PAGE LOAD TIME

பிளாக் தண்டரில் பாசக்கார குடும்பம்.

கிடேசன் பார்க் ஹையர் செகண்டரி ஸ்கூல் ரிசல்ட் வந்தாச்சு.வழக்கம்போல பெண்கள் 100%ம் ஆண்கள் 30% பாஸ்.ஏதோ கண்மணி டீச்சர் பிரம்புக்கு பயந்து படிச்சதால அவிங்க கிலாஸ் ஆம்பளப் பசங்க எல்லாம் ஜஸ்ட் பாஸ்.

வழக்கம்போல் விடுமுறையில் இன்பச் சுற்றுலா உண்டு என்பதால் ஹெச்.எம் தருமி சார் கண்மணி டீச்சரை புள்ளைங்களை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார்.துணைக்கு துளசி டீச்சரும்,டெல்பின் மேமும்.

எங்க போலாம்னு யோசிச்சப்ப பேங்களூர்,மைசூர்,கொடைக்கனல் என ஆளுக்கு ஒன்னு சொல்ல அய்யனார் 'கறுப்பு இடிக்கு' போலாம்னார். அதுக்கு மின்னல் யோவ் நான் இங்கிட்டு இருக்க இடி எங்கயா இருக்கு என யாருக்கும் முதலில் புரியல.ஓ..பிளாக் தண்டர்தான்னு தெரிஞ்சதும் கோபியும் அபிஅப்பாவும் உன் தமிழ் பற்றுக்கு அளவேயில்லையான்னு மொத்தினர்.

ஊட்டியும்,பிளாக் தண்டரும் முடிவாகி,ஒரு சூப்பர் டீலக்ஸ் மேக்ஸி கேப்பில் எல்லோரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு டீச்சர் குழு கிளம்பியது.

மைபிரண்ட் துர்காவும் வரட்டும் என்றதும் க.டீச்சர் நோ நோ அவ வேற கிளாஸ் என,ஆனா நீங்கன்னா அவளுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று மை பிரண்ட் பொய் சொல்ல,க.டீச்சரும் சரியென்றார்.

கோவை அன்னபூர்னாவில் காலை டிபன் முடித்துக் கொண்டு மேட்டுப் பாளையம் சென்றனர்.

நுழைவு சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனதும் ஆளுக்கு ஒரு திசையில் ஓட கண்மணி டீச்சர் பிரம்பை எடுக்க,டெல்பின் 'லெட் தெம் என் ஜாய்மா' என்றார்.

இங்கு சிறப்பம்சமே விதவிதமான வாட்டர் கேம்ஸ் என்பதால் பாலைவன ராஜாக்களுக்கு குஷி தாங்கல.

முதலில் லேஸி ரிவர்.நீண்ட கேனல் போன்ற பகுதியில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க ரப்பர் வளையத்தில் அமர்ந்து எல்லோரும் நதியில் நீந்தினர்.
அபிஅப்பா,கோபி,மின்னல்,தென்றல்,குட்டிபிசாசு என் எல்லோரும் ஆளுக்கு ஒரு டியூபில் அமர்ந்து நீச்சலடித்தனர்.
கோபி மைபிரண்ட் வைத்திருந்த டியூபில் காற்றை புடுங்கி விட,அவ அப்படியே தண்ணீரில் பேலன்ஸ் தடுமாறி விழ ,எல்லோரும் கைகொட்டி சிரித்தார்கள்.

அடுத்து இன்னொரு இடத்தில் மிக உயரத்தில் இருந்து ரப்பர் ஷீட் மீது கவிழ்ந்தபடி சறுக்கி விழும் இடம்.பக்கத்தில் இடியாப்பம் போல் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடக்க மூடிய டியூப் வடிவில் நான்கு நிறங்களில் வாட்டர் ஸிலைடர்.ஆரம்பமும் வந்து விழும் இடம் மட்டும்தான் தெரியும்.பசங்க இங்கேயும் பூந்து விளையாட,அய்யனார் மட்டும் காணோம்.

க.டீச்சர் பதற,மங்கை ரிலாக்ஸ் பிளீஸ் டென்ஷன் பார்ட்டீஸ் என,இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம என்றபடி முத்துலஷ்மி அய்யனார் அய்யனார் என குரல் கொடுக்க,
யாரும் வந்து விழவில்லை.
டியூபில் எங்கியாச்சும் சிக்கிட்டாரா என பதட்டம் அதிகரிக்க துர்காஒரு ஐடியா கொஞ்சம் பேசாம இருங்க என்றபடி,

''தனிமையின் இசை
தண்ணீரின் ஓசை
அலைகின்ற மனது
தவித்திடும் வயது'' என ஒரு கவிதையை அய்யனார் இறங்கிய பச்சை டியூபின் வாயருகில் பாட,சிறிது நேரத்தில் பொத்தென்று வந்து விழுந்தார்.

தனிமை இருட்டில்,தண்ணீரின் தாலாட்டில் உள்ளே மயங்கிக் கிடந்தேன் தமிழ்க் கவிதை என்னை வெளிக் கொணர்ந்தது என,
பெண்கள் உட்பட அத்தனை பேரும் தர்ம அடி பின்னினர்.

வாட்டர் கேம்ஸ் முடிந்ததும் மெர்ரி கோ ரவுண்ட்.

எல்லோரும் யானை,குதிரை,வடிவ பொம்மைகளில் அமர,அபிஅப்பா குரங்கு பொம்மை இல்லையா என அடம் பிடிக்க ,மை பிரண்ட் இதோ என கோபியைக் காட்ட செம ரகளை.

அடுத்து ஜெயண்ட் வீல் .எல்லோரும் ஏற மை பிரண்ட் மட்டும் ஆப்பரேட்டரிடம்,எதற்கோ பணம் கொடுக்க அபி அப்பா கும்பல் உச்சிக்கு சென்றதும் வீல் நிற்க,ஐயோ அம்மா என்று கூட்டம் அலற ,என்னையா காத்து புடுங்கி தண்ணில விழவச்சீங்க என்று மை பிரண்ட் சிரிக்க
மின்னல் ,'அஹா இன்னைக்குத்தான் வாழ்க்கையில ஒசந்து நிக்கறேன் என,
'ஒக்கார்ந்து இருக்கேன்னு சொல்லுடா' என குட்டிபிசாசு சொல்ல,டீச்சர் வந்து ஒருவழியாக இறக்கி விடச் சொன்னார்.

அடுத்து போட்டிங் போக கிளம்பினர்.வழியில் வனவிலங்குகள் காணும் இடம்னு ஒரு உயரமான கட்டிடமும் படிகட்டுகளும் இருக்க எல்லோரும் ஓடிப் பார்த்தனர்.
எந்த விலங்கும் கண்ணுக்குத் தெரியல

கோபி,'ஒன்னும் காணோமே'

மை பிரண்ட் 'நீங்க இருக்கும் போது அதுங்க எப்படி வரும்'

அபி அப்பா,'அய் அதோ யானை' என,பொன்ஸ் வந்து கொண்டிருந்தார்.

மங்கை ,'அதோ நரி என அவர் காட்டிய பகுதியில் ஒரு சொங்கி நாய் எதையோ கடித்துக் கொண்டிருந்தது. வெறுத்துப் போய் போட்டிங் கிளம்பினர்.

அது காலால் சைக்கிளிங் போல் பெடல் செய்யும் போட்.அபி அப்பா ஏறிய போட்டில் மை பிரண்ட் ஏறிக் கொள்ள பெடல் செய்யாமல் ஜாலியாக வர,அவர் மட்டுமே ஒற்றை ஆளாக பெடல் செய்தார்.கால் வீங்கிப் போய் நொண்டியடித்தார்.

'எங்கிட்டயே மோதறீங்களா?'என பிரண்ட் கிண்டலடிக்க ஒருவழியாக எல்லாம் முடித்து வரும்போது ஒரு இடத்தில் 'இல்லுமினேஷன்' 3-D படங்கள் காட்டப் பட
'வேண்டாப்பா எனக்கு பயமாயிருக்கு 'என துர்கா சொல்ல
'டெய்லி மை பிரண்ட் ம்,க.டீச்சரும் பார்த்து எங்களுக்கு பயம் போயிடுச்சே என மின்னல் சொல்ல,
டீச்சர் கடுப்பாகி போதும் லூட்டி கிளம்புங்க என ஊட்டிக்கு பயணமாயினர்.

ஊட்டியில் ரோஸ் கார்டன்,பொட்டானிகல் கார்டன், லேக் எல்லாம் முடித்துக் கொண்டு 'தொட்டபெட்டா' போயினர்.

சுமார் 7,800 அடி உயரத்துல இருக்கோம் ஆனைமலைக்கு [8000அடி]அடுத்த உய்ரமான பகுதி என ஏதோ இமயமலையில் ஏறிய டென்சிங் மாதிரி அபிஅப்பா அலட்ட,
தம்பி கதிரு எங்கேயே எதையோ பண்ண,போய்ப் பார்த்தா பாவனா படம் போட்ட கொடியை நட்டுக் கொண்டிருந்தார்.
அய்யனார் மலையையும், பள்ளத்தாக்கையும் வெறிக்க முத்துலஷ்மி என்னங்க என,
'என் நீலியைத் தேடுகிறேன்'என்றார்.

'காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது.எங்கப் போனாலும் இதுங்க கிறுக்கு புத்தி போகலை'என் க.டீச்சர் புலம்ப,

டூர் கிளம்பியதிலிருந்து நோட்டும் பேனாவுமாக இருந்த துளசி டீச்சரைப் பர்த்து 'கொஞ்சம் கூட ஹெல்ப் பண்ணாம என்ன எழுதறீங்க' என

'என் ஊட்டி,பிளாக் தண்டர் அனுபவத்தை பதிவு போட குறிப்பெடுக்கிறேன்.இதுகளை மேய்க்கவா நான் வந்தேன் ஆளை விடு',என்றார்.

டெல்பின்,'டேக் இட் ஈஸி கண்மணி சின்னப் புள்ளைங்க அனுபவிக்கட்டும்.கும்மியடிக்கட்டும்'என

மங்கை,'நோ டென்ஷன் டீச்சர் வீ வில் ஹெல்ப் யூ'என்றார்.

இன்னமும் சுத்திப் பார்க்க நிறைய இருந்தாலும் நேரமின்மை காரணமாக இத்துடன் முடித்துக் கொண்டனர்.

டிஸ்கி:[முடிந்தால் தொடரும்]

டிஸ்கி:இம்சை டீச்சர் எவ்வளவு கூப்பிட்டும் வரலை.ப.பா.ச வேலையிருப்பதாலும் இந்த கும்மி கூட்டத்தில் மாட்ட விரும்பாமலும் வரமுடியாதுன்னுட்டாங்க.

67 மறுமொழிகள்::

Anonymous said...

test..

கமேண்ட் இருக்கா இல்லையா?

"இருக்கு.. ஆனா இல்லை"..

Anonymous said...

ஆஹா.. கமேண்ட்டு வந்தாச்சு! :-D

பாசக்கார குடும்பமே, இங்கே வந்து ஆடுங்க.. நான் கிளம்புறேன்.. :-(

Anonymous said...

நீங்க பதிவ படிக்க என்னாதான் செய்சாலும் பதிவ படிக்க மாட்டோம்

கும்மி மட்டுமே எங்கள் குறி

M

Anonymous said...

மின்னுது மின்னல் said...
பின்னுட்டம் எங்கெ போடுவுதுனுனே தெறியல பாக்க கூடாதா..?)

அபி அப்பா said...

நானும் கும்பிக்கு ரெடி! பதிவை படிக்கலை:-))

அபி அப்பா said...

கோபி ஓடியா ஓடியா:-))

அபி அப்பா said...

Anonymous said...

ஆல் ஃபேமிலி டோட்டல் ஃப்ரீ போல இன்னைக்கு???

நான் மட்டும்தான் மாட்டிக்கிட்டு இருக்கேன்.. ம்ம்..

Anonymous said...

abiappa said...
pinnuutam poda mudiyala new postla
///

சற்றுநேரத்தில் அபிஅப்பா தீக்குளிப்பார்

:)


M

Anonymous said...

டீச்சர் டீச்சர்,

நாங்க அத்தனை தடவை சொல்லியும் நீங்க எங்க இம்சையக்காவை கூட்டிட்டே போகலை இந்த ட்ரிப்புக்கு.. :-(((

Anonymous said...

ஆல் ஃபேமிலி டோட்டல் ஃப்ரீ போல இன்னைக்கு???

நான் மட்டும்தான் மாட்டிக்கிட்டு இருக்கேன்.. ம்ம்..
//

நீங்க கவலை படாதீங்க டீச்சர்

நாங்க பாத்துக்கிறோம்

:)

M

Anonymous said...

//அடுத்து ஜெயண்ட் வீல் .எல்லோரும் ஏற மை பிரண்ட் மட்டும் ஆப்பரேட்டரிடம்,எதற்கோ பணம் கொடுக்க அபி அப்பா கும்பல் உச்சிக்கு சென்றதும் வீல் நிற்க,ஐயோ அம்மா என்று கூட்டம் அலற ,//

டீச்சர் டீச்சர்.. ஏன் உங்களுக்கு இந்த கொல வேறி.. நாங்கெல்லாரும் பாசமா இருக்கிறது பிடிக்காம அய்யனார் தலைமையில டீச்சர் நம்ம பாசக்கார குடும்பத்தை பிரிக்க பார்க்குறாங்க..

Anonymous said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
டீச்சர் டீச்சர்,

நாங்க அத்தனை தடவை சொல்லியும் நீங்க எங்க இம்சையக்காவை கூட்டிட்டே போகலை இந்த ட்ரிப்புக்கு.. :-(((
///


அது ஒரு பெரிய இம்சை
உட்டுடுங்க இந்த பேச்சை

கோபிநாத் said...

\\ அபி அப்பா said...
கோபி ஓடியா ஓடியா:-)) \\

இதே வந்துட்டேன் ;)))
\

கப்பி | Kappi said...

//டிஸ்கி:[முடிந்தால் தொடரும்]
//

முடிந்தால் அதுக்கப்புறம் எதுக்குங்க தொடரனும்? :)))

Anonymous said...

//ஆல் ஃபேமிலி டோட்டல் ஃப்ரீ போல இன்னைக்கு???

நான் மட்டும்தான் மாட்டிக்கிட்டு இருக்கேன்.. ம்ம்..
//

நீங்க கவலை படாதீங்க டீச்சர்

நாங்க பாத்துக்கிறோம்

:)

M
//

மின்னல், நான் டீச்சர் இல்ல.. ஸ்டூடண்ட்.. :-D

அபி அப்பா said...

JEYANTHI ILLIYAA??????

Anonymous said...

டீச்சர் டீச்சர்.. ஏன் உங்களுக்கு இந்த கொல வேறி.. நாங்கெல்லாரும் பாசமா இருக்கிறது பிடிக்காம அய்யனார் தலைமையில டீச்சர் நம்ம பாசக்கார குடும்பத்தை பிரிக்க பார்க்குறாங்க..

///


எலெ யாருல கும்மிக்கு புதுசா பதிவ படிக்குற

:)

கோபிநாத் said...

\இங்கு சிறப்பம்சமே விதவிதமான வாட்டர் கேம்ஸ் என்பதால் பாலைவன ராஜாக்களுக்கு குஷி தாங்கல.\\

ம்ம்ம்...எங்களை வம்புக்கு இழுக்கவில்லைன்னா உங்களுக்கு தூக்கம் வாரதே ;))

அபி அப்பா said...

Gopi, "shivaji- The boss" paaththiyaa????

கோபிநாத் said...

\\கோபி மைபிரண்ட் வைத்திருந்த டியூபில் காற்றை புடுங்கி விட,அவ அப்படியே தண்ணீரில் பேலன்ஸ் தடுமாறி விழ ,எல்லோரும் கைகொட்டி சிரித்தார்கள்.\\


;))))))))))))))))))ஹி...ஹி...ஹி....ஹி.....பிரண்ட் இன்னைக்கு நீங்க காலி

அபி அப்பா said...

My friend ennappaa aachu? ananiyaa varra?

Anonymous said...

மின்னல், நான் டீச்சர் இல்ல.. ஸ்டூடண்ட்.. :-D
///


கண்மணி டீச்சர் இல்லைனா நீங்க தானே பாடம் எடுத்தீங்க அதனால தானே நாங்க ஃபெயிலானோம்


:)

M

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
Gopi, "shivaji- The boss" paaththiyaa???? \\\

நான் என் BOSSயே பார்க்குறது இல்லை இதுல சிவாஜியோட BOSS வேற பார்க்காணுமா ???

கோபிநாத் said...

\ கப்பி பய said...
//டிஸ்கி:[முடிந்தால் தொடரும்]
//

முடிந்தால் அதுக்கப்புறம் எதுக்குங்க தொடரனும்? :))) \\

செல்லம்...கப்பிமா எப்படி இருக்கா?

Anonymous said...

கப்பி பய said...
//டிஸ்கி:[முடிந்தால் தொடரும்]
//

முடிந்தால் அதுக்கப்புறம் எதுக்குங்க தொடரனும்? :)))
//


நாங்க அடிக்கிற கும்மில முடிச்சுடுவோமில கதைய.....:)

கோபிநாத் said...

\\வழக்கம்போல பெண்கள் 100%ம் ஆண்கள் 30% பாஸ்.ஏதோ கண்மணி டீச்சர் பிரம்புக்கு பயந்து படிச்சதால அவிங்க கிலாஸ் ஆம்பளப் பசங்க எல்லாம் ஜஸ்ட் பாஸ்\\

இதுல ஏதே உள்நாட்டு சதி இருக்கு....அபி அப்பா நீங்க என்ன சொல்லிறிங்க

கோபிநாத் said...

\அய்யனார் மட்டும் காணோம்.\\

அவரு புலியை தேடி காட்டுக்கு போயிருப்பாரு ;))

Anonymous said...

நான் என் BOSSயே பார்க்குறது இல்லை இதுல சிவாஜியோட BOSS வேற பார்க்காணுமா ???
//


பாஸ் உன்னை பாத்தால்
நீ காலி

:)


M

G.Ragavan said...

கருப்பிடிக்குச் சென்று வந்த சுற்றுலா அருமை...ஆனா எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டீகளேய்யா!

Anonymous said...

எல்லாரும் சாப்பிட்டாச்சா?

நான் இன்னும் சாப்பிடலை.. :-(

G.Ragavan said...

என்னது மை பிரண்டு ட்யூபுல காத்தப் புடுங்கி விட்டுட்டாங்களா...அடடே! நம்ம பதிவுக்கு வந்து மொதப் பின்னூட்டம் போடுறவங்கப்பா...பாத்து...பாத்து...

கோபிநாத் said...

\\க.டீச்சர் பதற,மங்கை ரிலாக்ஸ் பிளீஸ் டென்ஷன் பார்ட்டீஸ் என,இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம என்றபடி முத்துலஷ்மி அய்யனார் அய்யனார் என குரல் கொடுக்க,\\

சூப்பர் காமெடி
;))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Anonymous said...

@அபி அப்பா:
//
My friend ennappaa aachu? ananiyaa varra? //

நாளைக்கு காலையில எனக்கு ஃபைனல் எக்ஜாம்.

கண்மணியக்கா க்ளாஸுல கும்மியடிச்சா பாஸ் பண்ணலாம். நாளைக்கு எக்ஜாம்க்கு படிச்சுதான் பாஸ் பண்ணனும்ன்னு ஸ்ட்ரிக்ட்டா கண்டிஷன் போட்டுட்டாங்க.. :-(

கோபிநாத் said...

\\ G.Ragavan said...
கருப்பிடிக்குச் சென்று வந்த சுற்றுலா அருமை...ஆனா எங்களையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டீகளேய்யா! \\

அட இன்னும் இருக்கு ராகவன் சார்...சொல்லிட்டிங்கல்ல...இனி பாருங்க அக்கா கலக்கிடுவாங்க ;)))

G.Ragavan said...

// Anonymous zei...
நீங்க பதிவ படிக்க என்னாதான் செய்சாலும் பதிவ படிக்க மாட்டோம்

கும்மி மட்டுமே எங்கள் குறி //

அப்படிச் சொல்லுங்க. நம்ம தெருவள்ளுவர் என்ன சொல்லீருக்காரு...கும்மியைக் கும்பியாகக் காண்பர்..கும்பியைக் கும்மியாகக் காணாதவர்...

கோபிநாத் said...

\Anonymous said...
நான் என் BOSSயே பார்க்குறது இல்லை இதுல சிவாஜியோட BOSS வேற பார்க்காணுமா ???
//


பாஸ் உன்னை பாத்தால்
நீ காலி

:)


M\\

எல....நான் உன்னை பார்த்தேன் நீ காலி ;)))

ALIF AHAMED said...

கோபிநாத் said...
\\வழக்கம்போல பெண்கள் 100%ம் ஆண்கள் 30% பாஸ்.ஏதோ கண்மணி டீச்சர் பிரம்புக்கு பயந்து படிச்சதால அவிங்க கிலாஸ் ஆம்பளப் பசங்க எல்லாம் ஜஸ்ட் பாஸ்\\

இதுல ஏதே உள்நாட்டு சதி இருக்கு....அபி அப்பா நீங்க என்ன சொல்லிறிங்க
///


என்ன சொல்லுரீங்க இப்பதான் பரிச்சை எழுதி டூர் போறோம் அதுக்குல்ல ரிசல்டா ??????


இத FBI விசாரிக்க உத்தரவிட்டுகிறேன்

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
@அபி அப்பா:
//
My friend ennappaa aachu? ananiyaa varra? //

நாளைக்கு காலையில எனக்கு ஃபைனல் எக்ஜாம்.

கண்மணியக்கா க்ளாஸுல கும்மியடிச்சா பாஸ் பண்ணலாம். நாளைக்கு எக்ஜாம்க்கு படிச்சுதான் பாஸ் பண்ணனும்ன்னு ஸ்ட்ரிக்ட்டா கண்டிஷன் போட்டுட்டாங்க.. \\

பிரண்ட் டீச்சர் சொன்னது போல...நல்ல பார்த்து எழுது என்ன ;)))

Anonymous said...

@G.Ragavan:

//என்னது மை பிரண்டு ட்யூபுல காத்தப் புடுங்கி விட்டுட்டாங்களா...அடடே! நம்ம பதிவுக்கு வந்து மொதப் பின்னூட்டம் போடுறவங்கப்பா...பாத்து...பாத்து...//

காத்து பிடுங்கிவிட்டு கீழே விழுவுறதெல்லாம் ஒரு குஷிதானே.. நாங்கெல்லாம் எஞாய் பண்ணதான் போனோம்.. ஹீஹீஹீ..

Anonymous said...

அப்படிச் சொல்லுங்க. நம்ம தெருவள்ளுவர் என்ன சொல்லீருக்காரு...கும்மியைக் கும்பியாகக் காண்பர்..கும்பியைக் கும்மியாகக் காணாதவர்...
//

உங்கள் பாட்டில் குத்தம் இருக்கு
ஏழு வார்த்த வரனும் ஆறு தான் இருக்கு ...:)

M

கோபிநாத் said...

\என,
பெண்கள் உட்பட அத்தனை பேரும் தர்ம அடி பின்னினர்.\\

அங்கையும் அய்யனாருக்கு அடி தானா !!!

அய்யனார் நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவன் போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ

Anonymous said...

பிரண்ட் டீச்சர் சொன்னது போல...நல்ல பார்த்து எழுது என்ன ;)))

///


அப்படி பாத்தா நாமதான் 100க்கு 100 % பாஸ் பண்ணி இருக்கனும்

இதுல சதி இருக்கு
ந்ல்லா படி

கோபிநாத் said...

\\தம்பி கதிரு எங்கேயே எதையோ பண்ண,போய்ப் பார்த்தா பாவனா படம் போட்ட கொடியை நட்டுக் கொண்டிருந்தார்.\\

அவன் கடமை வீரன் ;))

Anonymous said...

கும்மியைக் கும்பியாகக் காண்பர் கும்பியைக்
கும்மியாகக் காணா தவற்க்குM

Anonymous said...

தம்பி கதிரு எங்கேயே எதையோ பண்ண,போய்ப் பார்த்தா பாவனா படம் போட்ட கொடியை நட்டுக் கொண்டிருந்தார்.
//என் இனம்டா நீM

கோபிநாத் said...

\\டெல்பின்,'டேக் இட் ஈஸி கண்மணி சின்னப் புள்ளைங்க அனுபவிக்கட்டும்.கும்மியடிக்கட்டும்'\\

இனி நீங்க தான் எங்க டீச்சர் ;)))

Anonymous said...

கோபிநாத் said...
\அய்யனார் மட்டும் காணோம்.\\

அவரு புலியை தேடி காட்டுக்கு போயிருப்பாரு ;))
///


அடர் கானக குகையில் ***** கொண்டிருக்கும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது

இது மனிதர் உனர்ந்து :கொல்லும்: மனித காதல் அல்ல அதையும் தாண்டி........

Anonymous said...

50
50
50
50
50


M

Anonymous said...

50
50
50
50
50

ALIF AHAMED said...

"பிளாக் தண்டரில் பாசக்கார குடும்பத்திற்க்கு
நடந்த அநிதி என்ன????

பரிச்சையில் தோல்விக்கு காரணங்கள்இன்றைய கேள்வி 50 அடித்த அனானி யார்...????விளம்பர இடைவேளைக்கு பிறகு

ALIF AHAMED said...

ஹி ஹி ஆணி புடுங்க அழைப்பு அதான்
:)
:=)

Anonymous said...

கிடேஷன் பார்க்கில்

போதையில் தெலிவா கேட்டது


போடுக தண்ணி போடுக போட்டபின்
ஆடுக அதற்கு தகM

குட்டிபிசாசு said...

கழக கண்மணிகளே மற்றும் உடன்பிறப்பு கண்மணி அவர்களே,


கட்டுறுதியுடன் கதை பல எழுதி சென்ற வாரத்தை வரமாக எமக்களித்து தமிழ்தெள்ளமுது படைத்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.கும்மியடிக்கும் கூட்டம் குவிந்துள்ளதாலும்
கடமைகள் பல இருப்பதாலும்

வருகிறேன் சென்று! வாழ்க நீர் வென்று!
வாழ்க அண்ணா நாமம்! வாழ்க தமிழ்!

Ayyanar Viswanath said...

ஹி..ஹி..ஹீஈஈஈஈஈஈஈஈஈ

சாரி பார் த லேட் எண்ட்ரி

Ayyanar Viswanath said...

டீச்சர்,மற்றும் பாசக்கார குடும்பமே சந்தோசமா இந்த வாரம் போச்சில்ல

நல்லா இருங்க :(

மங்கை said...

என்ன கண்மணி..எங்க ஊர புட்டு புட்டு வச்சு இருக்கீங்க.... ஹோம் சிக்ல இருக்கப்போ இது தெம்பா இருக்கு...எல்லாரும் ஊருக்கு கிளம்பறாங்க..நம்ம நகர முடியலை..ஹ்ம்ம்..

எப்படியோ பாசக்கார குடும்பத்தோட ஊருக்கு போயிட்டு வந்தாச்சு...
பாசத்துல வழுக்கி விழுந்து...ஒரே அழுவாச்சி அழுவாச்சியா வருது...

ஐடியா குடுத்த அய்யனார்க்கு டேங்க்ஸ்

Anonymous said...

/ஐடியா குடுத்த அய்யனார்க்கு டேங்க்ஸ் /

:)

நீங்க ரொம்ப நல்ல மாதிரி தெரியுறீங்க இந்த குடுபத்தோட சேராதீங்க..மோசக்கார குடும்பம்

கண்மணி/kanmani said...

வெள்ளியங்கிரி தியானலிங்கம் பற்றிச் சொல்ல ஆசை.சமீபத்தில் போய்வந்தேன்.சரியான விவரம் தெரியலை.

delphine said...

\டெல்பின்,'டேக் இட் ஈஸி கண்மணி சின்னப் புள்ளைங்க அனுபவிக்கட்டும்.கும்மியடிக்கட்டும்'\\
Thats Me... Good. Take it easy..
Gopi! how i wish I could be a TEACHer//

கண்மணி/kanmani said...

@delphine
why not ma'm you deserve it.

Chinna Ammini said...

எங்க ஊருக்கு போயிருக்கீங்க. சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன் உங்க கூட. எங்கெல்லாம் போனீங்க?

இராம்/Raam said...

கிடேசன் பார்க் போயி கொஞ்சம் அசதியா தூங்கிட்டேன்.... அதுக்காக என்னை விட்டுட்டு போயிட்டிங்களே???? :((

Anonymous said...

இராம் said...
கிடேசன் பார்க் போயி கொஞ்சம் அசதியா தூங்கிட்டேன்.... அதுக்காக என்னை விட்டுட்டு போயிட்டிங்களே???? :((
///

கும்மிக்கு முந்து
பதிவுக்கு பிந்து னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
:):):)


M

தருமி said...

To
கண்மணி டீச்சர்
துளசி டீச்சர்
டெல்பி மேம்

i want a report on the details of the tour and specifically on the conduct of every participant during the tour within a week. please oblige.

dharumi
H.M

delphine said...

thank God! the HM wanta report about the partcipants and not about the teachers. ESCAPE!

தருமி said...

மக்களே,
கொஞ்சம் இந்தப் பக்கம் வந்துட்டு போங்க. நம்ம டீச்சருக்கு "டூர் திலக" அப்டின்னு பட்டமெல்லாம் கொடுக்குறோம்ல ..

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)