PAGE LOAD TIME

ஒரு காதல் கவிதையின் டிஸ்கி

என் அன்பே!உயிரே!மூச்சே!
வரும் வெள்ளி,உனைக் காணவருவேன்
அப்போது,
கடற்கரைமணலை
நாறாய்த் திரித்து-அதில்
நட்சத்திரங்களையெல்லாம் கோர்த்து
செய்த மாலையோடு
நீலவானத்தை உரித்து
உனக்கு அதை சேலையாக மடித்து,
உன் நெற்றிக்கு பொட்டிட்டு அழகு பார்க்க
சூரியனையோ!
சந்திரனையோ!
நிச்சயம் பறித்து வருவேன்
இப்படிக்கு
உனக்காக உயிர்வாழ்பவன்

பின் குறிப்பு:வெள்ளிக்கிழமை மழை பெய்யும் போல் வானிலை இருந்தால் நான் வர மாட்டேன்.நன்றி.

12 மறுமொழிகள்::

aaradhana said...

ம்ம்ம். கண்மணி.. எங்கே கொஞ்ச நாட்களாக காணோம். திரும்பி இப்படி ஒரு சுட்ட கவிதை வேறு..

கண்மணி said...

வாங்க ஆராதனா லீவு,விருந்தினர்,வெளியூர் பயணம் அதான்.
கவிதை சுட்டதாக இருந்தாலும் அதன் பின் குறிப்பு என்னைக் கவரவே இந்த பகிர்தல்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த வானிலை அறிக்கையை நம்பலாமா? :-P

இடியுடன் கூடிய பலத்த மழைன்னு சொல்வாங்க..ஆனா, சுட்டெறீக்கும் வெயிலாய் இருக்கும்.. அதேபோல இருக்குமோ?

சென்ஷி said...

எங்க சுட்டதுன்னு போட்டிருக்கலாமுல்ல :))

சென்ஷி

லக்ஷ்மி said...

யக்கோவ், உண்மையிலேயே கவிதைய விட அந்த பின் குறிப்புதான் பிரமாதம்.. ஓரமா உக்காந்து யோசிப்பாய்ங்களோ????

கண்மணி said...

சென்ஷி சுட்ட எடத்தையெல்லாம் சொல்ல முடியுமா?

கண்மணி said...

லஷ்மி எட்டுவரிக் கவிதை சாதாரணம்.அந்த ஒற்றைவரி பின் குறிப்புதான் மேட்டரே.எவ்வளவு உண்மைக்காதல் என்று புரியும்!!!!!!!!!!!!??????????

கோபிநாத் said...

ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல.....ஒன்னும் புரியல ;-((

Syam said...

சூப்பர் டிஸ்கி...ஆன நீங்களும் இப்போ G3 பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா :-)

அய்யனார் said...

:)

கண்மணி காதல் கவுஜர்கள் லாம் சண்டைக்கு வரப்போறங்க ம்ஹிம்! சங்கத்தில வேற இருக்கிங்க :)

delphine said...

சுட்டாலும் நன்னாத்தான் இருக்குதுங்கோ அம்மணி. நல்ல பதிவோடு எப்ப வருவீங்க கண்மணி?

குட்டிபிசாசு said...

வணக்கம் கண்மணி...
நல்ல கவிதை...அருமை...

உங்க மொக்கை ரொம்ப படிச்சி இருக்கேன். குறிப்பா நம்ம மாமி கதை படிச்சிட்டு கண்ணீர் வர சிரிச்சேன். நான் இப்ப பதிவு போட்டுடேன். நானும் மொக்கைய ஆ'ரம்பம்' செய்யணும்.

வாழ்த்துக்கள்.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)