருதே.கரப்பான்பூச்சியை பாத்தாரமுல்ல இவரு.நான் கூட அங்க ஒரு முறை பாசந்தியில பல்லி பாத்தேன். கடைன்னா அப்படி இப்படி தான் இருக்கும். போனோமா பாஸந்திய சப்பிட்டோமான்னு இல்லாம யாருமேன் வாங்காத மிக்சரை எல்லாம் பாக்க சொன்னது.
யக்கோ.. போட்டி பலமா இருக்கே!! அபி அப்பாவும் கோதாவுல குதிச்சுட்டார்.. இப்போ நீங்களுமா???
வ.வா சங்க போட்டி கலை கட்ட ஆரம்பிச்சுடுச்சி. :-)
ஸ்கூல் பசங்க படம் ஒட்ட கம் வேணும்ன்னு கேட்டிருக்காங்க.. நம்ம மாமியோட அல்வாவை அங்கே பார்சல் பண்ணிடுவோமா?
ஆகக் குடி அம்பு மாமி அல்வாக் கிளறுவதை நிறுத்தினார்களா என்பதே என் கவலை.
பாஸந்தியில் கரப்பு இருந்தால் தெரியும். பூஞ்சான் பூத்தால்? :-)
பெரியார் சிலை ஒடைக்கப் பாத்த மாமி, இப்போ காலனிக்கே வேட்டு வக்க பாத்த மாமி - ஒரே கலாட்டாதான். இந்த ரீதில போனா, விவேக் படம் பாட்டி யாராவது உங்களுக்கு பாயாசம் வெக்க போராங்க.
யார்யா அது இவங்களுக்கு வவாச போட்டி இருக்குன்னு போட்டுகுடுத்தது, பாழா போன மக்கா, என் பொழப்பு என்ன ஆகும், நல்லாயிருங்கப்பா:-))
தம்பி கதிரு, சொந்த செலவுல சூனியம் வச்சிகிறதுல நீ மகா கெட்டிகாரன்யா, எதுக்கு ஜெயில் மேட்டர லீக் ஆக்கனும் இப்போ வாங்கி கட்டிகனும்:-))
@அபி அப்பா said...
//யார்யா அது இவங்களுக்கு வவாச போட்டி இருக்குன்னு போட்டுகுடுத்தது, பாழா போன மக்கா, என் பொழப்பு என்ன ஆகும், நல்லாயிருங்கப்பா:-))
//
உங்க ரெண்டு பேரு கிட்டேயும் சொல்லியிருக்கக் கூடாதுப்பா.. சின்ன பசங்க எங்களுக்கு வயசான நீங்க ரெண்டு பேரும்தானே விலகி நிக்கனும்?
(கண்மணியக்கா, உங்களுக்கும் வயசாச்சின்னு போட்டுக் கொடுத்தது நம்ம அபியோட அப்பாதான்)
[ஒருத்தரை இன்னைக்கு மாட்டி விட்டாச்சு! இன்னைக்கு நல்லா தூக்கம் வரும்.. வர்ர்ட்டாடா] ;-)
//இந்த மிரட்டலுக்கு எல்லாம் சங்கத்தினர் பயப்பட மாட்டார்கள் என்பதை சொல்லிக் கொல்லுவதில் பெருமை அடைகிறேன். //
கொத்துஸ், எங்களை கொல்வதில் அப்படி என்ன சந்தோஷம் உமக்கு... நித்தமும் உம்முடன் மாரடித்து அதை தானே பண்ணிக்கிட்டு இருக்கோம் அப்புறம் என்ன?
//ஒரு குளூ நான் பிறந்ததும்,புகுந்ததும் பாடல் பெற்ற,பேர் பெற்ற தலங்கள்.//
இது மாதிரி தலங்களுக்கு நம்ம தமிழகத்திலா பஞ்சம். இதை எல்லாம் வச்சு கண்டுப்பிடிக்கனும் என்றால் வெட்டி சுட்டி ஆனா தான் உண்டு.
//வ.வா சங்க போட்டி கலை கட்ட ஆரம்பிச்சுடுச்சி. :-) //
கலை கட்டிடுச்சா?
என்னத்த சொல்ல....
அக்காவ்...
என்ன இது? மாமிக்கு ஏன் இந்த கொலைவெறி? பாவம் அந்த பையன் எவ்வளவு பெரிய சுமையை தன் வாயால சுமந்து இருக்கான்.
\\ராயல் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே கிடேசன் பார்க்ல வச்சி துபாய் மக்களுக்கு அல்வா குடுத்தாச்சி.
அல்வா ஏற்பாடு பண்ணது கோபிதான்
அனேகமா அவந்தான் அல்வா திருடியிருக்கணும்.\\
எல....மாமி செஞ்ச அல்வாவை எங்கையாவது திருட முடியுமால....அதுக்கு எல்லாம் நமக்கு சத்துயிருக்கால?
\\அபி அப்பா said...
தம்பி கதிரு, சொந்த செலவுல சூனியம் வச்சிகிறதுல நீ மகா கெட்டிகாரன்யா, எதுக்கு ஜெயில் மேட்டர லீக் ஆக்கனும் இப்போ வாங்கி கட்டிகனும்:-))\\
தள்ளிநில்லுங்க அபி அப்பா பாதி சூனியத்தை உங்களுக்கு வச்சிடு போறான் ;)))
எல....முதல்ல தின்னதுக்கு காசு கொடுங்கடா
yekkov....
kalaki irukeenga... pottikku vaazthukkal...
//நம்ம ஊர் சத்யா ஸ்வீட்ஸ் அல்வா ஞாபகம் வருது :-(( //
ennaiya Sathya Sweets halwava pathi pesikittu.... enga oorukku vaanga.... lineaa kada katti halwa vippaanga....
yekkov....
kalaki irukeenga... pottikku vaazthukkal...
//நம்ம ஊர் சத்யா ஸ்வீட்ஸ் அல்வா ஞாபகம் வருது :-(( //
ennaiya Sathya Sweets halwava pathi pesikittu.... enga oorukku vaanga.... lineaa kada katti halwa vippaanga....
:))
கண்மணியக்கோவ்,
சூப்பரா இருக்கு:)))
/ராயல் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே கிடேசன் பார்க்ல வச்சி துபாய் மக்களுக்கு அல்வா குடுத்தாச்சி.
அல்வா ஏற்பாடு பண்ணது கோபிதான்
அனேகமா அவந்தான் அல்வா திருடியிருக்கணும்.//
அடபாவிகளா இன்னும் நீங்க அடங்கலையா???? :(
/நான் பிறந்ததும்,புகுந்ததும் பாடல் பெற்ற,பேர் பெற்ற தலங்கள்.
நம்ம ஆளுங்க எந்த ஊரை பாடாம விட்டாங்க ..???
/நமக்கு திருக்கோயிலூரும் தெரியும் கள்ளக்குறிச்சியும் தெரியும். /
திருவண்ணாமலை தெரியுங்களா??
:)
// நாகை சிவா said...
//ஒரு குளூ நான் பிறந்ததும்,புகுந்ததும் பாடல் பெற்ற,பேர் பெற்ற தலங்கள்.//
இது மாதிரி தலங்களுக்கு நம்ம தமிழகத்திலா பஞ்சம். இதை எல்லாம் வச்சு கண்டுப்பிடிக்கனும் என்றால் வெட்டி சுட்டி ஆனா தான் உண்டு. //
புலி! ஒரு வேளை AVM ஸ்டுடியோவா இருக்குமோ?
கண்மணி உங்க பதிவ படிச்சா சிரிக்கவும் முடியாம சிரிப்ப அடக்கவும் முடியாம.... ரொம்ப படுத்துறீங்க இனி உங்க பதிவ ஆபிஸ்ல படிக்க கூடாது..
ரொம்ப நல்லா எழுதுறீங்க.
Kamali
அய்யனார் இந்த கிரிவலம் வருவாங்களே அந்த தி.மலையா? அடிமுடி தேடிப்போன பிரம்மா,விஷ்னுவுக்கு ஜோதியாக காட்சிதந்து தீபம் ஏத்துவாங்களே அந்த தி..மலையா ??எனக்குத் தெரியும்..தெரியாதுங்களே..
அபிஅப்பா AVM ஸ்டுடியோ தான் நீங்க விஜய வாஹினியா?
அனானி கமலி நன்றிங்க.சிரிக்க வைக்கற சதி மட்டும்தான் என் வலைப் பதிவின் நோக்கம்.என்னைவிட அதிகம் சிரிக்க வைக்க அப்பாக்களும்..மைபிரண்டுகளும் இருக்காங்க. படிச்சா என்னுடையது சும்மான்னு தோனும்..[அதனால அவிங்கள் பதிவ படிக்காதீங்க கமலி ஹி..ஹி]
என்னக்காவ்,
அல்வாக்கு ரெசிப்பி போட்டிருப்பீகளோன்னு பாத்தா, இப்படி ஏமாத்திபுட்டியளே?
வாயில ஒட்டாம, போட்ட உடனே கரஞ்சி போறா மாதிரி ஒரு திருநெவேலி அல்வா கொடுங்களேன்
தம்பி கடோத்கஜா அல்வா என்ன எல்லா ரெசிப்பியுமே சொல்லித்த்ரேன் ஆனா தொடர்ந்து பின்னூட்டம் போடுவேன்னு ஒரு அக்ரிமெந்த் போடுங்க [ஹி..ஹி...இப்படித்தான் ஆள் சேக்க வேண்டியிருக்கு]
simply superb! your presentation of events... amazing.
அய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சு - என்ன அருமையா கோர்வையா சம்பவங்களத் தொகுத்துத் தரீங்க - பாராட்டுகள்
Post a Comment