PAGE LOAD TIME

தமிழ்மணக் கடற்கரை

அது ஒரு பரந்த மணற் பரப்பு.அலைகளின் தாலாட்டும் ஜில்லெலென்ற காற்றின் குளுமையுமாய் ஒரு ஏகாந்த வெளி.

மெல்லத் தவழ்ந்து வரும் சிற்றலைகளும் உண்டு.ஓவென்று ஆர்ப்பரிக்கும் அட்டகாச அலைகளும் உண்டு.

வாடிக்கையாய் வருவோரும் வேடிக்கை பார்க்க மட்டும் வந்தவர்களும் என நித்தமும் ஜன சந்தடி.யாரும் யாருக்காகவும் காத்திருப்பதும் இல்லை கவலை படுவதுமில்லை.இருப்பினும் கூத்தும்,கும்மாளமும் கேலியும் கிண்டலும் என அது ஒரு தனி உலகம்.

சின்ன மழலைகள் ஒருபுறம் மணற்வீடு கட்டி விளையாடி மகிழ,வாலிப வயதினர் குறும்புப் பேச்சும் குதூகலமுமாய் கொக்கரிக்கின்றனர்.பெண்டுகளும் சளைத்தவர்கள் இல்லை நாங்களென கோதாவில் குதித்து விளையாடும் களம்.

எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் விட்டு இதென்ன கூத்து என்று விலகி அரசியலை அக்கு வேறு ஆணி வேறாய் அலசும் கூட்டம் ஒன்று.சினிமாவை ,சீரியலை விவாதிக்கும் கூட்டம் ஒன்று.கவிதைக்கான களமும் உண்டு.கதைக்கான இடமும் உண்டு.

இலங்கைப் பிரச்சனை,பெரியார், வாழ்வியல்,நாட்டு நடப்புகள்,தொழில் நுட்பங்கள் என அவரவர்க்கு விருப்பமானதை அவரவர் குழுக்களுடன் விவாதிக்கும் சுதந்திரம்.

எதிலும் கலக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தபடி விரும்பினால் கருத்துக் கூறும் சிலரும் உண்டு.பேசாமல் போவோரும் உண்டு.வம்புக்கிழுப்போரும் உண்டு.எதையும் யாரும் விவாதிக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு அடுத்தவரை பாதிக்காதவரை.

வெறும் பேச்சு சுவைக்காது என்று போட்டிகளும் தொடர் விளையாட்டுகளும் கூட அவ்வப் போது இடம் பெறும்.

பரந்த வெளியில் எல்லோருக்கும் இடமுண்டு.இன்று ஒருவருக்கானது நாளை அடுத்தவருக்காகிறது.கலகலப்பு உள்ள இடத்தில் அவ்வப்போது சலசலப்புகளும் இருப்பது இயற்கையே.ஒருவர் மற்றவர் உரிமையில் தலையிடாதவரை, சின்னக் குமுறல்களும் குறைகளும் அலை வந்து அடித்துச் சொல்லும் மணல் மேல் எழுத்துக்கள் போல் தடம் தெரியாமல் மறைந்து போகும்.

கவலைகள் மறக்கும் இடம்.கற்பனைகள் பெருகும் இடம்.கருத்துக்கள் மோதும் களம்.விவாதங்கள் பிறக்கும் தளம். முகமறியா நல்ல நட்புகள் உருவாகும் சொர்க்கம் .பங்களிப்புகளும் பகிர்தலும் பண்பட்டு இருக்கும் வரை யாருடைய மனதும் புண்பட்டு போகாது.

உன் வழி உனக்கு என் வழி எனக்கு என்ற புரிதல் இருக்கும் வரை காழ்ப்புணர்ச்சி தலை தூக்காது.

அகண்ட மணற்வெளியில் நித்தம் சுவாசிப்போம் தமிழ்க்காற்றை.

64 மறுமொழிகள்::

அபி அப்பா said...

NALLA PATHIVU!!

அபி அப்பா said...

ANA INNUM PADIKKALAI:-))

மங்கை said...

அதுரடிப்படை வர்ரதுக்குள்ள பின்னூட்டம் போட்டர்ரேன்...

நல்லா இருக்குப்பா...

நான் இது மாதிரி ரயில்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்திருக்கப்போ கவனிப்பதுண்டு.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில வருவாங்கில்ல..

அபி அப்பா said...

PADICHITEEN SUPER!!!

delphine said...

எதிலும் கலக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தபடி விரும்பினால் கருத்துக் கூறும் சிலரும் உண்டு./////
:) :)

மங்கை said...

அபி அப்பா அலும்புக்கு ஒரு அளவேயில்லையா...

சரி அபி அப்பா...உண்மைய சொல்லுங்க...எத்தன பதிவகளை இதுவரைக்கும் படிச்சு இருப்பீங்க..

பார்க்காமையே நல்லா இருக்குன்னு சொல்வீங்களோ?... இதோ சொல்ரேன் முத்துலட்சுமிகிட்ட...மேட்டர் சேரவேண்டிய இடத்துல போய் சேர்ந்துரும்..:-))

அபி அப்பா said...

என்னங்க மங்கை! இப்படி சொல்லிட்டீங்க, பின்னூட்டம் போடுவது அவ்வளவு சுலபமா? காலைல இருந்து உங்க பதிவுக்கு பின்னூட்டம் போட முடியாம நான் "டென்ஷன்" ஆனது எனக்கு தான் தெரியும், என்னான்னு கொஞ்சம் கவனிங்க!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணே, ஆணியை பிடுங்காம இங்கண என்ன மொக்க போட்டுட்டு இருக்கீங்க? அங்கே ஆணியை பிடுங்கினாதான் நீங்க வீடு போய் சேர முடியும். தெரியும்ல? ;-)

அபி அப்பா said...

மங்கை! நோ :டென்ஷன்" ப்ளீஸ்! தங்கமணி தங்கமான மணி அதனால முத்துலெஷ்மி என்ன சொன்னாலும் நான் சமாளிச்சுப்பேனே!!!! அப்ப என்ன செய்வீங்க:-)))

Anonymous said...

அப்போ தேன்கூட்டுக் காற்று, தமிழ் வெளிக்கு போன காற்று, மாற்றுக் காற்று இதெல்லாம் வேண்டாமா உங்களுக்கு?

வல்லிசிம்ஹன் said...

வெய்யிலுக்கு நல்லா இருந்திச்சு கண்மணீ.

உண்மையான வார்த்தைகள்.

அபி அப்பா said...

ஆமா செல்லம் நெறைய ஆணி இருக்கு, ஆனா இவிங்கள பதிவு போடுவத நிறுத்த சொல்லுப்பா நான் பின்னூட்டம் போடுவதை நிறுத்தரேன்!!!!!

மங்கை said...

ஐய்யோ அபி அப்பா..இப்ப தான் கவனிச்சேன்...என்ன ஆச்சுன்னு தெரியலையே...எல்லாம் சரியாதான இருக்கு...சொன்னதுக்கு நன்றி.. பார்க்குறேன்..என்ன யாரும் பின்னூட்டம் போடலைன்னு பார்த்துட்டு இருந்தேன்

அபி அப்பா said...

உண்மைய சொல்லனும்னா நான் "படிக்கும்" பதிவு எதுக்குமே பின்னூட்டம் போடுவதில்லை, உதாரண்ம் கீதாம்மா பதிவு, வல்லியம்மா பதிவு மற்றும் லக்கிலுக் பதிவு....காரணம் ....தெரியலை!!!

அய்யனார் said...

ம்ம்.. பிரச்சினைகளும் இருக்கே கண்மனி..அதையும் சொல்லியிருக்கலாம்..

அய்யனார் said...

/அதுரடிப்படை வர்ரதுக்குள்ள பின்னூட்டம் போட்டர்ரேன்.../
:)

பாசக்கார குடும்ப மெம்பர் இல்லையா எப்படி விடமுடியும்

அபி அப்பா said...

//அய்யனார் said...
ம்ம்.. பிரச்சினைகளும் இருக்கே கண்மனி..அதையும் சொல்லியிருக்கலாம்..
//

ஆமாய்யா அய்ஸ்! நீர் தமிழ்மன்ணத்துலதான இருக்க! அவங்க மறந்துட்டாங்க:-)))

துளசி கோபால் said...

ஹை.நல்லா இருக்கீங்களா?

நான் ச்சும்மா பீச்சுக்குக் காத்து வாங்க வந்தேன்:-)

துளசி கோபால் said...

ஹை.........நல்லா இருக்கீங்களா?

ச்சும்மா பீச்சுக்குக் காத்து வாங்க வந்தேன்:-)

குட்டிபிசாசு said...

கும்மி பார்டிங்களா! அடங்க மாட்டிங்களா? வாழ்த்துக்கள் கண்மணி அக்கா.

அய்யனார் கொலவெறிபடை said...

/நீர் தமிழ்மன்ணத்துலதான இருக்க! அவங்க மறந்துட்டாங்க:-))) /

girrrrrrrrrrrrrrrrrrr

மின்னுது மின்னல் said...

///
குட்டிபிசாசு said...
கும்மி பார்டிங்களா! அடங்க மாட்டிங்களா? வாழ்த்துக்கள் கண்மணி அக்கா.
///


அடக்கம் பண்ணாம உடமாட்டீங்களோ...

Anonymous said...

அபி அப்பா said...
NALLA PATHIVU!!

//

நான் தான் ஃபஸ்டா னு கேட்காம நல்ல பதிவு என உள் குத்துடன் சொன்ன அபிஅப்பாவை செயற்குழு பாராட்டுகிறது

மின்னுது மின்னல் said...

துளசி கோபால் said...
ஹை.........நல்லா இருக்கீங்களா?

ச்சும்மா பீச்சுக்குக் காத்து வாங்க வந்தேன்:-)
///

வேணாம் இது ரெத்தம் விளையும் பூமி...:)

மின்னுது மின்னல் said...

அபி அப்பா said...
PADICHITEEN SUPER!!!
//

ஏன்யா நம்ம மானத்த வாங்குற...

அபி அப்பா said...

பதில் சொல்ல டீச்சருக்கு நேரம் இல்லாததால் நான் சொல்ல போகிறேன்.....

Anonymous said...

அபி அப்பா said...
பதில் சொல்ல டீச்சருக்கு நேரம் இல்லாததால் நான் சொல்ல போகிறேன்.....
//

இதெல்லா ஒவரு வந்தோமா நூறு பின்னுட்டம் போட்டமா
இல்லாம இது என்ன சின்ன புள்ள தானமா

டீச்சர் said...

அபி அப்பா said...
பதில் சொல்ல டீச்சருக்கு நேரம் இல்லாததால் நான் சொல்ல போகிறேன்.....
///

ஃபஸ்டு வந்த அபிஅப்பாவுக்கு
நன்றி

அதே டீச்சர் said...

ரெண்டாவதும் அபிஅப்பாவா

ஹும் நன்றி

அபி அப்பா said...

//மின்னுது மின்னல் said...
அபி அப்பா said...
PADICHITEEN SUPER!!!
//

ஏன்யா நம்ம மானத்த வாங்குற... //

பார்ரா பார்ரா! பதிவு படிச்சாலே மானம் போவுதாமே!!

டீச்சர் said...

மங்கை said...
அதுரடிப்படை வர்ரதுக்குள்ள பின்னூட்டம் போட்டர்ரேன்...
///

ஹி ஹி

நண்றி

மின்னுது மின்னல் said...

அபி அப்பா இப்ப என்ன ஆயிடுச்சி
எல்லாருக்கும் நன்றி சொல்லுற

500 அடிக்க டீச்சர் எதும் பணம் தந்தாங்களா

எனக்கு பாதி தந்தா ஆட்டம் ஆரம்பம்

என்ன சொல்லுரீங்க

மின்னுது மின்னல் said...

ஏன்யா நம்ம மானத்த வாங்குற... //

பார்ரா பார்ரா! பதிவு படிச்சாலே மானம் போவுதாமே!!
//

அபிஅப்பா நீ என்னமோ எழுதி இருக்க
எனக்கு மசமசனு கண்ணே தெரியில

ஆமா என்னா அது...

மின்னுது மின்னல் said...

உங்கள் நண்பனுக்கு

நீ எங்கே ஆட்டம் முடிஞ்ச பிறகு
வந்து யாருமே இல்லையானு கேட்க பிடாது

குட்டிபிசாசு said...

/////மின்னுது மின்னல் said...
///
குட்டிபிசாசு said...
கும்மி பார்டிங்களா! அடங்க மாட்டிங்களா? வாழ்த்துக்கள் கண்மணி அக்கா.
///
அடக்கம் பண்ணாம உடமாட்டீங்களோ... /////

செல்லம்ம்ம்ம்...அதே நீ சொல்லகூடாது! நீ சொல்லகூடாது! நீ ஏன் சொல்லற!நீ ஏன் சொல்லற!தூக்கு!தூக்கு!!!

அடக்கம் அமருருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்...

புது டீச்சர் said...

இவுங்க கும்மி தாங்கல

அதே புது டீச்சர் said...

மின்னல்..பிசாசு..அய்யோ இதென்ன கலவர பூமியா

குட்டிபிசாசு said...

கலவரம் ஒன்னும் இல்ல..சும்மா லூலூலா...

மின்னுது மின்னல் said...

...
//

குட்டி பிசாசு அடக்கம் பண்ணாம உடமாட்டீங்களோ கண்மணி டீச்சரை

அதே குட்டி பிசாசு said...

அடக்கம் அமருருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்...

//

என்னாயிது
இங்க வந்து

நாங்க அடங்காமை
காரிருள்
எல்லாம் எங்களுக்கு
தெரியும்

Anonymous said...

::)

குட்டிபிசாசு said...

ஹா...ஹா...நல்லா கலாய்கிறிங்க...

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரத்திற்கு பாராட்டுக்கள்.

உங்களின் வேறு எந்த பதிவையும் படித்ததில்லை. இது தான் முதல் விஜயம்.

தமிழ்மணக் கடற்கரை பரந்து விரிந்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய கடற்கரை என்று சொல்லலாமோ?

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

http://groups.google.com/group/muththamiz

கோபிநாத் said...

காலையில நான் போட்ட பின்னூட்டத்தை காணவில்லை ;((((

சரி....அருமையான பதிவு ;)

கோபிநாத் said...

\\\ஓவென்று ஆர்ப்பரிக்கும் அட்டகாச அலைகளும் உண்டு.\\

மை பிரண்ட் இது உனக்கு தான் ;))

கண்மணி said...

@அபிஅப்பா ஒன்னும் சொல்றதுக்கில்ல.என் டெர்ன் வரும்போது கவனிச்சிக்கிறேன்.

கண்மணி said...

மங்கை இதுங்க அடிக்கிற லூட்டியில கடல்லேயே விழுந்துடலாம்னு இருக்குப்பா.

கண்மணி said...

டெல்பின் உங்களச் சொன்னதா கோச்சுக்கிடாதீங்க.

கண்மணி said...

நன்றி வல்லியம்மா

கண்மணி said...

அபி அப்பா ப்ரீட்சைக்கே படிக்கிறதில்லை.பதிவா படிக்கப் போறார்.ஆனா பின்னூட்டம் போட்டுடுவாரு

கண்மணி said...

@ மின்னுது மின்னல்,குட்டிபிசாசு,அய்யனார் என்னய்யா நடக்குது இங்கே.பதிவப் போட்டுட்டு ஒரு வேலையாப் போயிட்டு இப்பத்தான் வந்தேன்.
அடக்கம் பண்ணுவாங்கலாமில்ல.என்னயிது சின்னப் புள்ளத்தனமாயிருக்கு.மை பிரண்ட் என்னான்னு கேளு இவிங்கள.

கண்மணி said...

வாங்க மன்சூர் ராஜா நன்றி

கண்மணி said...

துளசியக்கா காத்து நல்லா வாங்கினீங்களா?இல்ல கவிச்சி வாடையா[இதுக லூட்டியில]

கோபிநாத் said...

\\\வாலிப வயதினர் குறும்புப் பேச்சும் குதூகலமுமாய் கொக்கரிக்கின்றனர்.\\

சொல்லவே வேண்டாம் இது எனக்கு சென்ஷி, தம்பி, ராம், ஜி, புலி, வெட்டின்னு....போயிக்கிட்டே இருக்கும் ;)

கண்மணி said...

எலேகோபி நீயி இப்படி மாறுவேன்னு நெனைக்கல தம்பி [அபி அப்பாக் கூட சேராதேன்னேன் கேட்டியாளே]

கண்மணி said...

புது டீச்சர்,அதே டீச்சர்,பழைய டீச்சரா 'பிராக்ஸி ' குடுத்தவங்களுக்கு நன்றி. அப்பூ.ஒரிஜினல் வந்துட்டேன் அடங்குங்கப்பூ.

கோபிநாத் said...

\கண்மணி said...
எலேகோபி நீயி இப்படி மாறுவேன்னு நெனைக்கல தம்பி\\

யக்கா...என்ன இப்படி சொல்லிட்டிங்க...காலையில போட்ட பின்னூட்டத்தை காணவில்லைன்னு நானே கவலையில இருக்கேன்......உன் தம்பிக்கா நான். நான் போயி மாறுவேனா?

\\\[அபி அப்பாக் கூட சேராதேன்னேன் கேட்டியாளே] \\

பாவம் அக்கா....நம்ம அண்ணாத்த ரொம்ப பீல் பண்ணுவாரு ;((

கண்மணி said...

@கோபி அண்ணாத்த படிக்காமயே பின்னூட்டம் போடுறாறே பின்ன எனக்கு கோவம் வராதா?

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,
கொவிச்சுக்காதீங்க. சும்மா தான் எல்லாரும் கலாய்த்தோம். வாழ்த்துக்கள்.

கண்மணி said...

குட்டிபிசாசு நானும் சும்மாங்காட்டியும் கோச்சுகிட்டேன்.நிஜமாயில்ல ஹி..ஹி

தென்றல் said...

/கவலைகள் மறக்கும் இடம்.கற்பனைகள் பெருகும் இடம்.கருத்துக்கள் மோதும் களம்.விவாதங்கள் பிறக்கும் தளம். முகமறியா நல்ல நட்புகள் உருவாகும் சொர்க்கம்......

உன் வழி உனக்கு என் வழி எனக்கு என்ற புரிதல் இருக்கும் வரை காழ்ப்புணர்ச்சி தலை தூக்காது/

அழகுங்க!

கோபிநாத் said...

\\ கண்மணி said...
@கோபி அண்ணாத்த படிக்காமயே பின்னூட்டம் போடுறாறே பின்ன எனக்கு கோவம் வராதா? \\

அண்ணாத்த சும்மா விளையாட்டுக்கு அப்படி சொல்லுவாறு....பதிவை பத்தி கேள்வி கேளுங்க சரியா பதில் சொல்லுவாறு.....அப்புறம் கோவமா?...யாருக்கு உங்களுக்கா?? நல்ல காமெடி தான் ;))))

cheena (சீனா) said...

//உன் வழி உனக்கு என் வழி எனக்கு என்ற புரிதல் இருக்கும் வரை காழ்ப்புணர்ச்சி தலை தூக்காது.//

தமிழ் மணத்தைப் பற்றிய நல்லதொரு அலசல் பதிவு. வாழ்த்துகள்

ரசிகன் said...

//..
NALLA PATHIVU!!.

ANA INNUM PADIKKALAI:-))//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்...

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)