PAGE LOAD TIME

நிழலும்....நிஜமும்

ஒரு பொண்ணோட புகைப் படத்தப் பார்த்துட்டு ஒரு முட்டாள் சொன்னானாம் பொண்ணு புடிக்கலைன்னு.அவன் பார்த்தது ரதி மாதிரி அழ்கான ஒரு பெண்ணின் புகைப் பட நெகடிவ்.

வாழ்க்கையும் கிட்டத்தட்ட அப்படித்தான்.கனவுகளும் கற்பனைகளும் எதிபார்ப்புகளும் நிறைவேறாத போது பொய்த்துப் போகும் போது வாழ்க்கை வெறுமையாகத் தெரியும்.


நிஜத்தை ஏற்றுக் கொள்ளாமல் நினைவுகளையும் கனவுகளையும் துரத்துவதிலேயே வாழ்வின் பெரும்பான்மை நாட்கள் கழிந்து போகிறது.

என்னுடையக்கல்லூரிக் காலங்களிலும் சரி இன்றைய கல்லூரிப் பெண்களுக்கும் தமிழில் ஒரு ஆதர்ச காதல் கதை எழுத்தாளர் என்றால் அது திருமதி.ரமணிசந்திரன் தான்.அவருடைய புகைப்படங்கள் சமீப காலங்களில்தான் பத்திரிக்கைகளில் வெளிவருகிறது.

அதற்குமுன் அவருடைய காதல் ,ஊடல் நிறைந்த கதைகளினால் அவர் எப்படியிருப்பார் என்ற கற்பனை அதீதமாகவே இருந்தது.மென்மையான காதல் கதைகளை எழுதும் அவரும் இளமையானவராகவே இருக்கக்கூடும் என்ற நினைப்பு இருந்தது நடுத்தர வயதில் அமைதியும் சாந்தமும் தவழும் முகத்துடன் பேரப் பிள்ளைகளுடன் அவருடைய புகைப் படத்தைப் பார்க்கும் வரை.

அவரைப் பற்றின கற்பனை மாறிப் போனாலும் அவர் எழுத்துக்கள் மீதும் அவரின் மீதும் இருந்த ஈடுபாடு மாறவில்லை.

அவரின் ரசிகையான எந்தவொரு பெண்ணுக்கும் அவர் கதைகளின் நாயகன் போல கணவனும் ஊடலும் காதலும் நிறைந்த மணவாழ்க்கையும் வேண்டுமென கனவு நிச்சயம் இருக்கும்.என் தோழி இருவர் அப்படித்தான் இருந்தனர்.

கல்யாணத்திற்குப் பிறகு எப்படியடி இருக்கிறாய் ரமணி சந்திரன் கதை போல வாழ்க்கையா என்றால்,அடிப் போடி கதை வேறு வாழ்க்கை வேறு என்று சலித்துக் கொண்டனர்.

கதைகளிலும்,சினிமாவிலும் காணும் வாழ்க்கை வேறு.நிஜத்தில் நம் நடைமுறை வாழ்க்கை வேறு.

அறிவியல் தொழில் நுட்பத்தில் பெரும் வளர்ச்சியடைந்தபோதும் இன்னமும் திரைப்படத்திலும் சின்னத்திரை கதைகளிலும் லாஜிக் இல்லாத காட்சியமைப்புகள் ,நடைமுறைக்கு ஒவ்வாத மரத்தைச் சுற்றி குழுவோடு பாடும் டூயட் பாடல்கள் சிரிப்பை வரவழைக்கிறது.

அமைதியும்,சமாதானமும் வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யும் நாம் சூப்பர் ஃபைட் என்று சினிமா சண்டைகளை ரசிக்கிறோம்.

பத்திரிக்கை,தொலைக்காட்சி,சினிமா என்ற மூன்று ஊடகங்களின் பங்கும் இன்று நம் வாழ்வோடு பிணைந்துவிட்ட ஒன்று.இவைகளின் தாக்கம் இவைகள் அறியாமலேயே பலருடைய வாழ்வை திசை திருப்புகின்றன.

அன்று 'நூறாவது நாள்'சினிமா பார்த்து ஒன்பது கொலை செய்த ஆட்டோ சங்கர் முதல்
இன்று 'பருத்தி வீரன்' பார்ர்த்து கற்பழித்த கதை வரை நடந்து கொண்டிருக்கிறது.

'அலை பாயுதே' படத்தைப் பார்த்துவிட்டு படிக்கிற காலத்திலேயே வீட்டுக்குத் தெரியாமல் ரெஜிஸ்டெர் மணம் புரிந்து ,பின்னர் ஊரும் உறவும் பழிக்க அசிங்கப்பட்டு டைவர்ஸ் மூலம் பிரிக்கப் பட்டு இன்று வெவ்வேறு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட ஒரு நண்பரின் பிள்ளை
நிழலை நிஜமென்று நம்பி வாழ்க்கையை பாழ்படுத்திக் கொண்டான்.


அதே நேரம் 'உன்னால் முடியும் தம்பி' 'வானமே எல்லை' போன்றவை தன்னம்பிக்கையை
வளர்க்கும் அருமையான திரைப் படங்கள் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.


மனைவியின் தாலியை அடகு வைத்து தன் ஆதர்ச ஹீரோவின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் மண்ணும் ரசிகன் தன் பிள்ளை பாலுக்கு ஏங்குவதைப் பற்றி கவலைப் பட மறக்கிறான்.அவனைப் போல கோடானு கோடி ரசிகர்கள் இங்கு காத்துக் கிடக்க அந்த ஆதர்ச ஹீரோ ஸ்விட்சர்லாந்தில் தன் மனைவி பிள்ளைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருப்பார்.


சீரியல் என்பது பொழுது போக்குத்தானே என்ற நினைப்பின்றி நித்தம் கதையின் நாயகியோடு கண்ணீரைப் பிழிந்து தள்ளும் கூட்டம் இருக்கும் வரை மெகா சீரியல்களின் போக்கும் மாறப் போவது இல்லை.

நிழலை நிஜமென்று நம்பி விட்டில் பூச்சிகளைப் போல் வீழ்ந்து போகாமல் நிதர்சனமான நிஜத்தில் வாழக் கற்றுக் கொள்வதுதான் நல்லது.


டிஸ்கி:
சரிங்க நேரமாகுது வர்ர்ட்ட்டா இன்னையிலிருந்து 'மேகலா'ன்னு ஒரு புது சீரியல்.மெட்டி ஒலி புகழ் சித்திக்கோடது.அப்பாடா இன்னும் ஒரு வருஷத்துக்கு பிரச்சினை இல்லை...இழு இழுன்னு இழுத்துடுவாங்கில்லை.....

டிஸ்கி:சிவாஜி சினிமா சீக்கிரம் ரிலீஸ் ஆகனும்னு சாமிக்கு நேந்துக்கிட்டிருக்கேன்.
என்ன நேர்ச்சனையா?பாசக்கார குடும்ப பயபுள்ள யாருக்காச்சும் மொட்டை போடுறேன்னுதேன்

32 மறுமொழிகள்::

Anonymous said...

டீச்சர் மேகலாவா யாரு நடிக்கிறாங்கன்னு சொல்லலையே

Anonymous said...

மொட்டை போட்றதா இருந்தா மிமி க்குப் போடுங்க சூப்பராயிருக்கும்.
அந்த கால அசோகன் போல.

delphine said...

சீரியல் என்பது பொழுது போக்குத்தானே என்ற நினைப்பின்றி நித்தம் கதையின் நாயகியோடு கண்ணீரைப் பிழிந்து தள்ளும் கூட்டம் இருக்கும் வரை மெகா சீரியல்களின் போக்கும் மாறப் போவது இல்லை.///
சரியாக சொன்னீர்கள் கண்மணி..

தென்றல் said...

/மனைவியின் தாலியை அடகு வைத்து தன் ஆதர்ச ஹீரோவின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் மண்ணும் ரசிகன் தன் பிள்ளை பாலுக்கு ஏங்குவதைப் பற்றி கவலைப் பட மறக்கிறான்.அவனைப் போல கோடானு கோடி ரசிகர்கள் இங்கு காத்துக் கிடக்க அந்த ஆதர்ச ஹீரோ ஸ்விட்சர்லாந்தில் தன் மனைவி பிள்ளைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருப்பார்./

'சிவாஜி' படம் வெளியாகப் போற நேரத்தில இப்படிலாம் 'பகிங்கரமா' உண்மைலாம் சொல்லகூடாது..

/...ஸ்விட்சர்லாந்தில் ..../

இமய மலைனு தான சொல்ல வந்திங்க...

மின்னுது மின்னல் said...
This comment has been removed by the author.
மின்னுது மின்னல் said...
This comment has been removed by the author.
அய்யனார் said...

/அப்ப
+2 பரிச்சை எழுத போறேன்னு சொன்னது...:(

இந்த தங்கச்சிங்களேயே நம்பகூடாது..:) /

அடப்பாவி!! மின்னல் நீ இவ்ளோ நல்லவனா !!!

டீச்சர் அடுத்த வருசம் ரிட்டையராவரங்கப்போய் :)

அபி அப்பா said...

//பாசக்கார குடும்ப பயபுள்ள யாருக்காச்சும் மொட்டை போடுறேன்னுதேன்//

ஆமா நம்ம அய்யனாருக்கு போட்டிடலாம்!!! அவரும் ஒத்துகிட்டாரு:-))

Anonymous said...

first time commenting in ur blogs...
nalla msg solli irrukinga :-)

naanum konjam kummi adikiren..dont mind it plz.

Anonymous said...

//Anonymous said...
மொட்டை போட்றதா இருந்தா மிமி க்குப் போடுங்க சூப்பராயிருக்கும்.
அந்த கால அசோகன் போல.
//

minnal...neega villain mathiri irrupingala?sollave illa paartingala

Anonymous said...

ஆமா நம்ம அய்யனாருக்கு போட்டிடலாம்!!! அவரும் ஒத்துகிட்டாரு:-)) //

good idea.seekiram seiyunga. ;-)

கண்மணி said...

வாம்மா துர்கா உனக்கு என் பிளாக்குலாம் கண்ணுல படாதே அபி அப்பா மட்டும்தான் தெரியுமா

கண்மணி said...

நான் +2 தான் படிக்கிறேன்.நம்புனா நம்புங்க இல்லாட்டி போங்க.

அபி அப்பா said...

// கண்மணி said...
வாம்மா துர்கா உனக்கு என் பிளாக்குலாம் கண்ணுல படாதே அபி அப்பா மட்டும்தான் தெரியுமா //

டீச்சருக்கு பொறாமை:-)))))

அப்பாவிகள் சங்கம் said...

//நான் +2 தான் படிக்கிறேன்.நம்புனா நம்புங்க இல்லாட்டி போங்க. //

இதை நாங்கள் அப்படியே நம்புகிறோம்!

பழனிமலை வேலாயுதம் said...

ஆமா! மின்னலுக்கு மொட்டை போடுவதுதான் என் விருப்பமும்!

ISO (9001) said...

//அடப்பாவி!! மின்னல் நீ இவ்ளோ நல்லவனா !!!
//

ஆமாம்! மின்னல் மிகவும் நல்லவர்!

மின்னல் கொலைவெறிப் படை said...

மொட்டை போட பெருந்தன்மையுடன் முன்வந்த எங்கள் தலைவர் வாழ்க!

உட்பி மிஸ்ஸஸ் மின்னல் said...

என்னைக் கேக்காம யாரு எங்க அத்தானுக்கு மொட்டை போடுறது?

மின்னுது மின்னல் said...
This comment has been removed by the author.
மின்னுது மின்னல் said...
This comment has been removed by the author.
மின்னுது மின்னல் said...
This comment has been removed by the author.
கண்மணி said...

நான் சொன்னது நிஜந்தானே டெல்பின்
தென்றல் ஜிவாஜிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.ஆனா எல்லா ஹீரோக்களுக்கும் இது பொருந்தும்.

கண்மணி said...

அபிஅப்பா பொறாமையில்லை வயித்தெரிச்சல்தான்..ஹி..ஹி

கண்மணி said...

அய்ஸா மிமியான்னு சீட்டு குலுக்கிப் பார்த்துடுவோம் ஏன் தகறாரு.
இது சரிப்படலைன்னா இருக்கவே இருக்காரு நம்ம தல [அ.அப்பா] [மொட்டையைக்க]

கண்மணி said...

உட் பி மின்னல் பாவங்க நீங்க தெரிஞ்சே கிணத்தில் விழ உங்களை மாதிரி தைரியம் யாருக்கும் வராதுங்க.
[எல்லாமே மோசமான பசங்கதான்]

Anonymous said...

அ முதல் ஃ வரை பேசுவோம்வாங்க வந்து சிரிச்சிட்டுப் போங்க

கண்மணி said...

:((

மின்னுது மின்னல் said...

மன்னிக்க __/\__

Anonymous said...

//வாம்மா துர்கா உனக்கு என் பிளாக்குலாம் கண்ணுல படாதே அபி அப்பா மட்டும்தான் தெரியுமா //

akka only yesterday unga rendu peru blog pakkam pooga time kidaithathu.inmel adikadi varen.kovichukathinga

கண்மணி said...

ஆஹா நான் சினிமா சீரியல் பத்தி என் கருத்தச் சொன்னதுக்கு யாரோ [-]குத்தி வச்சுட்டாங்க ஆப்பூ=))

cheena (சீனா) said...

உண்மை - திரைப்படங்கள் - தற்காலத் திரைப்படங்கள் இளம் தலைமுறையினருக்குக் கற்றுத் தரும் பாடம் நல்லவையை விட தீயவையே அதிகம். இருப்பினும் அன்னம் பால் தண்ணீர் இப்படி எல்லாம் சொல்லலாமே!

பெண்கள் ( பொதுவாகச் சொன்னேன் -ஆண்களும் கூடத்தான்) எதிர்பார்ப்புகள் அதிகம். நினைத்தது கிடைக்குமா - ஐயப்பாடு தான். விரும்பியது கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததை விரும்புகிற ( வேற வழி) பெண்கள் ( ஆண்களும் கூடத்தான்) அதிகம்.

வாழ்க்கை என்பது கனவில் வாழவதல்ல - நனவில் வாழ்வது. அது நல்ல படியாக அமைவது நம் கையில் தான் இருக்கிறது.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)