PAGE LOAD TIME

கல்யாணி கல்யாண வைபோகமே..

விடியற் காலை.
தலையில் கட்டிய முண்டாசுடன் கிட்டு மாமா பால்கார கோவிந்தன் வீட்டுக் கதவைத் தட்டினார்.
'கோவிந்து..கோவிந்து'
வெளியே வந்தபடி'இன்னா சார் இம்மாம் காலையிலே வர்ரே நான் தான் 6 மணிக்கெல்லாம் கரீட்டா பால் கொண்டாந்துடுவேனே 'என்றான்.
'துபைல இருந்து எந்தம்பி வந்திருக்கான்.அவன் பெட் காபி ஒட்டகப் பால்லதான் குடிப்பானாம்.அதான்'
'அட இன்னா சார் 'குர்பானிக்கே' ஒட்டகம் வடநாட்டுல இருந்து வருது.ந்ம்மூர்ல யாரு சார் வச்சிருக்காங்க'
'ஆமா நேத்து அம்புஜம் மாமி தம்பிதானே மலேஷியாவுல இருந்து வர்ரதாச் சொன்னாங்க.இன்னா சாரு விஷேஷம் அல்லாரும் ஒரே நேரத்துல வர்றாங்க'

'அதுவா நேத்து 'தினப் புளுகு' பேப்பர்ல ஒரு விளம்பரம் வந்துச்சி.ராமநாதபுரம் பக்கத்துல ஒரு ஊர்ல அனாதையா இருக்கிற கல்யாணிக்கு ஊர் மக்கள் குடும்பத்துக்கு ஒரு கிராம் தங்க காசு வாங்கிக் குடுத்து சீர் செனத்தியோட கல்யாணம் பண்ணப் போறாங்களாம்.

விருப்பமுள்ள மணமகன் விண்ணப்பிக்கவும் இருந்தது.குடும்பத்துக்கு ஒரு 1000 குடும்பம்னாலும் 80 பவுனுக்கு மேல் தேறும்னு என் தம்பிய துபையில இருந்து வரச் சொல்லிட்டேன்.இதத்தெரிஞ்சிகிட்டு மாமியும் அவ தம்பிய மலேஷியாவுல இருந்து வரச் சொல்லிட்டா.அது சரி இப்ப ஒட்டகப் பாலுக்கு என்ன வழி'
'சாரு லிட்டருக்கு மேல 10 ரூபாய்க் குடு ஸ்ட்ராங்கான எருமைப் பால் தர்ரேன் ஒட்டகப் பாலுன்னு கத வுடு'
காசைக் குடுத்து பாலை வாங்கிக் கொண்டு மாமா கிளம்ப,
கோவிந்தனுக்கு ஒரு யோசனை.நம்ம தம்பி மச்சக்காளையும்தான் கண்ணாலத்துக்கு ரெடியாக்கீறான்.நாமும் ஒரு அப்ளிகேஷன் போட்டு கல்யாணிய அவனுக்கு முடிச்சுடுவோம் என்று முடிவு பண்ணான்.
இதற்கு இடையில் அந்த ஊர் பிரசிடென்ட்டு வரன் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சில போட்டிகள் வைத்து கல்யாணிக்கு வரன் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல் அனுப்பியிருந்தார்.
எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று மாமா உள்ளூர் லைப்ரரியில் இருந்து பொது அறிவுப் புத்தகங்களை எடுத்து வந்து தம்பிக்கு டியூஷன் எடுத்தார்.

அதைப் பார்த்து மாமி,'க்கூம் கட்டக் கரியா நெடு நெடுன்னு ஒட்டடக் குச்சி வடிவேலு மாதிரி தம்பிக்கு பொண்ணு குடுக்கப் போறாங்க இதூல பொது அறிவு வேறயா'என் நக்கலடித்தாள்.

தன் தம்பிக்கு சுட்டுப் போட்டாலும் படிப்பு வராதுன்னு தெரியும்.அதனால ஆளையாச்சும் கொஞ்சம் அழகாக் காட்டுவோம்னு பியூட்டி பார்லர் கூட்டிப்போய் கோல்டன் ஹேர் கலரிங் பண்ணி,ரேபான் கிளாஸ் நைக் ஷூன்னு அமர்க்களப் படுத்த,மாமா விழுந்து விழுந்து சிரித்தார்.

'ஏண்டி உனக்கே இது ஓவராத் தெரியல.கத்திரிக்காய்க்கு கைகால் முளச்ச மாதிரி கறுப்பா செந்தில் மாதிரி இருக்கான் .இவனுக்கு இந்த அலங்காரம் செஞ்சாமட்டும் கல்யாணி கட்டிக்குமா'

'பாப்போம் யாரு தம்பிக்கு கல்யாணின்னு'என்று மாமி சபதம் செய்தாள்.

இந்தக் கூத்தையெல்லாம் தினமும் பால் குடுக்கும் பார்த்துக் கொண்டிருந்த கோவிந்தன் நினைத்தான்.
'நம்ம தம்பிக்கு படிப்பும் சரிப் படாது அழகும் சரிப்படாது,அடவடியா ஏதாவது கோல்மால் பண்ணி ஜெயிக்க வச்சிடணும்'

கல்யாணத் தேதி குறிக்கப்பட்டு,ஊர்த் தலைவர் வேன் அனுப்பியிருந்தார்.

மாமாவும்,மாமியும் வேனில் ஏறி கிழக்கும்,மேற்குமாக உட்கார,பின்னாலேயே கோவிந்தன் தம்பியுடன் வரவதை பார்த்து மாமா அதிர்ச்சியில் ,'யூ டூ புரூட்டஸ்' என்று கத்த,
மாமியும்,'அடப் பாவி நீயுமா'?என

கோவிந்தன் கூலாக, 'அட இன்னா மாமி ,மாமா இங்கில்லீஸுல சொன்னத நீயிம் டமில்ல சொல்ற?
பணக்காரங்க நீங்களே ஓசியில சீரோட பொண்ணு கிடைக்குதுன்னு கெளம்பும் போது ஏழைங்க நாங்க வரக் கூடாதா'என்றான்.
கவுண்டமணி மாதிரி ஒரு தம்பிய வச்சிக் கிட்டு கெளம்பிட்டாய்யான்னு இருவரும் கோவிந்தனை நக்கலாகப் பார்த்தனர்.
ஊர் வந்து சேர்ந்தது.
ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது.
தலைவர் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.சுமார் 25 மாப்பிள்ளைகள் வந்திருந்தனர்.
போட்டி ஆரம்பிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.
முதல் போட்டி ஆரம்பமானது.இளவட்டக் கல் தூக்கறதோ இல்லை வில்லு வளைக்கிற்தோ இல்லை.
பெரிய துணி மூட்டையாகக் கட்டியிருந்ததை முதுகில் சுமந்தபடி ஓடனுமாம்.அப்பத்தான் வாழ்க்கையின் எல்லாச் சுமைகளையும் பாரத்தையும் சுமக்க முடியுமாம்.
மொத்தம் 25 பேர் வந்திருந்தனர்.
நாலு பேர் ஆரம்பத்திலேயே மூட்டையுடன் விழ,கொஞ்ச தூரம் ஓடியபின் இன்னும் நாலு பேர் பாரம் தாங்காமல் விழ,இப்படியே போய் கடைசியில் 8 பேர்தான் ஜெயித்தனர்.
அதில் மாமா தம்பி,மாமி தம்பி,கோவிந்தன் தம்பியும் உண்டு.
2 வது போட்டி.ஒரு மூடிய அறைக்குள் ஒரு மேடையில் அமர்ந்தபடி ஒருவர் கர்ணகடூரமாகப் பாட அதை கடைசி வரை பொறுமையுடன் கேட்பவர் வின்னர்ஸ்.அப்பத்தான் வாழ்க்கையில் சகிப்புத் தன்மை வருமாம்.
இதைப் பற்றி எப்படியோ மோப்பம் பிடித்த மாமி தன் தம்பிக்கு ஒரு ரோல் பஞ்சு வாங்கிக் கொடுத்து காதில் வைக்கச் சொல்ல,அதைப் பார்த்துக் கொண்டிருந்த கிட்டு மாமாவும் ஏன் என்பது புரியாமலே தன் தம்பிக்கும்காதில் பஞ்சை அடைத்து போட்டிக்கு அனுப்பினார்.

கோவிந்தனும்,அவன் தம்பியும் புல் மப்பில் இருந்ததால் இது எதுவும் செய்யலை.[கிடேசன் பார்க் வகையறா போலும்]

பாட்டுக் கேட்கும் போட்டி ஆரம்பித்தது.காதில் பஞ்சடைத்த ரெண்டு தம்பிகளும்,மப்பில் இருந்த மச்சக் காளையும் தான் வின்னர்ஸ். 8 பேரில் பாக்கி 5 பேர் காது ஜவ்வு கிழிந்து ஓடி விட்டனர்.

3வதும் கடைசியுமாக மூணு பேர் மிஞ்சியிருப்பதால் மியூஸிக்கல் சேர் வைக்கப் பட்டது.

ஏற்கனவே பேசி வைத்தபடி முந்தி இடம் பிடிக்க வந்த மாமியோட தம்பியை பிடித்து தள்ளி விட்டு கோவிந்தன் தம்பி மச்சக் காளை வெற்றி பெற்றான்.

ஊர்த் தலைவர் உடனே கல்யாண ஏற்பாடு செய்தார்.
மேள தாளங்கள் முழங்க மாப்பிள்ளை மணமேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
மாமாவும்,மாமியும் தோத்துப் போன சோகத்தில் இருந்தனர்.

முழு அலங்காரத்துடன் மணமகள் மேடைக்கு வர,மாமா மீண்டும் ஓஹோ வென்று சிரிக்க மாமி திரும்பிப் பார்க்க,

சர்வ அலங்கார தேவதையாக கல்யாணி [ஒரு கழுதை] வந்து கொண்டிருந்தது.

நெடு நாளாக ஊரில் பல பிரச்சனைகளாம். கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் நல்லது என ஒரு ஜோஸியர் சொல்ல இந்த ஏற்பாடாம்.

பஞ்ச கல்யாணி என்ற பெயர் ராசியில்லை நியூமராலஜிப்படி மணப்பெண் பேர் கல்யாணின்னு வச்சாங்களாம்.

தப்பித்த் நிம்மதியில் மாமாவும்,மாமியும் பகை மறந்து ஜோடி சேர்ந்து ரசிக்க,
கோவிந்தன் ஒப்புக்க மாட்டேன்னு அடம் பிடிக்க,
பந்தயத்துக்கு ஒப்புக் கொண்டு ஏமாற்ற முடியாது என ஊர் ஜனம் கொதித்தெழ,
வேறு வழியின்றி மச்சக் காளை கல்யாணி கழுத்தில் தாலி கட்ட,

சுபமாக நடந்து முடிந்தது கல்யாணி கல்யாண வைபோகம்.
சுபம்.

டிஸ்கி:மூட நம்பிக்கைகளின் பேரில் கழுதைக் கல்யாணம்,வாழை மரக் கல்யாணம் ஏன் பாம்புடன் கூட கல்யாணம் நடந்து கொண்டுதானிருக்கிறது.

20 மறுமொழிகள்::

Chinna Ammini said...

இது தத்துவம் எண் எத்தனை
(முதல்ல நான் கண்மணி கல்யாண வைபோகமேன்னு படிச்சுட்டங்க)
பாசக்கார குடும்பம் கும்மி அடிக்கரதுக்குள்ள நான் பின்னூட்டம் போட்டுடறேன்

.:: மை ஃபிரண்ட் ::. said...

பாசக்கார குடும்பம் அட்டெண்டண்ஸ்
(எல்லாருக்கும் சேர்த்து போட்டாச்சுப்பா!) ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

சிபிண்ணே, தத்துவங்களை இப்போ கணக்கு பண்றது இல்லையா?

குட்டிபிசாசு said...

நேத்து உங்களுக்கு வாழ்த்து கூட சொல்ல முடியல. நேத்து நீங்க இந்த பாசக்கார குடும்பத்துக்கு வச்ச ஆப்புல...அவங்க குறுக்கும் நெடுக்கும் கும்மி அடிச்சி. நான் பின்னோட்டம் போடல.வாழ்த்துக்கள்.

இலவசக்கொத்தனார் said...

எம்புட்டு தங்கக் காசு தேறிச்சு?

Raja Shanmugam said...

பாதியில் கதையை கணிக்கமுடிந்தாலும்,கிரேசி மோகன் நாடகம் போல் கதையாக்கம் நன்றாகவே இருந்தது, ரசித்தேன்...

delphine said...

பாதியில் கதையை கணிக்கமுடிந்தாலும்///////
GOOD PRESENTATION

ஜி said...

arumaiyaana flow... vazakkam pola aditchu aadirukeenga yekkov...

அய்யனார் said...

டீச்சர்
என்னதான் தம்பி ஆட்டைக்கு வராத கோபம்னாலும் அதை இந்தமாதிரி காண்பிச்சிருக்க கூடாது :(

எலே கதிரு..பாருய்யா உன்ன என்னென்ன சொல்லியிருக்காங்க னு

மங்கை said...

தாயே..நேத்து போஸ்ட்ல பின்னூட்டமே போட முடியலை.. பாசக்காற ஸ்டூண்ட்ஸ்..யம்மா...நேத்து போஸ்ட் திறந்தாலே..ஹேங்க் ஆகுது...
கலக்குறே கண்மணி..:-)

கண்மணி said...

பாசக்கார குடும்பம் லீவுல இருக்காங்க.சின்ன அம்மணி என்ன கோபம் உங்களுக்கு?கல்யாணியை கண்மணின்னு படிக்க

கண்மணி said...

குட்டிப்சாசு நேத்து அவங்க அடிச்ச கும்மியில நானே காணாமப் போயிட்டேன்.

கண்மணி said...

நோ கமெண்ட்ஸ் மை பிரண்ட் ஹி..ஹி

கண்மணி said...

இலவசம் கல்யாணத்துக்குப் போன தம்பிங்கள கேளுங்க எம்புட்டு தேறிச்சுன்னு.

கண்மணி said...

நன்றிங்க ராஜா ஷண்முகம்.ஆனா ரொம்பத்தான் வாருறீங்க கிரேசின்னுட்டு.ஹி..ஹி

கண்மணி said...

டெல்பின் பாதியில கணிக்க முடிஞ்சுதா?ராஜா ஷண்முகமும் இதைத்தான் சொன்னார்.அப்படின்னா என் ஸ்கிரீன் பிளே சரியில்லையோ.

கண்மணி said...

மங்கை நேத்து அதுங்க அடிச்ச லூட்டியிருக்கே.தாங்கலை.ஆனாப் பாருங்க இன்னிக்கு ஷோ வெறிச்சோடிப் போச்சு அதுக இல்லாம.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கண்மணி said...

தேங்க்ஸ் ஜி.ஏதோ வண்டி ஓடுது.

delphine said...

டெல்பின் பாதியில கணிக்க முடிஞ்சுதா?ராஜா ஷண்முகமும் இதைத்தான் சொன்னார்.அப்படின்னா என் ஸ்கிரீன் பிளே சரியில்லையோ.////
probably because you had written the bride's name as Kalyani I was able to guess it. the way you have presented it is really good. keep going ma'm. வாழ்த்துக்கள்...நட்சத்த்ரமாய் ஜொலிப்பதற்கு...truly you are a star... a POLE star.

கண்மணி said...

@டெல்பின் சோதனையாக இந்த வாரம் அதிக வேலை.எல்லாப் பதிவும் ஏதோ அவசர கதியில் உருவானது

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)