PAGE LOAD TIME

புலி நகமும் இளவட்டக் கல்லும்

இது என்ன தலைப்புன்னு பாக்கறீங்களா?

அப்பல்லாம்[எப்பல்லாம்னு நான் சொல்ல மாட்டேன் உங்களுக்கே தெரிந்திருக்கும்] புலிய அடிச்சி நகத்தை கொண்டு வந்தாத்தான் ஒரு ஆணின் வீரம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த நகத்தையே டாலராகக் கோர்த்துப் போட்டு மணம் முடிப்பார்கள்.

பின்னாளில் புலிகள் காடு விட்டு காடு தாண்டி தப்பித்த பிறகு[ பின்ன ஊர்ல இருக்கற பொட்ட புள்ளைங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகனும்னா ஆளுக்கு ஒரு புலியக் கொல்லணும்.நகம் எடுக்கணும்.எவ்வளவு நாள்தான் புலிங்களால பொறுக்க முடியும்]
வேறு மாற்று வழி தேட ஆரம்பித்தார்கள்.அப்படி கண்டு புடிச்சதுதான் இளவட்டக் கல்ல தூக்கறது.அது சரி கல்லு பயந்து ஓட முடியாது பாருங்க.

ஊருக்கு நடுவுல ஒரு பெரிய பாறாங்கல்லு இருக்கும் அதைத் தனியொரு மனிதனாத் தூக்கிக் காட்டுறவர் வீரமான[!!]ஆண்மகனாகத் தேர்வாகி பிறகு பெண்கொடுப்பார்கள்.

இந்த புலி நகம் மேட்டர் பழைய ராஜ ராணி சினிமாவுல வந்திருக்கலாம்.ஆனா நம்ம ஹீரோக்கள் நடிச்ச படத்துல இல்லை.

ஆனால் 'இளவட்டக் கல்'மேட்டர் முதல் மரியாதை சிவாஜி தொடங்கி விரும்புகிறேன் பிரசாந்த் வரை உண்டு.ஏன் நம்ம காமெடி கவுண்டர் கூட கார்த்திக்கோட நடிச்ச ஒரு படத்துல ஒரு கல்லை அனாயாசமாக எட்டி உதைத்து,மாட்டை அடக்கி 'டயானா'என்கிற தன் ஜோடியை கைபிடிப்பார்.

அப்புறம் இந்த 'காளையை அடக்கிற' மேட்டர் இல்லன்னா 'ரேக்ளா'வண்டி ரேஸும் இந்த மாதிரி மேரியேஜ் பிக்ஸிங் மேட்டர்ல உண்டு.

இப்பவும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு பொங்கல் சமயத்துல பேமஸ்.இருந்தாலும் பணமும் பரிசும் மட்டும்தான். பொண்ணு குடுக்கிற மேட்டர் இல்லை.

இவ்வளவு ரிஸ்க் எல்லாம் அந்தக் கால ராஜாவுங்க மேரேஜ்ல இல்லை.ஜஸ்ட் லைக் தட்டுனு ஒரு வில்லு வளைச்சா போதும்.இல்லை யாருடனாவது மல்யுத்தம் பண்ணனும்.

சரி இப்பல்லாம் ஏன் ஆண்களின் வீரப் பிரதாபங்கள் இப்படி நிரூபிக்கப் படலை?

நம்ம பொண்ணுங்க படு உஷார்.புலிய முறத்தாலேயே அடிக்கிற பொண்ணுகிட்ட நரிக் குறவங்க கிட்ட வாங்குற புலி நகம் செல்லுபடியாகுமா?புலி அடிக்காட்டி போவுது ஒழுங்கா கொசு அடிச்சாப் போதும்.

புடிக்கலைன்னா எம்மாம் பெரிய அம்மிக் குழவியும் அனாயாசமா தூக்கி புருஷன் தலையில போடுற பொண்ணுக்கு இளவட்டக் கல் சுண்டைக்காய்.

தினமும் மாமியார்ட்டயோ இல்லை குழாயடியிலயோ தினம் தினம் மல்யுத்தம் பண்ற பொண்ணுங்களுக்கு ஆண் ஒரே ஒரு நாள் மல்யுத்தம் பண்ணி ஜெயிக்கிற மேட்டர் ஜுஜூபி.

வில்லு வளைக்கிற மேட்டரும் அப்படித்தான்.

சோ இந்தக் காலப் பொண்ணுங்க கல்லைத் தூக்குறாங்களா புலிய அடிக்கிறாங்களான்னு பாக்கறதில்லை.நல்லவங்களா படிச்சிருக்காங்களா வேலைக்குப் போய் ஒழுங்கா வச்சுக் காப்பாத்துவாங்களான்னுதான் பாக்கறாங்க.

மக்கள்ஸ் அதனால வீரப்பிரதாபம் எல்லாம் காட்டாம தகுதியும் தெறமையும் வளத்துக்கிட்டாப் போதும்.என்னங்க நான் சொல்றது

18 மறுமொழிகள்::

மங்கை said...

//புலி அடிக்காட்டி போவுது ஒழுங்கா கொசு அடிச்சாப் போதும்.

புடிக்கலைன்னா எம்மாம் பெரிய அம்மிக் குழவியும் அனாயாசமா தூக்கி புருஷன் தலையில போடுற பொண்ணுக்கு இளவட்டக் கல் சுண்டைக்காய்.//


:-)))

ராசாத்தி உன் கால் எங்கன இருக்கு?

அபி அப்பா said...

நான் விழுந்து விழுந்து சிரிச்சேன் போங்க:-))

(ஒரு சீரியஸ் பதிவ காமடி பதிவா மாத்திட்டு கொலவெறியோட த்ரியற பசங்களை கண்ணமூச்சு விளையாட தூண்டிட்டு இங்க வந்து தத்துவ்வமா??இதை நான் காமடியா ஆக்குல...ஹைய்யோ என் பாசமலர் குடும்பம் இன்னும் அங்கியே பம்பரம் விட்டுகிட்டு இருக்கே ஆண்டவா..பொலம்ப வச்சுட்டயே:-)

சென்ஷி said...

:)))))))

கதிர் said...

யெக்கோவ்,

இருந்தாப்புல இருந்து இப்படி சாய்ச்சிபுட்டியேக்கா...

ஆராச்சும் வம்ப விலை கொடுத்து வாங்குவாங்களா?? இதுல வீரத்த வேற நிரூபிக்கணுமா?

எங்களுக்கு புலிநகமும் வேணாம், புலிப்பல்லும் வேணாம்.

Ayyanar Viswanath said...

அய்யோ ஏன் இப்படிலாம்?

தமிழ்மணத்து கவிஞர்கள் எல்லாம் பெண்களை ரவுண்ட் கட்டி கண்ணே,மலரே,நிலவே ன்னு கவுஜ யா எழுதி தள்ளும்போது
/புடிக்கலைன்னா எம்மாம் பெரிய அம்மிக் குழவியும் அனாயாசமா தூக்கி புருஷன் தலையில போடுற பொண்ணுக்கு / ன்னு ஜெர்க் கொடுக்கறிங்களே..:)

என்ன ஒரே புலிக் கதையா இருக்கு :)

கதிர் said...

//சரி இப்பல்லாம் ஏன் ஆண்களின் வீரப் பிரதாபங்கள் இப்படி நிரூபிக்கப் படலை?//

அதத்தான் சினிமால செய்யறாங்களே.
அது சரி அந்த காலத்து பொண்ணுங்க மாதிரிதான் இந்த காலத்துலயும் பொண்ணுங்க இருக்காங்களா?

கதிர் said...

//நான் விழுந்து விழுந்து சிரிச்சேன் போங்க:-))//

ஏன் சிரிக்க மாட்டிங்க?
கண்மணியக்கா கருத்து சொன்னா உங்களுக்கு சிரிப்பு வருதா?
யெக்கோவ் இதெல்லாம் கேக்கறதில்லயா நீங்க!
(கருத்து எங்க இருக்குன்னு எங்கிட்ட கேக்காதிங்கப்பா சாமிகளா...)

கோபிநாத் said...

\\சென்ஷி said...
:)))))))\\

சென்...என்ன சிரிப்பு ரொம்ப பலமா இருக்கு....மாட்டிக்கிட்டியா ??

கோபிநாத் said...

\\
அபி அப்பா said...
நான் விழுந்து விழுந்து சிரிச்சேன் போங்க:-))

(ஒரு சீரியஸ் பதிவ காமடி பதிவா மாத்திட்டு கொலவெறியோட த்ரியற பசங்களை கண்ணமூச்சு விளையாட தூண்டிட்டு இங்க வந்து தத்துவ்வமா??இதை நான் காமடியா ஆக்குல...ஹைய்யோ என் பாசமலர் குடும்பம் இன்னும் அங்கியே பம்பரம் விட்டுகிட்டு இருக்கே ஆண்டவா..பொலம்ப வச்சுட்டயே:-)\\

அபி அப்பா எதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறிங்க.....அக்கா எவ்வளவு சீரியசா தம்பிகளுக்கு ஒரு பதிவு போட்டிருக்கு அதை போயி காமெடி கீமிடின்னு சொல்லிக்கிட்டு....

delphine said...

மேட்டர் ஜுஜூபி.///
இந்தக்காலத்து பெண்களுக்கு எல்லா மேட்டரும்...ஜுஜுபிதான்...

கண்மணி/kanmani said...

அபி அப்பாவுக்கு என்னமோ ஆயிப் போச்சு.நான் சீரியஸா பதிவு போட்டாலும் விழுந்து விழுந்து சிரிக்கிறாரு.யாரங்கே ஒரு கூடை எலுமிச்சம் பழம் உடனே அண்ணனுக்கு அனுப்புங்க.

கண்மணி/kanmani said...

தம்பி இப்ப கைப்பு மாட்டப் போற மாதிரி நீரும் ஒரு நாளு ஒரு 'வலசம்மாகிட்ட' மாட்டத்தானே போறீங்க.[யாருன்னு விசாரிங்க]

கண்மணி/kanmani said...

thanks delphine magalir sakthi is more powerful than men

கண்மணி/kanmani said...

//அபி அப்பா எதுக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறிங்க.....அக்கா எவ்வளவு சீரியசா தம்பிகளுக்கு ஒரு பதிவு போட்டிருக்கு அதை போயி காமெடி கீமிடின்னு சொல்லிக்கிட்டு//

தம்பிங்க நல்லயிருக்கட்டும்னு ஐடியா குடுத்தா நக்கலா?
ஆனா அபி அப்பா மாதிரி ஆளுங்கள நம்புவீங்க.நல்லதுக்கே காலம் இல்லப்பா

கண்மணி/kanmani said...

மங்கை ஒரே நிம்மதி உங்க கமெண்ட்ஸ் பாத்து என்னன்னா என்னைப் போலவே யோசிக்கிறவங்க உங்கள மாதிரி கொஞ்சம் பேர் இருப்பது சந்தோஷம்.
[வித்தியாசமா நினைக்கற நான் லூஸோன்னு எனக்கே டவுட்டாவும் அப்பப்ப...ஐயோ உங்களச் சொல்லல]
லேடிஸ் ஆர் ஆல்வேஸ் லேடிஸ் னு புரியுது.

MyFriend said...

யக்கா.. இது என்ன விபரீத ஆசை?

இங்க வர்ற பசங்கள் இளவட்ட கல்லை தூக்கினாதான் உள்ளே அனுமதி வழங்குவீங்களா?? :-P

கண்மணி/kanmani said...

கிரைண்டர் குழவிக் கல்லையே நம்ம பசங்க தூக்க மாட்டாங்க [அவ்ளோ சோம்பேறிங்க]
இளவட்டக் கல்ல எங்கன தூக்கறது அதுக்குள்ள நயனையும் பாவனாவையும் பார்த்து ஜொள்ளடிக்க கெளம்பிடுவாங்க.

cheena (சீனா) said...

aakaa - ஒண்ணுமே பண்ண வேணாமா - காளை அடக்க வேணாம் - புலி நகம் வேணாம் - கல்லு தூக்க வேணாம் - சும்மா இருந்தாகே போதுமாம் - சரி சரி
சீரியஸ் பதிவு தானே = நகைச்சுவை இல்லையே

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)