PAGE LOAD TIME

57.வ.வா.ச.ஆண்டு விழாவில் அபிபாப்பாவும் கண்மணியின் கண்மணிகளும்

மெயின் டிஸ்கி:வருத்தப் படாத வாலிப சங்கத்து சிங்கங்களுக்கு
வாழ்த்துக்களுடன்இந்தப் பதிவு பரிசாக்கப் படுகிறது.சிங்கங்களைப் பற்றி அதிகம் தெரியாததால் சிலரை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.

வாழ்க வளமுடன்.
அனைவருக்கும் இந்த அக்காவின் 'அருள் வாக்கு' கிடைக்கட்டும்.

வ.வா.ச ஆண்டுவிழாவுக்கு நேரில் வந்து சிறப்பித்தால் நன்றாக இருக்கும் என்று ராமிடமிருந்து மயில் வந்ததிலிருந்து அபிஅப்பா குஷியாகி என்ன டிரஸ் போடலாம் என்ன கெட்டப்ல போகலாம் என அலம்பல் பண்ண பாப்பா முறைத்தபடியே,

'இங்க வாங்க'

'என்னம்மா'

நீங்க எதுக்கு இப்ப அலட்டறீங்க ஆண்டு விழா அவிங்களுக்கு.அதுவும் இல்லாம பரிசு நான் வாங்கப் போறேன்'

'நீயா...நாந்தானே பதிவு போட்டேன்'

'போட்டீங்க ஆனா யாரைப்பத்தி?'அபிபாப்பாவும் அஞ்சு ஜார்ஜ் பதிவுதானே'செலக்ட் ஆச்சி?நாந்தானே அந்த பாப்பா''

சரிம்மா நீயி எல்லாம் பரிசு வாங்கப் போனா..'அபி அப்பா இழுக்க

'என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு.என்னைய வச்சு பதிவு போடலாம் பரிசு நா வாங்கப்படாதா?'

'அப்ப கண்மணி ஆன்டி எப்படி?அவங்க பரிசை பிச்சுவா? கிச்சுவா யார் வாங்குவா?'

'ஸ்டாப் ஸ்டாப் எப்பவும் அவுங்கள ஏன் வம்புக்கு இழுக்கறீங்க.'அவங்க ரொம்ப நல்லவங்க.எனக்கு நெறைய சாக்லெட்ஸ் டாய்ஸ் வாங்கித் தந்தாங்க'

[அடிப் பாவி யாரு முட்டாய் குடுத்தாலும் நம்மள கவுத்துடுதே]

'நோ மோர் கொஸ்டின் வண்டி ரெடி பண்ணுங்க.போனாப் போவுது நீங்களும் வாங்க' என பெரிய மனது பண்ண

பாப்பா மாதிரியே காரும் ஸ்டிரைக் பண்ண,
'பாப்பா கார் கிளம்பல நான் மட்டும் நடந்தாச்சும் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாரேன்'
[சங்கத்து மேல பாசமெல்லாம் இல்லை..ஏதோ தீர்த்தவாரி உண்டுன்னு காத்து வாக்குல சேதியாம்]

'நோ நோ உடனே அந்த நாட்டாமை 'ஷியாமுக்கு போன போட்டு கைப்புள்ள அங்கிள ஆட்டோவோடு வரச் சொல்லுங்க 'என்றது.

அடுத்த 10 நிமிஷத்தில் கைப்ஸ் ஆட்டோவோடு ஆஜர்.[கைப்ஸ் ஏன் இப்படி வேர்த்து விறு விறுத்து?ஓ முந்தா நாள் வச்ச ஆப்பு பயம் போகலை]

பாப்பா ஆட்டோவில் ஏற வந்ததும் டைகரும் ஓடி வந்து கைப்பு சீட்டில் உக்கார்ந்து கொண்டது.

கைப்பு துரத்தியும் இறங்கல.அபி அப்பா கொஞ்சியும் மசியல.

கைப்ஸ் உடனே ஒரு குச்சிய எடுத்து விரட்ட பாப்பா கோபமாகி,

'ஸ்டாப் இட் அங்கிள் இப்படி என்னையும் டைகரையும் இன்ஸல்ட் பண்ணா நான் இரட்டை கேஸ் போடுவேன்'

'ஏன்மா இரண்டு தபா போடுவ'என் கைப்ஸ் அப்பாவியாக கேட்க

இரண்டு தபா இல்ல இரண்டு கேஸுன்னு சொன்னேன்ஒன்னு சின்னப் புள்ளையான என்னை வேலை வாங்குனதுக்கு [அடிப்பாவி ஓட்டப்பந்தயமும்,பரதமும் வேலையா என அபிஅப்பா நினைக்க]

இரண்டாவது வாயில்லா ஜீவன்[டைகருக்கா வாயில்லை? போன வாரம் தான் பக்கத்து தெரு பையனை கடிச்சி மூணு கிலோ சதையை ஒரே டேக்ல எடுத்துச்சி]
டைகரை அடிச்சதுக்கு புளூ கிராஸ்ல சொல்லி' என்று மிரட்ட

டைகரை கொஞ்சம் நகந்து இடம் கொடுக்கச் சொல்லிட்டு கைப்ஸ் ஆட்டோவை ஓட்டி சங்கத்துக்கு வந்து சேர்ந்தார்.

ஆட்டோவ வுட்டுட்டு உள்ளபோனதுமே கைப்ஸ் ராமைத் தேடிப் போயி நாலு சாத்து சாத்தி,

'ஏண்டா அப்பிரசென்டுங்களா என்னிய சாவடிக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களாடா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அந்த பச்சப் புள்ளை என்னமா என்னப் போட்டு நொங்கி நொங்கெடுக்குது.தாங்க முடியலடா.உன்னை யாருடா மயிலு அனுப்பச் சொன்னது.'என அழுவ

நாகைப் புலி ஓடிவந்து,'தல நீயி வுடு நான் பாத்துக்கறேன்.அந்த கோஷ்டி ஒரு குரூப்பாத்தான்
கெளம்பியிருக்கு எனக்கு ஏற்கனவே டவுட்டாயிடுச்சி.இதுல மலேஷ்யாப் பாப்பாவையும் அவிங்க பக்கம் மடக்கப் பாக்குறாங்க.நாம யாருன்னு காட்டுவோம்'என சமாதானப் படுத்தியது.

இதற்குள் பரிசு பெற்றவர்கள் அனைவரும் வந்து சேர விழா தொடங்கியது.
சங்கத்து சிங்கங்கள் அனவரும் கறுப்பு ஜீன்ஸும் மஞ்சளில் சிங்கம் படம் போட்ட டீ ஷர்ட்டும் யூனிபார்ம் அணிந்திருந்தனர்.

வாசலில் நெல்லை சிவாவின் குரூப் 'காய்கறிக்கலையில்' ரங்கோலி போட்டு அலங்கரித்திருந்தனர்.

இளாவைப் பார்த்ததும் பாப்பா ,'அங்கிள் உங்க கலப்பை எங்கே' என்றது.ஈ.கலப்பையா அபி என ,'இல்லையில்லை நீங்க விவசாயி ஆச்சே உங்க ஏர் கலப்பை எங்கே'என்று 'கடி'த்தது.

பாப்பாகிட்ட மாட்டி நோக வேண்டாம்னு 'வெட்டித் தம்பி' பதுங்கி பதுங்கியே இருந்தது.
'அங்கிள் நீங்க ஒரு நாளைக்கு எத்தனை கர்சீப் யூஸ் பண்றீங்க' ன்னு கேட்டது ஜொள்ளு பாண்டியப் பார்த்து.

கண்மணி அக்காவை பார்த்ததும் ஆன்டி என்று டன் கணக்கில் பாசத்தைப் பொழிந்தபடி பாப்பா ஒட்டிக் கொண்டது.அக்காவைச் சுற்றி கூட்டம் குசலம் விசாரிப்பு.
[இல்லாட்டி பாப்பா டைகரவிட்டு கடிக்கச் சொல்லுமோனு பயம்தான்]

பதிவர்கள் அறிமுகம் முடிந்ததும் விருந்து ஆரம்பித்தது. மலேசிய பாப்பா எல்லோருக்கும் ஸ்பெஷ்லாக குடுத்த 'டூரியான்' பழம்'ஸ்பெஷல் அயிட்டம்.பாப்பாவும்,பிச்சு,கிச்சுவும் ஐஸ்கிரீம் தவிர மத்த அயிட்டங்கள் பக்கமே போகலை.டைகர் வரப் போவது தெரியாததால் அதுக்கு ஸ்பெஷல் ஒன்றும் இல்லையென பாப்பா டென்ஷனாக,தேவ் ஓடிப் போய் 'பெடிகிரி' வாங்கி வந்தார்.

பிறகு சங்க சிங்கங்களின் கலை நிகழ்ச்சி ஆரம்பமானது.
அபி பாப்பாவும்,பிச்சு,கிச்சுவும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட விழா ஆரம்பித்தது.சிங்கங்களின்
ஆடல் பாடல் என்று கலை நிகழ்ச்சிகளுடன் விழா களை கட்டியது.

பரிசளிப்பு ஆரம்பித்ததும் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து நாலு வார்த்தை பேசி சங்கத்தை வாழ்த்தினர்.அபி அப்பா என்று மைக்கில் பேர் சொல்ல பாப்பா படா ஸ்டைலாகப் போய் பரிசு வாங்கியது. கூடவே பிச்சு,கிச்சுவையும் மேடைக்கு அழைத்தது.ஒரு முடிவோடுதான் பாப்பா வந்திருக்குன்னு கண்மணியக்காவோட பரிசையும் சிங்கங்க அவங்ககிட்டயே கொடுத்தாங்க.

மைக்கை பாப்பா உயரத்துக்கு அட்ஜெஸ்ட் செய்யச் சொல்லி விட்டு பேச ஆரம்பித்தது.

முதலில்,ஹாப்பி பர்த் டே டூ சங்கம்' என்று மூன்று வாண்டுகளும் பாடி எல்லோரையும் கோரஸாகப் பாடச் சொன்னது.

பிறகு பதிவர்கள் இப்போது போல எப்போதும் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க வேண்டும்.விவாதங்களை காழ்ப்புணர்ச்சியின்றி விவாதிக்க வேண்டும்.பழையவர்கள் புதியவர்களையும் பெரிய பதிவர்கள் குழந்தப் பதிவர்களையும் ஊக்கப் படுத்த வேண்டும்.இப்போது பெரியவர்களுக்கு போட்டி வைத்தது போல குட்டிப் பதிவர்களுக்கும் வைக்க வேண்டும்.

கூடிய விரைவில் தானும்,பிச்சு,கிச்சுவும் ஆளுக்கொரு பதிவு தொடங்கி குழந்தைகளுக்கு 'சேவை' செய்யப் போவதாகப் பாப்பா கூறியது

[பாப்பா அவங்க மிஸ்ஸுகிட்ட சொல்லி எழுதிக் குடுக்கச் சொல்லிச்சாம்]

கர கோஷத்தில் கூட்டம் ஆர்ப்பரிக்க கைப்ஸ் மட்டும் பாப்பா பதிவு தொடங்கினா புதுசா என்னென்ன ஆப்பு வருமோன்னு கிலியடைந்தார்.

பாப்பா யோசனைப்படி வெற்றி பெற்றவர்களில் ஆண்,பெண் பதிவர்கள் 50:50 இருப்பதால் ஒரு சிறப்பு டக் ஆப் வார் 'போட்டி வைக்கப் பட்டது.

அருண்குமார்,அபிஅப்பா,சி.வி.ஆர் ஒரு பக்கமும், கண்மணி ஜெயஸ்ரீ,ஷைலஷா மறு பக்கமும் இழுக்க போட்டி தொடங்கியது.

ஜெயித்தது மகளிர் அணியினர்.பாப்பாவுக்கும் டைகருக்கும் பயந்துஆண்கள் கோஷ்டி விட்டுக்கொடுத்ததாக அபிஅப்பா குரூப் சொல்லிக் கொண்டது.

ஒருவழியாக பாப்பாவின் கைடன்ஸில் விழா நடந்தாலும் நிறைவாகவும் சந்தோசமாகவும் முடிந்ததில் பதிவர்கள் அனைவருக்கும் ஏக திருப்தி.

டிஸ்கி 1:நான் பாத்துக்கறேன் தலன்னு உதார் விட்ட புலி அபி பாப்பா கிளம்பிப் போகும் வரை உறுமவேயில்லை.[டைகர்ட்ட புலிக்கு அம்மாம் பயம்]

டிஸ்கி 2:பட்டத்தரசர் 'சிரிப்பானந்தா'[டுபுக்கர்] ஒரு மேஜிக் ஷோ பண்ணி வாயிலிருந்து பிஸ்கட் வரவழைச்சி டைகருக்குத் தர,'ச்சீ எச்சீ ஷேம் ஷேம்' என்று பாப்பா கோபித்துக் கொண்டது.

டிஸ்கி 3:காமெடி குயின் ஒரு மலேஷிய நடனம் ஆட கூடவே டைகரும் ஆட பாப்பா கைகொட்டி இரசித்தது கண்கொள்ளாக் காட்சி.

டிஸ்கி 4: விழா முடியும்வரை பாப்பாவுக்கும் டைகருக்கும் துணையாக செக்யூரிட்டிக்கு வந்த 'பிளாக் கேட்' போல அபிஅப்பா 'திருதிருவென' அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தது பாவமாக இருந்தது.

டிஸ்கி 5: எங்கடா பின்னூட்ட நாயகன் சிபியக் காணோம்னு பாக்கறீங்களா அவரு வழக்கம் போஒல போஸ்ட் பப்ளிஷ் ஆவறதுக்குள்ளயே பின்னூட்டம் போடப் போயிட்டார்.

27 மறுமொழிகள்::

இராம் said...

கண்மணியக்கோவ்,

சூப்பரா இருக்கு... :))

முணு வாண்டுன்னு சொல்லிருக்கீங்க? அதிலே எப்பிடி தங்கச்சிக்கா வருவாங்க???

கண்மணி said...

அபிபாப்பா ராமை டைகர விட்டு கடிக்கச் சொல்லணும்னு ஏன் சொல்லிச்சுன்னு இப்பத்தான் பிரியுது,மலேஷியா பாப்பா 'வாண்டா'?.நான் சொன்ன மூணு அபி,பிச்சு.கிச்சு.

கோபிநாத் said...

அபி அப்பாவுக்கு அடுத்து நீங்களுமா?? கலக்கல் ;)

வல்லிசிம்ஹன் said...

பாப்பா,பிச்சு,கிச்சு
சங்கத்தில தின்ன ஒண்ணும் கொடுக்கலியா.
சும்மாவா விட்டீங்க.?

வாண்டுகள் சங்கம் ஆரம்பிங்க.
பாட்டி 'கைடன்ஸ்' கொடுக்கிறேன்.
கண்மணி

நல்லாக் கலக்கிட்டீங்க.

கோபிநாத் said...

சங்கத்தின் பரிசை பெற்று எங்கள் அனைவருக்கும் ( நான், தம்பி, அய்யனார்) கிடேசன் பார்க்கில் விருந்து கொடுப்பதாக சொல்லி அல்வா கொடுத்து விட்டு (அதுவும் மாமி செய்த அல்வா) தனியாக கொண்டாடிக் கொண்டு இருக்கும் அபி அப்பாவுக்கு என் கண்டனங்களை தெரிவிக்கிறேன்

கண்மணி said...

தேங்க்யூ கிராண்ட் மா [வல்லியம்மா].உங்க ஆசியோட பதிவு ஆரம்பிக்கிறோம்.அப்பப்ப கைடன்ஸ் குடுங்க.அப்பறம் விழாவில் நிறைய்ய அயிட்டம் இருந்தாலும் வீ லைக்டு ஒன்லி ஐஸ்கிரீம்.
தேங்க்யூ
அபி,பிச்சு&கிச்சு

கண்மணி said...

கோபி அங்கிள் அப்பா நான் படுத்துன பாட்டுல நொந்து போயிட்டார்.நான் வேணா 'டைகரோட பிஸ்கட் இருக்கு குடுக்கட்டுமா?
அபி பாப்பா

கோபிநாத் said...

\\கண்மணி said...
கோபி அங்கிள் அப்பா நான் படுத்துன பாட்டுல நொந்து போயிட்டார்.நான் வேணா 'டைகரோட பிஸ்கட் இருக்கு குடுக்கட்டுமா?
அபி பாப்பா\\

செல்லம் அதான் அப்பா அல்வா கொடுத்துட்டாரே....பின்ன எதுக்கு பிஸ்கட்

.:: மை ஃபிரண்ட் ::. said...

நமக்கும் ஒரு ஓரத்துல இடம் கொடுத்து பர்ஃபோர்ம் பண்ண ச்சான்ஸ் கொடுத்திருக்கீங்களே.. உங்க பாசத்தை என்ன சொல்றது.. அவ்வ்வ்வ்வ்......

.:: மை ஃபிரண்ட் ::. said...

//'என்ன சின்னபுள்ளத்தனமா இருக்கு.என்னைய வச்சு பதிவு போடலாம் பரிசு நா வாங்கப்படாதா?'//

அப்படி சொல்லுமா என் தங்கம்.. :-)
உங்களைப் பற்றி பதிவ போட்டா நீங்கதான் செல்லங்களா பரிசு வாங்கணும்.. :-D

அய்யனார் said...

தீர்த்தவாரி உண்டுன்னு காத்து வாக்குல சேதியாம்

:))

'டைகரோட பிஸ்கட் இருக்கு குடுக்கட்டுமா?
அபி பாப்பா

:(

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஆட்டோவ வுட்டுட்டு உள்ளபோனதுமே கைப்ஸ் ராமைத் தேடிப் போயி நாலு சாத்து சாத்தி,//

என் தம்பியை இப்படி அடிச்சிட்டாரே கைப்பூ.. அபி பாப்பா , நாளைக்கு நீ கைப்பூ காதை கடிச்சு துப்பிடும்மா!!

துளசி கோபால் said...

:-)))))))))

delphine said...

yet another comedy///. keep going.

அபி அப்பா said...

நேத்திக்கு நான் கம்பியூட்டர் பக்கமே வரலை. ஆனாலும் தங்கமணி ஒவ்வொறு வரியும் படிச்சு போன்ல சொன்னாங்க. சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணி வந்துடுச்சு! அத விட தங்கமணி சிரிச்சது தான் என் சந்தோஷத்துக்கு முக்கிய காரணம். கண்டிப்பா இந்த குழந்தையும் நக்கல் நையாண்டியின் நாயகனாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். மிக்க நன்றி மிக்க நன்றி:-)

நெல்லை சிவா said...

ப்ளாக் பத்தி பரீட்சை வைத்தால், முதலிடம் வாங்கிடுவீங்க போல..படிக்க நல்லா இருந்தது.

கண்மணி said...

நேத்து தங்கமணி கிட்ட பேசுன சந்தோஷத்துல அபிஅப்பா இருப்பதால் இன்று கிடேசன் பார்க்கில் டிரீட் உண்டாம் அய்யனார்.

கண்மணி said...

தேங்ஸ் சிவா.முடிந்தவரை எல்லாரையும்படிக்கிறேன்.பின்னூட்டம் போடத்தான் முடியல.

கண்மணி said...

டெல்பின் இதுதான் ஒரிஜினல் கண்மணி.அப்பப்ப கண்மணியின் இன்னொரு பக்கம் பேசும் போது தத்துவம்தான்.

கண்மணி said...

அபி அப்பா யூ மீன் இட். காமெடி கீமெடி பண்ணலயே அப்படின்னா ரொம்ப சந்தோஷம்.கூடிய விரைவில் இன்னொரு சந்தோசச் சேதியும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்

நாகை சிவா said...

//நான் பாத்துக்கறேன் தலன்னு உதார் விட்ட புலி அபி பாப்பா கிளம்பிப் போகும் வரை உறுமவேயில்லை//

ஹலோ, நான் பாத்துக்கிட்டே தான் இருந்தேன். பாத்துக்குறேன் என்ற சொன்னதால் பாத்தேன். ஏதும் செய்றேன் நான் சொல்லவே இல்லையே அப்புறம் என்ன?

நாகை சிவா said...

//டைகர்ட்ட புலிக்கு அம்மாம் பயம்]//

தோடா....

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பறந்து ஆகாதாம்....

பழமொழி சொன்ன அனுபவிக்கனும் ஆராயக் கூடாது சொல்லிட்டேன். :-0

அய்யனார் said...

/இன்று கிடேசன் பார்க்கில் டிரீட் உண்டாம் அய்யனார்./

தகவலுக்கு நன்றி கண்மணி..ஆனால் இன்று சனிக்கிழமையாகி விட்டதே :((

கோபிநாத் said...

\\அய்யனார் said...
/இன்று கிடேசன் பார்க்கில் டிரீட் உண்டாம் அய்யனார்./

தகவலுக்கு நன்றி கண்மணி..ஆனால் இன்று சனிக்கிழமையாகி விட்டதே :((\\

கலங்காதே உடன் பிறப்பே.....அடுத்த வாரம் நம்ம வாரம் தான் ;))

கண்மணி said...

சிட்டுக்குருவிங்கெல்லாம் சேர்ந்துதான் ஆப்பு வைக்கிறமே இதல பருந்து ஊர்க்குருவின்னு பழமொழி வேறயா?

Anonymous said...

என்ன நடக்குது இங்கே வ.வா.ச
இப்ப ப.பா.ச...இப்படியே போன எலக்ஷன்ல கூட நின்னு ஆட்சியப் புடிக்க அடிச்சுக்குவாங்களா

cheena (சீனா) said...

பதிவு எப்படி எழுதுறதுன்னு கண்மணி கிட்டே கத்துக்கணும். நல்லா சிரிச்சேன்

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)