PAGE LOAD TIME

குளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை

நண்பர் மாயன்
உலகத்துக்குப் பால் ஊத்திடாதீங்கன்னு ஒரு பதிவு போட்டிருந்தார்.

கொஞ்சம் சீரியஸாவும் கொஞ்சம் விளையாட்டாகவும் எழுதியிருந்தார்.


புவியின் வெப்பநிலை உயர்ந்து வருவதும் அதனால் இப்போதே [தற்போது] காணப்படும் தட்ப வெப்ப மாற்றங்களுக்கும் காரணம் பசுமை இல்ல வாயுக்களில் பிரதானமான CO2 [கரியமில வாயு]வாயு மண்டலத்தில் அதிகரிப்பதும், ஓசோன் [O3]வாயுவின் குறைவும் ஆகும்.

இந்த கார்பன் டை ஆக்ஸைடு,குளோரோ புளோரோ கார்பன் [CFC],மீத்தேன்,ஓசோன்,நைட்ரஸாக்ஸைடு ஆகியவை 'பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும்.

இவை வளி மண்டலத்தில் அதிக அலை நீளம் உடைய வெப்பக் கதிர்களை பகலில் சூரியனிடமிருந்து உறிஞ்சுகிறது.

அவ்வாறு உறிஞ்சப்பட்ட வெப்பம் மிகக் குறைவான அளவே இரவில் வெளித்தள்ளப் பட்டு மீதம் புவிப் பரப்பிலேயே தங்கி விடுவதால் புவி வெப்பமடைய ஏதுவாகிறது.

ஒரு கண்ணாடி அறைக்குள் வளர்க்கப் படும் பச்சைத் தாவரங்கள் கரியமில வாயு மற்றும் மேற்சொன்ன வாயுக்களுடன் வினை பட்டு சோலார் கதிகளை அதிக அளவில் உறிஞ்சுவதால் அறையின் உட்புறம் வெளிப்புறத்தைக் காட்டிலும் அதிக வெப்பமடைகிறது.

புவியும் இந்த வாயுக்களால் இப்படி வெப்பமுறுவதால் ஒரு 'பசுமை இல்லமாக' கருதப் படுகிறது
மேம்போக்காகப் பார்த்தால் பசுமை இல்லம் என்பது ஏதோ குளுகுளு இல்லமோ என நினைக்கச் செய்து விடும்.உண்மையில் அப்படியில்லை.

இதற்கு முக்கிய காரணம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு வளிமண்டலத்தில் நாளுக்கு நாள் அதிகரிப்பதே.

ஒரு வருடத்தில் சுமார்18x10^12 டன் அளவு இந்த கா.டை.ஆக்ஸைடு வாயு உற்பத்தியாகி வாயு வெளியில் கலக்கிறது.

பெருகிவிட்ட ஜனத்தொகை,வாகனங்களின் அதிகப் படியான பயன்பாட்டால் வெளிப்படும் புகை
தொழிற்சாலைகளின் பெருக்கம் எல்லாம் இதற்கு காரணமாக அமைகிறது.வளி மண்டல ஓசோன் ஒரு குடை போல செயல்பட்டு சூரியக் கதிர்களில் உள்ள தீமை செய்யும் அல்ட்ரா வயலட்[புற ஊதா]கதிர்களை அகச் சிவப்பு கதிர்களாக மாற்றி நம்மைக் காக்கிறது.

மேற்சொன்ன அதே காரணங்களால் ஓசோன் படலமும் பாதிக்கப் பட்டு வருகிறது.இதைத்தான் ஓசோன் குடையில் ஓட்டை என்கிறோம்.ஒரு பொத்தல் குடை எப்படி வெயில்,மழையிலிருந்து நம்மை சரிவர பாது காக்க முடியாதோ அதுபோல ஓசோன் படலத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குறைவு சூரியக் கதிர்களை தடுக்கும் ஆற்றலை இழந்து புவி வெப்பம் அதிகரிக்கக் காரணமாகிறது.

அத்தோடு மட்டுமில்லாமல், நாளடைவில் தோல் வியாதிகள் கேன்சர் போன்றவையும் கண் குறைபாடுகளும் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது.

இந்த குளோபல் வார்மிங்.[global warming],ஓசோன் ஓட்டை.[ozone depletion],,பசுமை இல்ல விளைவு [green house effect] மூன்றுக்கும்
அதிகப் படியான வாகன,தொழிற்சாலை,அணுமின் நிலையம்,மின் உற்பத்தி இவைகளால் ஏற்படும் புகையே காரணம்.

தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.

35 மறுமொழிகள்::

Api Appa's Shadow said...

1...
start music...

Chinna Ammini said...

இது கும்மி இல்லையா? அப்படின்னா அபி அப்பா வோட நிழலுக்கு என்ன வேலை?

delphine said...

அத்தோடு மட்டுமில்லாமல், நாளடைவில் தோல் வியாதிகள் கேன்சர் போன்றவையும் கண் குறைபாடுகளும் ஏற்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது.////
yes Kanamani.. This is very alarming. more and more cases of skin cancer are reported these days!
A very nice post Kanmani...(என்ன ரொம்ப serious but very useful பதிவு போடரீங்க? பாசக்கார குடும்பம் எல்லாம் ஊருக்கு போயிட்டாங்களா? tell them I miss them)

கண்மணி said...

ஏ மக்கா எங்கேல போயிட்டீங்க.கும்மின்னா விழுந்தடிச்சி ஓடியாந்து துண்டு போட்டு எடம் புடிக்கீங்க.உருப்படியா மெசேஜ் சொன்னா காணாமப் போறீங்க.

Orani said...

கண்மணி,

பிரயோசனமான பதிவு. இது தொடர்பாக நாங்கள் இட்ட பதிவுகள் இங்கே இருக்கு. அங்கு அடிதடியும் நடந்தது, முடிந்தால் சென்று பாருங்கள்.

http://thekkikattan.blogspot.com/2006/04/blog-post_114584455467439948.html "*குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா? "

என்ன டெல்பீன் சொல்லவே இல்லை
:-P

தெகா.

வெட்டிப்பயல் said...
This comment has been removed by the author.
தருமி said...

பின்னூட்டங்கள் இவ்வளவு குறைவா வந்திருப்பதே இப்பதிவின் தரத்திற்கு ஒரு நல்ல அடையாளம்.

தொடருங்கள் - இப்படியும் ....

கண்மணி said...

'இப்படியும் 'தொடருங்கள் னு சொல்லி என்னை :(( வச்சிட்டீங்க தருமி சார்.இது மாதிரி எழுதுனா ஈ ஓட்டுதே
ஆனா இனி இது மாதிரிதான் இந்த பிளாக் இருக்கும்.
கும்மிக்கு தனி பிளாக்.

குட்டிபிசாசு said...

அக்கா! என்ன இதெல்லாம்...சிங்கள்ஸ் நடுவுல சிக்ஸர் மாதிரி.. அசத்துங்க! ஒரு வாரத்துல 3 போட்டுடீங்க..! எக்ஸாம் எல்லாம் எப்படி...!

கண்மணி said...

வார்ரே வா குட்டி பிசாசு பேக் டூ பெவிலியன்?
எக்ஸாம்ஸ் பின்னிட்டமில்ல.
ஆமாம் உன்னோட டூர்[ஹாலிடே ]எப்படி?
ஹேய் கும்மி ன்னு ஒரு புது பிளாக் பார்த்தியா?

பிசாசினியின் பிசாசன் said...

அயுவாத யக்கா.. க்ளோபல் வார்மிங் இருக்குந்தான்.. பின்னாடி இன்னா ஆனா எனிக்கு இன்னான்னு தானே இந்த அரசியல் வாதி கம்னாட்டிங்கோ இன்னா இன்னாவோ பன்றானுங்க.. அவனுங்க ஒயிற வரிக்கும் ஒன்னியும் பண்ணமுடியாது யக்கா.. பொலம்பறத உட்டு வேற எதுவும் பண்ணமுடியாது யக்கா

கண்மணி said...

@பிசாசினியின் பிசாசன்
அல்லாத்துக்கும் இந்த அர்சியல்வாதியக் கொறை சொல்லக்கூடாது அப்பூ.நாமளும் தான் இதுக்கு காரணம்.டுர்ர்ர்ர்ர்ர்டுர்ர்ர்னு பொகை விட்டுக்கிட்டு பக்கத்து தெரு பிரண்டக் கூட வண்டியிலதானே பார்க்கப் போறோம்.
ஒரு புள்ளிவிவரம் சொல்றேன் கேட்டுக்கோ தற்சமயம் உலகம்பூரா 50 மில்லியன் வாகனங்கள் கீதாம்.அதுல இந்தியாவுல மட்டும் 5 மில்லியனாம்.அதுலயும் 65%டூ வீலராம்.ஏங்கண்ணு நீயும் டுர்ர்டுர்ர்தானே

பிசாசினியின் பிசாசன் said...

இல்லீங்கயக்கா.. கூட்டத்தோட் கூட்டம பொது வாகனந்தான். அது கெடக்கட்டும்.. அமேரிக்கால எல்லாம் இந்த புகைக் கட்டுப் பாடு எம்புட்டு ஸ்டிரிக்ட்டு தெரியுமா ? இங்க ஒரு நூறு ரூவா தள்ளுனா சரின்னு உட்டுடறான். சட்டத்தை எங்க சரியா செயல்படுத்துறானுங்க? பசுமை புரட்சிக்காக எத்தனை நாடுகள் பாடு படுகிறது. எங்க பாத்தாலும் போஸ்டர்ஸ், அதுக்கேத்த மாதிரி ஆணைகள். நோட்டு புத்தகம் கூட ரி-சைக்கிள்டு பேப்பர் முடிஞ்சா பேப்பரே யூஸ் பண்ணாதேங்கறான். நம்ம இன்னா பண்றோம்? கரக்ட்.. மக்களுக்கு " இன்னா " தான் செய்யறோம்..

ஆதங்கம் மட்டுமே படமுடிகிறது.

பிசாசினியின் பிசாசன் said...

சீக்கிறம் யக்கா பதில் சொல்லுங்க.. நான் ஊட்டுக்கு போகனும்..

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுவா இந்தியாவுல .. குறிப்பா தமிழ்நாட்டுல "செயல்" படுகிறதா அல்லது இறந்து கிடக்கிறதா ?

கண்மணி said...

அமெரிக்கா மாதிரி வளர்ந்த நாடுகள்ல ஆளுக்கு ஒரு காரு.மொத்தத்துல வீட்டுக்கு ஏழு காரு அப்புறம் அணு ஆராய்ச்சி லொட்டு லொசுக்கு வேற.அதுக்கு நாம கொஞ்சம் தேவலாம்.
இன்னாப்பா கேட்டே மாசுக் கட்டுப்பாட்டு வாரியமா இப்பாலிக்கா கூவத்தாண்ட கீதே அதுவா?அக்காங் டெய்லி மந்திரி வூட்டக் கிளீன் பண்ணி சுத்தம் பண்றாங்க.கொசு மருந்தெல்லாம் அடிக்கிறாங்க.சாயப்பட்டறைத் தண்ணியெல்லாம் ஆத்துல கலந்து வுட்டுர்ராங்க[எவனோ குடிச்சி சாவறான்.இவுங்கதான் மினரல் வாட்டர் பார்ட்டியாச்சே]கலர் கலர் புள்ளையாரக்கூட கடல்லதான் கரைக்கிறாங்க
ஓட்டலுக்குப் போனா சுடச்சுட சோறு குழம்பு ரசம் அல்லாம் பாலித்தீன் பையில கட்டிக் குடுக்கறான்.இன்னும் என்ன கட்டுப்பாடு வேணும்?

பிசாசினியின் பிசாசன் said...

அதான் யக்கா நாஞ்சொல்றது..


இவுனுக துட்ட துண்ட்டு..எதிர்கால சந்ததிகளை சகதில தள்றானுங்க


"இன்னா" செய்யறானுங்க. இப்ப சொல்லுங்க அரசியல் வாதி நினைச்சா இது மாறாதா ? ஒரு பாங்காக் எடுத்துக்கோங்க.. இதை விட அதிகம் கார் கொண்ட இடம். ஆனாலும் ஒரு கார்லயாவது புகை கொட்டணுமே ? வெள்ளைச் சட்டை போட்டு வெளியே போய் வீட்டுக்கு வந்தா வெள்ள சட்டையாவே இருக்கும் அங்க. சென்னைல முடியுமா ? இதுக்கெல்லாம் முக்கிய காரணம் யாருன்னேன் ? உபயோகிக்கும் வாகனம் இருந்தே இருக்கும். அதை வகைப்படுத்த சட்டம் ? அதை செயல் படுத்தும் கூட்டம் ?

இப்ப அரசியல் வாதிய குத்தம் சொன்னது தப்புன்றீங்களா ? சொல்லுங்க.. ஒத்துக்கிட்டு ஊட்டுக்கு போய்டறேன். ஆப்பீஸ்ல ஆணி புடுங்க வேண்டி அளவுக்கு புடிங்கியாச்சு

வவ்வால் said...

வணக்கம் கண்மணி,

தங்கள் பதிவு ஒரு நல்ல நோக்கதில் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

//இவை வளி மண்டலத்தில் அதிக அலை நீளம் உடைய வெப்பக் கதிர்களை பகலில் சூரியனிடமிருந்து உறிஞ்சுகிறது.

அவ்வாறு உறிஞ்சப்பட்ட வெப்பம் மிகக் குறைவான அளவே இரவில் வெளித்தள்ளப் பட்டு மீதம் புவிப் பரப்பிலேயே தங்கி விடுவதால் புவி வெப்பமடைய ஏதுவாகிறது.//

இதில் ஒரு சிறிய திருத்தம் ,

சூரியக்கதிர்கள் குறைந்த அலை நீளத்தில் வெளியிடப்படுகின்றன , அவை எளிதில் வளிமண்டலத்தை ஊடுருவி பூமியை அடைந்து சூடேற்றுகின்றது, அவ்வாறு சூடான பூமி இரவில் மீண்டும் வெப்பத்தை வெளியிடும் அது நீண்ட அலை நீளம் கொண்டதாக இருக்கும் , அத்தகைய வெப்பக்கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களை ஊடுருவ இயலாது எனவே மீண்டும் பூமிக்கே எதிரொலிக்கப்படுகின்றது இதனால் புவி மீண்டும் வெப்பம் அடைகிறது .எஞ்சிய வெப்பம் வளிமண்டலத்தில் தங்கி வெப்பம் வெளியேராமல் சூடாகவே வைத்து இருக்கும்.

இந்த வாயுக்கள் ஒரு உறை போன்று செயல் பட்டு வெப்பம் வெளியேறாமல் தடுக்கிறது, இதனல் முதலில் கண்டறிந்தவர் ஜோசப் ஃபோரியர் என்ற அறிவியலாளர்.

கியோட்டொ புரொடோகால் என்று ஒன்றை 1992 வில் கொண்டு வந்தார்கள் ஆனால் அதனை செயல் படுத்துவதை தடுப்பதில் முன்னனியில் உள்ள நாடு அமெரிக்க தான்! அதனை செயல் படுத்தினால் எரிபொருள் உபயோகம் இன்ன பிற மாசு ஏற்படுத்தும் காரணிகளை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு ஏற்படும், இன்றைய சூழலில் அமெரிக்க 25% சதவீத co2 வெளியீட்டிற்கு காரணம்.

இதை மறைப்பதற்காக இந்தியா அதிகம் அரிசி பயிரிடுகிறது தண்ணீர் தேங்கிய நெல் வயலில் இருந்து மீத்தேன் வரும் அது தான் பசுமை இல்ல விலைவிற்கு காரணம் என்று அமெரிக்கா சப்பை கட்டு கட்டுகிறது!

மாயன் said...

நான் எங்கே ரொம்ப சீரியஸா பதிவு போட்டா மக்கள் ஏத்துக்க மாட்டாங்களோன்னு தான் லைட்டா கொடுத்தேன்... ஆனா பயபடாம விரிவான பதிவா போட்டு அசத்திட்டீங்க... நன்றி...

கண்மணி said...

@வவ்வால் கண்டுபிடிச்சவர் பேரு பேடி பீல்டு மேட்டர் டீ பாரஸ்டேஷன் னு விரிவா சொன்னா டீச்சர் 'கிளாஸ் நடத்தராங்க டோய்' னு மக்கள்ஸ் ஓடிடும்.அதான் ஷார்ட்.உங்க விளக்கம் அருமை.நன்றி.

கண்மணி said...

@ மாயன் பதிவு என்பது நம் கருத்து எண்ணம்.அதைச் சொல்ல பயம் ஏன்.முன்பு என் கடவுள் வற்றிய பதிவுக்கும் இப்படித்தான் தைரியம் என்றார்கள்.
ஏற்கவோ மறுக்கவோ படிப்பவர்க்கும் உரிமை உண்டு.
ரெண்டு விஷயம்
1.பின்னூட்டம் எதிர் பார்க்கக்கூடாது.
2.சொல்ற கருத்தில் தெளிவு இருக்கனும்.பயம் தேவையில்லை
தொடர்ந்து 'தைரியமா' எழுதுங்க;)

கண்மணி said...

தெ.காட்டான் உங்க பதிவும் படித்தேன்.அவ்ளோ சீரியஸாகவும் டீடெய்ல்டாகவும் நமக்கு வராது.
நான் காமெடி கலந்த சீரியஸ் ஆளு.[சாரி பார் த டிலேய்டு ரிப்ளை]

கண்மணி said...

சரி டு யூ டூ சின்ன அம்மினி
கும்மி கொட்டத்தான் எங்க மக்கள்ஸ் வரும்.:)

தென்றல் said...

இந்த பதிவை எப்படி பாக்காமா விட்டேன் தெரியலை..!!

அப்புறம் வாய்ப்பு கிடைத்தால், Al Goreன் "An Inconvenient Truth" DVD கிடைச்சா பாருங்க. ரொம்ப (பயங்கரமான) உண்மையாலாம் சொல்றாரு. இதே நிலை தொடர்ந்தால், 50 வருடங்களுக்கும் குறைவா கல்கத்தாவின் ஒரு பகுதியும், Floridaவின் ஒரு பகுதியும் தண்ணீரால் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் .... பல இலட்ச மக்கள் வீடு இல்லாதா நிலை வரும் எனவும்.... இது போல இன்னும் சில திடுக்கிடும் தகவல்கள்லாம் சொல்லிருக்காரு.

நல்ல பதிவு! நன்றி!

பிசாசினியின் பிசாசன் said...

டீச்சரக்கா பேச்சி கா

கண்மணி said...

@பிசாசினியின் பிசாசன்
இது என்ன அனானித்தனம் தம்பி பேரைச்சொல்லி எழுதுனா என்ன?
ஏன் கா விட்டீங்க?
அரசியல்வாதியாலதான் எல்லாமே சீர் கெட்டுப் போகுது பிறகென்ன சந்தேகம்.[ஆமா நீங்க எந்தக் கட்சி?]

பிசாசினியின் பிசாசன் said...

நமக்கு எந்த கட்சியும் இல்லக்கா.. இருக்கிற திருடன்ல எந்த திருடன் நல்ல திருடன்னு தான் பாக்கறம்க்கா..

நான் யாருன்னு சொன்னாலும் உங்களுக்கு தெரியாதுக்கா.. நான் எழுதறே இல்லையே பின்ன எப்படி தெரியும். எழுத ஆரம்பிச்ச பின்னாடி என் பேர சொல்றேனே.. உங்க எழுத்து புடிச்சு போச்சு.. அதான் உங்களை அக்கான்னு உரிமை கொண்டாடறேன்.. தப்பா?

கண்மணி said...

தப்பேயில்ல தம்பி.பதிவுகளின் மூலம் நல்ல நண்பர்களோ தம்பி,தங்கைகளோ கிடைத்தால் ஆனந்தம்.உங்களைப் போலத்தான் குட்டிபிசாசுன்னு[பதிவர்]ஒரு தம்பி ரொம்பப் பாசமாயிருக்கும்.நல்லாவும் எழுதும்.படிச்சிப்பாருங்க.
ஆனா எனக்கு வாய்க்கும் தம்பிகள்லாம் பிசாசன்,குட்டிபிசாசு ன்னு பேய்க் கூட்டமாவேயிருக்கே:)
அரசியல் ஒரு சாக்கடை.அதில் சந்தனம் விழுந்தாலும் நாறத்தான் செய்யும்.என்ன செய்வது?
இன்னுமொரு பெரியார்,காமராஜர்,அண்ணா,கக்கன் போன்ற தன்னலமற்ற ஆத்மாக்கள் பிறந்து வந்தால் மாற வாய்ப்பிருக்கு.

மாயன் said...

கண்மணி

தைரியமா பதிவு ஒன்னு போட்டேன்... ஒரே சண்டை பிடிக்கறாங்க...

இருந்தாலும் உங்க ஊக்கத்துக்கு நன்றி.. நன்றி.. நன்றி

Sathia said...

நல்ல பதிவு. இதேபோல் தொடர்ந்து எழுதுங்கள்.

கிவியன் said...

கண்மணி, காசுக்கு இரண்டு பக்கம் உண்டு. இருளென்றால் வெளிச்சம் என ஒரு விஷயத்துக்கு மறுபக்கமும் உண்டு ஏற்றுக்கொண்டால் வெளிச்சத்தயும் பாருங்கள். குளோபல் வார்மிங் என்பது தற்போது மிக சூட்சுமமான அரசியலாகிவிட்டது. ஏந்த தேசத்து தலைவர்களும் இது பற்றி பேசாதிருப்பதில்லை. சில சுவையான உண்மைகள்:

பசுமைஇல்லம் (greenhouse) என்பதே தவறான சொற்பிரயோகம்

ஜோசப் ஃபோரியர் தன்னுடைய கட்டுரயில் எந்த இடத்திலும் 'பசுமைஇல்லம்' என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை.

பூமியின் வெப்பமும் கடலின் அளவும் உயர்ந்துகொண்டு வருகிறது என்பதில் விஞ்ஞானிகளிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

பத்து மில்லியன் வருடங்களுக்கு முன்பு டைனாசோர்கள் உலாவின இப்போதிருக்கும் துருவ பகுதியில் வெப்ப மண்டல காடுகளிருந்ததும், பின்பு வந்த பனி சகாப்தததில் முழுவதும் மறைந்து பின் மறுபடி இப்போதுள்ள உயிரின்ம் தோன்றியதும் அது போல மறுபடியும் ஒரு பனிப்பருவத்தை நோக்கி பூமி செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

சில் விஞ்ஞானிகளின் கருத்துப்படி, பூமியின் பனிசகாப்பதம் இன்ன வருடம், இந்த மாதம், இந்த நேரம், இன்ன திதிப்படி முடிந்தது என எப்படி கூறமுடியும்? அது இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது. துருவத்தில் இருக்கும் பனி முழுவதும் உருகி, பூமியில் வேறு எங்கும் பனியே இல்லாது போகும் காலம் வந்தால் வேண்டுமானால் பனி-சகாப்தம் முடிந்ததாக கொள்ளலாம்.

இப்போது அடிக்கப்படும் ஜல்லி, இது மனிதனால் ஏற்பட்டது என்பதே. மாசுக்கட்டுப்பாடு என்பது வளரும் நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வந்திருக்கும் புதிய ஆயுதம்.

புவியின் காலநிலையை சரியாக கணிக்கும் எந்த மாடலும் மனிதனிடம் இல்லை, அதை கண்டுபிடிக்கும் வரை மனிதனால்தான் இந்த வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டது என்பதை உறுதி செய்ய முடியாது.

இது பற்றி மேலும் படிக்க விரும்புவோ இந்த சுட்டிகளை பார்க்கவும்.

http://www.foxnews.com/story/0,2933,192544,00.html

http://ase.tufts.edu/cosmos/print_chapter.asp?id=21

கண்மணி said...

வாங்க கிவியன்.நீங்க சொல்றதுபோல இதை அளக்கும் கருவி இல்லாமல் இருக்கலாம்.மனிதன் மட்டுமா காரணம்னு கேக்கறீங்க.ஸ்யூர்லி நாட் என்பது என் பதில்.
environmental degradation is caused by two factors ofcourse one by man-made hazards another by natural hazards.we cannot neglet the crisis we ought to face in future due to pollution.prevention is better than cure na?
அரசியல் சாயம்னாலும் இது சரியா?குளோபல் வார்மிங் கிடக்கட்டும்.வேறு எதுவுமே மாசு படலையா? வேறெதுவும் வேண்டாம்.பிளாஸ்டிக்கின் உபயோகம் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறதா?எல்லாம் இயற்கையால் ஏற்படுவதுதான் என்றாலும் நாமும் கொஞ்சம் அதிகப் படுத்தனுமா?சொல்லுங்க.

கண்மணி said...

@கிவியன்
ஜோசெப் ஃப்யூரியர் 'பசுமை இல்லம்'னு சொல்லலைனாலும் மாணவர்களுக்கு அவ்வாறுதான் போதிக்கப் படுகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில்.

கிவியன் said...

//அரசியல் சாயம்னாலும் இது சரியா?குளோபல் வார்மிங் கிடக்கட்டும்.வேறு எதுவுமே மாசு படலையா? வேறெதுவும் வேண்டாம்.பிளாஸ்டிக்கின் உபயோகம் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறதா?எல்லாம் இயற்கையால் ஏற்படுவதுதான் என்றாலும் நாமும் கொஞ்சம் அதிகப் படுத்தனுமா?//

ஊடகங்களில் உலாவும் மிக வலிமையான கருத்து மனிதன் செய்த சுற்றுப்புறத்தில் செய்த மாசினால்தான் இப்படியாகிவிட்டது என்று. வளர்ந்த நாடுகள் தாங்கள் இப்போதிருக்கும் நிலையை அடைய வந்த வழியை வளரும் நாடுகளும் பின்பற்ற தேவையில்லை. எதனால் என்றால் சில தவறுகளினால் சுற்றுபுறசுழலுக்கு பாதிப்பேற்பட்டுள்ளதால். உதாரணம்: ஓசோன் ஓட்டை. இந்த மாதிரி தவறுகளை கட்டாயமாக திருத்திக்கொள்ள வேண்டும். ஆனால், என்னை மாதிரி நீயும் வளர்ந்துவிடக்கூடாதே என்று 'நான் கார் உபயோகிச்சதாலதான் இப்படி ஆகிடுச்சு, அதனால் நீ நடந்தே போ, உனக்கு கார் வேண்டாம்" என்றால் ஒத்துக்கொள்வீர்களா? இப்போது இந்தியாவிலும் சீனாவிலும் நடக்கும் மாற்றங்கள் நிச்சயம் சூழலை பாதிக்கும். இதனை நிறுத்த முடியுமா?

மாசுகட்டுப்பாடு மிக சிக்கலானது. காற்றுமண்டலத்தில் CO2 அதிகரிப்பது மனிதனாலும், அதைவிட அதிகமாக இயர்கையாலும்தான்.
ஆனால் இயற்கையில் நிகழும் மாற்றங்களை மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது. உதாரணம்: கடல் வெப்ப் அதிகரிப்பு அதனால் CO2 வெளியீட்டளவு அதிகரிப்பு. ஒவ்வொரு பனிபருவத்துக்கு முன்பும் காற்றுவெளியில் CO2ன் அளவு அதிகரித்துள்ளது. டைனாசோர்கள் அழிந்தபோது மனிதனுமில்லை அவன் உபயோகிக்கும் SUVக்களும், புகைவண்டியுமில்லை. ஆனாலும் CO2 அதிகரித்தது.

பூமியின் குறைந்துவரும் காந்த சக்தியின் அளவு (கிட்டத்தட்ட 120000 வருடங்களுக்கு ஒருமுறை பூமியின் காந்தசக்தி குறைந்து பின்பு சட்டென்று புலம் மாறும் அதாவது, தெற்கு வடக்கு மாறும். இதனால் ஏற்படும் அழிவும் அதிகமாக இருக்கும் என்பது ஒரு கருத்து).
ஆக, Just sit back and watch" மாற்றங்களுக்கு ஏற்ப மனிதன் வாழ (adopt or perish) கற்றுக்கொள்ள வேண்டும்.

//ஜோசெப் ஃப்யூரியர் 'பசுமை இல்லம்'னு சொல்லலைனாலும் மாணவர்களுக்கு அவ்வாறுதான் போதிக்கப் படுகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில்.// தவற்றை திருத்திக் கொள்ளலாமே. பாவம் ஃப்யூரியர்!! கோள்களின் வெப்ப அதிகரிப்பு என்ற ஒரு ஆராய்ச்சியை துவக்கியதற்காக பாராட்டப்படுபவர். அவருக்கு பின்பு நடந்த பல ஆராய்ச்சிக்கு அடித்தளமைத்தவர். பசுமை இல்லத்தின் மைய கருத்தான சக்தி சமன்பாட்டை (energy balance) மிகச்சரியாக புரிந்துகொண்டு விளக்கினார். மற்றவையெல்லாம் அவருக்கு பின்பு வந்தவை. உதாரணம் Stefan-Boltzman fourth power law.)
அடபோங்க என்னமோ பெளதிக வகுப்பு மாதிரி ஆகிப்போச்சு. முடிச்சுக்கிறேன்.

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,

எக்ஸாம் நல்லா எழுதினதுக்கு வாழ்த்துக்கள்!!
டூர் எல்லாம் 4 நாள் தான்!

இப்ப வழக்கம் போல வங்கம் தான்!


இது புது இடுகை

cheena (சீனா) said...

ம்ம்ம் பயங்கர சீரியஸ் பதிவு - கும்மிக்கு வர கூட்டம் இதுக்கும் வந்திருக்கு - மற்மொழிகள் அதிகம் தான். இனிமே சீரியசாவே பேசலாமா

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)