PAGE LOAD TIME

பேராசை பெரியசாமி எங்க பெரியப்பா

எங்க பெரியப்பா இருக்காரு பாருங்க ரொம்பப் பேராசை புடிச்ச ஆளு.

டெல்லி சித்தப்பூ பத்திதான் முன்னமே உங்களுக்கு சொல்லியிருக்கேன்.

இவரு தமிழ்நாட்டுலதான் சிங்காரச் சென்னைப் பட்டணத்துல இருக்காரு.

பேராசைன்னா பணம் காசுக்கு ஆசைப்பட மாட்டாரு.

ஊர் நல்லாயிருக்கனும்.
[எவன் எக்கேடு கெட்டா என்ன?]

எல்லாம் அவங்க அவங்க விருப்பப்படி நடக்கனும்.
[கிழிஞ்சா மாதிரிதான்]

எல்லோரும் சுதந்திரமா சந்தோஷமாயிருக்கனும் அப்படின்னு சொல்லுவார்.
[ரொம்ப முக்கியம்]

எந்த அளவுக்கு அவர் எதிபார்க்கிறார்னு தெரிஞ்சா அவரப் பத்தி நீங்களே புரிஞ்சிக்குவீங்க.
[இப்படியெல்லாம் நடக்கனும்னு பகல் கனவுதான்]

கல்லூரி ஸ்டூடண்ட்:

நியூ அட்மிஷனுக்கு வரும் பெண்ணின் அம்மாவிடம் ''ஆன்ட்டி எங்க காலேஜ்லயா உங்க பொண்ணை சேர்க்க போறிங்க .நாங்கல்லாம் பொறுக்கிங்க ராகிங் பண்ணுவம்.பேசாம வேற காலேஜ் பாருங்க

[பிகர் சுமாரா இருந்திருக்கும்.இது தெரியாதா]

டிராபிக் போலீஸ்:

நோ என்ட்ரியில் வந்த டூவீலர் ஆளிடம் ''பயப்படாதீங்க சார்.பைன் கேக்க மாட்டேன்.நானும் உங்க மாதிரிதான் நேத்து வந்துட்டேன்.நீங்க அப்படியே திரும்பி லெப்ட்ல போயி ரைட்ல கட் பண்ணுங்க.''

[பக்கத்துல கமிஷனர் வண்டி நின்னுச்சோ என்னமோ]

மானேஜர்:

ஆபிஸில் தூங்கும் கிளார்க்கைப் பற்றி மற்றவரிடம்''வேண்டாம் அசந்து தூங்கறார் .அவர எழுப்பாதீங்க.இந்த கார்னர் சீட்டுல ஏ.சி. சரியா வராது. இந்த பேனையும் ஆன்ல வைக்கிறேன்.அவர் எழுந்ததும் முடிஞ்சா இந்த பைலைப் பார்க்கச் சொல்லுங்க.''


[முழிச்சிருந்தா மட்டும் என்ன பெரிசா ஆணி புடுங்கப் போறாரு]

பையன் :

கடைக்குக் கூட்டிப்போன அப்பாவிடம்''சொன்னா கேளுங்கப்பா கோக் பெப்ஸி ஐஸ்கிரீம் எதுவும் வேண்டாம்.தள்ளு வண்டில நன்னாரி சர்பத் இருக்கும் அதை வாங்கிக் குடுங்க போதும்''


[பகார்டி குடிக்கிறவனா இருப்பான்.சும்மா அப்பா கிட்ட பீலா உட்றான்]


மெடிக்கல் கடைக்காரர்:

மருந்து சீட்டோடு வந்தவரிடம்''எத்தனை தடவை சொல்றது.தலை வலி,லேசா ஜுரம்னாலும் நாங்களா மருந்து தரக் கூடாது. மொதல்ல டாக்டரைப் பார்த்து எழுதி வாங்க்கிட்டு வாங்க''


[டாக்டருக்கும் அவருக்கும் கமிஷன் தான் வேறென்ன?]


இரசித்துப் படித்ததை நம்ம பிட்டோட சேர்த்து மொக்கை போட்டுட்டேன்.

இதுல பிராக்கட்ல வர்ரது நம்ம சொந்த சரக்கு]

17 மறுமொழிகள்::

delphine said...

[டாக்டருக்கும் அவருக்கும் கமிஷன் தான் வேறென்ன?]

ஓ! இப்படி வேற இருக்கா...?

Anonymous said...

அக்காவ்... அக்காவ்வா... யக்க்கோவ்..
ப.பா.ச அப்டியே தூங்குதே என்னாச்சு

வல்லிசிம்ஹன் said...

சுட்டாலும் நல்லாவே சுட்டு இருக்கீங்க கண்மணி.

பிராக்கெடுக்குள்ள இருக்கிற கமெண்ட்ஸ் இன்னும் நல்லாஅ இருக்கு.:-)))

தருமி said...

ஆமா, நல்ல பிள்ளை மாதிரி பக்கார்டின்னா என்னன்னு இப்பதான் கேட்ட மாதிரி இருந்தது.

தேர்வு எல்லாம் நல்லா எழுதினீங்களா? (அதெல்லாம் கொழுத்தியிருப்பீங்க )

அய்யனார் said...

டீச்சர்

உங்க டெம்ப்ளேட் எல்லாம் சூப்பரா இருக்கே..இது எல்லாம் எப்படி மாத்த?எங்க தேட?..இந்த அசமஞ்ச ஸ்டூடண்டு க்கு இதெல்லாம் சொல்லித்தர கூடாதா?

அபி அப்பா said...

ஹய்யோ பக்கார்டி பக்கார்டின்னு அடிக்கடி சொல்லாதீங்க எனக்கு வாந்தி வாந்தியா வருது உவ்வ்வ்வ்வ்வே:-)

கண்மணி said...

//ஹய்யோ பக்கார்டி பக்கார்டின்னு அடிக்கடி சொல்லாதீங்க எனக்கு வாந்தி வாந்தியா வருது உவ்வ்வ்வ்வ்வே:-) //

great joke of the year...hahahaha

கண்மணி said...

tharumi sir exams were very well done....
pichittam ille
e.kalappai sariyillai

கண்மணி said...

என்னங்க அய்யனார் பிளாக்கு படங்களைப் பார்த்தாலே தெரியலை?

அடர் கானகத்தில் அலைந்தேன்.
பூதப் பிசாசுகள் துரத்தின
பாசத்துடன் குடும்பமேயென
ஏற்றுக் கொண்டேன்
பச்சைக்கொடிகள் போல்
துளிர் விடுகிறது நேசம்

யப்ப்ப்பா...கண்ணைக் கட்டுதே
[உனக்கெல்லாம் அய்யனார்,தமிழ்நதின்னு நெனப்பான்னு தருமி சார் வைய்யறார்]

கண்மணி said...

நன்றி வல்லியம்மா
சுட்டதோ...சுடாததோ
மனசுக்குப் பிடிச்சிருந்தா
உங்க எல்லோரோடும்
பகிர்ந்துப்பேன்

தென்றல் said...

/அடர் கானகத்தில் அலைந்தேன்.
பூதப் பிசாசுகள் துரத்தின
பாசத்துடன் குடும்பமேயென
ஏற்றுக் கொண்டேன்
பச்சைக்கொடிகள் போல்
துளிர் விடுகிறது நேசம்

யப்ப்ப்பா...கண்ணைக் கட்டுதே
[உனக்கெல்லாம் அய்யனார்,தமிழ்நதின்னு நெனப்பான்னு தருமி சார் வைய்யறார்]
/
ha..ha...;) இரசித்தேன்...!

('அட... பதிவைபடிக்காமா இப்படியானு?' திட்டாதீங்க, டீச்சர்..!!)

கண்மணி said...

@ தென்றல்
பாடத்தப் படிக்காம பரீட்சை எழுதும் பசங்களையே பார்க்கற டீச்சருக்கு
பதிவு படிக்காம பின்னூட்டம் போட்ற பசங்க மேட்டர் சகஜம்

அய்யனார் said...

/என்னங்க அய்யனார் பிளாக்கு படங்களைப் பார்த்தாலே தெரியலை?/

புரியல டீச்சர் என்ன ப்ளாக் படம்?
ஏதாவது கேட்டா சொல்லிதாங்க @@@

Anonymous said...

ப.பா.ச என்னாச்சுன்னு கேட்ட கேள்விக்கு பதிலைக் காணலையே யக்காவ்

Anonymous said...

ப.பா.ச என்னாச்சுன்னு கேட்ட கேள்விக்கு பதிலைக் காணலையே யக்காவ் ////
all gone to the sea for fishing

கண்மணி said...

ப.பா.ச பொதுப் பொலிவுடன் இருக்கு.
பாருங்களேன்.

cheena (சீனா) said...

சுட்ட பழங்கள் அனைத்துமே அருமை. (அடப்புக்குறிக்குள் அருமையோ அருமை)

அப்பா : டேய் ராத்ரிலே கம்பியூட்டர்லே என்னாடா பாக்குறே

பையன் : கண்மணி டீச்சர் கிட்டே பாடம் படிக்குரேன்பா

(பின்ன என்ன மங்களூர் சிவா வீகெண்டு படம் பாக்குறதெ சொல்ல முடியுமா என்ன)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)