PAGE LOAD TIME

காற்றில் சறுகாகிவிடு...ஆற்றில் தக்கையாகிவிடு

பிரபஞ்சத்தில் எப்போதும் எதையோ தேடியே ஓடிக் கொண்டிருக்கிறோம்.தேடல் என்னவென்று தெரியாமல் தேடியவரை திருப்தியும் அடையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தத் தேடலில் தொலைந்து போவது வாழ்வின் மிக அற்புதத் தருணங்கள் பல.சின்னச் சின்ன சந்தோஷங்களையும் தருணங்களையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே இலக்கேயில்லாமல் எதையோ தேடிப் போய்க்கொண்டிருக்கிறோம்.
வாழ ஆரம்பிக்காமலே வாழ்க்கையைத் தேடலிலேயே முடித்து விடுகிறோம்.

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சே என்கிறது திருவாசகம்.

வாழ்வில் லட்சிய வெறி இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற வாதம் சரியானதே.ஆனால் பணம் பதவி அதிகாரம் வேலை வசதி என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் யாரும் போதும் என்ற இலக்கை அடைந்ததில்லை.அடைந்தவர்களும் வாழ்வில் முழுமை அடைந்தார்களா என்பது சந்தேகமே.

கையில் கிடைக்கும் கலாக்காயை விட்டு விட்டு,
பலாக்காயைத் தேடி ஓடும் கதையாக நமக்கான வாழ்வின் நேரங்களை இரசிக்காமால்,அனுபவிக்காமல் எதற்காகவோ ஓடி ஓடி போராடி ஓய்ந்தபின் திரும்பிப் பார்த்தால் மிஞ்சியிருக்கப் போவது வெறுமை மட்டுமே.

முல்லா நஸ்ருதீனிடன் வாழ்க்கையென்பது எப்படிப் பட்டது என்று கேட்டார்களாம்.
அதற்கு அவர் சொன்னாராம் வாழ்க்கை இரண்டு வகையானது.

1.வாழ்க்கை ஆனந்தமயமானது.2.வாழ்க்கை துன்பம் நிறைந்தது.
இந்த இரண்டில் ஒன்று அவரவர் அணுகும் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றாராம்.

வாழ்க்கையை அதன் உச்சத்தில் வாழ்வதே வாழ்வதற்கான அடையாளம்.

என்னிடம் கல்வி செல்வம் வேண்டிய அளவு இருக்கிறது நான் வாழ்வின் உச்சத்தை அடந்துவிட்டேன் என்றோ,
எனக்கு அமைந்த வாழ்வு சரியில்லை நான் வாழத் தகுதியற்றவன் என்றோ நினைக்கும் இரு சாராருமே இன்னும் வாழத்தொடங்கவில்லை.வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

இரண்டு ரசகுல்லா பிரியர்களில் ஒருவனுக்கு ஒரே ஒரு ரசகுல்லாவும் இன்னொருவனுக்கு பத்து ரசகுல்லாவும் கொடுத்தாலும்,
கிடைத்த ஒற்றை ரசகுல்லாவை சிறிது சிறிதாக சுவைத்து அனுபவித்து அதன் சுவையை உணர்பவனே சுவையின் உச்சத்தை அடைகிறான்.
பத்து இருக்கிறதே பார்த்துக் கொள்வோம் என்ற அலட்சியத்திலும் அவசரத்திலும் வேகவேகமாக முழுங்குபவன் தீரும் நிலை வரும்போது தீர்ந்து போகிறதே என்ற பதட்டத்தில் ருசியறித் தவறுகிறான்.
ரசகுல்லாவின் ருசியறியும் சுவையின் உச்சம் அதன் எண்ணிக்கையில் இல்லை. அதை எப்படிச் சுவைத்தான் என்பதிலேதான் உள்ளது.

மனித வாழ்வும் அப்படியே.என்ன மாதிரி வாழ்வு என்பதல்ல வாழ்க்கை.என்ன வாழ்க்கையாக இருந்தாலும் அதை அனுபவித்து அதன் உச்சத்தை உணர்ந்து வாழ்வதே வாழ்ந்ததற்கான அடையாளம்.

வாழ்க்கையின் இந்த உச்சத்தை அடைவது எப்படி?

எவ்வளவு காற்றடித்தாலும் கனமான பொருள் பறக்காமல் தரையில் கிடந்து மிதிபடுகிறது.ஆனால் மெல்லிய சறுகு காற்றின் சுழற்சிக்கு ஏற்ப உயரே உயரே பறந்து செல்கிறது.
ஆற்றில் போடப்பட்ட கனமான கல் ஆற்றின் அடியிலேயே சேற்றில் புதைந்து போகிறது.தக்கையோ ஆற்றின் ஓட்டத்துடன் சேர்ந்து நகர்ந்து முன்னேறுகிறது.

வாழ்க்கையும் அப்படி காற்றில் சருகாக ஆற்றில் தக்கையாக அதன் போக்கிலேயே கையாளப் படும் போது இலகுவாகி உச்சத்தை அடைய முயற்சிக்கும்.

கோபதாபங்கள், ஏமாற்றங்கள் ,விரக்தி.பொறாமை ,ஏதோ கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இவைகள் நம்மை அழுத்தி அமிழ்த்தும் கற்களாக இல்லாமல் நீரோட்டத்திற்கேற்ப மிதக்கும் தக்கையைப் போல கிடைத்த வாழ்வை அனுபவித்து வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து உச்சத்தை அடைவதே வாழ்வதற்கான அடையாளம்.

ஒரு குடிகாரனிடம் ஏன் குடிக்கிறாய் என்றால் என்ன சொல்லுவான்.?கவலைகளெல்லாம் மறந்து காற்றில் மிதப்பது போல் உணர்கிறேன் அந்த சந்தோஷத்திற்காக குடிக்கிறேன் என்பான்.
அவன் கோடிகளில் புரள்பவனாகவும் இருக்கலாம் குடிசையில் வாழ்பவனாகவும் இருக்கலாம் இருவருக்குமே தேவைப் படுவது கவலைகள் இல்லாத வாழ்க்கையின் உச்சம்.

அந்த உச்சத்தை அடைய மனதை இலகுவாக்கிக் கொண்டு,விதிக்கப் பட்ட வாழ்வை சீர் திருத்தி நேர் படுத்தி அதன் முழுவீச்சையூம் அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

எப்படிப் பட்ட வாழ்வு அமைதிருக்கிறது என்பதல்ல வாழ்வு.எப்படி அதை அதன் உச்சத்தில் வாழ்ந்து ஆனந்தமாயிருக்கிறோம் என்பதே முக்கியம்.

வாழ்க வளமுடன்.

47 மறுமொழிகள்::

சென்ஷி said...

நட்சத்திரம் ஆனவுடனே அட்வைஸா...

:))

நல்லாயிருக்குது.

சென்ஷி

abiappa said...

//ஒரு குடிகாரனிடம் ஏன் குடிக்கிறாய் என்றால் என்ன சொல்லுவான்.?கவலைகளெல்லாம் மறந்து காற்றில் மிதப்பது போல் உணர்கிறேன் அந்த சந்தோஷத்திற்காக குடிக்கிறேன் என்பான்.
அவன் கோடிகளில் புரள்பவனாகவும் இருக்கலாம் குடிசையில் வாழ்பவனாகவும் இருக்கலாம் இருவருக்குமே தேவைப் படுவது கவலைகள் இல்லாத வாழ்க்கையின் உச்சம்.//

kitesan park aiyanar thakkappattaar!!!:-))

nalla pathivu!!

சென்ஷி said...

அய்யகோ..
அய்யனாரை எதிர்ப்பதிந்த பதிவா..
ஏ.. தமிழ் கூறும் நல்லுகலமே..
இது உனக்கே அடுக்குமா..
எங்கள் சிங்கத்தை சீண்டி பார்க்குமிந்த பதிவை கிடேசன் பார்க் நட்பு உள்ளங்கள் பின்னூட்டத்தால் விரட்டுவோமாக :))

சென்ஷி

கோபிநாத் said...

\\எப்படிப் பட்ட வாழ்வு அமைதிருக்கிறது என்பதல்ல வாழ்வு.எப்படி அதை அதன் உச்சத்தில் வாழ்ந்து ஆனந்தமாயிருக்கிறோம் என்பதே முக்கியம்.\\

இந்த வரிகள் நல்லாயிருக்கு......பதிவை பற்றி NO COMMENTS

முத்துலெட்சுமி said...

good post.

குட்டிபிசாசு said...

//என்னிடம் கல்வி செல்வம் வேண்டிய அளவு இருக்கிறது நான் வாழ்வின் உச்சத்தை அடந்துவிட்டேன் என்றோ,
எனக்கு அமைந்த வாழ்வு சரியில்லை நான் வாழத் தகுதியற்றவன் என்றோ நினைக்கும் இரு சாராருமே இன்னும் வாழத்தொடங்கவில்லை.வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை//
நான் கைதட்டினது கேட்டுச்சா?... வாழ்த்துக்கள் கண்மணி. நல்ல கட்டுரை.

***ராஜ்***

கதிரவன் said...

நல்ல பதிவு டீச்சர் [அக்கா!? :)]. நீங்க சொல்ற மாதிரி சருகாகவும் தக்கையாகவும் வாழ ரொம்ப பயிற்சி வேணும் போல இருக்குதே !

அய்யனார் said...

ஏ பாசக்கார மக்களே அருமையான இந்த பதிவுக்கும் அய்யனாருக்கும் என்னய்யா சம்பந்தம்..:(

அய்யனார் said...

/சின்னச் சின்ன சந்தோஷங்களையும் தருணங்களையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே இலக்கேயில்லாமல் எதையோ தேடிப் போய்க்கொண்டிருக்கிறோம்.
வாழ ஆரம்பிக்காமலே வாழ்க்கையைத் தேடலிலேயே முடித்து விடுகிறோம்/

இததாங்க இப்படி சொன்னேன்

/மிகையாக்கல் சித்திரங்களின் மீது
எச்சமிட்டு
திடுமென மரங்கள் அதிர
வெளியைக் கிழித்தபடி
பறக்கத் துவங்குகிறது
ஒரு பறவை/

/வாழ்க்கையும் அப்படி காற்றில் சருகாக ஆற்றில் தக்கையாக அதன் போக்கிலேயே கையாளப் படும் போது இலகுவாகி உச்சத்தை அடைய முயற்சிக்கும்./

தி.ஜானகிராமன் ஒரு சிறுகதை யில் இப்படி சொல்வார்.."துறவென்பது தனியாய் தேடி கண்டுபிடிக்க வேண்டிய தீர்வில்லை.சிறுமை,மனநோவு,பொறாமை இது போன்ற குணங்களில் இருந்து வெளிவருவதே என்னை பொறுத்தவரை துறவுதான்"

அந்த வரிகள் ஞாபகம் வந்தது.பாசக்கார குடும்பங்களின் சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை கண்டு நோகாமல் இதுபோல இன்னும் நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

நாமக்கல் சிபி said...

//ரசகுல்லாவின் ருசியறியும் சுவையின் உச்சம் அதன் எண்ணிக்கையில் இல்லை. அதை எப்படிச் சுவைத்தான் என்பதிலேதான் உள்ளது//

Kanmani Thathuvam No : 000002/2007.

நாமக்கல் சிபி said...

//கையில் கிடைக்கும் கலாக்காயை விட்டு விட்டு,
பலாக்காயைத் தேடி ஓடும் கதையாக நமக்கான வாழ்வின் நேரங்களை இரசிக்காமால்,அனுபவிக்காமல் எதற்காகவோ ஓடி ஓடி போராடி ஓய்ந்தபின் திரும்பிப் பார்த்தால் மிஞ்சியிருக்கப் போவது வெறுமை மட்டுமே.
//

Kanmani Thathuvam No: 000003/2007

நாமக்கல் சிபி said...

//வாழ்க்கையும் அப்படி காற்றில் சருகாக ஆற்றில் தக்கையாக அதன் போக்கிலேயே கையாளப் படும் போது இலகுவாகி உச்சத்தை அடைய முயற்சிக்கும்//

Kanman Thathuvam No: 0000004/2007

தருமி said...

இந்தமாதிரி அட்வைஸ்கள் அர்த்தம் பொதிந்ததாகவும் நன்றாகவும் உள்ளன. வாழ்க்கையில் மட்டும் தான் கடைப் பிடிக்க முடியவில்லை. :(

நாமக்கல் சிபி said...

//எப்படிப் பட்ட வாழ்வு அமைதிருக்கிறது என்பதல்ல வாழ்வு.எப்படி அதை அதன் உச்சத்தில் வாழ்ந்து ஆனந்தமாயிருக்கிறோம் என்பதே முக்கியம்.
//

Kanmani Thathuvam No : 00000005/2007.

.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கா.. ஸ்டார் ஆஅனதும் தத்துவ மழையா பொழிய ஆரம்பிச்சுட்டீங்க? ;-)

கண்மணி said...

அபி அப்பா சிண்டு முடியும் வேலையா?கிடேசன் பார்க் உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமா?நல்லாயிருக்கே

கண்மணி said...

சென்ஷி ,கோபி நீங்க ரெண்டு பேரும் சின்ன புள்ளைங்க.தண்ணியடிக்கத் தெரிந்த அளவு தண்ணியில் நீச்சலடிக்கத் தெரியணும் அதுதான் வாழ்க்கைன்னேன்.ஆமா நான் ஆத்துத் தண்ணியச் சொன்னேன் நீங் என்ன நென்னைச்சீங்க?

கண்மணி said...

நன்றி முத்துலஷ்மி.
நன்றி கிட்டிப் பிசாசு ராஜ்

கண்மணி said...

நன்றி கதிரவன் நான் அக்காங்கிறதுல ஏன் இவ்வளவு கேள்விக்குறி பாட்டியா இருக்குமோன்னு டவுட்டா?ஹி..ஹி

கண்மணி said...

அய்யனார் நீங்க என் கருத்துடன் ஒத்துப் போவதில் ஆச்சரியமில்லை.உங்க கவிதைகளிலிருந்தே தெரிந்து கொண்டேன்.ஆனால் உங்களை மாதிரி அழ்கான கவிதை நடையில் சொல்லத்தெரியாமல் காஷுவலா எதையும் சொல்வேன்.

கண்மணி said...

தமிழ் மண நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி.இந்த வாரம் முதல் நாமக்கல் சிபியார் என்னுடைய தத்துவம் எண்ணும் கணக்கராக நியமிக்கப் பட்டுள்ளார்.என் தத்துவம் தேவைப்படுவோர் தகுந்த குறி எண்ணுடன் அவரை அணுகவும்..

கண்மணி said...

தருமி சார் உண்மையை இப்படி பொசுக்குனு போட்டு உடைக்கலாமா?நம்மளால கடை பிடிக்க முடியாததைத்தான் தத்துவம்னு அடுத்தவங்களுக்குச் சொல்றோம்.அவிங்களாவது முயற்சிக்கட்டுமே...

மின்னுது மின்னல் said...

//
தண்ணியடிக்கத் தெரிந்த அளவு தண்ணியில் நீச்சலடிக்கத் தெரியணும் அதுதான் வாழ்க்கைன்னேன்
//


தத்துவம் நம்பர் : 000006/2007

மின்னுது மின்னல் said...

///
கண்மணி said...
தமிழ் மண நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி.இந்த வாரம் முதல் நாமக்கல் சிபியார் என்னுடைய தத்துவம் எண்ணும் கணக்கராக நியமிக்கப் பட்டுள்ளார்.என் தத்துவம் தேவைப்படுவோர் தகுந்த குறி எண்ணுடன் அவரை அணுகவும்..
////


A/C No அனுப்பி உள்ளேன்
பணத்தை உடனே அனுப்பவும்...:)

நாமக்கல் சிபி said...

//A/C No அனுப்பி உள்ளேன்
பணத்தை உடனே அனுப்பவும்...:) //

Thanks Minnal.

Aama Enoda Account Numberthana anuppi irukki irukkeenga?

நாமக்கல் சிபி said...

//நம்மளால கடை பிடிக்க முடியாததைத்தான் தத்துவம்னு அடுத்தவங்களுக்குச் சொல்றோம்.//

Kanmani Thathuvam No : 000007/2007

பாலராஜன்கீதா said...

அன்புள்ள ஒரிஜினல் கண்மணி அவர்களுக்கு, வேறு யாரோ உங்கள் பெயரில் சீரியஸாக ஒரு பதிவு எழுதியிருக்கிறார்கள். சீக்கிரம் வந்து அதைக் காமெடி பதிவாக மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.
:-)))

நாகை சிவா said...

புத்தி சொல்லுறாங்களாம் என்ற தான் சொல்ல தோணுது,

ஆனா நல்லா சொல்லி இருக்கீங்க.

நாகை சிவா said...

//எதற்காகவோ ஓடி ஓடி போராடி ஓய்ந்தபின் திரும்பிப் பார்த்தால் மிஞ்சியிருக்கப் போவது வெறுமை மட்டுமே.//

முதுமையுடன் கூடிய வெறுமை

இதை பல இளைஞர்களும் உணருகின்றார்கள் அதான் பெரிய கொடுமையே!

கண்மணி said...

புத்தி சொல்றாங்கன்னு நீங்க நெனைக்கிற மாதிரி வேறு சிலரும் நினைத்தால் நிச்சயம் இல்லை சிவா.
புத்தி சொல்ற வயது வேணும்னா எனக்கு இருக்கலாம் ஆனா தகுதியில்லை.என்னைப் பொறுத்தவரை அடுத்தவருக்கு அறிவுரை சொல்ல யாருக்குமே தகுதியில்லை நம்மை நாமே நேர் செய்ய நிறைய இருப்பதால்.இது நான் படித்த,கேட்ட,அனுபவப்பட்ட விஷயங்களின் பகிர்தல் மட்டுமே.

ஜெஸிலா said...

அறிவுரை மிக நன்றாக இயல்பாக இருக்கிறது. நட்சத்திர வாழ்த்துகள்.

delphine said...

அந்த உச்சத்தை அடைய மனதை இலகுவாக்கிக் கொண்டு,விதிக்கப் பட்ட வாழ்வை சீர் திருத்தி நேர் படுத்தி அதன் முழுவீச்சையூம் அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.////
how true!

தம்பி said...

பல தடைகளுக்கு இடையில் அக்காவுக்காண்டி இந்த வாழ்த்து!

மாதர்குலம் என்னை மன்னிச்சிடுங்க. ரொம்ப லேட்டா வந்துட்டேன்.
நல்லவேளை நட்சத்திர வாரம் இன்னும் முடியல.

கண்மணி said...

ஜெஸிலா அறிவுரை என்றால் யாருக்கும் கசக்கும் .[எனக்கும் சேர்த்து]இது என் எண்ணங்களின் பகிர்தல் மட்டுமே.

கண்மணி said...

தம்பி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வா என் தங்கக் கம்பி.ஒவ்வொரு பதிவுக்கும் நவ்வாலு[நாலு நாலு]பின்னூட்டம் போடுலே.

delphine said...

ம்ம்ம்....நல்ல தத்துவங்கள்.

ஆழியூரான். said...

சின்ன, சின்னதாக பல இடங்களில் வார்த்தைகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், கட்டுரையின் ஒட்டுமொத்த தொணி மிக அபாயகரமானதாக இருக்கிறது.

'எதையும் எதிர்க்காதே... எதற்கும் கோபப்படாதே... உனக்கு விதிக்கப்பட்டது அவ்வளவுதான்... காற்றடித்தால் பற...தண்ணீர் கண்டால் மித... சூழ்நிலைக்கு ஏற்றவாறு பிழைக்க கற்றுக்கொள்... சறுகு உதிர்வதை ரசி... பறவை எச்சம் போடுவதை கொண்டாடு... உன் ஊர் ஆற்றுநீரை கோக்ககோலா கொள்ளையடித்தால், அவர்களோடு சேர்ந்து நீயும் கொள்ளையடி... எதிர்த்து ஆகப்போவது ஒன்றுமில்லை... போராடினால் உன் நிம்மதி கெடுவதுதான் மிச்சம்... ' இதுதான் ஒட்டுமொத்த தொணியாக காணக்கிடைக்கிறது.

அதற்காக அழுது வடியவோ, எப்போதும் சிவந்த கண்களோடு சித்தாந்தம் பேசிக்கொண்டு திரியவோ சொல்லவில்லை. வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை தாராளமாகக் கொண்டாடலாம். எல்லாவகையிலும் அடக்க நினைக்கிற இந்த சமூக அமைப்பில், வாழ்வை கொண்டாடுவது கூட ஒரு வகையில் எதிர்ப்புணர்வுதான்.

ஆனால், இருப்பதைக் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள் என்ற கருத்தைதான் என்னால் ஏற்கமுடியவில்லை.

இலகுவான, சீரான எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

Anonymous said...

வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை அடைவதற்காக போதைப் பொருளைப் பாவிப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்னவாக இருக்கும்?

Anonymous said...

kanmaniamma ithai padithavudan, enakkaaga eluthiya maathiri irukkirathu - nalla thelivaka eluthiringa - niraiya padipathum / sinthippathum unda - ennil thedal irunthukonde irrukirathu - endless aaka - nanti

கண்மணி said...

அடி ஆத்தீ ஆழியூரான் பெருசா குண்டு போடறீங்களே.எப்படி வேண்டுமானாலும் இரு,அனுபவி,வாழு என்பது பதிவின் பொருளல்ல.
நமக்கு நேரக்கூடிய நல்லவை,கெட்டவை,கிடைப்பது,கிடைக்காமல் போவது,எதிர்பார்த்தது,ஏமாந்தது என்று எதுவானாலும் ஏற்றுக் கொண்டு வாழ்வில் துவண்டு போகாமல் வாழச் சொல்கிறேன்.இந்த மனோபாவம் இல்லாததாலேயே தற்கொலைகள் பெருகுகின்றன.
கண்டதே கோலம் கொண்டதே வாழ்க்கை அனுபவி ராஜா அனுபவி என்று சொல்லவில்லை.சாமீ

கண்மணி said...

நவன் உங்க கேள்வி சிறுபிள்ளைத்தனமா இல்லை என்னைக் கலாய்க்கவா?
உச்ச கட்டம் என்பது பலப் பல அர்த்தங்கள் பொதிந்தது.மது,மாது,போதையின் உச்சமல்ல நான் சொல்வது.வாழ்வின் உச்சம்.அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அந்த அரிய வாய்ப்பை ஏமாற்றம்,தோல்வி இவைகளைப் பெரிதாக நினைத்து தவறவிடாமல் கிடைத்ததை அதன் உச்சத்தில் அனுபவியுங்கள் என்கிறேன்.இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று தினமும் வாழத்தொடங்குங்கள்.

Anonymous said...

உங்கள் அறிவுரை இதுவாகத்தான் இருக்கும் என்ற என் ஊகம் சரியானதுதான். நன்றி. பெரியவர்கள் எப்போதும் ஒரே மாதிரி (விளைவுகளை முன் கூட்டியே) தான் சிந்திப்பார்கள். சிறுவர்கள் பல மாதிரி சிந்திப்பதால் தான் அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்காமல் போதை வஸ்து போன்றவற்றுக்கு அடிமையாகிறார்கள். அவர்கள் ஆற்றில் மூழ்குவதற்கும் காற்றில் கரைவதற்கும் கூட ஆசைப்படுவார்கள். அப்போதுதானே புதிதாய்ப் பிறக்க முடியும்?

கண்மணி said...

நவன் நீங்களும் அந்த சிறுவர்களில் [புரியாமல் போதையில் உச்சம் தேடும்]ஒருவராக இருக்கக் கூடாது என்பது என் விருப்பம்.

கண்மணி said...

நன்றி அனானி.ஆனாலும் தேடலும் ஒரு அளவுதான் இருக்க வேண்டும்.தேடி ஓய்ந்த பின் வாழ நேரம் இருக்காது நண்பரே.கிடைத்ததை வைத்து சந்தோஷப் படுங்கள்.யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை என்பதே தாரக மந்திரமாக இருக்கட்டும்.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு[கண்ணதாசன் சொன்னது]

ஆழியூரான். said...

//அடி ஆத்தீ ஆழியூரான் பெருசா குண்டு போடறீங்களே.எப்படி வேண்டுமானாலும் இரு,அனுபவி,வாழு என்பது பதிவின் பொருளல்ல.
நமக்கு நேரக்கூடிய நல்லவை,கெட்டவை,கிடைப்பது,கிடைக்காமல் போவது,எதிர்பார்த்தது,ஏமாந்தது என்று எதுவானாலும் ஏற்றுக் கொண்டு வாழ்வில் துவண்டு போகாமல் வாழச் சொல்கிறேன்.இந்த மனோபாவம் இல்லாததாலேயே தற்கொலைகள் பெருகுகின்றன.
கண்டதே கோலம் கொண்டதே வாழ்க்கை அனுபவி ராஜா அனுபவி என்று சொல்லவில்லை.சாமீ//

கண்மணி..ஒரு வேளை என் புரிந்துணர்வில் கோளாறாக இருக்குமோ என்னவோ...உங்களின் இந்த பதிலைக் கூட என்னால் அதே விதமாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

'எது வந்தாலும் கவலைப்படாதே...முட்டிமோது முன்னேறு' என்று சொல்வது ஒருவகை. 'எது வந்தாலும் கவலைப்படாதே...ஒதுங்கி நில் பதுங்கிக்கொள்' என்பது இன்னொரு வகை.

எதுவானாலும் ஏற்றுக்கொண்டு வாழ்வில் துவண்டு போகாமல் இருக்கச் சொல்கிறீர்கள். எதையும் எதிர்க்காமல், எதையும் கேள்விக் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வது முதலில் வாழ்வே இல்லை. அப்புறம் அதில் துவண்டு போகாமல் இருக்க என்ன இருக்கிறது..? 'எல்லாம் அவன் செயல்' என்ற சிலோகனின் மாற்று வார்த்தைகளாகத்தான் நீங்கள் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி..

கண்மணி said...

//'எது வந்தாலும் கவலைப்படாதே...முட்டிமோது முன்னேறு' என்று சொல்வது ஒருவகை//
இதேதான் நானும் சொல்கிறேன்.முட்டி மோது கிடைத்தால் அனுபவி இல்லை தொடர்ந்து முயற்சி பண்ணு.அதற்காக சும்மாவும் இருக்காதே துவண்டும் போகாதே என்பது என் வாதம்.
பெப்ஸி உமா சொல்றமாதிரி கீப் ஆன் டிரையிங் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

nallavan said...

LIVING OUR LIVES...
A group of working adults got together to visit their Alma-mater. Their University lecturer was very happy to see them. Conversation soon turned into complaints about stress in work and life.

The Lecturer just smiled and went to the kitchen to get an assortment of cups - some porcelain, some in plastic, some in glass, some plain looking and some looked rather expensive and exquisite.

The Lecturer offered his former students the cups to get drinks for themselves.

When all the students had a cup in hand with water, the Lecturer spoke: "If you noticed, all the nice looking, expensive cups were taken up, leaving behind the plain and cheap ones. While it is normal that you only want the best for yourselves, that is the source of your problems and stress. What all you wanted was water, not the cup, but we unconsciously went for the better cups."

"Just like in life, if Life is Water, then the jobs, money and position in society are the cups. They are just tools to hold/maintain Life, but the very essence of Life doesn't change."

"If we only concentrate on the cup, we won't have time to enjoy the taste of the water in it."

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)