PAGE LOAD TIME

அம்புஜாஸ்ரீயும் மெட்டி ஒலி திருமுருகனும்

நேத்து அம்புஜம் மாமி வீட்டுக்குப் போனபோது மாமி விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள்.
பதறிப் போய் ,'என்னாச்சு மாமி' என்றேன்.

கண்ணைத் துடைத்தபடியே ஒரு பேப்பர் கட்டிங்கைக் காட்டினாள்.
மெட்டி ஒலி திரு முருகன் எடுக்கப் போகும் ஒரு சின்னத் திரை மெகா சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம்.

'அதுக்கு ஏன் மாமி அழறீங்க'

'புரியாதவளா இருக்கியே சினிமான்னா ஏதவது நடிச்சு காட்டச் சொல்லுவாங்க.சின்னத் திரை மெக சீரியல்னா முதல் தகுதியே நல்லா அழத் தெரியணும்டி'

'அதுசரி கையில என்ன '

'வெங்காயம்டி.கிளிசெரின் இல்லாததால் வெங்காயத்தை வச்சி டிரெயினிங் 'என்றாள்.
ரெண்டு நாள் கழித்து மாமி ஒரு கண்ணாடியோடு என் முன்னால் வந்து 'நல்ல அழறனான்னு பாத்துச் சொல்லுடி' என்றாள்.
'கண்ணாடி ஏன் மாமி?'
'நடிகைன்னா அழற சீன்ல கூட அழகா இருக்கனும் .முகம் அஷ்ட கோணலாகி பாக்க அசிங்கமா இருக்கக் கூடாது.குஷ்பு பாரு அழும்போதுகூட அழகா இருப்பா'

மாமி சொல்றதும் சரிதான்.சில நடிகைங்க பார்க்க சுமாரா இருப்பாங்க அழுதா இன்னும் பயமா இருக்கும்.கிச்சுமணி சில நேரம் சாப்பிடாம அழுதா அவங்களத்தான் 'பூச்சாண்டி'மூணு கண்ணன்' ன்னு காமிச்சு சோறு ஊட்டுவேன்.

மாமி முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபடியே குலுங்கி குலுங்கி அழ அந்தப் பக்கம் வந்த ரங்கமணி அய்யோ மாமிக்கு என்னாச்சி என்று பதற,ச்சுப்பிரமணி மிரண்டு பீரோவுக்கு அடியில் ஒளிய பிச்சுவும் கிச்சுவும் என்னை இறுக்கிக் கட்டிக் கொள்ள ஒரு வழியாக மாமி அழுது ஒத்திகை பார்த்தாள்.
'ஏன்டி பாம்பே ஞானம்,வத்சலா ராஜ கோபால் போல அழறேனா?'என்று சந்தேகம் வேறு.
'அவங்களவிட சூப்பராயிருக்கு மாமி 'என்றேன்.பாவம் அழுது அழுது முகம் வீங்கி மூக்கு சிவந்து பாவமாக இருந்தது மாமியைப் பார்க்க.
ஸ்கிரீன் டெஸ்டில் மாமி செலக்ட் ஆகிவிட்டாள்.நன்றாக அழும் புது முகம் என்ற சர்ட்டிபிகேட் வேறு.மறுபடியும் ஒரு வாரம் கழித்து வரச் சொல்லியிருந்தார்கள்.

மாமி என்னை ஷாப்பிங் போகக் கூப்பிட்டாள். ஹீல்ஸ் செருப்பு வாங்கணுமாம்.மாமி உங்களுக்கே இது ஓவராத் தெரியல.நீங்களே நல்ல உயரம் இதில் டிப் டூ [tip toe] தேவையா என்றேன்.
நெசம்மாலுமே நீ இவ்ளோ அப்பிராணியா இருக்காதடி.ஐஸ்வர்யா ராயும் யுக்தா முகியும் விடவா நான் உயரம்.அவாள்ளாம் போட்டுக்கலை.நடிக்க வந்துட்டா இதெல்லலம் அவசியம் என்றாள்.ஏதோ நாலு சில்வர் ஜூப்ளி படமும் ராடன் டி.வி மெகா சீரியல்லயும் நடிச்சவ மாதிரி அலட்டினா மாமி.
அது சரி சீரியல்ல பெரும்பாலும் குடும்பக்கதைன்னு சொல்லித் தான் சோகத்தப் புழியறாங்க.வீட்டுக்குள்ள நடிக்கிற சீனில் ஹீல்ஸ் எதற்கு அதிலும் திருமுருகன்,திருச்செல்வம் எல்லாம் மிகைப்படுத்தாமல் முடிந்தவரை யதார்த்தமாக எடுப்பவர்கள் என்றேன்.
நீ சீரியல்ல வர்ர சீன் மட்டும்தான் பாப்பியா ராத்திரி தூங்கப் போற சீன் என்றாலும் பட்டுப்புடவையும் ஹை ஹீல்ஸூம் நிறைய நகையோடயும் கூட நடிப்பாங்க. அன்னைக்கு அப்படி வரச் சொல்லி யூனிட்ல சொல்லிவிட்டாங்க என்றபடி செருப்பை செலக்ட் செய்தாள்.
பின்னாடி அதைப் போடு நடந்து 'கேட் வாக்' பழகி கால் சுளுக்கி பிரஞ்ச் ஆயில் ஹாட் வாட்டர்பாத் என்று சரி வராமல் ஆர்த்தோ டாக்டரிடம் போய் கிரிப் பேண்டேஜ் கட்டிக் கொண்டது தனிக்கதை.

அடுத்து பேர் மாற்றுப் படலம்.பேப்பரும் பேனாவுமாக வந்து அம்புஜம் என்ற பெயரை எப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என்று நச்சரித்தாள்.
அம்புஜா..அம்புஜ்...அம்புஸ்ரீ...அம்புஜ்ஸ்ரீ....என்று விதம்விதமாக எழுதிப் பார்த்தாள்.
மாமி இப்பெல்லாம் சொந்தப் பேரையோ தன் பேருடன் அப்பா அல்லது புருஷன் பேரையோ வச்சிக்கிறதுதான் பேஷன்.முன்னமாதிரி ஸ்ரீ எல்லாம் வேண்டாம் என்றும் கேட்காமல் நியூமராலஜிப்படி சரிவரும் என்று 'அம்புஜாஸ்ரீ' ஆக மாற்றிக் கொண்டாள்.

இந்தக் கூத்துக்கிடையே ரங்கமணிக்கு ஒரு சந்தேகம்.'என் - மகன் படத்துக்குப் பிறகு திருமுருகன் சீரியல் ஆரம்பிக்கப் போறதா சேதியில்லையே என்றார்.எனக்கும் டவுட்டானாலும் மாமியிடம் வாய் கொடுத்து மாட்ட வேண்டாம் என்று விட்டேன்.

கம்பெனிகாரர்கள் வரச் சொன்ன தேதியில் மாமி என்னையும் அழைக்க திருமுருகனைப் பார்த்து ஒரு ஹலோ சொல்லும் ஆசையில் நானும் போனேன்.

'மெட்டி ஒலி' அலுவலகம் உரிமை 'திருமுருகன்' என்று ஏதோ டீ க்கடை விளம்பரம் போல் ஒரு அட்டையில் ஸ்கெட்சில் எழுதித் தொங்கிக் கொண்டிருந்தது.

மறுபடியும் மாமிக்கு ஸ்கிரீன் டெஸ்ட்டும் ஆடிஷனும் நடத்தப் பட்டது.
அழற சீன் ஒன்று தந்து நடிக்கச் சொல்ல மாமி அழுவதைப் பார்த்து யூனிட்டே அழுதது.

[யூனிட் என்றால் நானும் அங்கிருந்த கேமராமேன்,டீ சப்ளை செய்த பையன் மூணே பேர்தான்].
பிறகு மாமி அடுத்து எடுக்கப் போற சீரியலில் மெயின் மாமியார் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.எனக்கும் மாமி நடிக்கப் போவது சந்தோஷமாக இருந்தது.
அடுத்துத்தாண் மெயின் மேட்டர்.மாமி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டதும் ஆல்-இன்-ஆல் கேமரா கம் மானேஜர் மாமி என்ன பணமா செக்கா என்றார்.

ஆஹா ஒப்பந்தம் போட்ட உடனே பணம் என்று மாமி மகிழ்ந்து பணமாவே கொடுங்க என,

'என்ன வெளையாடுறீங்களா?நீங்கதானே தரணும் அதானே ஒப்பந்தம். நாங்க புதுசா வளர்ந்து வர்ர கம்பெனி நடிகருங்ககிட்ட வாங்கித்தான் ஷூட் பண்ணனும் என்றார்.

திருமுருகன் சாரைக் கூப்பிடு நான் பேசிக்கிறேன் என்று சொல்ல உள்ளே அனுப்பினான்.
உள்ளே நல்ல உயரத்தில் சிவப்பாக ஒரு ஆள் தாந்தான் திருமுருகன் என்றார்.மாமியும் போனதடவை அவரைப் பார்க்கவில்லை.

ஏம்பா 'மெட்டி ஒலி கோபி' அதான் திருமுருகன் குள்ளமா கருப்பாத்தானே இருப்பார். நீ என்று மாமி இழுக்க
'மாமி எம் பேருகூட திரு.முருகன் தான்.முருகன் எம் பேரு திருஞானம் எங்கப்பா பேரு. எங்க கம்பெனிக்கு மெட்டி ஒலி ன்னு பேர் வச்சிருக்கோம்.ஏன்னா அது பொம்பளைங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்ச பேராச்சே.நீங்க நடிக்கனும்னா நீங்கதான் பணம் கொடுக்கணும் என்றதும்தான் இது ஒரூ டுபாக்கூர் கம்பெனி என்று புரிந்தது.

எப்படியோ சமாளித்து ஒப்பந்தத்தை கேன்சல் செய்து மாமியைத் தேற்றி அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

மாமி இப்பவும் அழுது கொண்டிருக்கிறாள்.
சீரியலுக்காக இல்லை.இப்படி ஏமாந்து போனோமேயென்று.

25 மறுமொழிகள்::

சென்ஷி said...

ஹைய்யா.. இப்பவும் நாந்தான் பர்ஸ்ட்டு...

மை பிரண்டுக்காக அபி அப்பா எழுதும் வாழ்த்தை வழங்குவது :)

சென்ஷி

abiappa said...

naan than first

ippadikku
my friend

கண்மணி said...

மண்டயப் பிச்சிகிட்டு பதிவு நல்லாருக்கணுமேன்னு நான் பதிவு போட்டா, நாந்தான் பர்ஸ்ட் விளையாட்டா?இங்க என்ன ரன்னிங் ரேஸா நடக்குது?

சென்ஷி said...

நோ..
இது நட்பு..
அதையும் தாண்டி...
பின்னூட்டம்..

:))

சென்ஷி

மின்னுது மின்னல் said...

கண்மணிமாமி இப்பவும் அழுது கொண்டிருக்கிறாள்.
சீரியலுக்காக இல்லை.இப்படி ஏமாந்து போனோமேயென்று.

ஹி ஹி சும்ம்மா

நாகு (Nagu) said...

அம்புஜம் மாமி தொடர் ரொம்ப தமாஷ். மாமி பெரியார் சிலையில் ஏறி இறங்குவதை நினைத்து இன்று வரை சிரித்துக் கொண்டு இருக்கிறேன்.

இந்த பதிவு பற்றி எழுதிய மறுமொழியில் நாந்தான் பர்ஸ்ட். டேக் இட் சென்ஷி & அபி அப்பா!

மின்னுது மின்னல் said...

கத நல்லா இருக்கு
அப்படியே ஸ்ரிப்ட ரெடி பண்ணி கொண்டு வந்துடுங்க மெட்டிஒலி ஆபிஸுக்கு நீங்கதான் கதை ஆசிரியை...:)

அபி அப்பா said...

வணக்கம் தங்கச்சி! நான் ஜூன் 15ல் ஊருக்கு போக இருப்பதால் என்னால் இப்போது தமிழ்மணத்தில் அதிகம் வர முடியலை. ஆணி ஜாஸ்தியாக இருக்கு. மேலும் ஈ கலப்பையையும் தூக்கிவிட்டேன். இருந்தால் தானே அதில் போய் உழுது கொண்டு இருப்பேன் என்பதால். அதனால் நான் பின்னூட்டம் போடவில்லை என்று தவறாக நினைக்க வேண்டாம். ஆனால் கண்டிப்பாக பதிவு எல்லாம் படித்து விடுவேன். நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்:-))

நாமக்கல் சிபி said...

Intha pathivil Kanmani Teacherin Thathuvangal Edhuvum Idamperavillai.


"Thathuvangalai Ethirparkaamal Vaazha pazhagikkol"

- Kanmani Teacher Indha padhivil Marai mugamaga sonna thathuvam No : 000008/2007

கண்மணி said...

//சின்னத் திரை மெக சீரியல்னா முதல் தகுதியே நல்லா அழத் தெரியணும்டி'//

சிபி இந்தப் பதிவுல இதுதான் தத்துவம்.மாமியும் அதைத்தானே டிரை பண்ணா

கோபிநாத் said...

\\சென்ஷி said...
நோ..
இது நட்பு..
அதையும் தாண்டி...
பின்னூட்டம்..

:))

சென்ஷி\\

சென் கும்மியா?

மின்னுது மின்னல் said...

கண்மணி said...
//சின்னத் திரை மெக சீரியல்னா முதல் தகுதியே நல்லா அழத் தெரியணும்டி'//

சிபி இந்தப் பதிவுல இதுதான் தத்துவம்.மாமியும் அதைத்தானே டிரை பண்ணா
///


தத்துவம் : 000009/2007


தள செக் பவுன்ஸ் ஆகுது

நாமக்கல் சிபி said...

//சிபி இந்தப் பதிவுல இதுதான் தத்துவம்.மாமியும் அதைத்தானே டிரை பண்ணா
//

Idhu Thathuvam Alla. Tips.

மின்னுது மின்னல் said...

//
கண்மணி said...
மண்டயப் பிச்சிகிட்டு பதிவு நல்லாருக்கணுமேன்னு நான் பதிவு போட்டா, நாந்தான் பர்ஸ்ட் விளையாட்டா?இங்க என்ன ரன்னிங் ரேஸா நடக்குது?
///காற்றில் சறுகாகிவிடு...ஆற்றில் தக்கையாகிவிடு...

ரிப்பிட்டே

.:: மை ஃபிரண்ட் ::. said...

@ சென்ஷி said...
//ஹைய்யா.. இப்பவும் நாந்தான் பர்ஸ்ட்டு...

மை பிரண்டுக்காக அபி அப்பா எழுதும் வாழ்த்தை வழங்குவது :)

சென்ஷி //

@abiappa said...
//naan than first

ippadikku
my friend //


உங்க பாசத்துக்கு நான் தலை வணங்குகிறேன். :-D

சிறில் அலெக்ஸ் said...

ஆ.வி ஸ்டைல்ல ஆனா ஆ.வியையும் மிஞ்சுற தரம்.

வாழ்த்துக்கள். நட்சத்திரமாயிட்டீங்கல்ல.

தருமி சார் உங்களை சந்திப்பின்போது பரிந்துரைத்தார். அவருக்கும் நன்றி.

தொடர்ந்து கலக்குங்க.

:)

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,
மாமி மட்டும் இல்ல...என்னையும் கொஞ்சம் recommend பண்ணுங்க. நானும் நல்லா அழுவேன்.உங்களுக்கு புன்ணியமா போகுது. படித்தேன்.சிரிச்சேன். அருமை.
பாராட்டுக்கள்.

இராம் said...

யக்கோவ்,

கலக்கல்.... :))

இராம் said...

//மண்டயப் பிச்சிகிட்டு பதிவு நல்லாருக்கணுமேன்னு நான் பதிவு போட்டா, நாந்தான் பர்ஸ்ட் விளையாட்டா?இங்க என்ன ரன்னிங் ரேஸா நடக்குது?//

அதே அதே......

என்ன பதிவு போட்டாலும் அதிலே லந்த்'ஐ கொடுக்கிறாங்க.... :((

என்னோட கதை பெரும் சோகக் கதை :(

delphine said...

a very nice post Kanmani. Well done!

துளசி கோபால் said...

:-)))))))))))

கண்மணி said...

சென்ஷி,சிபி,சிறீல் அலெக்ஸ்,டெல்பின் துளசிக்கா,ராம்,குட்டிபிசாசு, மின்னுது மின்னல் எல்லோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி வாழ்த்தியமைக்கும் வாசிப்புக்கும்.
அபி அப்பா ஊருக்குப் போய்விட்டு வந்து நல்ல செய்தி சொல்லுங்க இனிப்புடன்.

ஜெஸிலா said...

நல்லாயிருக்கு கண்மணி.

கண்மணி said...

நன்றி ஜெஸிலா

Anonymous said...

:D

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)