PAGE LOAD TIME

விவேக்குடன் ஒரு நாள்

சுட்டி டி.வி.ல குட்டீஸ் சாய்ஸ் நிகழ்ச்சியில் வைத்த ஒரு போட்டியில் 'லைவ்' வா கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னா வாரம் ஒரு திரைப்பட நட்சத்திரம் சிறப்பு விருந்தினரா ஜெயித்த குட்டீஸ்வீட்டுக்கே வந்து ஒரு நாள் முழுக்க இருப்பாங்க என்று அறிவிக்க பிச்சுவும் கிச்சுவும் ரெண்டு வாரமா கலந்து கிட்டாங்க.

போன வாரம் 2 மார்க்ல கோட்டை விட்டவங்க இந்த வாரம் ஜெயிச்சிட்டாங்க.சந்தோஷத்துல ரெண்டும் குதிச்சதுங்கள்.இந்த வார வின்னர் வீட்டுக்கு சிறப்பு விருந்தினர்'நடிகர் விவேக்' என்பது அவர்களின் கூடுதல் சந்தோஷம். விவேக் காமெடின்னா ரொம்பப் பிடிக்கும்.

ஆனா ரங்கமணி அப்பாவுக்குத்தான் [மாமனார்]வருத்தம்.போன வாரம் ஜெயிச்சிருந்தா நடிகை நமீதா வந்திருப்பாங்களே ன்னு ஆதங்கம்.=P~

மாமியார் உடனே ஊருக்கு போன் பண்ணி நாத்தனார்,கொழுந்தனார் பிள்ளைகளையெல்லாம் வரச் சொல்லி மெசேஸ் அனுப்பிட்டாங்க.

ஞாயித்துக் கிழமை விவேக் வருவதாக இன்பர்மேஷன் வந்தது.அதுக்கு முன்னாலேயே வீடு நிறைய விருந்தினர்.ஏதோ கல்யாண வீடு போலக் கூட்டம் .சமையலுக்குன்னு தனி ஆளே போட்டாச்சு.

வீட்டை கிளீன் பண்ணி புதுசா சோபா கவர் கர்ட்டன் எல்லாம் மாத்தி என்று வீடே அமர்க்களப் பட்டுக்கொண்டிருந்தது.குட்டீஸ் எல்லாம் சேர்ந்து விவேக்கிடம் என்னவெல்லாம் கேட்பது என்று ஆலோசனைக் கூட்டம் போட்டனர்.

அம்புஜம் மாமியும்,கிட்டு மாமாவும் இதுதான் சாக்கென்று என் வீட்டிலேயே பழியாய்க் கிடந்தார்கள்.ஞாயித்துக் கிழமையும் வந்தது.காலையிலேயே எல்லோரும் ரெடியாகி விவேக்கை வரவேற்கக் காத்திருந்தனர்.

விவேக் டி.வி கவரேஜ் புடை சூழ வந்திறங்கினார்.மிக சிம்பிளா ஒரு ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் ஹாய்..ஹாய்,, B-) என்றபடியே வந்தார்.

ஒவ்வொருவராக அறிமுகப்படுத்த, கறுப்பு பேண்ட்,சிகப்பு ஷர்ட் தலையில் தொப்பி கழுத்தில் கர்சீப்புடன் படா ஸ்டைலாக இருந்த கிட்டு மாமாவைப் பார்த்து இவர் என்ன எம்.ஜி.ஆர் ரசிகரா உலகம் சுற்றும் வாலிபன் கெட்டப்பில் இருக்காரே என்றதும் மாமா வாயெல்லாம் பல்லானார். :D

'நீங்க என்ன செய்யறீங்க' என் விவேக் மாமாவைப் பார்த்துக் கேட்க

மாமா,'நான் சும்மா இருக்கேன்' என்றார்.

'இப்படியொரு வேலையா நான் கேள்விப்பட்டதில்லையே ;)) 'என்றார்.

அம்புஜம் மாமியைப் பார்த்து,ஹாய் மாமி யூ லுக் யூத்புல் என்னோட அடுத்த படத்துல நடிக்கறீங்களா என்றதும்,

மாமி,' உங்க கூட,அஜீத்,விக்ரம் கூட னா ஓகே சிம்பு,,தனுஷ் வேண்டாம் சின்னப் பசங்க'என

மாமி உங்களுக்கே இது ஓவராத் தெரியல.எல்லாப் படத்துலயும் பறவை முனியம்மாவே எனக்கு பாட்டியா நடிச்சி போரடிக்குது ன்னு உங்கள சஜஸ்ட் பண்ணா
ஏதோ நயன்தாராவுக்கு பதில் உங்கள ஹீரோயினா போட்றா மாதிரி பிலிம் காட்றீங்களே 'என கிண்டலடித்தார்.

சோகமாய் இருந்த என் மாமனாரிடம் ,'கவலைப்படாதீங்க யங் மேன் துபையில் கிடேசன் பார்க்கில் நமீதா ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப் போறோம்.அதுக்கு உங்களைத் தலைவராப் போட்டுடறேன்'என்றார்.

'வக் வக்' என்று வாலாட்டிய ச்சுப்பிரமணியைப் பார்த்து ,'ஹாய் ச்சுப்பி ஹௌ ஆர் யூ'என்றபடியே ஷேக் ஹேன்ட்ஸ் கொடுத்தார்.

கொஞ்சம் ஸ்வீட்ஸ் ஆப்பிள் ஸூஸுடன் காலை உணவை முடித்துக் கொண்டு குட்டீஸ்களுடன் அரட்டையை ஆரம்பித்தார்.

ஹாய் குட்டீஸ் இது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் என்று பாரதி படத்தைக் காட்ட
:-?
'சாயாஜி ஷிண்டே'

பெரியார் படத்தைக் காட்ட,

'சத்யராஜ்' என்றதும்,

அப்ப வீரபாண்டிய கட்ட பொம்மன் னா சிவாஜி

ராகவேந்திரர் னா ரஜினி யா

சரி இது யாரு சொல்லுங்க என்று என்.எஸ்.கே படம் காட்ட

'நீங்க'

'நானா'

'ஆமாம் அப்படித்தான் அம்புஜம் பாட்டி சொன்னா நீங்க நவீன கலைவாணர்.கருத்து கந்த சாமியாம்'

ஓகே ஓகே என்று சிரித்தபடி வேற ஏதாவது கேளுங்க என்று சொன்னதும் ஒரு வாண்டு கேட்டது,

'அங்கிள் புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? யாருமே இன்னும் இதுக்கு பதில் சொல்லலையே நீங்க சொல்லுங்க'

விவேக் ஒரு காகிதத்தில் 'திருக்குறள்' என எழுதி இதை எழுதியவர் யார் எனக் கேட்க ஒரு குட்டி சொன்னது,'நீங்க தானே கொஞ்சம் முன்னாடி எழுதினீங்க அதுக்குள்ள மறந்துட்டீங்க உங்களுக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸா? என்றது.

இன்னொன்று வடிவேலு மாதிரி பேசுங்க என
விவேக் ,'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்' என்றதும் சபாஷ் என்றது.

யப்பா எல்லோரையும் சகட்டு மேனிக்கு கலாய்க்கிறேன் ஆனா இந்த வாண்டுகளை சமாளிக்க முடியலையே என்று அசர அதற்குள் லன்ச் ரெடியாகவே சாப்பிடக் கிளம்பினார்.

பெர்ர்ரிய வாழையிலை போட்டு அதில் சிக்கன் மட்டன் மீன் முட்டையென பரிமாற ,

'அய்யோ என்னங்கயிது'

'அங்கிள் ஒரு படத்துல ஓடறது,மேயறது,பறக்கறது,ஓடறது போட்றதுன்னு சொல்லுவீங்க மணிவண்ணன் அங்கிள் உங்களுக்கு குடுக்காம சாப்பிடுவாருல்ல அதான் நாங்க உங்களுக்கு எல்லாத்தையும் போட்றோம் சாப்பிடுங்க அங்கிள்' என் குட்டீஸ் சொல்ல,

'சரி சரி கேமெராவ கொஞ்சம் ஆப் பண்ணுங்கப்பா நான் ஒரு கட்டு கட்டிடறேன்'என்றார்.

அந்த நேரம் முகத்தில் ஒரு கறுப்புத் துணியைக் கட்டியபடி மாமி கையில் ஒரு டிபன் பாக்ஸுடன் வர,

'என்ன மாமி கையில ஆஸிட்டா,கக்கூஸ் கழுவற மாதிரி மூஞ்சிய மூடிட்டு போறீங்க'என விவேக் கேட்க, ;)

'இந்த கவுச்சி வாடை கொடலப் பொரட்டுது அதன் துணி கட்டியிருக்கேன்.இது நான் செய்த அல்வா உங்களுக்காக எடுத்து வந்தேன் சாப்பிடுங்க,

'ஐயோ மாமி உங்க அல்வா மேட்டர் ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே பிளீஸ் என்ன விட்டுடுங்க வேணும்னா குடுங்க என் புது படத்துக்கு போஸ்டர் ஒட்ட வச்சிக்கிறேன்' என கலாய்க்க மாமி அசடு வழிந்தார்.

விருந்து முடிந்து கிளம்பும் போது ,குழந்தைகளுக்கு நிறைய பரிசுப் பொருட்கள் கொடுத்தார்.
மாமாவையும்,மாமியையும் பார்த்து இனி நீங்க இரண்டு விஷயங்களைச் செய்யக் கூடாது என்று சொன்னார்.

மாமா சும்மா இருக்கக் கூடாது
மாமி அல்வா செய்யக் கூடாது
கூட்டத்தினர் வாய்விட்டு சிரிக்க அனைவர்க்கும் வணக்கம் சொல்லி விடை பெற்றார்.:-h

35 மறுமொழிகள்::

அபி அப்பா said...

1

.:: மை ஃபிரண்ட் ::. said...

முத்துலட்சுமியக்கா ஊருக்கு போறதால்ல அவங்க சார்பா ஒரு பின்னூட்டம் போட்டிடலாம் அபி அப்பா..


இந்த பின்னூட்டம் முத்துலட்சுமியக்காக்கு பரிசளிக்கிறோம்..

இப்படிக்கு,
பாசக்கார குடும்பம்.

muthulakshmi said...

thanks my friend! nalla remaind panninee ungka annachikku:-))

அபி அப்பா said...

kitesan park nameetha rasihar mandrama wow! gopithaan athukku thalaivar. bavana rasihar mandramnna kathir thambi thalaivar, sidarth rasihar mandram=myfriend......:-)))

சென்ஷி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
முத்துலட்சுமியக்கா ஊருக்கு போறதால்ல அவங்க சார்பா ஒரு பின்னூட்டம் போட்டிடலாம் அபி அப்பா..


இந்த பின்னூட்டம் முத்துலட்சுமியக்காக்கு பரிசளிக்கிறோம்..

இப்படிக்கு,
பாசக்கார குடும்பம். //

ரிப்பீட்டே :)))

சென்ஷி

muthulakshmi said...

myfriend! appadinna abiappa entha rasihar mandra thalaivar?

.:: மை ஃபிரண்ட் ::. said...

@அபி அப்பா:

//kitesan park nameetha rasihar mandrama wow! gopithaan athukku thalaivar. bavana rasihar mandramnna kathir thambi thalaivar, sidarth rasihar mandram=myfriend......:-))) //

அபி அப்பா எஃத ரசிகர் மன்றத்துக்கு தலைவர்? :-?

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,

பதிவு வழக்கம்போல சூப்பர்.வாழ்த்துக்கள்.

.:: மை ஃபிரண்ட் ::. said...

@muthulakshmi:

//thanks my friend! nalla remaind panninee ungka annachikku:-)) //

இல்லைக்கா.. அண்ணா டெஸ்டிங் பண்ணாரு.. அதுக்குதான் அந்த "1"..

சரிதானே அண்ணா? ;-)

அபி அப்பா said...

ennaya eenn vambukku izukkareengkappaa:-)))

muthulakshmi said...

nandri! senshi/myfriend/abiappa, paasakkaara kudumbamaa irukkee!!

அபி அப்பா said...

pathivu kalakkal!!

thambi said...

nalla irukku pathivu!:-))
athu sari, naan illathappa ennaya vatchi kaamadiyaa, nalla irungkappa:-))

gopinath said...

enna natakkuthu ingkee??????

.:: மை ஃபிரண்ட் ::. said...

@muthulakshmi said...

//nandri! senshi/myfriend/abiappa, paasakkaara kudumbamaa irukkee!! //

இன்னும் பலபேர் விட்டுப்போச்சே!!! இதை நீங்க கண்டிப்பா சரி செய்யனும். :-P

கண்மணி said...

முத்துலஷ்மி இந்த அபிஅப்பா கூட்டத்தோடு சேர்ந்து நீங்களும் கெட்டுப் போயிட்டீங்க.பதிவு பத்தி சொல்லாம அவிங்களோட லூட்டியா? நாளைக்கு உங்க எல்லாரு வண்டவாளத்தையும் பத்தித்தான் பதிவே.படிக்க மறக்காதீங்க.
ஹேப்பி ஹாலிடேஸ்

.:: மை ஃபிரண்ட் ::. said...

@gopinath:

//enna natakkuthu ingkee??????//

ஆடு நடக்குது.. கோழி நடக்குது.. வாத்து நடக்குது.. அட.. குரங்கு மட்டும் தாவுது! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

@கண்மணி:

//முத்துலஷ்மி இந்த அபிஅப்பா கூட்டத்தோடு சேர்ந்து நீங்களும் கெட்டுப் போயிட்டீங்க.பதிவு பத்தி சொல்லாம அவிங்களோட லூட்டியா? //

அவங்க இப்பத்தான் கொஞ்சம் எஞ்சாய் பண்றாங்க.. அதுக்கு கூட விட மாட்றாங்களே இந்த கண்மணி டீச்சர்....

//நாளைக்கு உங்க எல்லாரு வண்டவாளத்தையும் பத்தித்தான் பதிவே.படிக்க மறக்காதீங்க.
ஹேப்பி ஹாலிடேஸ் //

ஆஹா.. பெர்ர்ர்ரிய்ய்ய ஆப்போ!!!

கண்மணி said...

தம்பி எங்கே போனிங்க ஆணி அதிகமா ம்ருவாதயா எல்லாப் பதிவுக்கும் ரெண்டு ரெண்டு பின்னூட்டம் போடாட்டி முன்னப்போல துபை ஜெயில்ல பிரியாணிக்கு ரெடியாவனும் ஆமாம்.

கண்மணி said...

@ மைபிரண்டு தாவறது குரங்கு இல்ல தங்கச்சி கோபீஈஈஈஈ

kurangku radha said...

thavarathu gopiyillai naanthan:-)))

அபி பாப்பா said...

நீங்க வெறும் ராதாவா இல்லை குரங்கு ராதாவா?

*** நாயகன் மியூஜிக் ****

abiappa said...

what is going on here?

ayyanar said...

kumbi!!

TAIGER-CHSUPPU said...

LOL LOL LOL LOL

ஜெஸிலா said...

கண்மணி உங்க பதிவ அம்புஜம் மாமி படிக்கிறதில்லையா ;-). நல்லாயிருக்கு பதிவு.

கண்மணி said...

வாங்க அய்யனார் நீங்களும் 'கும்மி'யில கலந்துடுங்க.

கண்மணி said...

ஜெஸிலா அம்புஜம் மாமியாலதான் எம் பொழப்பே ஓடுது.போட்டுக் கொடுத்துடாதீங்க.

கண்மணி said...

குட்டி பிசாசு நன்றி.நாளைக்குப் பாருங்க இந்த பாசக்கார குடும்பத்துக்கு வச்சிருக்கேன் ஆப்பு.

கண்மணி said...

அபி அப்பா நமீதா,பாவனா ரெண்டுபேர் மன்றத்தையே சுத்தி சுத்தி வாரீயளே அண்ணிகிட்ட போட்டுக் கொடுக்கட்டுமா?

கோபிநாத் said...

\\கண்மணி said...
@ மைபிரண்டு தாவறது குரங்கு இல்ல தங்கச்சி கோபீஈஈஈஈ\\

ம்ம்ம்ம்.....இப்ப சந்தோஷமா?

இன்னைக்கு எந்த பதிவையும் படிக்கவில்லை...நாளைக்கு வாரேன் ;))

அதுவரை எங்கள் பாசக்கார குடும்பம் பின்னூட்டம் போட்டு கலக்குவாங்க;)

காட்டாறு said...

ரசிச்சி சிரிச்சேன் கண்மணி!

கண்மணி said...

நன்றி காட்டாறு நீண்ட நாளாக ஆறு வற்றிப்போயிருந்ததே...ஹி..ஹி[பிஸியோ]

கண்மணி said...

அடப் பாவி கோபி நீயுமா?படிக்காமயே பின்னூட்டம் போடுற?

Anonymous said...

=))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)