PAGE LOAD TIME

மனிதரில் இத்தனை நிறங்களா?

It is myself
I find intolerable
----
Leo Tolstoy

முதன் முதலாய் தன்னுள்ளே தன்னை பார்க்கும் யாரும் தனக்குள் இவ்வளவு அழுக்குகளா?குப்பைகளா என்று அதிசயிப்பர்.

ஏனென்றால் மனிதன் என்றுமே தன்னைப் பற்றி அறிய முயல்வதைவிட அடுத்தவரைப் பற்றித் தெரிந்துகொள்வதிலேயே நேரத்தை செலவிடுகிறான்.

அடுத்தவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதில் பாதியைக் கூட தன்னைப் பற்றி தெரிந்திருப்பதில்லை.

எனக்குத் தெரிந்தா ஒரு டாக்டர் பெண்மணி வசதியான நாகரிக குடும்பத்தைச் சேர்ந்தவர்.ஆனால் அவருடைய மாமியாரும் அவர்வழி உறவுகளும் அதிகம் படிக்காத கிராமவாசிகள்.ஒருமுறை மாமியார் மருமகள் பணிபுரியும் ஆஸ்பிட்டலுக்கு வைத்தியம் பார்க்கச் சென்றபோது டாக்டர் மருமகள் உடன் இருந்தவர்களிடம் படிக்காத பட்டிக்காட்டு பெண்மணியை மாமியார் எனச் சொல்லத் தயங்கி இவர்கள் எனக்குத் தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னாராம்.

நுனி நாக்கு ஆங்கிலமும்,படிப்பும்,பதவியும் மட்டுமே நாகரிகத்தின் அளவுகோல் என்று நினைக்கும் இவர்களுக்கு உறவுகள் பற்றியும் மனித மனங்களைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை.

என் உறவினர் ஒருவர் தன்னுடைய கடை திறப்பு விழாவிற்கு ஒரு அரசியல் வாதியை அழைத்திருந்தார்.
உறவினரின் நண்பர் சொன்னார் குத்து விளக்கு ஏற்ற அரசியல்வாதியின் மனைவியையே அழைக்கலாம் என்று.

ஆனால் உறவினரோ வயதான தன் விதவைத் தாயை வைத்து குத்துவிளக்கேற்றினார்.
என்ன இப்படி செய்து விட்டீர்கள் என்ற நண்பரிடம்,'அரசியல்லாதியை அழைத்தது என் கடை விளம்பரத்திற்கு.ஆனால் குத்து விளக்கு ஏற்றி நான் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்த் என் தாயைவிட சிறந்தவர் யார்? அவள் விதவையானது ஒரு நிகழ்வேயன்றி அவர்கள் எந்த விதத்தில் தகுதி இழந்தார்கள் என்றதும் நண்பர் வாயடைத்துப் போனார்.

எனக்குத் தெரிந்த வேறொரு பெண் எந்த விசேஷத்திற்கும் போக மாட்டாள்.அப்படிப் போக வேண்டிய கட்டாயமிருந்தால் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே நிற்பாள்.இதனால் பல நேரம் அவளுக்கும் அவள் கணவனுக்கும் கருத்து வேறுபாடு.நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் உன் கணவர் சொல்வதில் தவறென்ன நாம் நாலுபேருக்கு எடுத்துக் கட்டி செய்து உதவினால்தானே நமக்கு யாராவது செய்வார்கள் என்றதும் உடைந்து போய் அழுதாள்.விசாரித்த பிறகுதான் தெரிந்தது பிள்ளை இல்லாத அவளை எந்த நல்ல காரியத்திற்கும் முன்னிறுத்தி அழைப்பதில்லை.நேரிடையாக சொல்லாவிட்டாலும் அவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு தான் ஒதுங்கியிருப்பதாகச் சொன்னாள்.இது புரியாத அவள் கணவர் ஏதோ அகங்காரத்தில் இப்படியிருப்பதாக அவளைத் திட்டுகிறார்.

கேட்டதும் என்ன சொல்வது என்று புரியவில்லை.பிள்ளை பெறுவதும்,இல்லாமல் இருப்பதும் ஒரு இயற்கை நிகழ்வு என்று உணராமல் ஏற்கனவே இயற்கையால் வஞ்சிக்கப் பட்ட அவர்களை மேலும் இப்படி நோகடிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

காலேஜ் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண் ஆண் நண்பர்களுடன் பழகுவது பற்றி மட்டமாக அவதூறு பேசிய பெண்மணி தன் மகளும் அதே போல் பழகிய போது அடுத்தவர்கள் தன் மகளைப் பற்றி தப்பாக பேசுகிறார்களே என்று வருந்தினார்.
அடுத்தவர்களைப் பற்றிப் பேசும்போது தெரியவில்லை தனக்கு என்று வரும்போதுதானே வலி புரிகிறது.
அடுத்தவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால் மற்ற நான்கும் நம்மை நோக்கி இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

தனக்குச் சாதகமாக ஏதும் நிகழும்போது ஒருவரை ராசியானவர் என்பதும் சாத்கமில்லாதபோது ,அப்போதே தெரியும் அவர் ராசியில்லாதவர் அதான் இப்படி'என்று தூற்றுவதும் மனிதர்களின் இயல்பாகி விட்டது.

மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் ஜாதி,மதம்,அந்தஸ்து,செல்வாக்கு, என்ற அளவீட்டில் பார்க்காதீர்கள்.

ஒரு ஓவியர் யேசுபிரானின் படத்திற்கு மாடலாக ஒரு பொருத்தமான முகத்தைத் தேடினாராம்.ஒரு நாள் ஒரு காட்டின் வழியே செல்லும் போது ஒரு மனிதனைக் கண்டாராம்.பழங்களையும் கிழங்க்குகளையும் தின்றுவிட்டு,ஓடை நீரை பருகி ஆனந்தமாக இருந்த அவன் முகத்தில்ல் சாந்தமும்,அமைதியும் கண்டு இவனே பொருத்தமானவன் என்று அவனை மாடலாக வைத்து யேசுவின் படம் வரைந்தாராம்.அருமையாக வந்திருந்ததாம்.
அதற்குப் பரிசாக அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து நகரத்தில் அவனைக் கொண்டுவிட்டு வேண்டியதை வாங்கிக் கொள் என்று போய்விட்டார்.

சில காலம் கழித்து யேசுகாவியம் முடியும் நிலையில் யூதாஸின் உருவத்திற்கு ஆள் தேடிப் போனபோது கொடூர முகத்துடனும்,குரோதம் பொங்கும் விழிகளுடனும் ஒருவனைக் கண்டு அவனை வைத்து காட்டிக் கொடுத்த யூதாஸை வரைந்தார்.பிறகுதான் தெரிந்தது கொண்டார் காட்டில் பார்த்தவன் தான் அவன்.அன்று கள்ளமில்லா மனதுடன் குழந்தையைப் போல் இருந்தவன் பணமும்,ஆசைகளும் பெருகியதும் மாறிவிட்டான் என்பதைப் புரிந்து கொண்டார்.

மனிதன் தேவனாவதும்,சாத்தானாவதும் சூழ்நிலைகளின் ஆசாபாசங்களின் விளைவேயன்றி பிறப்பினால் அல்ல.

நேரத்திற்கு நேரம் மனிதர்கள் முழுக்க முழுக்க வெவ்வேறு முகங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர்.
நிறம் மாறும்போது குணம் மாறும் குணம் மாறும் போது தரம் மாறும்.

ரோஜாவுக்கு ஆசைப் பட்டால் அதன் முட்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது நியதி.

மனிதர்களையும் அவர்களின் குறை,நிறைகளோடு ஏற்கப் பழகுவதே உண்மையான மனித நேயத்தின் வெளிப்பாடு.
.

45 மறுமொழிகள்::

Anonymous said...

1

Anonymous said...

2

Anonymous said...

3

Anonymous said...

4

Anonymous said...

5

Anonymous said...

6

Anonymous said...

7

Anonymous said...

8

Chandravathanaa said...

ம்.

அபி அப்பா said...

ஜிஸ்டர் கண்மணி! இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அருமையான பதிவு அதனால இதுல கும்மிக்கு வேலையில்லை! கலக்குங்க இது போல எழுதி!!

அபி அப்பா said...

அட பாசக்கார குடும்பமே! டீச்சர் என்ன ஒன்னாப்பு பாடமா நடத்துறாங்க இங்க வந்து 1 2 3 சொல்லி காட்டினா என்ன அர்த்தம்?:-))

Anonymous said...

ஈ-கலைப்பையை இன்ஸ்டால் ப்ண்ணிட்டீங்களா நீங்க? ஆணி பிடுங்குறதை விட்டுட்டு!!! :-P

அபி அப்பா said...

no my friend! vasanthanin.blogspot.com la poi type panni copy/past...thats all

பொன்ஸ்~~Poorna said...

கண்மணி மாதாஜி..

பின்னாளில், இந்த தங்கையை (அபி அப்பா, தங்கச்சியக்காவா? அக்காதங்கச்சியா? ;)), மறக்காம ஆசிரம சொத்துக்களைப் பராமரிக்க கூப்பிடுங்க ;) :))

Anonymous said...

:-) good post

Kamali

கண்மணி/kanmani said...

எலே மக்கா 1,2,3,4,5,6,7,8 ஆ ஆடுதீங்க நாளைக்கு வச்சுக்கிறலேன் ஆப்பு.
பதிவு புடிக்கலைன்னா புடிக்கலை அதனால படிக்கலைன்னு உண்மையச் சொல்லனும்லே இப்படி கபடி ஆடக் கூடாது.

கண்மணி/kanmani said...

வாங்க சந்திரவதனா 'ம்' என்ற ஒற்றை வார்த்தையில் என்னை கவுத்துப் புட்டியளே.உங்க அளவுக்கு சீரியஸா எதுவும் எழுத வராதுங்க.

கண்மணி/kanmani said...

பொன்ஸ் நீ என்ன ஒன்னும் புரியாத புள்ளையாக்கீற கண்ணு நீதான் என் கொ.ப.செ தெரியாதா ஹி..ஹி

கண்மணி/kanmani said...

நன்றி அனானி அய்யா/அம்மா [யாராயிருந்தாலும்]

Ayyanar Viswanath said...

என்னாச்சி உங்களுக்கு :)
காமெடி,மாரல் னு நல்லாத்தான் வகுப்பு எடுக்கிறீங்க ..இலக்கியத்தை விட்டுட்டிங்களே அதையும் ஒரு கை பாருங்க

தென்றல் said...

"கண்மணிஅக்கா கருத்த யாராச்சும் மறுக்க முடியுமா?"

"அங்க" சொன்னது இங்கேயேயும் பொருத்தமா இருக்கு.... ;)

கலக்குங்க!!

கண்மணி/kanmani said...

சாரி அய்யனார் இலக்கியம் எல்லாம் புனைவு என்பது என் எண்ணம்.முயற்சிக்கிறேன் உங்க அளவு வராது.

கண்மணி/kanmani said...

தென்றல் பாரபட்சமில்லாம பாராட்டவும் குறை சொல்லவும் செய்றீங்க.நன்றி.தட்ஸ் த ஸ்பிரிட்.

delphine said...

முதன் முதலாய் தன்னுள்ளே தன்னை பார்க்கும் யாரும் தனக்குள் இவ்வளவு அழுக்குகளா?குப்பைகளா என்று அதிசயிப்பர்.///
ஆனால் நம்மில் எத்தனை பேர் நம்மை சோதித்த்துப் பார்க்கிறோம்?

//படிக்காத பட்டிக்காட்டு பெண்மணியை மாமியார் எனச் சொல்லத் தயங்கி இவர்கள் எனக்குத் தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னாராம்.////
i have seen so many in my life when I was doing my practice..

நுனி நாக்கு ஆங்கிலமும்,படிப்பும்,பதவியும் மட்டுமே நாகரிகத்தின் அளவுகோல் என்று நினைக்கும் இவர்களுக்கு உறவுகள் பற்றியும் மனித மனங்களைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை.///
I think this is wrong..

நுனி நாக்கு ஆங்கிலமும்,படிப்பும்,பதவியும உள்ளவர்கள் நிறைய பேர்... தங்கள் உறவுகளை மதிக்கக் கற்றுள்ளார்கள்...நிறைய நல் உள்ளங்களைப் பார்த்துள்ளேன்..

//ஆனால் குத்து விளக்கு ஏற்றி நான் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்த் என் தாயைவிட சிறந்தவர் யார்?///
அம்மணி this is very touching!!
Again Thank you for giving a wonderful post.

பாரதி தம்பி said...

அந்த இயேசு, யூதாஸ் கதை நல்லாயிருக்கு.. நட்சத்திர வாழ்த்துக்கள்.

Anonymous said...

"நட்சத்திர வாழ்த்துக்கள்"
நல்ல பதிவு. இந்த வாரத்த்து பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

Anonymous said...

எலேய்.. நாமக்கல்லான்.. ஓடியாடா.. நம்ம கம்மனி அக்கா தத்துவத்தை என்றதில்லையா ?

My days(Gops) said...

super post nga....

// தனக்கு என்று வரும்போதுதானே வலி புரிகிறது//

idhu naan adikadi use pannum word nga....

(first tim ehere thru myfriend )

காட்டாறு said...

நல்லா எழுதுறீங்க கண்மணி! பாராட்டுக்கள்!

//அடுத்தவரை நோக்கி ஒரு விரலை நீட்டினால் மற்ற நான்கும் நம்மை நோக்கி இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.//

மறந்துடுறோமே... என்ன செய்வது? பட்டு தான் திருந்தனும். இல்லையா?

//நுனி நாக்கு ஆங்கிலமும்,படிப்பும்,பதவியும் மட்டுமே நாகரிகத்தின் அளவுகோல் என்று நினைக்கும் இவர்களுக்கு உறவுகள் பற்றியும் மனித மனங்களைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை.//

சரியா சொன்னீங்க. ஆனாங்க கண்மணி... நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் எல்லாரும் அப்படி இல்லைங்க.

//அவள் விதவையானது ஒரு நிகழ்வேயன்றி அவர்கள் எந்த விதத்தில் தகுதி இழந்தார்கள் என்றதும் நண்பர் வாயடைத்துப் போனார்.//

அந்த நண்பரை தலைவணங்குகிறேன்

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

அதென்னங்க நட்சத்திரப் பதிவுன்னு வந்தா எல்லாரும்( ஒருத்தரைத்தவிர)
வே (று)த்து முகம் காட்டறாங்க!!!!!!!!!!!!!!!!!!!!

Ram Ravishankar said...

நான் உங்க blog-கு வரதே கொஞ்சம் light reading-காக .. நீங்க என்னடான்னா போட்டு தாக்கறீங்களே! good post though!

கண்மணி/kanmani said...

நன்றி காட்டாறு நான் குறிப்பிட்டவர் போல் ஓறூ சிலர் இருக்கிறார்கள். நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் எல்லோரும் என்று பொருள் இல்லை.

கண்மணி/kanmani said...

துளசியக்கா ஏதோ எனக்கு உங்க எல்லோருடைய ஆதரவால் இந்த அந்தஸ்து [நட்சத்திர] கிடைத்தது.அதுக்கு உள்ள மரியாதையைக் கொஞ்சமாச்சும் காப்பத்தனும்னுதான் இந்த 'நல்ல' பதிவுகள்.இனிமேல் இது மாதிரி 'தப்பு' செய்யமாட்டேன் ஹி..ஹி

கண்மணி/kanmani said...

வெல்கம் ராம் ரவிசங்கர்.
வருஷம் முழுக்க ஆட்டம் போட்டாலும் பரிட்சை நேரத்துல நல்ல புள்ளையாப் படிச்சி பாஸாகற மாதிரிதான் இந்த நட்சத்திர பதிவுகள்.
ஆனால் கண்மணி என்றும் ஜாலி அக்காதான்

G.Ragavan said...

நல்ல பதிவு. மூடநம்பிக்கையில் மூழ்கிய மூடர்களுக்குப் புரிந்தால் சரி.

சென்ஷி said...

//கண்மணி said...

துளசியக்கா ஏதோ எனக்கு உங்க எல்லோருடைய ஆதரவால் இந்த அந்தஸ்து [நட்சத்திர] கிடைத்தது.அதுக்கு உள்ள மரியாதையைக் கொஞ்சமாச்சும் காப்பத்தனும்னுதான் இந்த 'நல்ல' பதிவுகள்.இனிமேல் இது மாதிரி 'தப்பு' செய்யமாட்டேன் ஹி..ஹி//

புரிஞ்சா சரி :)

சென்ஷி

Unknown said...

மனிதர்கள் அனைவருமே குறையுள்ளவர்கள்தான். அளவில் கூடுதல் குறைவு இருக்கலாம். ஆனால் குறையில்லாத மனிதனே இல்லை.
//மனிதர்களை அவர்களின் குறை,நிறைகளோடு ஏற்கப் பழகுவதே உண்மையான மனித நேயத்தின் வெளிப்பாடு.//
எல்லோரும் அறிய வேண்டிய வரிகள்.

கண்மணி/kanmani said...

வருகைக்கு நன்றி ராகவன்.
இந்த மாதிரி மூட நம்பிக்கைகள் வெளியாரிடத்தில் மட்டுமில்லை சொந்த பந்தங்களுக்குள்ளேயே அதிகம் உள்ளது

கண்மணி/kanmani said...

நன்றி சுல்தான்.ஆனால் நிறையப் பேருக்கு இது அறிவுரை போல் பிடிக்கலையே.

சோமி said...

வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்

அது சரி இப்பிடி நல்ல எழுதுற உங்கள ஏனுங்க எல்லாரும் கலாய்க்கிறாங்க?

கண்மணி/kanmani said...

@சோமி
என்னங்க சோமி என் தம்பி,தங்கைகளின் பாசத்தப் புரிஞ்சிக்காம கலாய்க்கிறாங்கன்னு சொல்றீங்க.இதெல்லாம் ஒரு ஜாலிதான் இதுக்குப் பேருதான் கும்மி.இந்த அன்புக்கும் நட்புக்கும் குடுத்து வச்சிருக்கனும்.

Anonymous said...

9

10

Anonymous said...

உங்கள் பதிவில் இருந்த குறையை நிவர்த்தி பண்ணியாச்சு....:)

கண்மணி/kanmani said...

என் பதிவில் இருந்த குறையா?என்னங்க நவன்?விளங்கச் சொல்லுங்க நான் ஒரு குழல் விளக்கு.

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் - மனிதர்கள் இப்படித்தான் - இது இயற்கை - பெண்களுக்கு ஏற்படும் சாதாரண நிகழ்வுகள் -சில மூட நம்பிக்கைகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. என்ன செய்வது. இருப்பினும் குழந்தை இல்லாத பெண்களை சுப நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை. மூட நம்பிக்கைதான். இருப்பினும் அழைத்து அந்நிகழ்வு பொய்த்துப் போனால் இவளால் தான் என உலகம் பேசுகிறது. இந்த ரிஸ்க் எடுக்க எவரும் விரும்புவதில்லை. இன்னும் ஏழெழு ஜென்மம் எடுக்க வேண்டும் நாமெல்லாம் திருந்த.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)